அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நாஞ்சில் மனோ தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் தன்னைப் பச்சபுள்ளெ என சுய அறிமுகத்துடன் முதல் பதிவும், அய்யாக்கள், நட்சத்திரப் பதிவர்கள், மிரட்டலடிப் பதிவ்ரகள், வெள்ளி நட்சத்திரங்கள், நவரத்தினப் பதிவர்கள், விலையில்லா நடசத்திரஙகள் என்ற பல்வேறு தலைப்புகளில் பதிவுகள் எழுதி இருக்கிறார்.
நாஞ்சில் மனோ எழுதிய பதிவுகள் : 7
சுய அறிமுகம் உட்பட அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 68
அறிமுகப்படுத்திய பதிவுகள் : 68
பெற்ற மறுமொழிகள் : 267
அருமை நண்பர் நாஞ்சில் மனோவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் வே.நடனசபாபதி.
இவர் “நினைத்துப் பார்க்கிறேன்” என்ற தளத்தினில் எழுதி வருகிறார்.
இவர் வேளாண்மை அறிவியல் படித்துவிட்டு மாநில அரசில் சில மாதங்களும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளும், சிண்டி கேட் வங்கியில் 34 ஆண்டுகளும் பணிபுரிந்து, பணி மூப்படைந்த பின் ஓய்வுபெற்று சென்னையில் குடி இருக்கிறார். 2009 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறார். கல்கி மற்றும் தேவன் ஆகியோரின் படைப்புகளில் இவருக்கு நாட்டமுண்டு. ஓவியம் வரைவது இவரது பொழுதுபோக்கு.
வே.நடன சபாபதியினை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் நாஞ்ச்ல் மனோ
நல்வாழ்த்துகள் வே.நடனசபாபதி.
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
ReplyDeleteவே.நடனசபாபதி அவர்களை வரவேற்கிறேன்... அவரின் பொழுதுபோக்கு இன்று தான் தெரியும்... வாழ்த்துக்கள்...
சிறப்பாக சரம் தொடுத்தார் நாஞ்சில் மனோ சாருக்கு நன்றி,
ReplyDeleteவருக நடனசபாபதி சார்! ஏராளமான வங்கி அனுபவங்கள் மூலம் பாடம் சொன்ன மூத்த பதிவர். அவரை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
விடைபெற்றுச் செல்லும் நாஞ்சில் மனோவுக்கு நன்றி! நினைத்துப் பார்க்க வலைச்சரம் வந்த வங்கி அதிகாரி (ஓய்வு) வே.நடனசபாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅய்யா உங்களின் அனுபவமும் ஆலோசனைகளும் எல்லோருக்கும் பயன்பட வேண்டுமென்றும் சரியான தரமான பகிர்வைத்தர வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள் அய்யா நடனசபாபதி அவர்களுக்கும், மிக்க நன்றிகள் சீனா அய்யாவுக்கும்...
ReplyDeleteநடன சபாபதிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பு நண்பர் திரு சீனா அவர்கட்கும், வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள் பல!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஇந்த சமுதாய நலனில் பேச்சோடு இல்லாமல் அதற்கு தீர்வும் அத்தீர்வுக்கு உகந்த வழிகாட்டுதலுடன் தங்களது பணியை தொடர வாழ்த்துகிறேன். சமுதாயத்தில் தவறுகளைப் பற்றி பேசுவதே நடக்கின்றது யாரும் தீர்வு காண முயற்சி செய்வது இல்லை அதற்கான வழிகாட்ட யாரும் இல்லை என்ற வருத்தம் என்போன்ற சமூக ஆர்வலர்களுக்கு இருக்கின்றது. அதற்கு அருமருந்தாக உங்களது எழுத்துக்கள் அமைந்திட வாழ்த்துகிறேன். முன் முயற்சியாக எடுக்கும் எந்த செயலும் வெற்றிபெறும் வாழ்க வாழ்க !
வாழ்த்துக்கு நன்றி திரு பாலசுப்ரமணியன் அவர்களே!
ReplyDelete
ReplyDeleteதங்களின் அனுபவமும் கடந்து வந்த பாதையும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன் தோழரே. இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டுமே அன்றி பணம் பண்ணும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது என்று கருதும் எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். உங்களது சிந்தனைகள் செயலாக்கம் பெற துணையாக இருக்க என்னால் முடியும். வாழ்க வாழ்க !
உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன் திரு பாலசுப்ரமணியன் அவர்களே!
ReplyDeleteநன்றிகள் மனோ அண்ணா. வாருங்கள் நடனசபாபதி ஐயா. உங்கள் மூலம் இன்னும் புதியவர்களை எதிர்பார்க்கின்றேன்.
ReplyDeleteவரவேற்பிற்கு நன்றி திரு முகுந்தன் இராஜதுரை அவர்களே! தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.
ReplyDelete