Monday, March 4, 2013

மலரும் நினைவுகள்! - முதல் நாள்




மலரும் நினைவுகள்! -  முதல் நாள்


நன்றி நவிலலும் சுய அறிமுகமும்


வணக்கம் வலைப்பதிவுலக நண்பர்களே! இந்த வார வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கப் பணித்த திரு சீனா அவர்கட்கு, முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகள். பதிவுலகின் ஜாம்பவான்கள் செய்த பணியை தொடர என்னால் முடியும் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆதரவோடு தொடங்குகிறேன்.

என்னைப்பற்றி ...


மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு இடம் கிடைக்காததால், வேளாண்மை அறிவியல் படித்து, மாநில மற்றும் மத்திய அரசின் வேளாண் துறைகளில் பணி ஆற்றி பின், வங்கியில் சேர்ந்து 34 ஆண்டு காலம் பணி புரிந்து ஒய்வு பெற்றவன்.

பள்ளியில் படிக்கும்போதே, எழுத்தாளரும், எனது அண்ணனுமான திரு வே.சபாநாயகம் அவர்களின் எழுத்தைப் பார்த்து நாமும் எழுதவேண்டும் என்ற எண்ணிய எண்ணம் அப்போது ஈடேறவில்லை.

பணி மூப்புக்குப் பின் இணையதளத்தில் உலா வந்தபோது, தமிழ்மணத்தில் வெளிவந்த பல்வேறு துறைகளில் அறிவும் அனுபவமும் பெற்றவர்களின் பதிவுகளைப் பார்த்த பின், ஒரு நாள் ஏன் நாமும் நம்முடைய அனுபவங்களை பதிவில் எழுதக்கூடாது என்று எண்ணினாலும், எப்படி வலைப்பதிவை ஆரம்பித்து பதிவிடுவது எனத் தெரியாததால், உடனே அதை செயலாக்க முடியவில்லை.

பின்பு அதிரை வலைப்பதிவில், நண்பர்  மதிப்பிற்குரிய அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களின் சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி?' என்ற தொடரைப் படித்ததும் தைரியமாக  நினைத்துப்பார்க்கிறேன் என்ற தொடரை 2009 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 30 ஆம் நாள் தொடங்கினேன்.அவருக்கு இந்த நேரத்தில் மறுபடியும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதிவு எழுதத் துவங்கிய புதிதில் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் திரு சென்னை பித்தன் அவர்கள், திரு க.வாசுதேவன் அவர்கள் மற்றும் எனது அண்ணன் திரு வே. சபாநாயகம் அவர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

எனது வலைப்பதிவை முதன்முதல் தனது தீராத பக்கங்கள் வலைப்பதிவில் புதிய பதிவர்கள் என்ற தலைப்பில் அறிமுகப்படுத்திய திரு மாதவராஜ் அவர்களுக்கு நன்றி!
என்னை முதன் முதல் வலைச்சரத்தில் கலையழகு முத்துக்கள் என்ற தலைப்பின் கீழ்  அறிமுகப்படுத்திய திருமதி மனோ சாமிநாதன் அவர்கட்கும் பிறகு அறிமுகப்படுத்திய திரு சென்னை பித்தன், கவிஞர் மதுமதி, திருமதி தென்காசி தமிழ் பைங்கிளி, திருமதி சசிகலா, திரு T.N.முரளிதரன், திரு தி.தமிழ்இளங்கோ ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கடந்த நான்கு ஆண்டுகள் காலமாக எனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நினைவுகள்’  மற்றும் நிகழ்வுகள் என்ற தலைப்புகளிலும்இடையிடையே எனக்குபிடித்த கவிதைகள் மற்றும் செய்திகளை வெவ்வேறு தலைப்புகளிலும் வெளியிட்டு வந்திருக்கிறேன்.

இதுவரை நான் இட்ட 265 பதிவுகளிலிருந்து எனக்கு அதிகம் பிடித்தவைகளை பட்டியலிட விரும்புகிறேன்.



1.நமக்குப் பிடித்த தலைவர்கள் கவிஞர்கள் போன்றோரை பெருமைப்படுத்த தெருக்கள்  அல்லது நிறுவனங்கள்  ஆகிவைகளுக்கு அவர்களது பெயரை சூட்டிய பிறகு, அந்த பெயர்கள் சிதைக்கப்படுவதைப் பார்த்து மனம் வெதும்பி இட்ட பதிவு என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?’
 
2.உண்மையான நண்பர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டதைப் பற்றிய பதிவு குளத்துப்பறவைகள்

 3. ஒரு போட்டிக்காக எழுதி ஒரு சில காரணங்களால் அனுப்ப இயலாத கவிதையை பற்றிய பதிவு நம்பிக்கை

 4 அவ்வைப் பாட்டி யாரை மரம் என்று கிண்டல் செய்கிறார் என்பதைப் பற்றிய பதிவு எனக்குப் பிடித்த பாடல்கள் 3

5. பொழுதைப்போக்க நான்  வரைந்த ஓவியங்கள் பலவற்றை பதிவில் வெளியிட்டிருந்தேன். அதில் ஒன்று எனது ஓவியங்கள் 4  என்ற இந்த பதிவு

6. நமது மாநிலத்திற்கு வர இருந்த தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு சென்றதன் காரணம் அறிந்ததும், இட்ட பதிவு விதையைத் தின்னும் விவசாயிகள்
 
7. நகைச்சுவை பிடிக்காதவர் உண்டோ? வங்கியாளனான எனக்கு பிடித்த நகைச்சுவை பற்றிய பதிவு வங்கியாளரைப் பற்றிய நகைச்சுவை 5

8 தர்மம் தலை காக்கும் என்ற பழமொழியை அனுபவித்து உணர்ந்ததால் எழுதிய பதிவு தர்மம் தலை காக்குமா 

9. நாடி ஜோதிடத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லிவரும் வேளையில் அதைப் பற்றிய பதிவு (நான்கு பதிவுகளாக) ‘நம்பலாமாநாடி ஜோதிடத்தை?’
 
10. பணியில் இருந்தபோது எனது Boss களாக இருந்த சிலரைப் பற்றிய தொடர் பதிவு Boss கள் பலவிதம்' இது 40 பகுதிகளாக வெளியிடப்பட்டது.

12. மின்னல்வரிகள் பால கணேஷ் அவர்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க  எழுதிய தொடர் பதிவு மீண்டும் பள்ளிக்குப்போகலாம்

13. மலையாளிகள் அனைவரும் ஓணம் கொண்டாடுவது போல் தமிழர்கள் அனைவரும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்ற ஏக்கத்தில் எழுதிய பதிவு பொங்கல் வாழ்த்து
 
14. ஆண்டில் ஒரு நாள் மட்டும் குழந்தைகள் நாள் கொண்டாடிவிட்டு மற்ற நாட்களில் மறந்துவிடுவது பற்றிய பதிவு ‘மழலை உலகம்மகத்தானது’
 
15. நான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய பதிவு நினைத்துப் பார்ப்பது ஏன்?’



இனி  வரும் நாட்களில் சந்திப்போம் புதிய தலைப்புகளுடன், புதிய எண்ணங்களுடன் வலைப்பதிவர்களின் அறிமுகத்தோடு.

49 comments:

  1. அன்பின் வே.நடன சபாபதி - அருமையான் துவக்கம் - சுய அறிமுகப் பதிவுகள் - 265ல் தேடிப் ப்டித்த 15 நற்பதிவுகள் - அனைத்தையும் சென்று படித்துவிடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அனுபவச் சுரங்கமே வருக! ரசனைகளை அள்ளித் தருக!

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. முதலில் அறிமுகப்படுத்திய அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னது - இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...

    சுய அறிமுகம் அருமை... அறியாத தளங்களையும் அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
  5. I do not know, you wrote the liked posts from memory or by visiting one more time. Whatever it may be, it is a laborious job. As a regular visitor to your blog, I can tell you that as usual it reflects your sincerity. Congratulations!

    ReplyDelete
  6. அன்பின் நடன சபாபதி - பதிவராக வாழ்க்கை துவங்கிய கலத்தில் இணையம் மூல உதவிய ( ?? ) அனைத்துப் பதிவர்களையும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்திய நற்செயல் பாராட்டுக்குரியது. தங்களின் அறிமுகப் படுத்தப் பட்ட 15 பதிவுகளையும் சென்று படித்து மறுமொழிகள் இட்டுள்ளேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. மலரும் நினைவுகளோடு மலர்ந்த முதல்நாள்! உங்களது அண்ணன் ஒரு எழுத்தாளர் மற்றும் வலைப்பதிவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி! வலைச்சரம் ஆசிரியர் பணி சிறந்திட எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  8. Refreshing start . Caressed me like a whiff of fresh air. Let the wonderful journey continue. By the way thank you very much for remembering me .Here is wishing you all the best,
    Avid reader of your blog,
    Vasudevan

    ReplyDelete
  9. வருக,வருக!உங்கள் கருவூலத்திலிருந்து 15 ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அளித்திருக் கிறீர்கள்! அருமை;அசத்தலான ஆரம்பம்;முதல் நாளே என்னையும் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள் ;நன்றி.
    நிறைவான ஒரு வாரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  10. அனைவரையும் மறவாமல் நினைத்து கூறிய விதம் சிறப்பு. வாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
  11. முதலில் இனிய ஆசிரிய வாரத்திற்கு நல்வாழ்த்து.
    தங்கள் வலைக்கு வந்து வாழ்த்திட முடியாத நிலையில்
    இங்கு வரக் கிடைத்தமைக்கு மகிழ்வு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. புதிய வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. ஆரம்பமே அசத்தலாக இருக்கின்றது ..
    அய்யா உங்கள் வலைக்கு வந்து கருத்து கூற இயலாமல் இருக்கு ..நெடுநாட்களாக முயற்சி செய்கிறேன் .
    flash அடித்தவாறே இருக்கிறது .இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி .

    ReplyDelete
  14. வாழ்த்துக்கு நன்றி திரு அப்பாதுரை அவர்களே!

    ReplyDelete
  15. பாராட்டுக்கும், நான் குறிப்பிட்டுள்ள எனது பதிவுகளைப் படித்து மேலான கருத்துக்களைத் தந்தமைக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

    ReplyDelete
  16. வரவேற்பிற்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    ReplyDelete
  19. பாராட்டுக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தாய் அறியாத சூல் உண்டோ?

    ReplyDelete
  20. அழகான சுய அறிமுகம். தொடரட்டும் தங்கள் சேவை.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

    ReplyDelete
  22. வாழ்த்துக்கும், கருத்துக்கும், எனது பதிவை தொடர்வதற்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கும், கருத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    ReplyDelete
  24. வாழ்த்துக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்கா திலகம் அவர்களே! ஏன் உங்களால் எனது வலைப்பதிவை பார்க்க முடியவில்லை எனத் தெரியவில்லை. Firefox மூலம் பார்க்க முயற்சியுங்களேன்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

    ReplyDelete
  27. வாழ்த்துக்கு நன்றி திருமதி ஏஞ்சலின் அவர்களே! ஏன் உங்களால் எனது வலைப்பதிவை பார்க்க முடியவில்லை எனத் தெரியவில்லை. Firefox Web Browser மூலம் பாருங்களேன். இங்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  28. வாழ்த்துக்கு நன்றி திரு நிஜாமுதீன் அவர்களே!

    ReplyDelete
  29. வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. வணக்கம்
    வே,நடனசபாபதி(ஐயா)


    இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கம் உங்களை அன்புடன் வருக வருகவென்று அன்புடன் அழைக்கிறேன் இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  31. வணக்கம்
    வே,நடனசபாபதி(ஐயா)


    இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை அன்புடன் வருகு வருகவென்று அன்புடன் அழைக்கிறேன் இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  32. இந்த வார ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தங்களின்
    பணி மிகச் சிறப்பாகத் தொடர என் இனிய வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  33. இன்று அறிமுகமான அனைத்து வலைத்தள உறவுகளுக்கும்
    உங்கள் அம்பாளடியாளின் மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    ReplyDelete
  34. வாழ்த்துக்கு நன்றி திருமதி மாதேவி அவர்களே!

    ReplyDelete
  35. வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

    ReplyDelete
  36. வாழ்த்துக்கு நன்றி திருமதி அம்பாளடியாள் அவர்களே!

    ReplyDelete
  37. பாஸ்கள் பலவிதம் தவறாமல் படித்தேன். தங்க அனுபவங்கள் எழுதும் முறை சுவாரசியமானது.பயனுள்ளது.

    ReplyDelete
  38. எனது பதிவுகளைப் படித்து, பாராட்டியமைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

    ReplyDelete
  39. இனிய வணக்கம் ஐயா...
    வாருங்கள்...

    வண்ணமலர்களால்
    வலைச்சரம் தொடுத்திடுங்கள்...
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா ..

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் சார்.நானும் மருத்துவ ஆசையோடு எண்ட்ரன்ஸ் எழுதி வேளாண் துறை கிடைத்து படித்தவள் தான்,ஆரம்பமே அருமையாக இருக்கு.

    ReplyDelete
  41. வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு மகேந்திரன் அவர்களே!

    ReplyDelete
  42. வாழ்த்துக்கு நன்றி திருமதி Asia Omar அவர்களே! தாங்களும் வேளாண்மை அறிவியல் படித்தவர் என அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  43. வித்தியாசமான நன்றி ததும்பும் அறிமுகம். தொடருங்கள் ஐயா.

    ReplyDelete
  44. பாராட்டிற்கு நன்றி திரு முகுந்தன் இராஜதுரை அவர்களே!

    ReplyDelete
  45. அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  46. வாழ்த்துக்கு நன்றி திரு பாலசுப்ரமணியன் அவர்களே!

    ReplyDelete
  47. வாழ்த்துகளும் வணக்கங்களும் அய்யா...!

    ReplyDelete
  48. வாழ்த்துக்கு நன்றி வணக்கங்களுடன் திரு நாஞ்சில் மனோ அவர்களே!

    ReplyDelete