Tuesday, March 5, 2013

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்! – இரண்டாம் நாள்



ஒரு சராசரி மனிதனுக்கு முக்கிய தேவைகளான, உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இடம் ஆகிய மூன்றில் நாம் உண்ணும் உணவுக்கான தானியங்களை பயிரிட்டுத்தரும் வேளாண் பெருமக்களைப் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறோமா என்றால் இல்லை என்பேன் நான்.



நம் இந்திய திருநாட்டில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காடுக்கு மேல் வேளாண் தொழிலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொண்டுள்ளனர் என்கிறது புள்ளி விவரம். பருவமழையையே நம்பி பயிரிடுவதும், அது சரியான அளவு பெய்யாதபோது  நஷ்டப்படுவதும், பின் கடன் வாங்கி கஷ்டப்படுவதும் தான் அவர்களது வாழ்க்கை. உழவர்களுக்கு உழவுத்தொழிலே ஒரு சூதாட்டம்  போலத்தான்.



ஒரு விவசாயி பயிர்த்தொழிலை முழுமையாய் நம்பியிருந்தால் கையில் ஒன்றும் மிஞ்சாது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று சொல்லியிருக்கிறார்கள்.



பருவமழை பொய்த்துப் போகும்போது ஏற்படுகின்ற வறட்சியும், கிடைக்கின்ற குறைந்த மகசூலும், அந்த விளைபொருட்களை அடி மாட்டுக்கு வாங்கி அவர்களுக்கு நஷ்டத்தை உண்டாக்குகின்ற  இடைத்தரகர்களுமே, வேளாண் பெருமக்களை மேலே முன்னேற விடாமல் கீழ் மட்டத்தில் வைத்திருக்கின்றன என்பது நிதர்சனம்.



கடன் வாங்கி வேளாண்மை செய்து ஏற்படுகின்ற நஷ்டத்தை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்ற வேளாண் பெருமக்கள் பற்றி, நாளும் ஊடகங்கள் நமக்கு அறிவிக்கின்ற செய்திகள்.



துரதிருஷ்டவசமாக, தொலை நோக்குப் பார்வை இல்லாத நமது மய்ய மற்றும் மாநில அரசுகள் இவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம்.



என்றைக்கு அரசு வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தடையில்லா பயிர் பாசனத்திற்கு வழி வகை செய்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை (Inputs) உரிய நேரத்தில் கிடைக்க வழி செய்து, விலை பொருட்களை இடைத்தரகர் இல்லாமல், நல்ல விலைக்கு விற்க வழி செய்கிறதோ அன்றுதான் வேளாண் பெருமக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். நமது நாட்டின் பொருளாதாரமும் உயரும்.



நினைத்துப் பாருங்கள் உழவர்கள் இந்த இடர்ப்பாடுகளுடன் தொழிலை மேற்கொள்ளவேண்டுமா என நினைத்து விட்டுவிட்டால் என்ன ஆகும்? இதைத்தான் அய்யன் திருவள்ளுவர் சொல்கிறார். 


உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
 

என்று. அதாவது உழவர்கள் தொழில் செய்யாமல் இருந்தால் பற்றற்ற துறவிகளுக்கும் வாழ்வு இல்லையாம். துறவிகளுக்கே இந்த கதி என்றால் நமது நிலை என்ன?



சேற்றில் அவர்கள் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும். என்பதை இனியாவது உணரவேண்டியவர்கள் உணர்வார்களா?

                        ------------------------


இனி வேளாண்மை பற்றிய தகவல்கள் தரும் வலைப்பதிவுகளைப் பார்த்துவிட்டு, பின் என்னை வியக்கவைத்த பதிவர்களின் வலைப்பதிவுகளைப் பார்ப்போம். 


1.இயற்கை வேளாண்மையைப் பற்றி Natural Farming என்ற வலைப்பதிவில் எழுதும் சிவம் ஜோதி அவர்கள்  மென்பொருள் துறையில் ஒரு தொழில் நுட்ப வல்லுனர். இந்த ஆண்டு தான் எழுத ஆரம்பித்திருக்கிறார் என்றாலும் நிறைய தகவல்களைத் தர முயற்சித்திருக்கிறார். இயற்கை வேளாண்மையை அறிய விரும்புவோர் பார்க்கவேண்டிய வலைத்தளம் இது.


2. பசுமைஇந்தியா  என்ற வலைப்பதிவில் வேளாண்மை பற்றியும் கால் நடைகள் பற்றியும் அதற்காகும்  செலவுகள் பற்றியும் விளக்கமாகத்தரும் இவர் மதுரையில் வேளானமைத் தொழில் செய்து வருகிறார். ஏனோ இவர் தன் பெயரை வெளியிடவில்லை. வேளாண் பெருமக்களுக்கு உபயோகமான வலைப்பதிவு இது.


3.நீலகிரி உயிர்க்கோளம் என்ற வலைப்பதிவில் பதிவிடும் இயற்கை உயிரியல் வல்லுனர் B.இரத்தினசபாபதி அவர்கள் நமக்குத்தெரியாத அநேக தாவரங்களை இவரது வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இயற்கை ஆர்வலர்கள் விரும்பும் வலைப்பதிவு இது.


4. மண், மரம், மழை, மனிதன் என்ற  இன்னொரு வலைப்பதிவு வேளாண் பெருமக்களுக்கு மட்டுமல்ல வீட்டுத் தோட்டம் போட விரும்புவோருக்கும் பயனுள்ள பதிவு.கோவையிலிருந்து வின்சென்ட் அவர்கள் இந்த வலைப்பதிவோடு இது நம் பூமி  என்ற இன்னொரு வலைப்பதிவிலும் எழுதி வருகிறார் ஆனால் ஏனோ 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதில் புதிதாய் எதுவும் பதிவிடவில்லை.




நான் இங்கே குறிப்பிடும் பதிவர்களின் பதிவுகள் என்னை வியக்கவைத்ததால் அவர்களின் பதிவுகளில் பிடித்தவைகளை கீழே  தந்துள்ளேன்.பிரபலமான இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பது என் கருத்து. 


5.புலவர் கவிதைகள் என்ற பெயர் தாங்கிய வலைப்பதிவில் தினம் ஒரு மரபுக்கவிதை எழுதி நம்மை திகைக்க வைத்துக்கொண்டிருக்கும் புலவர் சா.இராமாநுசம் ஐயா அவர்கள், மழையே மழையே நீ வாரோயோ என வான் சிறப்பு வேண்டுதலும் என்று கவிதை மூலம் வருந்தி அழைத்த அன்றே மழை பொழிந்தது. புலவர்கள் வாக்கு பொய்க்காது என்பது உண்மைதான்.


6. நினைக்கின்ற அத்தனையும் சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம்தான் சொல்ல முடிகிறது என்ற ஆதங்கத்தொடு நான் பேச நினைப்பதெல்லாம்  என்ற வலைப்பதிவில் நிறைய எழுதுபவரும், சகலகலா வல்லவருமான  அடையாறு அஜீத் என அன்போடு அழைக்கப்படும், சென்னைப்பித்தன் அவர்கள் நாம் காணும் செய்திகளை கதைகளாக மாற்றும் வல்லமை பெற்றவர். அண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை என்று வித்தியாசமான தலைப்புக்களில் பதிவெழுதி நம்மை ஏமாற்றுபவர்.ஓய்வு என்ற பெயரில் தற்காலிக வனவாசம் கொண்திருந்த இவர், புலி பதுங்குவது பாய்வதற்கே என்பது போல் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 


7.தினம் தினம் புதிய தலைப்புகளில் வெவ்வேறு விஷயத்தை சாமியின் மன அலைகள் என்ற பெயர் கொண்ட வலைப்பதிவில் எழுதி நம்மை திக்குமுக்காட வைக்கும் முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் ஒரு வேளாண் விஞ்ஞானி. இவர் எழுத்தில் குறும்பும் நகைச்சுவையும் இழைந்தோடினாலும் அதனுள்ளே கருத்தும் ஒளிந்திருக்கும். இவரது பதிவுகளில் பல புதிய தகவல்களையும் அறிவுரைகளையும் எச்சரிக்கையையும் காணலாம்.  புரதச்சத்தின் அவசியமும் மருந்துக்கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகளும் என்ற பதிவு அப்படிப்பட்ட ஒன்று.



8.கதை,கவிதை,கட்டுரை,கல்வி, அரசியல் நாட்டு நடப்பு,சினிமா என அனைத்தையும் தூரிகையின் தூறல் என்ற பெயருள்ள வலைப்பதிவில் எழுதி  பதிவுலகை கலக்கி வரும் பன்முகக் கலைஞர், கவிஞர் மதுமதி அவர்கள்.எனக்குத் தெரிந்து இத்தனைத் தலைப்புகளில் பதிவிடுவது இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருப்போருக்கு, இவர் பாட குறிப்புகளையும் மாதிரி வினாக்களையும் பதிவிட்டு சத்தமில்லாமல் ஒரு சமூகப் பணியை செய்து வருகிறார்.  TNPSC தேர்வுக்கு படிக்கும் தோழர்களே .. நீங்கள் எந்த வகை

என்ற பதிவில் வெற்றி நிச்சயம்-3 என்ற காணொளியையும் இணைத்து வெளியிட்டுள்ள பதிவே அதற்கு சான்று.



9. தென்றல் என்ற வலைப்பதிவில் தினம் ஒரு கவிதை பதிவிடும் சசிகலா அவர்களை ஆசுகவி எனலாம். இவரது கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாய் இருப்பதால் தென்றலை வீசினாலும், சமூக அவலங்களைப் பற்றி இவர் பாடும் போது அந்த கவிதைகள் தீயாகவும் சுடும். உழவன் படும் பாட்டை விளக்கும் தூரத்து பசுமை என்ற இவரது கவிதையும், தாவரங்களின் வலியைச் சொல்லும் வேரின் வலிகள் என்ற கவிதையுமே இதற்கு சான்று.



10. இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு? என்று சொல்லும் வீடு திரும்பல் வலைப்பதிவின்  மோகன் குமார்  அவர்களுக்கு சிற்றிடமென்ன பெரிய இடமே உண்டு. 2012 ஆம் ஆண்டில் மட்டும் 365 நாட்களில் 348 பதிவுகளிட்டு, பதிவுலகில் சாதனை படைத்திருக்கிறார். அதனாலேயே தமிழ்மண வரிசையில் முதல் இடத்தில் இன்னும் நிற்கிறார். பயணக்கட்டுரை, பேட்டிகள், திரை விமரிசனங்கள் என  இவர் எழுதாத விஷயங்களே இல்லை. எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது என்பதுதான் ஆச்சரியம். சிம்லா-குளூ-மணாலி  பயணக் கட்டுரையில் படங்களோடும் காணொளியோடும் இவர் தரும் விவரங்களைப் படிக்கும்போது நாமே அவரோடு பயணிப்பது போன்ற பிரமை ஏற்படுவது நிஜம்.



11. பதிவுலகத்தில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. திண்டுக்கல் என்றால் பூட்டு என்பார்கள். ஆனால் நமக்கோ திண்டுக்கல் என்றால் தனபாலன்  அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். எப்படி இவரால் எல்லா பதிவுகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கிறது என யோசிப்பதுண்டு. திண்டுக்கல் தனபாலன்என்ற பெயரிலேயே வலைப்பதிவு எழுதிவரும் இவர் தற்காலிக இடமாற்றம் காரணமாக பதிவிடுவதை சில நாட்கள் நிறுத்தியிருந்து, திரும்பவும் பதிவுலகை கலக்க வந்திருக்கிறார்.. திரைப்பட பாடல்களோடு அதற்குத் தகுந்த எதிர்பாட்டும் கலந்து DDMIX என்று தருவது  இவரது Speciality. அட...அவ்வளவுதானா ...! ISO என்ற தலைப்பில் ஐந்து பகுதிகளாக வெளியிட்டுள்ள பதிவுகள் ISO பற்றி அறியாதவர்களுக்கு ஒரு அரிய தகவல் தொகுப்பு.



இனி நாளை மற்ற பதிவர்கள் பற்றி பார்ப்போம்.

54 comments:

  1. என்னுடைய தளத்தையும் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிகமிக நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. முதல் நான்கு தளங்கள் இதுவரை நான் பார்க்காதவை.இனி அவற்றயும் படிக்கிறேன்.

    ReplyDelete
  3. தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா...

    சிவம் ஜோதி, B.இரத்தினசபாபதி - இவர்களின் தளம் எனக்கு புதிது...

    தினமும் வாசிக்கும் அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

    ReplyDelete
  6. நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    ReplyDelete
  7. அடாடா... விவசாயத் தளங்கள் எதற்குமே நான் விசிட் அடித்ததில்லை. அருமையான அறிமுகங்கள்- அவர்களுக்கு மனம் நிறைய நல்வாழ்த்துகளும், உங்களுக்கு நன்றியும்! அதைத் தொடர்ந்து நீங்கள் பகிர்ந்த முத்துக்கள் அத்தனையும் நானும் ரசிப்பவையே!

    ReplyDelete
  8. // பதிவுலகத்தில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. திண்டுக்கல் என்றால் பூட்டு என்பார்கள். ஆனால் நமக்கோ திண்டுக்கல் என்றால் தனபாலன் அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். எப்படி இவரால் எல்லா பதிவுகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கிறது என யோசிப்பதுண்டு. //

    சரியான கருத்து. எனக்கும் திண்டுக்கல் என்றால் தனபாலன் அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்.

    ReplyDelete
  9. நல்ல தளங்களின் அறிமுகங்கள்.

    தெரிந்த பதிவர்களைப் பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி....

    தொடரட்டும் அறிமுகங்கள்.

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பாராட்டுக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

    ReplyDelete
  11. நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

    ReplyDelete
  13. The plight of the farmers and the perpetual penury troubling them has been highlighted nicely with good quote from Thirukkural. Poor farmers are usually remembered for votes and as rightly pointed out long term solutions are the only way to alleviate their misery.
    Vasudevan

    ReplyDelete
  14. எனது வலைப்பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. வேளாண்மை பற்றி அறிமுகத்தைத் தந்து வலைப் பூக்களையும் அறிமுகப்படுத்தி சிறப்பானாதொரு பதிவை இட்டுள்ளீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! ஓட்டுக்கு மட்டுமே உழவர் பெருமக்கள் என்ற கருத்து சரியே.

    ReplyDelete
  16. பாராட்டுக்கு நன்றி திரு வின்சென்ட் அவர்களே!

    ReplyDelete
  17. அருமையான தளங்களை அணிவகுத்து அழகாக அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் ஐயா.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. வாடிக்கையாளரின் நடிபிடிக்கத் தெரிந்த உங்களுக்கு வலைத்தளத்தில் மீன் பிடிக்கவ சொல்லணும்.அத்தனையும் அருமையான தகுதியான பதிவர்கள். தொடருங்கள் வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  19. Dear Sir
    I am yet to read the first four blogs. Excellent information. Hope you mention this too. http://mooligaivazam-kuppusamy.blogspot.com.au/

    Thanks.

    ReplyDelete
  20. பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.இந்த பக்கத்தை புக் மார்க் செய்து கொண்டேன்,நேரம் கிடைக்கும் பொழுது வாசித்து விடுகிறேன்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    ReplyDelete
  22. வாழ்த்துக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தை வேறொரு பிரிவில் சேர்த்திருக்கிறேன். பொறுத்திருங்கள்.

    ReplyDelete
  24. வேளாண்மையின் அவசியமும்..
    அதனை போற்ற வேண்டிய கடமையையும்
    சொல்லி ஆரம்பித்த இன்றைய ஆக்கம்
    மிக அருமை ஐயா..

    சரித்திரம் படைத்துவரும் பதிவர்களின் அறிமுகம்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. வருகைக்கு நன்றி திருமதி Asia Omar அவர்களே!

    ReplyDelete
  26. பாராட்டுக்கு நன்றி திரு மகேந்திரன் அவர்களே!

    ReplyDelete
  27. வணக்கம்
    வே,நடனசபாபதி(ஐயா)
    நல்ல தகவல் அறியமுடியாத சில விடயங்கள் அறிய கிடைத்தது சிலதளங்கள் எனக்கு புதியவை சிலது தெரிந்த தளங்கள் அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  28. வணக்கம்
    வே,நடனசபாபதி(ஐயா)
    நல்ல தகவல் அறியமுடியாத சில விடயங்கள் அறிய கிடைத்தது சிலதளங்கள் எனக்கு புதியவை சிலது தெரிந்த தளங்கள் அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  29. இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்வார்கள்; வேளாண்மையை முதன்மைப்படுத்தி ,அது பற்றிப்பேசும் பதிவுகளை முதலில் அறிமுகப்படுத்தி அசத்தி விட்டீர்கள்!
    தொடர்ந்த பதிவுகளில் என்னையும் அறிமுகப் படுத்திசிறப்பளித்து விட்டீர்கள்; தொடர்ந்து
    மூன்று வாரங்களாக வலைச்சர அறிமுகம்!எழுதியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதென உணர்கிறேன்.
    நன்றி ,நன்றி,நன்றி

    ReplyDelete
  30. வணக்கம் ஐயா இன்று பகிரப்பட்ட தளங்களில் ஒரு சில தளங்கள்
    இதுவரை நானும் அறியப்படாத தளங்களே .வாழ்த்துக்கள் மிகவும்
    சிறப்பான முறையில் பகிரப்பட்ட தளங்களுக்கு .மிக்க நன்றி ஐயா
    தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .

    ReplyDelete
  31. அற்புதமான அறிமுகங்களுக்கு நடுவே தென்றல் அறிமுகமும் கண்டு மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். சிறப்பான முறையில் விவசாயின் நிலையையும் அவர்களைப் பற்றி நினைக்கவும் மறந்த மனிதர்களைப் பற்றியும் அனைவரும் உணரும் படி சொன்னீர்கள்.

    ReplyDelete
  32. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

    ReplyDelete
  33. பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இனி நாளும் உங்கள் பதிவை பார்க்கலாமென நம்புகிறேன்.

    ReplyDelete
  34. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திருமதி அம்பாளடியாள் அவர்களே!

    ReplyDelete
  35. பாராட்டுக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    ReplyDelete
  36. நான் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  37. இன்று அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப்பதிவ்ர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + நன்றிக்ள்.

    ReplyDelete
  38. ஓர வணக்கம் போல வேளாண்மைப் பதிவுகள் முதலில். மின நன்று. அத்தனை பதிவர்களுக்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து. காலை8.45. டென்மார்க்கில்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  39. ''..Firefox மூலம் பார்க்க முயற்சியுங்களேன். ..''
    முயற்சித்தேன். இன்னும் பயர் பொக்ஸ் கணனியில் பதிந்தபடியே உள்ளது. புதுக் கணனி வாங்கியும் செய்த முதல் வேலையே அது தானே!. மீண்டும் ஆடுதே!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  40. ஐயா! வணக்கம்

    என்னுடைய தளத்தையும் என்னையும் அறிமுகப்படுத்தியதோடு அதனை எனக்கும் தெரிவித்த, தங்களின் அன்பு உள்ளத்திதினை பாராட்டுவதோடு நன்றி கூறிப் பெருமைப்படுகிறேன்

    ReplyDelete
  41. திரு நடன சபாபதி,
    சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்று திருத்தவும்..

    எழுத்தில் ஈடுபாடு கொண்டு உங்களைப் போன்றோர் பிழையற்று எழுத கவன முயற்சி எடுக்கலாம். :))

    நன்றி.

    ReplyDelete
  42. வருகைக்கு நன்றி திரு முகுந்தன் இராஜதுரை அவர்களே!

    ReplyDelete
  43. பாராட்டுக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

    ReplyDelete
  44. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! ஏன் உங்களால் எனது வலைப்பதிவைப் பார்க்க முடியவில்லை எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  45. புலவர் ஐயா அவர்களே உங்களை நான் அறிமுகப்படுத்துவதா? உங்கள் கவிதையால் ஈர்க்கப்பட்டதால் அதை பதிவேற்றினேன்.அவ்வளவுதான்.

    ReplyDelete
  46. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி திரு அறிவன் அவர்களே! தவறைத் திருத்திவிட்டேன். தட்டச்சு செய்யும்போது தவறு நேர்ந்ததை கவனிக்கவில்லை.

    ReplyDelete
  47. மிக்க நன்றி . இது போன்ற ஊக்கங்கள் தொடர்ந்து எழுத வைக்கும்

    வேளாண் ப்ளாகுகள் பலருக்கும் புதியவை நன்றி

    ReplyDelete
  48. நன்றி திரு மோகன் குமார் அவர்களே!

    ReplyDelete
  49. வணக்கம் ஐயா..எப்படியிருக்கிறீர்கள்?
    முதலில் ஆசியப்பணிக்கு எனது வாழ்த்துகள் .. இன்றைய அறிமுகங்களில் 'தூரிகையின் தூறலை'யும் சேர்த்துக்கொண்டமைக்கு எனது நன்றி!..தொடருங்கள் ஐயா..

    ReplyDelete
  50. வருக வருக கவிஞர் அவர்களே! நலமே. தங்களின் வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  51. எல்லாருக்கும் இனிய வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  52. வாழ்த்துக்கு நன்றி திரு நாஞ்சில் மனோ அவர்களே!

    ReplyDelete
  53. இனிய நல்வாழ்த்துக்கள் ஐயா வலைச்சர ஆசிரியர் வாரத்திற்கு. இன்றைய பதிவில் திண்டுக்கல் தனபாலன் சார் முதல் சென்னைப்பித்தன் ஐயா வரை பலரைப்படிப்பவன் அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  54. வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி ‘தனிமரம்’ நண்பரே!

    ReplyDelete