ஆரம்பத்தில்
உடையில்லாமல் திரிந்த மனிதன், தட்பவெப்ப நிலை காரணமாக மரவுரி தரிக்க ஆரம்பித்து, பின்பு
விலங்குகளின் தோலிலான உடையை அணிய ஆரம்பித்து, பின் பருத்தி
உடைக்குத் தாவினான் என்கிறது மனித வரலாறு.
மனிதன் ஆடை அணிய ஆரம்பித்து 1.00.000
ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள் .இதில் மாற்றுக்
கருத்து தெரிவிப்பாரும் உண்டு.
இந்தியாவைப்
பொறுத்தவரை, ஆரம்பத்தில், அதாவது ஹரப்பா நாகரீகம் தொடங்கிய
காலத்திலிருந்தே, பருத்தியால் ஆன ஆடைகள் உபயோகத்தில் இருந்ததாக
ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆரம்பத்தில்
பெண்கள் புடவையையும்,
ஆண்கள் வேட்டியையும் உடுத்திவந்த நிலையில், ஆங்கிலேயர்களால்
அறிமுகப்படுத்தபட்ட நூற்பாலைகள் வந்தவுடன் மேலை நாகரீகம் தலை தூக்கி, பெண்கள் உடையிலும் ஆண்கள் உடையிலும் அநேக மாற்றங்கள் ஏற்பட்டன.
மேலும்
ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டு நெசவுத்தொழிலை மேம்படுத்துவதற்கு நமது நெசவுத்தொழிலை
அழிக்கும் வேலையில் ஈடுபட்டதும் நடந்தது. அன்று ஆரம்பித்த அந்த அழிவு
நடவடிக்கைகளால் நம்முடைய பாரம்பரிய கைத்தறி ஆடைகளுக்கான மவுசு படிப்படியாக
குறைந்தது என்பது நிஜம். ஆங்கிலேயர் விட்டுச் சென்ற அந்த பணியை நாம் இப்போது தொடர்ந்து
செய்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் வருந்தக் கூடிய செய்தி.
இந்தியாவில்
உழவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத்தொழில் என்பதும், இதில் மட்டும் நேரடியாகவும்
மறைமுகமாகவும் 124 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் அதிலும் 60
விழுக்காடு பெண்கள் என்பதும் அரசு தருகின்ற புள்ளி விவரங்கள்.
இந்தியாவில்
தயாராகும் துணி உற்பத்தியில் கைத்தறித்துறையின் பங்கு மட்டும் சுமார் 22
விழுக்காடு என்றும் ஏற்றுமதியாகும் துணிகளில் சுமார் 25 விழுக்காடு கைத்தறித்துணிகள்
என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி இருந்தும்
இந்த தொழிலில் ஈடுபடுவோர் சந்திக்கும் கஷ்டங்கள் சொல்லில் அடங்கா. மூலப் பொருள்
கிடைக்காததும், தேவையான நிதி
உதவி கிடைக்காததும், அப்படி கிடைப்பதும் போதுமான அளவு
இல்லாததும், தரகர்களின் சுரண்டலும், விசைத்தறிகளால்
ஏற்பட்டுள்ள போட்டியும், சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமமும் அவைகளில்
சில.
ஆனால் அரசின்
ஆதரவு இல்லாததால், இன்று
கைத்தறி நசித்துப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது பரிதாபமே.அரசு
நெசவாளர்களுக்கு, மூலப்பொருளான
நூல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், உற்பத்தியில் புதிய
தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்தும், தேவையான அளவு
வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்தும், இவர்களது தயாரிப்புகளை
சந்தைப்படுத்த வழிவகை செய்து நல்ல விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்தால்தான், நமது கைத்தறி நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை திறக்கும் அவலம் மறையும்.
நாமும் கைத்தறி
ஆடைகளை வாங்கி அவர்களை ஆதரிப்போம்.
-------------
1.நெசவுத்தொழில் வருமானம் வாய்க்கும்,வயிற்றுக்கும் எட்டாக்கனியாக இன்றுமட்டுமல்ல திருப்பூர் குமரன் காலத்திலும் இருந்தது
என்பதை சொல்லும், வெற்றி
நாயகன் அவர்கள் எழுத்து.காம் என்ற வலைப்பதிவில் எழுதிய கொடி காத்ததிருப்பூர் குமரன்...! என்ற இந்த கவிதையே போதும்.
2. 2010 ஆம் ஆண்டிலிருந்து
பதிவுலகில் கரைசேரா அலை ... என்ற வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருக்கும் அரசன் சே
அவர்கள் கவிஞர் எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்டவர். உகந்த நாயகன் குடிக்காடு...
என்ற இவரது ஊரின் தலைப்பின் கீழ் இவரது
ஊரை எழுத்து மூலமும் புகைப்படங்கள் மூலமும் அறிமுகப்படுத்தியிருக்கும் விதமே
அருமை. இருந்தாலும் நெசவுத்தொழில் பற்றி இவர்
எழுதிய நெ(வ)சவுத்தொழில் என்ற இந்த கவிதையை படித்தால் கலங்காமல்
இருக்கமுடியாது. நெசவுத்தொழில் செய்கின்ற
வாரியங்காவல் என்ற ஊருக்கு அருகே இவரது ஊர் உள்ளதால்தான், தான் பார்த்ததை கவிதையில் வடித்திருக்கிறார் என நினைக்கிறேன்.
இனி இன்று கவிதைகளால்
பதிவுலகை கலக்கி வரும் சில பதிவர்கள் பற்றி பார்ப்போம்.
3.மூங்கிலில்
நுழைந்து இசையாய் எழுந்து நம் உள்ளம் புகும் இவர் இதுவரை தன் பெயரிலேயே
வைத்திருந்த வலைப்பதிவின் பெயரோடு மூங்கில் காற்று என்பதையும்
சேர்த்திருக்கிறார் T.N.முரளிதரன் அவர்கள்.இவர் பல தலைப்புகளில்
பதிவிட்டாலும் எல்லாவற்றையும் விட இவருள் இருக்கும் கவிஞரே மேலோங்கி
நிற்கிறார்.இதுவரை 41 கவிதைகள் எழுதியிருந்தாலும் எதிரியே!எதிரில் வா! என்ற கவிதையில் இருக்கும் இடத்தை
விட்டு இல்லாத இடங்களில் நாம் எதிரியைத்
தேடுவதை நயத்தோடு சொல்லியிருப்பதே எனக்குப் பிடித்தது.
4. கம்பன்
வீட்டுக் கட்டுத்தறியே கவிபாடும் என்பார்கள். கவியரசரின் பெயர் கொண்ட இவர் கவிதை
பாடுவதில் வியப்பேதும் இல்லை. கண்ணதாசன் அவர்களின் ‘கவியாழி’
வலைப்பதிவில் பல்வேறு தலைப்புகளில் இதுவரை வெளியிட்ட கவிதைகளில் இளமை இருப்பது சில காலம் என்ற கவிதை நேர்மறை
கருத்துகளை சொல்வதால் இளைஞர்களை ஊக்கப்படுத்தும்
என்பதில் ஐயமில்லை.
5. 'தமிழைப் தமிழை நேசிக்கும் தமிழாள்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் கோவைக்கவி என்கிற கவிதாயினி வேதா இலங்காதிலகம் அவர்கள். யாழ்பாணத்தில் பிறந்த
இவர் தற்சமயம் இருப்பது டென்மார்க்கில் உள்ள ஓகுஸ் நகரில். வானொலி,
தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை,
அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்தவர் இன்னும் வாசித்துக்கொண்டு இருக்கிறார். பயணக்கட்டுரைகள்
ஆன்மீகம், கவிதைகள், பா மாலிகை என தலைப்புகளில்‘வேதாவின்
வலை’ என்ற வலைப்பதிவில் தினம் கவிதைகள் படைக்கும்
இவரின் எல்லா படைப்புக்களுமே அருமை என்றாலும் படிப்படியாய் என்ற இந்த கவிதை எல்லாவற்றையும்
விட ஒரு படி மேல் என்பது என் கருத்து.
6. கவிஞன் எழுத்தாளன் மென்பொறியாளன் என்று இவர்
தன்னைப்பற்றி வரிசைப்படுத்தி சொல்லும்போதே இவருள் உள்ள கவிஞனுக்கே முதலிடம்
தருகிறார் என்பதை அறிகிறோம். கவிதைகள், நட்புக் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் என இவரது பதிவு முழும் கவிதைகள் மயம்
தான். ரிஷ்வன் கவிதைத் துளிகள் என்ற வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான கவிஞர் சுரேஷ்
சுப்ரமணியன் அவர்களின் சிரிக்கும் பூக்கள்- ஹைக்கூ கவிதை உண்மையிலேயே ‘ஹை கிளாஸ்’ தான்.
7. கவிதைப் பூக்களின்
நந்தவனத்திற்கு சொந்தக்காரரான இவர் நடுநிலைக்கருத்துகளின் தாயகமாகவும் உள்ளேன்
என்கிறார் ‘கவிதை
வீதி சௌந்தர் அவர்கள்.
இவரது கவிதை நந்தவனத்தில் கண்டனக் கவிதைகள், காதல் கவிதைகள், பிரிவுக் கவிதைகள் திருக்குறள்
கவிதைகள், பெண் கவிதைகள்,குழந்தைக்
கவிதை, வசன கவிதை, வித்தியாசமான கவிதை, நெடுங்கவிதை SMS கவிதைகள் என பல கவிதைப் பூக்கள் தான் நம்மை வரவேற்கின்றன. இவரது ‘கவிதைவீதி’ வலைப்பதிவில் பல்வேறு தலைப்புகளில் வேறு விஷயங்களை எழுதினாலும் இந்த
கவிதைப் பூக்களின் வாசமே தூக்கலாக இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படிக் கூடவாநடக்கும் என அப்பாவித்தனமாய் கேட்கும் காதலனின் மன உணர்வை நீங்களும் இரசியுங்களேன்.
8. தமிழ்க் கவிதைகள் ..! என்ற
பெயர் தாங்கிய வலைப்பதிவில் கவிதைகள் படைத்து வரும் மோகனன் அவர்கள், மோகனனின் வலைக்குடில், தமிழ் கானா பாடல்கள், வசன கவிதை, இனிய தமிழ் பாடல்கள் என இன்னும் நான்கு
வலைப் பதிவுகள் வைத்துள்ளார். 2008 இல் தொடங்கி இன்று வரை 350 கவிதைகள்
படைத்துள்ளார். கவிதையே இவரது சுவாசம் என்பதை இவர் இந்த 350 ஆவது கவிதையை அவரை நேசித்துக்கொண்டு இருக்கும் கவிதைக்கே சமர்ப்பித்திருப்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். காதலியின் குரல் கைபேசியில் ஒலிக்காததால் அவர் தவித்த தவிப்பை எங்களின்செல்பேசி..! என்ற இந்த 350 ஆவது கவிதையில் மிக
அருமையாக பகிர்ந்திருக்கிறார் என்பதை
நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
9. தமிழடிப்
பொடியான் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் கவிஞர் கி.பாரதிதாசன் கம்பன்
கவியழகில் பற்று கொண்டு பாரிசில் இருந்து கவிதை பாடி வருபவர். கவிஞர்
கி.பாரதிதாசன் கவிதைகள் என்ற இவரது வலைப்பதிவில் காணக் கிடைப்பது அருமையான
மரபுக் கவிதைகள். காதல் ஆயிரம் என்ற தலைப்பில் தினம் பத்து வெண்பாக்கள் வீதம் இதுவரை
43 பகுதிகளில் மட்டும் 430 வெண்பாக்களை படைத்துள்ளார். வெண்பாப்
பிரியர்களுக்கு இவர் படைப்புக்கள் ஒரு
விருந்து. வெண்பா எழுத விரும்புவோருக்கு இவர் வலைப்பதிவு
ஒரு பயிற்சிக்கூடம். பாரிசில்
உள்ள கம்பன் கழகம் நடத்தும் திங்கள் கவியரங்கத்தில் தலைமை ஏற்று இவர் பாடிய மீண்டுமோர்ஆசை என்ற கவிதையைப் படிக்கும்போது நமக்கும் இவர் போல கவிதை எழுத ஆசை மீண்டும்
மீண்டும் பிறக்கும்!
10.தமிழில் முதுகலை பட்டம் பெற்று
பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி
விருப்ப ஓய்வு பெற்ற தி.தமிழ் இளங்கோ அவர்கள் தான் சொல்ல நினைத்ததை ‘எனது எண்ணங்கள்’ என்ற பெயர் தாங்கிய வலைப்பதிவில் 2011 ஆம் ஆண்டிலிருந்து
பதிவிட்டு வருகிறார். இவர் பலவகை தலைப்பில் பதிவிட்டிருந்தாலும், ‘கற்றது தமிழ்’ அல்லவா அதனால்
கவிதைகள் பலவும் படைத்திருக்கிறார்.
யாரிடம் கோளாறு? என்ற கவிதை போல,
இந்திர சித்து வேலைகள் என்ற கவிதையும்
சிரிக்கவும் ஆதங்கப்படவும் வைக்கிறது.
11.’பிறந்ததுஈழ மண்ணில் கற்றது யாழ் மண்ணில் தொலைந்தது
வேற்றினமண்ணில் தொடரும் பணி தமிழ் மண்ணில்’ என அறிமுகப்படுத்திக்கொள்கிறார்தமிழ்க்கிறுக்கன் நடா சிவா அவர்கள்.இவரதுவலைப்பதிவின் பெயர் சின்ன
சின்ன தூறல்கள் என்றாலும் இவர்கவிதைகள்,வாழ்த்துப்பாக்கள்,புதுக்கவிதைகள்,என கவிதை மழையையே பொழிந்திருக்கிறார். இதுவும்அழகு என்றகவிதையில் ஒவ்வொரு வரியும் அழகுதான்!
மற்ற பதிவர்கள் பற்றி நாளை பார்ப்போம்.
நெசவுத் தொழிலுக்கு வந்தனை செய்ததுடன் சிறப்பான கவிஞர்கள் அறிமுகமும்! நான் படித்திராத சில கவிஞர்களையும் கண்டேன். மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஎங்களின் பரம்பரை தொழிலை எழுதி சிறப்பித்தமைக்கு முதலில் நன்றி...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இன்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளேன்... சரியான சிந்தனை தானா...? என்று நினைத்திருந்தேன்...
தாங்கள் நேற்று என்னை அறிமுகம் செய்த விதமும், திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களின் கருத்தும் என்னை மேலும் ஊக்கப்படுத்தி, எழுதிய பதிவு சரியே என்று சந்தோசப்பட வைத்தது... இருவருக்கும் மிக்க நன்றி...
இதோ இன்றைய பதிவை வாசிக்க அழைக்கிறேன்...
இணைப்பை சொடுக்கவும் :: சந்தோசப்படும் பெயர் எது...?
ReplyDeleteவணக்கம்!
நல்ல தளங்களை நாடிப் படித்ததுடன்
வல்ல வலைச்சரத்தில் வார்த்துள்ளார்! - சொல்லரிய
சான்றோர் நடன சபாபதியார்! நற்புகழ்
ஆன்றோர் அணியும் அணி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா் - கம்பன் கழகம் பிரான்சு
//நமது கைத்தறி நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை திறக்கும் அவலம் மறையும்.//
ReplyDelete"பஞ்சமும் பசியும்" திரு.ரகுநாதன் ஞாபகம் வந்துவிட்டது. Younger generation might not remember, how many committed suicide in those days, due to the industrialisation of the weaving. Too painful to read those incidents.
என்னுடைய வலைதளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteமனிதனை முழுமையாக ஆக்குவது ஆடை.நெசவை போற்றி தொடங்கியது நன்று.
ReplyDeleteஇன்றைய வலைசரத்தில் எனது கவிதைக்கும் இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா!
என்னை மீண்டும் அறிமுகம் செய்தமைக்காக உங்களுக்கும் வலைச்சரதுக்கும் நன்றி
ReplyDeleteஉண்ண உணவும் உடுக்க உடையும் சொல்லியாகி விட்டது!அடுத்தது இருக்க இடமா?பலே சார்!அசத்துறீங்க.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்!
மன்னிக்கவும் "பஞ்சும்,பசியும்".
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்புரையோடு எனது வலைத்தளத்தினையும் கவிதைகளையும் அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி!
ReplyDeleteமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களது வலைப்பதிவிற்கு முன்னமே சென்று பின்னூட்டம் இட்டுவிட்டேன்.
ReplyDeleteஎன்மேல் கொண்ட அன்பால் வெண்பா பாடி வாழ்த்திய கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteகருத்துக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் தவறு என சொல்லி திருத்திய தலைப்பை எப்படி எழுதினாலும் கருத்து மாறாது. ஆதலால் அதில் தவறு ஏதும் இல்லை.
ReplyDeleteநன்றி திரு சுரேஷ் சுப்ரமணியன் அவர்களே!
ReplyDeleteநன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
ReplyDeleteநன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொன்னால் தவறேதும் இருக்குமா?
ReplyDeleteநன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
ReplyDeleteஎனை அறிமுகப்படுத்திய திருவாளர் வே.நடனசபாபதிக்கு நன்றி...
ReplyDeleteநானெல்லாம் வலையுலகில் ஒரு துரும்பு... என்னை விட வித்தகர்கள் இருக்கிறார்கள்...
அவர்களைத் தேடிப் பிடியுங்கள் ஐயா... கவிதை வடிவில் தற்போது ஒரு காதல் தொடரை எழுதி வருகிறேன்... தங்களின் மேலதிக விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்...
தங்களின் அன்புக்கு நன்றி...
விமலனின் காதலி! - கவிதை வடிவில் காதல் தொடர்...http://tamilkkavithai.blogspot.in/2013/02/blog-post_26.html
விமலனின் காதலி - 2 : கவிதை வடிவில் காதல் தொடர்!...http://tamilkkavithai.blogspot.in/2013/03/2.html
வருகைக்கு நன்றி திரு மோகனன் அவர்களே! அவையடக்கம் காரணமாக தங்களை ஒரு துரும்பு என சொல்லிக்கொள்கிறீர்கள். ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது உங்களுக்குத் தெரியாதக்டு அல்ல. தங்களின் ‘விமலினின் காதலி’ கவிதைத் தொடரை படித்து என் கருத்தை எழுதுவேன்.
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் என் இனிய அன்பு நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்களுக்கு என் நன்றிகள்.
நெசவுத் தொழிலுக்கு வந்தனை செய்து வந்த அறிமுகப்பதிவர்களிற்கும் இனிய வாழ்த்து. இதில் என்னையும் ஒருவராக்கியமைக்கும் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நெசவுத் தொழில் உண்மையில் எங்க ஊரை நினைவு படுத்திய வரிகள். அழியாமல் காப்போம். அசத்தலான பயன் தரும் பதிவுகள் தொடருங்கள். நன்றிங்க.
ReplyDeleteவலைச்சரத்தில் எனது தோட்டத்து மலரையும் சேர்த்து தமிழ் அன்னைக்கு சூட்டியதற்கு நடனசபா ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றிகள் . இந்த வலைச்சரத்தில் அறிமுகமான அனைத்து தமிழ் வளர உழைப்பவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
ReplyDeleteவருகைக்கும், பதிவர்களை வாழ்த்தியமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
ReplyDeleteநன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!
ReplyDeleteநன்றி திரு நடா சிவா அவர்களே!
ReplyDeleteநன்றி ஐயா..!
ReplyDeleteமற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
சிறப்பான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்...
ReplyDeleteசிறந்த
ReplyDeleteபதிவர்களைப்
பற்றிய
சிறப்பான
தொகுப்பு!
நெசவுத் தொழில் பற்றிய தங்கள் அலசல் மனதினைத் தொட்டது.
ReplyDeleteஇன்று அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!
வணக்கம்
ReplyDeleteவே, நடனசபாபதி(ஐயா)
உதிரத்திரமும் வியர்வையும் சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் பற்றிய படைப்பு மிக அருமை இன்று அறிமுகம் கண்ட தளங்களில் ஒன்று தவிர மற்றவை எல்லாம் புதியவை வாழ்த்துக்கள் ஐயா தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைவரையும் வாழ்த்தியதற்கு நன்றி திரு கவிதை வீதி சௌந்தர் அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி திரு நிஜாமுதீன் அவர்களே!
ReplyDeleteகருத்துக்கும், அனைவரையும் வாழ்த்தியதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவே, நடனசபாபதி(ஐயா)
உதிரமும் வியர்வையும் சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் பற்றிய படைப்பு மிக அருமை இன்று அறிமுகம் கண்ட தளங்களில் ஒன்று தவிர மற்றவை எல்லாம் புதியவை வாழ்த்துக்கள் ஐயா தொடருகிறேன் பதிவுகளை
(தவறு நடந்து விட்டது மீண்டும் இடுகிறேன்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கு நன்றி திரு ரூபன் அவர்களே!
ReplyDeleteநெசவுத்தொழிலை ஒரு முறை திரும்பி பார்க்க வைத்தது உங்கள் ஆக்கம். மின் தட்டுப்பாட்டால் இந்த தொழிலின் உற்பத்தி பாதிக்கப்படதாகவும் அறிந்தேன்.அவர்கள் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு முகுந்தன் ராஜதுரை அவர்களே!
ReplyDeleteபங்குபெற்ற ஆசிரியர்கள் பலரும் பல விதங்களில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். உழைப்பாளிகளுக்கு - நம் நாட்டின் அடி நாதத்தினருக்கு - மதிப்பு தரும் விதமான இந்த வகைப்படுத்துதல் மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. உங்களின் அனுபவம் ஆசிரியராகியிருக்கிறது இங்கு!! நன்றிகள் பல.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி ஹுஸைனம்மா அவர்களே!
ReplyDeleteபல அறிமுகங்கள். சிறப்பாக தந்த உங்களுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி திருமதி மாதேவி அவர்களே!
ReplyDelete