‘எலி
வளையானாலும் தனி வளை.’ என்பது பழமொழி இருந்தாலும் 40, 50 ஆண்டுகளுக்கு முன், தனி வீடு வேண்டும் என்று யாரும் நினைத்ததில்லை. காரணம்
அப்போது அனைவரும் வசிப்பிடம் எதுவாக இருந்தாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததுதான்.
வேலை தேடி நகரத்திற்கு
வருவோர் திருமணமாகும் வரை விடுதிகளிலும் பின்பு வாடகை வீடுகளிலுமே குடியிருப்பது
வழக்கம். இந்த தனி வீடு வேண்டும் என்ற எண்ணம் வந்ததே கடந்த 30 ஆண்டுகளில் தான்.அதற்கு
பல காரணங்கள்.
சிற்றூரிலிருந்து
பணி நிமித்தம் குடி பெயர்ந்ததும், வீட்டு வாடகை கொடுத்து கட்டுப்படியாகாததும், வீட்டுக்
கடன்கள் தாராளமாக கிடைக்க ஆரம்பித்ததும், வீடு வாங்குவது
கடன் சுமையை அதிகாரிக்கும் என்ற என்ற எண்ணம் மாறி அது ஒரு முதலீடு என்ற எண்ணம்
வந்ததும் அரசின் கொள்கையில் ஏற்பட்ட
மாற்றமும் போன்றவைகளே அவைகள்.
நான் வங்கியில்
சேர்ந்தபோது (1970) வங்கிகளில் வீடு கட்ட கடன் தர மாட்டார்கள். வீடு கட்ட
விரும்புவோர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கங்களில்
உறுப்பினர்களாக சேர்ந்து காத்திருந்து தங்கள் முறை வரும்போது கடன் பெற்று கட்டுவது
வழக்கம். அதில் ஆகும் தாமதம் காரணமாகவே யாரும் வீடு கட்டும் முயற்சியில்
ஈடுபட்டதில்லை.
ஆனால் இப்போது
நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் வீட்டுக்கடன் தரும்
நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வீடு கட்ட/வாங்க நீண்ட காலக் கடன்கள்
தருகின்றன.
நாங்களெல்லாம்
பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் கழித்துத்தான் வீடு கட்டுவதைப்பற்றியே
நினைத்தோம். அதற்கு காரணமும் உண்டு. ஒன்று இப்போதுபோல் சம்பளம் அப்போது தரப்படவில்லை.
இரண்டாவதாக வங்கிகளும் அப்போது கடன் தரவில்லை மூன்றாவதாக அப்போது ஒருவர் மட்டுமே
வேலைக்கு சென்றதால் மற்ற செலவீனங்களுக்குத் தரும் முன்னுரிமையை வீடு கட்டுவதற்கு தரப்படவில்லை.
நான்காவதாக இப்போதுபோல் வீடு கட்டித்தரும் நிறுவனங்களும் அப்போது அதிகம் இல்லை.
நான் மேலே சொன்ன
காரணங்கள் அனைத்தும் இப்போது சாதகமாக இருப்பதால் அனேகமாக பணியில் சேருவோர்
அனைவருமே இப்போது உடனே வீடு வாங்க விரும்புகின்றனர்.
இருந்தாலும் இப்போது
வீடு கட்டும்/வீடு வாங்கும் சூழ்நிலை குறிப்பிட்ட சில பிரிவினருக்கே அமைகிறது என்பதுதான்
உண்மை. அதே நேரத்தில் எண்ணற்ற மக்கள் தங்குவதற்கு வீடின்றி இன்றும் நடைபாதையிலும்
திறந்த வெளி மைதானத்திலும் வாழ்க்கையை நடத்தும் அவலம் இருக்கிறது என்பது
வேதனைப்படக்கூடிய விஷயம்.
இதற்கு காரணம் வேலை
தேடி நகரத்திற்கு இடம்பெயரும் மக்கள் தொகை 1901 இல் 11 சதமாக இருந்தது
இன்று 30 சதமாக அதிகரித்திருக்கிறது என்பதுதான் என்கிறது புள்ளி விவரம்.
நாடு விடுதலை
பெற்றபோது 350 மில்லியன் ஆக இருந்த ,நமது நாட்டின் மக்கட்தொகை ‘மெல்ல
மெல்ல’ அதிகரித்து, 2001
இல் 1.02 பில்லியன் ஆகவும் 2012 இல் 1.22
பில்லியன் ஆகவும் உள்ளது என்பது சற்று சிந்திக்கவேண்டிய விஷயம்
(ஒரு மில்லியன்
என்பது 10 இலட்சம் என்பதும் ஒரு பில்லியன் என்பது 1000 மில்லியன்
அதாவது 100 கோடி என்பது நம் எல்லோருக்கும் தெரியும்)
அரசின்
புள்ளிவிவரப்படி நம் நாட்டில் 0.53 மில்லியன் மக்கள் வீடு இல்லாமலும், 14.99 மில்லியன் மக்கள்
நெருக்கமிக்க பகுதிகளிலும், 2.27 மில்லியன் மக்கள்
உபயோகமற்ற வீடுகளிலும், 0.99
மில்லியன் மக்கள் பயன்படுத்தமுடியாத வீடுகளிலும் வாழ்கிறார்களாம்.
CRISIL (Credit Rating and Information Services of
India Ltd.) நிறுவனத்தின் ஆய்வு மதிப்பீட்டின்படி,வீடுகளின்
பற்றாக்குறை 2006-2008 இல் 78.7 மில்லியன் ஆக இருந்தது சற்று
குறைந்து 2011-14 இல் 75.5 மில்லியன் ஆக இருக்குமாம். அதுவும் நகர்
சார்ந்த பகுதிகளில் மட்டும் வீடுகளின் பற்றாக்குறை 2014 ஆம் ஆண்டின்
முடிவில் 21.7 மில்லியனைத் தொடும் என்கிறது அந்த ஆய்வு.
பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2007-2012)
கிராமப் பகுதிகளில்
வசிக்கும் மக்களில் சுமார் நான்கே முக்கால் கோடி பேர் வீடற்றவர்களாக இருப்பார்கள்
என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் தொண்ணூறு சதவிகிதத்தினர்
வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
வறுமைக்கோட்டுக்கு
கீழே வசிப்பவர்களுக்கு அதுவும் கிராமப்
புறத்தில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்காக அரசு கொண்டு வந்த திட்டம்
தான்,இந்திரா ஆவாஸ்
யோஜனா என்ற திட்டம் . இந்த திட்டத்தின்படி உதவிதொகையாக மலைப் பிரதேசத்தில்
வசிப்போருக்கு ரூபாய் 48,000 மும் மற்றவர்களுக்கு
ரூபாய் 45,000 மும் கொடுக்கப்படுகிறது.இது
நல்ல திட்டம் தான் ஆனாலும் இதிலுள்ள சிறு குறைபாடுகளால் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்களுக்கு அனைவரும் இந்த திட்டத்தால்
பயன் பெற நாள் ஆகலாம்.
அரசின் நோக்கமே
2017 ஆம் ஆண்டிற்குள் குடிசை வீடுகளே இல்லாதவாறு மாற்றவேண்டும் என்பதுதான். ஆனால்
அது நடக்குமா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.
நாடு விடுதலை
அடைந்து 65 ஆண்டுகள் கடந்தும், ஆளுக்கு ஒரு வீடு என்ற திட்டம் ஏட்டளவிலே மட்டும் இருப்பதால், இன்னும் நம்மால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு தர முடியவில்லை என்பது
மறுக்கமுடியாத உண்மை. இதற்கு காரணம் நம்மிடையே இல்லாத தொலைநோக்குப் பார்வைதான்.
அரசு தனது அரசு
இயந்திரத்தை முடுக்கிவிட்டு, வீடில்லா ஏழை எளியோருக்கு போர்க்கால அடிப்படையில் இந்த ஐந்தாண்டு திட்ட
காலத்திற்குள்ளாகவே வீடு கட்ட குறைந்த வட்டியில் நீண்ட கால நிதி உதவி செய்தாலொழிய
அனைவருக்கு வீடு என்பது கனவுத் திட்டமாகவே இருக்கும்!
நினைப்பது
நடக்கும் என நம்புவோம்.
--------------
முதலில் வீடு கட்ட விரும்புவோருக்கான சில பதிவுகளையும் கட்டுமானத்துறை
பற்றிய ஒரு பதிவைப் பார்ப்போம்.
1.தமிழ்
நாடு என்ற இந்த வலைத்தளத்தில் வீடு கட்ட மாடல் பட்ஜட் என்ற
தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை புதிதாய் வீடு கட்ட விரும்புவோருக்கும், பழைய வீட்டை வாங்க விரும்புவோருக்கும் உதவும் வகையில் நல்ல பல தகவல்கள்
உள்ளன. வீடு கட்ட நல்ல பில்டர் யார்?பழைய வீட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, மாடல்
வீடுகள் போன்ற தலைப்புகளுக்கான கட்டுரைகளைப் படிக்க இணைப்பும்
கொடுக்கப்பட்டுள்ளது.
2.பதிவுலகில் திரு வேலன் அவர்களைத்
தெரியாதவர்கள் இருக்கமுடியாது. போட்டோஷாப்
என்ற தொழில் நுட்பத்தை எல்லோருக்கும் புரியும் வண்ணம் வேலன் என்ற அவர் பெயரிலேயே உள்ள வலைப்பதிவில் பதிவிட்டவர். வீட்டுப் பிளானை நாமேடிசைன் செய்ய மற்றும் வீட்டு மாடல்களும் அதற்கான பிளான்களும் என்ற இந்த இரண்டு
பதிவுகளுமே அருமையானவை.
3.மின் பற்றாக்குறையைப் போக்க மரபுசாரா எரிசக்தியில் ஒன்றான சூரிய
ஒளியிலிருந்து வீட்டுக்கு மின்சாரம் பெறும் நாட்கள் அதிக தொலைவில் இல்லை எனலாம். இது
பற்றி வரப்போகுது! வீட்டுக்கு வீடு சோலார்! என்ற தகவலைத் தருகிறார் திரு சத்யமூர்த்தி அவர்கள், விதை 2 விருட்சம் என்ற அவரது வலைப்பதிவில்
4. Fuel Cell - எரிமக்கலன் என்ற
வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான திரு ராமநாதன் அவர்கள்
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பது பற்றி எழுதியுள்ள சூரிய ஒளியில் மின்சாரம்அறிமுகம் என்ற தொடர் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று. இவர் பரஸ்பர நிதி, பொது என்று மேலும் இரு வலைப்பதிவுகளில் எழுதி வருகிறார்.
5.தான் யார் என்று இன்னும் முடிவாகத் தெரியவில்லை என வேடிக்கையாகச்
சொல்லும் வடுவூர்
குமார் அவர்கள் ஒரு கட்டுமான பொறியாளர். இவர் கட்டுமானத்துறை என்ற பெயரிலேயே வலைப்பதிவை வைத்திருக்கிறார். 2006 ஆம் ஆண்டிலிருந்து பதிவிட்டு வரும் இவர் பல தலைப்புகளில் எழுதினாலும் தொழில்
நுட்பம் மற்றும் CONC.TECH என்ற தலைப்புகளில் இவர் எழுதும் பதிவுகள் கட்டுமானம் பற்றி அறியாத
பலருக்கு அரிய புதிய தகவல்களைத் தருகிறது. ஆற்றில் எவ்வாறு பாலம் கட்டுகிறார்கள்
என்பதை அழகிய புகைப்படங்களோடு விளக்கும் காவிரி நதி மீது என்ற மூன்று பகுதிகள்
கொண்ட பதிவு. நேரம் கிடைப்பின் இவரது தொழில் நுட்பபதிவுகள் அனைத்தையும்
படிக்கலாம். இதோடு இவர் மென்பொருள்
தொடர்புடைய தகவல்களைத் தர ‘லினக்ஸ்’ என்ற
வலைப்பதிவையும் வைத்திருக்கிறார்.
மேலும் சில
கவிஞர்களின் வலைப்பதிவை பார்வையிடலாம் வாருங்கள்.
6.2012 ஆம் ஆண்டிலிருந்து ‘மாற்றுப் பார்வை’ என்ற வலைப்பதிவில் எழுதிவரும் L.A. தினோ அவர்கள் ஒரு சட்ட நிபுணர். இவர் இதுவரை எழுதிய கவிதைகள் இரத்தினச் சுருக்கமாக
மூன்று நான்கு வரிகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் அருமை. தங்குமிடம் என்ற இந்த எட்டுவரிக்
கவிதை எத்தனையோ அவலங்களை சொல்லாமல் சொல்கிறது.
7. ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் பிறந்த
மண்ணில் உயிரின் வேரை ஊன்றியிருக்கும் தமிழ் நெஞ்சம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்
கவிதாயினி கீதா மதிவாணன் அவர்கள் 2011 ஆம் ஆண்டிலிருந்து பதிவில்
எழுதிக்கொண்டு இருக்கிறார் இவரின் வலைப்பதிவான ‘கீத மஞ்சரி’ யில். அம்மா என்றொரு மனுஷி என்ற கவிதையில் தாயின் நிலையை படம்பிடித்து
தரும்போது, இவரது எண்ணத்தின் வீச்சு தெரிகிறது!
8.’பார்த்தவற்றை கவிதைக்குள்
பதுக்கிவைக்கும் பகல் திருடன்’ என வித்தியாசமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொளும்
சிவகுமாரன் அவர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கவிதைகள் படைப்பதில் வல்லவர்.
கவிதைகளை காதல் வெண்பாக்கள், ஹைகூ கவிதைகள், காவடிச் சிந்து,சீட்டுக் கவி என வெவ்வேறு தலைப்புகளில் சிவகுமாரன் கவிதைகள் என்ற
அவரது வலைப்பதிவில் அரங்கேற்றி வருகிறார். எழுதாக் கவிதை என்ற இவரது கவிதையை
படித்ததும், .இதுபோல் எத்தனை கவிதைகள் தன்னுள் பதுக்கி வைத்திருக்கிறாரோ
என எண்ணத்தோன்றுகிறது!
9.கோவையிலிருந்து பதிவிடும் இளங்கோ அவர்கள்
இப்படிக்கு இளங்கோ என்ற வலைப்பதிவில் பல தலைப்புகளில் எழுதி வருகிறார். விழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து
வைக்க துணிகின்றேன்...என்று
கூறும் இவர் ‘பெற்ற மனம்
பித்து பிள்ளை மனம் கல்லு’என்ற பழமொழியை அழகாக கற்கள் என்ற
கவிதையில் தரும்போது கண்ணில் நீர் வருவது நிஜம்.
10. என் பார்வையில்
என் எண்ணங்களின் வெளிப்பாடு !
என்று கூறும் கவிதா அவர்கள் பார்வைகள்
என்ற அவரது வலைப்பதிவில் பல தலைப்புகளில் எழுதி பார்வைகள் பல விதம் என்கிறார்.
இவர் எழுதியுள்ள கவிதைகளைத் தேடி
படித்தபோது தெரிந்தது தேடல் வெளியில் இல்லை என்று. நீங்களும் படியுங்களேன்.
11.’கருவாச்சி’ என்ற புனைப்பெயருடன் பாசமான கிராமத்துப் பொண்ணு என்ற வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான தீபா வெண்ணிலா அவர்கள் எழுதிய
கவிதைகள் 50 க்கு மேல். ஆனாலும் இந்த முதியோர் இல்லம் கவிதை யதார்த்தை
சொல்லி கலங்க வைக்கிறது.
12. ‘அலையல்ல சுனாமி’ என்கிற பயமுறுத்தலை
வலைப்பதிவின் தலைப்பாக வைத்துள்ள விச்சு அவர்கள் ஒரு கல்வியாளர். தான்
படித்து ரசித்த விசயங்களையும் அவருள் தோன்றும் சில எண்ணங்களையும் வார்த்தைகளாக்கி பகிர்ந்துள்ளதாக
சொல்லும் இவர் ,தனது வலைப்பதிவில் பல் வேறு தலைப்புகளில்
எழுதியிருந்தாலும் குழந்தையிடம் கற்றுக்கொள் என்ற கவிதை நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. அதை
கற்றுக்கொள்வோம் ஏனெனில் சொல்கிறவர் கல்வியாளர் ஆயிற்றே!
13. ‘இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி
அலைபவனின் இலையுதிர்கால சருகுகள்’ என்று தனது இலையுதிர்காலம்
என்ற வலைப்பதிவை குறிப்பிடும் ஆறுமுகம் ஆனந்த் அவர்களின் வலைப்பதிவு முழுதும் கவிதை மயம் தான். துளிகள் என்ற
தலைப்பில் இவர் தந்துள்ள கவிதைகளின் வரிகள் கொஞ்சம்தான் ஆனாலும் அவைகள் சொல்லாமல்
சொல்வது அநேகம். தலைப்பில்லா இந்த கவிதையே
அதற்கு சான்று.
மேலும்
பல வலைப்பதிவர்கள் பற்றி நாளை சொல்கிறேன்.
இன்று வலைச்சரத்தில் சிறப்பான முறையில் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரத்தை அழகாகத் தொடுத்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள்.
//நாங்களெல்லாம் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் கழித்துத்தான் வீடு கட்டுவதைப்பற்றியே நினைத்தோம். அதற்கு காரணமும் உண்டு. ஒன்று இப்போதுபோல் சம்பளம் அப்போது தரப்படவில்லை. இரண்டாவதாக வங்கிகளும் அப்போது கடன் தரவில்லை மூன்றாவதாக அப்போது ஒருவர் மட்டுமே வேலைக்கு சென்றதால் மற்ற செலவீனங்களுக்குத் தரும் முன்னுரிமையை வீடு கட்டுவதற்கு தரப்படவில்லை. நான்காவதாக இப்போதுபோல் வீடு கட்டித்தரும் நிறுவனங்களும் அப்போது அதிகம் இல்லை. //
ReplyDeleteஉண்மை தான். மிகச்சிறப்பான அலசல். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
சிறப்பான அறிமுகத்துக்கு மிக்க நன்றி. தங்களின் அறிமுகம் எனக்குப் பெருமை .
ReplyDeleteவீடு கட்டுவது மற்றும் வீட்டுக் கடன் பற்றி அருமையான அலசல். அகவை 40 தாண்டியும் இன்னும் சொந்த வீடு கட்டுவது பற்றி யோசிக்கவே முடியவில்லை. தங்களைத் தான் உதவிக்கு நாடவிருக்கிறேன்.
ReplyDeleteநன்றி
வீடு பற்றிய அருமையான அலசல் கட்டுரை! சிறப்பான அறிமுகங்கள்! மிக ரசித்தேன். அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteTimely and very informative. While the blog was exhaustive I felt few more paragraphs about Home loans /schemes would have added more spark.
ReplyDeleteVasudevan
முதல் முறையாக என் கவிதையை அறிமுகம் செய்திருக்கீங்க. நன்றி! :)
ReplyDeleteவீடு பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteதளங்கள் அனைத்தும் சிறந்தவை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteExcellent poems are introduced. I had the chance to read the good ones one more time. Thanks.
ReplyDeleteபாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
ReplyDeleteநன்றி திரு சிவகுமாரன் அவர்களே! உதவி செய்ய காத்திருக்கிறேன்.
ReplyDeleteபாராட்டுக்கும் அறிமுகப்படுத்திய பதிவர்களை வாழ்த்தியமைக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!
ReplyDeleteகருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் கூறியபடி வீட்டுக்கடன்கள் பற்றிய பதிவையும் சேர்த்திருக்கலாம். பதிவின் நீளம் கருதி சுருக்கிவிட்டேன்.
ReplyDeleteநன்றி திருமதி கவிதா அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கும் அறிமுகப்படுத்திய பதிவர்களை வாழ்த்தியமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கும் அறிமுகப்படுத்திய பதிவர்களை வாழ்த்தியமைக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
ReplyDeleteபாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!
ReplyDeleteவீடு கட்டுதல் பற்றிய விளக்கம் மிகவும் அருமை!அறிமுகப்பதிவும் நன்று!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவே, நடனசபாபதி(ஐயா)
மனிதனின் வாழ்க்கையில் அத்தியவசியமானது உணவு,உடை,உறையுள் இவற்றில் உறையுள் பற்றிய விளக்கம் மிக அருமை இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அறிமுகம் செய்ததற்கு எனதன்பு நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் திரு ரூபன் அவர்களே! பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் தொடர்வதற்கும் நன்றி!
ReplyDeleteநன்றி திரு இளங்கோ அவர்களே!
ReplyDeleteஇதில் தெரியாதவர்களும் உள்ளனர்.
ReplyDeleteஎல்லா பதிவர்களிற்கும் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
ReplyDeleteவீடு பற்றிய அலசலும் கவிஞர்கள் அறிமுகங்களும் சிறப்பான பதிவு இன்று.
ReplyDeleteவீடு பற்றிய அலசலும் கவிஞர்கள் அறிமுகங்களும் சிறப்பான பதிவு இன்று.
ReplyDeleteவலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்து ஊக்குவிக்கும் வலைச்சர ஆசிரியர் ஐயாவிற்கும் குழுவினருக்கும் நன்றிகள்!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு நிஜாமுதீன் அவர்களே!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!
ReplyDeleteஒரு வித்தியாசமான வாரம்.பல நல்ல தகவல்களுடன் சிறப்பான அறிமுகங்கள்.நன்று!
ReplyDeleteஒவ்வொரு நாளும் பயனுள்ள தகவல்கள்.... நல்ல பல தளங்கள் என அருமையாக இருக்கிறது இந்த வார வலைச்சரம்....
ReplyDeleteதொடரட்டும் சிறப்பான அறிமுகங்கள்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு மனம் நிறைந்த நன்றி ஐயா. சக அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி திருமதி கீதா மதிவாணன் அவர்களே!
ReplyDeleteஎன்னுடையை பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நடனசபாபதி. மற்றைய அறிமுகங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி திரு விச்சு அவர்களே!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி திருமதி மாதேவி அவர்களே!
ReplyDeleteமிக்க நன்றி திரு வே. நடனசபாபதி அவர்களே.உங்கள் தொகுப்பின் மூலம் மேலும் பலருடைய பதிவுகளையும் காண நேர்ந்தது.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வடுவூர் குமார் அவர்களே!
ReplyDeleteவீடு கடன் பற்றிய கட்டுரை அருமை..எனது வலைப்பதிவு அறிமுகத்திற்கு நன்றி சார்..உடன் இடம்பெற்ற அனைத்துவலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
வேலன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு வேலன் அவர்களே!
ReplyDelete