"இன்னைக்கி நம்ம செட்டுக்கு வர போற கெஸ்ட்..."
"அதையேன் நீ சொல்ற... நோ நோ நோ... நீ சொல்ல கூடாது. அதெப்படி நீ சொல்லலாம்"
"சார் நான்..."
"நோ நோ நோ... நீ சொல்ல கூடாது. அதையேன் நீ சொல்ற. நானே சொல்றேன்" என ஆடியன்ஸ் பக்கம் திரும்பியவர் "ஹாய் செல்லம்..." என்றார்
"இனி நான் சொல்ல வேண்டியதே இல்லைனு நினைக்கிறேன். ஆமாங்க, பிரகாஷ்ராஜ் சார் தான் இன்னைக்கி நம்ம கெஸ்ட்"
"ஹா ஹா ஹா ஹா ஹா..."
"ஐயோ பயமா இருக்கு சார்"
"உன் போஸ்ட் படிச்சே மக்கள் தைரியமா இருக்கறப்ப என் சிரிப்பா பயமா இருக்கு?"
"சார் அது..."
"என்ன சொன்ன என்ன சொன்ன? பயமா உனக்கா?"
"சார்... அதில்ல சார்"
"அதில்லைனா வேற என்ன... ம்... சொல்லு சொல்லு கமான்"
"சார்..."
"இப்ப இப்ப.... இப்ப சொல்லணும்"
"ஐயோ... என்னை நீங்க பேச விட்டா தான சார் சொல்ல முடியும்"
"ஒரு நாள் உன்னை பேச விடாம பேசினதுக்கே உனக்கு இவ்ளோ டென்சன் ஆகுதே. எவ்ளோ நாள், எவ்ளோ பேர பேச விடாம நீ டென்சன் பண்ணி இருப்ப...ம், இப்ப புரியுதா அந்த கஷ்டம் என்னனு. அதை உனக்கு புரிய வைக்கவே யாம் இந்த திருவிளையாடலை நடத்தினோம்"
"திருவிளையாடலா இது... திரு திருனு முழிக்க வெச்சுட்டீங்க கொஞ்சம் நேரத்துல. என் அககண்ணை திறந்ததற்கு நன்றி சார், நான் திருந்திட்டேன். இனிமே மத்தவங்க பேசறதுக்கும் கொஞ்சம் அவகாசம் தரேன்"
"இது நல்ல பொண்ணுக்கு அடையாளம். என்ன செல்லம் நான் சொல்றது" என ஆடியன்சை பார்த்து கேட்கிறார், அவங்களும் கை தட்டி ஆமோதிக்கறாங்க
"சார், உங்ககிட்ட கொஞ்சம் கேள்விகள் கேக்கணும் சார்"
"கேள்வியா? நோ நோ நோ... எனக்கு பதில் சொல்லி பழக்கமில்ல செல்லம். ஒரு சேஞ்சுக்கு இன்னைக்கி நான் கேள்வி கேக்கறேன், நீ பதில் சொல்லு"
"நானா?"
"ஏன் ரிஸ்க்னு தோணுதா?"
"ச்சே ச்சே ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி யு நோ"
"ஐ டோன்ட் நோ... இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்போம் அதையும்"
"சரி சார், சட்டுபுட்டுனு கேள்விய கேளுங்க"
"என்ன சொன்ன என்ன சொன்ன?"
"கேள்வி கேளுங்கனு..."
"இல்ல இல்ல அதுக்கு முன்னாடி ஒண்ணு சொன்னியே... என்ன சொன்ன?"
"அதுக்கு முன்னாடி சரி சார்னு சொன்னேன்"
"இல்லில்ல... அதுக்கும் இதுக்கும் நடுவுலே நீ என்னமோ சொன்ன... என்னமோ சொன்ன நீ.... என்ன சொன்ன? சொல்லு சொல்லு சொல்லு"
"ஸ்ஸ்ஸ்ப்ப்பா.... முடியல சார்"
(மைண்ட்வாய்ஸ் : பிரகாஷ்ராஜ்க்கு கோயிலே கட்டலாம்...அப்பாவியவே பொலம்ப வெச்சுட்டாரே... ஹ ஹ ஹ...சூப்பர்)
"சொல்லு சொல்லு... என்ன சொன்ன?"
"சட்டு புட்டுனு..."
"கொலாபுட்டு தெரியும் அதென்ன சட்டு புட்டு?'
"எங்க ஊர் பக்கம் சீக்கரம்னு சொல்றதுக்கு அப்படி சொல்லுவாங்க"
"ஓஹோ... சட்டு... புட்டு... நல்லா இருக்கே. அது சரி, நீ ப்ளாக் எழுதற இல்லையா...."
"ஆமா சார்... என் ப்ளாக் பேரு அப்பாவி தங்கமணி. அதுல பாத்தீங்கன்னா..."
"வெயிட் வெயிட் வெயிட்... நான் கேட்டனா, இல்ல நான் கேட்டனா?"
"நீங்க தான சார்..."
"ப்ளாக் எழுதறயானு ஒரு வார்த்த தப்பி தவறி கேட்டா போதுமே... ஒடனே ஒரு மணி நேர பிரசங்கம் ஆரம்பிச்சுடுவியே"
"சார்..."
"சரி சரி விடு. நான் என்ன கேக்க வந்தேனா... ப்ளாக் எழுதறியே, ப்ளாக் படிக்கற பழக்கம் எல்லாம் உண்டானு"
"ஒ நெறைய படிப்பனே. படிச்சா தானே நாலேஜ் வளரும்"
"நான் என்னமோ சும்மா காமடி, மொக்கை இப் படி தான் ப்ளாக் போஸ்ட் இருக்கு ம்னு நெனச்சேன். நாலேஜ் வளர்ற அளவுக்கெல்லாம் எழுதறாங்களா?"
"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க?"
"வேற எப்படி கேக்கணும்"
"அதில்ல சார்... சரி சொல்றேன் கேளுங்க. தங்கம் பழனி ப்ளாக்ல பாருங்க Andriod போன்ல அப்ளிகேசன்களை SD'க்கு நகர்த்த பயன்படும் மென்பொருள் பத்தி சொல்லி இருக்காரு, நல்ல டெக்னிகல் ப்ளாக்னு இதை சொல்லலாம். அப்புறம் மேவியோட தினசரி வாழ்க்கை வலைப்பூவில் 'சாப்பிடும் கடலையில் ஆணி - ஒரு எச்சரிக்கை'னு ஒரு விழிப்புணர்வு பதிவு போட்டு இருக்காரு. அப்புறம் தலைநகர்ல இருக்கற நம்ம வெங்கட் அண்ணா நாம நேர்லயே மத்யப்ரதேசை சுத்தி பாத்த உணர்வு தர்ற மாதிரி ஒரு தொடர் எழுதி இருக்கார் பாருங்க. ஹ்ம்ம், ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ஹிஸ்டரி இப்படி இண்டரஸ்டிங்ஆ சொல்லி குடுத்து இருந்தா நானும் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கி இருப்பேன்"
"ஹும்கும்... வாங்கிட்டாலும்"
"அப்புறம் பயண கட்டுரை எழுதறதுல நம்ம நியூஸிலாந்து துளசி டீச்சரை அடிச்சுக்க ஆளே இல்லை, நாம நெறைய முறை பாத்த இடமா இருந்தாலும் அவங்க வர்ணனைல படிச்சதும் இன்னொரு முறை அவங்க கண்ணோட்டத்துல பாக்கணும்னு தோணும். அதே போல மனசுல ஓட்டிக்கற மாதிரி எழுதற இன்னொருத்தர் மனதோடு மட்டும் கௌசல்யா. சமீபத்துல அவங்க எழுதின 'குழந்தைகள் மீதான அதிக எதிர்பார்ப்பு ஆபத்து' அப்படிங்கற பதிவை பாத்தா உங்களுக்கே புரியும். அப்புறம் நியூஸ் அப்டேட் வேணும்னா அவர்கள் உண்மைகள் ப்ளாக் பாருங்க, சமீபத்துல நடந்த பாஸ்டன் தீவிரவாத அட்டேக் பத்தி எழுதி இருக்காங்க"
"இவ்ளோ விஷயம் இருக்கா? ஹும்ம்..."
"இன்னும் இருக்கே. புதிய தலைமுறை தொலைக்காட்சில நடந்த தமிழன் விருதுகள் பத்தி பிம்பம் ப்ளாக்ல சொல்லி இருக்காங்க பாருங்க. அப்புறம் பாஸ்டன் ஸ்ரீராம் ப்ளாக்ல Resumeல இருக்க கூடாத பத்து விஷயங்கள் பத்தி சொல்லி இருக்கார், ரெம்பவும் உபயோகமான பதிவு. இது ரெம்ப பழைய பதிவு தான், ஆனா உபயோகம்னு தோணினதால சொன்னேன்"
"வாவ்... பரவாயில்லையே வாழ்க்கைக்கு தேவையான நெறைய விஷயங்கள் இங்க இருக்கே"
"கண்டிப்பா. சின்ன வயசுல பொம்மலாட்டம் பாத்து இருப்பீங்க, இன்றைய தலைமுறைக்கு அது தெரியாமையே போயிடுமோனு அதை பத்தி எழுதி இருக்காங்க நம்ம கற்றலும் கேட்டலும் ராஜி அக்கா. அப்புறம் பாத்தீங்கன்னா, இப்ப சம்மர் லீவ் விட்டாச்சு, போர் அடிக்குதுன்னு பசங்க ரகளை, அம்மாக்கள் டென்சன். இந்த விஜிஸ் கிராப்ட் பாத்தா நெறைய கத்துக்கலாம், அதோட பசங்களுக்கு டைமும் போகும்"
"பெரிய லிஸ்ட் தான் போ... உக்காந்து உக்காந்து கழுத்தே வலிக்குது"
"அதுக்கும் இங்க தீர்வு இருக்கே"
"கழுத்து வலிக்கா?"
"ஆமா சார்... இங்க பாருங்க நண்பர்கள் உலகம்னு ஒரு வலைப்பூ, அதுல கழுத்து வலி வராமல் இருக்க என்ன செய்யணும்னு சொல்றாங்க. அதோட குழந்தைகள் அடிக்கடி தலைவலினு சொன்னா அதை எப்படி கவனிக்கனும்னு சொல்றாங்க ஹாய் நலமா வலை பக்கத்துல. இன்னொன்னு, பட் நாட் லீஸ்ட், தொண்டு கிழங்களுக்கான கணினி அப்படினு ஒரு வலைப்பூவில் நம்ம மயக்க ஊசி டாக்டர் திவாண்ணா உபயோகமான நெறைய டிப்ஸ் அண்ட் FAQஸ் எழுதிட்டு இருக்கார் (கிழம்னு நான் சொல்லல யுவர் ஆனார், திவாண்ணா வெச்ச பேர் தான்)"
"வாரே வா... நெஜமாவே நெறைய உபயோகமான விசயங்களும் வலைப்பூவில் இருக்கத்தான் செய்யுது... கிரேட்"
"நான் தான் சொன்னனே சார்" என அப்பாவி பெருமயாக இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொள்ள
"ஆனா... எனக்கு ஒரு டவுட் அப்பாவி"
"என்ன சார்... எனக்கு எப்படி அப்பாவினு பேர் வந்ததுனு தானே"
"அது தெரிஞ்ச விஷயம் தானே... அடப்பாவி அப்படிங்கற பெயர் மருவி அப்பாவி ஆய்டுச்சு இல்ல"
"சார்..." என அப்பாவி டென்ஷன் ஆக
"அத விடு... என்னோட டவுட் என்னன்னா, மத்தவங்க எல்லாம் இவ்ளோ உருப்படியான விஷயங்கள் எழுதறாங்க இல்லையா? நீ மட்டும் ஏன் எப்பவும் மொக்கை போட்டுட்டே இருக்க"
(மைண்ட்வாய்ஸ் : சபாஷ் சரியான கேள்வி)
ஒரு கணம் ஜெர்க் ஆனாலும் சமாளித்து கொண்ட அப்பாவி "சார்... மத்தவங்க இந்த நோய் வந்துட்டா என்ன பண்றது, இந்த பிரச்சனைய எப்படி சமாளிக்கறது இப்படி போஸ்ட் எழுதறாங்க. நல்ல விஷயம் தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா எங்கள மாதிரி மொக்கை போடறவங்க எழுதறத படிச்சு சிரிச்சா போதும், நோய் பிரச்சனை எதுவும் கிட்ட வராது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இல்லையா?"
"ஆஹா... உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா அப்பாவி. மீ தி எஸ்கேப்" என பிரகாஷ்ராஜ் அபீட் ஆகிறார்
(மைண்ட்வாய்ஸ் : பிரகாஷ்ராஜாலேயே இவகிட்ட பேசி ஜெய்க்க முடியலைனா... ஹ்ம்ம்....)
:)))
நம்மள பத்தி தெரிஞ்சும் ரெண்டாவது வாட்டி வலைச்சர
ஆசிரியரா இருக்க வாய்ப்பு கொடுத்த சீனா அய்யாவுக்கு மிக்க நன்றி. அதோட இந்த
வாரம் முழுக்க நான் எழுதினத பொறுமையா படிச்ச உங்க எல்லாருக்கும் மிக்க
மிக்க நன்றி
மீண்டும் சந்திப்போம்... அதுவரை வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் எல்லாம் கூறி விடை பெறுவது அப்பாவி தங்கமணி... நன்றி
நட்புடன்.
புவனா (எ) அப்பாவி தங்கமணி
//பிரகாஷ்ராஜாலேயே இவகிட்ட பேசி ஜெய்க்க முடியலைனா... ஹ்ம்ம்....)
ReplyDelete:)))//
மிகவும் ரஸித்துப்படித்து சிரித்து மகிழ்ந்தேன். மனமார்ந்த பாராட்டுக்கள்.
>>>>>
மிகவும் அருமையான அறிமுகங்கள். அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஹாஹஹா.. நல்லா இருந்தது அப்பாவி..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் ஒரு ப்ளாக் வச்சிருப்பதை நானே மறந்து போன நிலையில், ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி அப்பாவி
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அறிமுகங்களுக்கும், அறிமுகப்படுதியவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteரச்னையாய் அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteஎன்னையும் இங்கே அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி அப்பாவி....
ReplyDeleteபயணக் கட்டுரைகள் எழுதுவதில் ஜாம்பவான் துளசி டீச்சர் தான்... அவரோடு என்னையும் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி.....
உங்களின் கலகலப்பான ஸ்டைலில் அருமையான அறிமுகங்கள்! மிக ரசித்தேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகளும் உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் அப்பாவி!
ReplyDeleteஎன் வலைத்தளத்தையும் அப்ப அப்ப யராவது அறிமுகப்படுத்துகிறார்கள் அதுமட்டுமல்லாமல் அதையும் எனக்கு தெரியபடுத்துகிறார்கள். அது போல இன்றும் இந்த அப்பாவி மதுரைத்தமிழனின் வலைதளத்தை அறிமுகபடுத்திய அப்பாவி தங்கமணிக்கும் அதை என்னிடம் வந்து தகவல் தெரிவித்த ரூபன்(2008rupan) அவர்களுக்கும் எனது மனம்மார்ந்த நன்றிகள்
ReplyDeleteஅனைவரும் வாழ்க வளமுடன்
எனது புளக்கையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDelete:-)))))
ReplyDeletearumai:-)
ReplyDelete"ஹாய் செல்லம்..." ஹா...ஹா....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பிரகாஷ்ராஜ் ஸ்டையிலில் சூப்பர் தொகுப்பு தங்கமணி சார் நிறைவான பணி மீண்டும் சந்திப்போம்!
ReplyDeleteசூப்பர் ....
ReplyDeleteஇன்றும் நல்ல நல்ல அறிமுகங்கள்..அப்பாவி,பேசாம ப்ளாக் எழுதறதை விட்டுட்டு டிவி சிரீயல்,சினிமா கதை வசனம் என்று சான்ஸ் தேடினால் வாய்ப்பு நிச்சயம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்மையும் கண்டுக்கிட்டதுக்கு நன்றிகள் அப்பாவி.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
thank u bhuvana and wishes for others
ReplyDelete