Friday, April 19, 2013

உங்கள் அப்பாவி டிவியில் கிட்சன் கிலேடி 2013...:)))

"ஹாய் ஹாய் ஹாய்..."
 
"வெறும் வாய்ல அவல் மெல்றது கேள்விப்பட்டு இருக்கேன், நீ என்ன வெறும் வாய்ல மாடு ஓட்ற"
 
"வேண்டாம்... அப்புறம் வெறும் கால்ல உன்னை ஓட்ட வேண்டி வரும்"
 
"எப்பவும் பூசாரி தான பேய ஓட்டும்... இன்னைக்கி பேய் பூசாரிய ஓட்டறேன்னு சொல்லுது... ஹையோ ஹையோ"
 
(என்னங்க, யார் பேசறானு புரியலியா, ஒருத்தர ஒருத்தர் கால வாரிக்கற ஸ்டைல் வெச்சே தெரியலியா... நம்ம விஜய் டிவி Anchors சிவகார்த்திகேயன் மற்றும் DD என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி தான்... சரி சரி பஞ்சாயத்து களை கட்டிடுச்சு, அங்க கவனிங்க)
 
"சிவா..." என DD மோகினி அவதாரம் எடுக்க ஆயுத்தம் ஆக
 
சிவா : சரி சரி, நாம வந்த வேலைய பார்ப்போம்
 
DD : ம்... இன்னைக்கி நாம எல்லாம் இங்க ஏன் வந்திருக்கோம்னா நம்ம அப்பாவி டிவில கிட்சன் கிலேடி 2013 பைனல்ஸ் நடக்க போகுது. இதுல ஜெயக்கறவங்களுக்கு நாலு கோடி பரிசு அறிவிச்சு இருக்காங்க அப்பாவி
 
சிவா : அப்பாடா... நல்லவேளை, நான் கூட அப்பாவி கையால செஞ்ச கேசரி தான் பரிசுனு சொல்லிடுவாங்களோனு பயந்தேன்
 
DD : ச்சே ச்சே... அப்புறம் கொலை முயற்சி கேஸ் வந்துடுமல்ல
 
சிவா : வாஸ்தவம் தான்... அது சரி, யாரெல்லாம் இந்த போட்டில கலந்துக்க போறாங்க
 
DD : பெஸ்ட் கிட்சன் ப்ளாக்கர்ஸ்ல இருந்து 20 பேர் ஷார்ட் லிஸ்ட் ஆகி இன்னைக்கி பைனல்சுக்கு வந்திருக்காங்க
 
சிவா : அப்ப இது டாப் 20னு சொல்லு
 
DD : அதே தான்... ஜட்ஜ் யாருனு தெரியுமா?
 
சிவா : சுப்ரீம் கோர்ட்டா இல்ல ஹை கோர்ட்டா?
 
DD : கேட்டா மட்டும் டக்கு டக்குனு சொல்லிடுவியோ... யோவ் நான் கேட்டது இன்னைக்கி கிட்சன் கிலேடி போட்டிக்கு ஜட்ஜ் யாருனு
 
சிவா : ஒ...அதா, அனேகமா பறவை முனியம்மா பாட்டியோ இல்ல தாமு சாராவோ தானே இருக்கும்
 
DD : அதான் இல்ல
 
சிவா : வேற யாரு?
 
DD : சாட்சாத் நம்ம அப்பாவி தங்கமணி தான்
 
சிவா : வாட் எ மெடிக்கல் மிராக்கில். ஹும்...வர வர யார் தான் சமையல் ப்ரோக்ராம்க்கு ஜட்ஜா இருக்கறதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போச்சு
 
DD : விடு சிவா... நடக்கறதெல்லாம் நம்ம கைலயா இருக்கு
 
சிவா : நடக்கறது கைல இல்லம்மா, கால்ல... ஒ நீ நாலு கால் கேட்டகிரி இல்ல... நான் மறந்துட்டேன்
 
DD : இப்படியே பேசிட்டு இருந்த, அப்புறம் அப்பாவிகிட்ட புடிச்சு குடுத்துடுவேன்
 
சிவா : ஐயோ வேண்டா... எங்காத்தாவுக்கு நான் ஒத்த புள்ள
 
DD : ம்... அந்த பயம் இருக்கட்டும்... சரி சரி அப்பாவி வர்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் அடக்கி வாசி... ஹலோ அப்பாவி வாங்க வாங்க
 
"ஹாய் DD, ஹாய் சிவா" என்றபடி அப்பாவி என்ட்ரி ஆகிறாள்
 
சிவா : வாங்க அப்பாவி... நல்லா இருக்கீங்களா?
 
அப்பாவி : நல்லா இருக்கேன் , நீங்க?
 
சிவா : போன நிமிஷம் வரைக்கும் நலம் தான், இனி பாப்போம்
 
DD : அப்பாவி எனக்கு ஒரு டவுட்
 
அப்பாவி : அதான் உங்களுக்கு நெறைய வருமே DD?
 
"செம பல்பு ஹ ஹ ஹ" என சிவா சிரிக்க
 
முறைத்தபடி "அதென்ன அப்பாவினு" என DD தயக்கமாய் இழுக்க
 
அப்பாவி : பேர் தான்
 
DD : அது புரியுதுங்க... வித்தியாசமா இருக்கே
 
அப்பாவி : நானே வித்தியாசமானவ தான
 
சிவா : நான் மதுரைக்கே போறேன்
 
அப்பாவி : கூல் சிவா கூல்
 
சிவா : அது எங்கூர்ல ஆடி மாசமே ஊத்திட்டாங்க
 
DD : நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில சொல்லலியே அப்பாவி
 
அப்பாவி : ஆகு பெயர் தெரியுமா உங்களுக்கு
 
சிவா : எனக்கு எங்க ஆத்தா பேரு தான் தெரியும்
 
அப்பாவி : அட இது இலக்கணம்
 
சிவா : நீங்க கொஞ்சம் வெளக்கனும்
 
அப்பாவி : அதாவது இயல்புலயே நான் அப்பாவியா இருக்கறதால அந்த பெயரே ஆகி நான் அப்பாவி ஆய்ட்டேன்
 
சிவா : நான் இப்ப பைத்தியம் ஆய்ட்டேன்
 
DD : அப்பாவி, தெரியாம உங்ககிட்ட கேள்வி கேட்டுட்டேன். கேப்பியா கேப்பியா கேப்பியா (என தன்னை தானே தலையில் அடித்து கொண்டார் DD)
 
அப்பாவி : சரி சரி, வளவளனு பேசாம ப்ரோக்ராமுக்கு போங்க
 
சிவா : நேரம் தான்... டாப் 20 கிட்சன் கிலேடிகள் யாருனு ஒரு இன்ட்ரோ குடு DD மொதல்ல
 
DD : அவங்க பேர் மட்டுமில்ல, அவங்க ஒரு ஒருத்தரும் ஒரு டிஷ் அனுப்பி இருக்காங்க...
 
சிவா : டிஷ்ஷா அதுல விஜய் டிவி தெரியுமா?
 
DD : ஏக்டர் விஜய்யே தெரிவாரு (என DD எரிச்சலாய் கூற)
 
சிவா : ரியல்லி?
 
DD : ஸ்ஸ்ஸ்ப்ப்பா... நிஜமாவே முடியல சிவா. உன் கூட குப்பை கொட்ரதுக்கு உன் Wife'க்கு அவார்டே குடுக்கலாம்
 
சிவா : சரி சரி சொல்ல வந்தத சொல்லு
 
DD : நான் என்ன சொல்ல வந்தேன்னா, டாப் 20ல இருக்கற எல்லாரும் ஒரு டிஷ்... வேண்டாம் நான் தமிழ்லயே சொல்றேன். 20 பேரும் ஒரு உணவு பதார்த்தம் செஞ்சு சேம்பிள் அனுப்பி இருக்காங்க. அதை நம்ம ஜட்ஜ் அப்பாவி டேஸ்ட் பண்ணி பாத்துட்டு வின்னர் யாருனு சொல்லணும்
 
சிவா : குட், இப்படி எதார்த்தமா பதார்த்தம்னு மொதலே சொல்லி இருந்தா எனக்கும் புரிஞ்சுருக்கும். அதை விட்டுட்டு டிஷ் டஷ்னு... இப்ப அந்த டாப் 20 யாருனு DD சொல்லுவாங்க
 
DD : எதார்த்தம் பதார்த்தம்... வர வர நீ டி.ஆர் மாதிரி பேச ஆரம்பிச்சுட்ட. சரி விடு, அந்த டாப் 20 லிஸ்ட் வித் அவங்க செஞ்ச பதார்த்தம் லிஸ்ட் இதோ...
 
1. கலிபோர்னியா மகி அருண் - புளி பொங்கல்
 
2.சிங்கப்பூர் பிரேமா - ஸ்வீட் போளி
 
3. சென்னை சங்கீதா நம்பி - ஆனியன் பிரெஞ்ச் டோஸ்ட்
 
4. சிங்கப்பூர் ஜெயஸ்ரீ சுரேஷ் - டொமேடோ பிரியாணி
 
5. பிரான்ஸ் சஷிகா - அரிசி தேங்காய் பாயசம்
 
6. சென்னை ஜலீலா கமால் - மாங்காய் ஊறுகாய்
 
7. சிங்கப்பூர் ராக்ஸ் கிட்சன் - பனீர் பராத்தா
 
8. இந்தியா கோமதி அரசு - வாழைக்காய் அப்பளம்
 
9. துபாய் கிட்சன் குயின் - வெந்தயகீரை அண்ட் வாழைத்தண்டு கறி
 
10. UK லதா மதுசூதனன் - சில்லி கார்லிக் நூடுல்ஸ்
 
11. அமெரிக்கா திவ்யா - பெசரு பப்பு கொப்பரி பூரேலு அண்ட் பெசர பப்பு கட்டு
 
12. அருப்புக்கோட்டை ராதாஸ் கிட்சன் - வெள்ளை புலாவ்
 
13. இந்தியா காஞ்சனா ராதாகிருஷ்ணன் (மீராஸ் கிட்சன்) - குதிரைவாலி (Banyard Millet) பொங்கல்
 
14. இந்தியா கீதா ஆச்சல் - சரவண பவன் சாம்பார்
 
15. ஹைதராபாத் புதுகை தென்றல் - பாலக் சூப்
 
16. அமெரிக்கா ஹர்ஷினி அம்மா - வேலண்டைன்ஸ் டே கேக்
 
17. சார்ஜா மனோ சுவாமிநாதன் - உருளைக்கிழங்கு தேங்காய் பால் குருமா
 
18. கனடா சாந்தி முத்துவேல் (7ஆம் சுவை) - பேக்ட் ஸ்வீட் பொடேடோ பிரைஸ்
 
19. துபாய் ஹுசேனம்மா - ராஜ்மா புலாவ்
 
20. அமெரிக்கா வானதி - ப்ரைட் ரைஸ்
 
சிவா :  அடேங்கப்பா உலகம் பூரா இருக்காங்க போல இருக்கே... அப்ப "கிச்சன் கிலேடி 2013 - உலக அளவில்"னு தான் சொல்லணும் போல. அப்பாவி மேடம், இனி நீங்க தான் ஒரு நல்ல தீர்ப்பா சொல்லணும்
 
அப்பாவி : இருங்க டேஸ்ட் பண்ணி பாத்துட்டு தானே சொல்லணும்
 
சிவா : அதானே பாத்தேன்... கொஞ்சம் எங்களுக்கும் மிச்சம் வெயுங்க
 
அப்பாவி : பாப்போம் பாப்போம்... (என உணவு வகைகளை நோட்டம் விட்டவர்) என்னப்பா இது, எல்லாரும் நாலு ஸ்பூன் தான் சேம்பிள் அனுப்பி இருக்காங்க
 
சிவா : நாலு ஸ்பூன் இருக்கறதால தான் அது சேம்பிள், நாலு ப்ளேட் இருந்தா அதுக்கு பேர் பார்சல்
 
அப்பாவி : ஒகே ஒகே... லெட் மீ டேஸ்ட் இட் (என ஒன்றொன்றாய் டேஸ்ட் செய்கிறார் அப்பாவி)
 
சிவா : நமக்கு எதுனா மிச்சம் இருக்கும்னு நெனக்கற
 
DD : இருக்குமே ப்ளேட் ஸ்பூன்...
 
சிவா : இலை தழை... ஹும், தொண்டை தண்ணி வத்த பேசறது நாம, அந்த அம்மணி என்ன கட்டு கட்டுது பாரு
 
அப்பாவி : ஒகே...எல்லாம் டேஸ்ட் பாத்துட்டேன். எல்லாமே சூப்பர். இது தான் டாப்னு ஒண்ணை சொல்ல மனசு வரல. அதனால நாலு கோடிய 20 பேருக்கு வெட்டி குடுத்துடலாம்
 
சிவா : வெட்டியா?
 
அப்பாவி : ஆமா கோழிய வெட்டி தானே தரணும்
 
DD & சிவா : கோழியா? (என அதிர்ச்சியாய் பார்க்க)
 
அப்பாவி : அட ஆமாங்க... என் மதர் டங் தெலுகு யு நோ. தெலுகுல கோழிய கோடினு தான் சொல்லுவோம்.. .அதை தான் நான் மொதல்லே இருந்தே சொல்லிட்டு இருக்கேன். நீங்க தப்பா புரிஞ்சுட்டா நான் என்ன பண்ணட்டும். மீ தி அப்பாவி யு நோ
 
சிவா : இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது...அவ்வ்வ்வ்வ்வ்....
 
:)))
 
பின் குறிப்பு : நானும் கண்ணுல விளக்கெண்ணய விட்டு தேடி பாத்துட்டேங்க. ஒரு ஆண் கிட்சன் ப்ளாக்கர் கூட கண்ணுல படல. பெண்கள் தான் கிட்சன் கில்லாடிகள்னு சொன்னா "நளன் தான் பெஸ்ட் குக் தெரியுமா"னு சண்டைக்கு வருவாங்க... என்னமோ போ அப்பாவி...:)

24 comments:

  1. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிச்சன் குயின்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அத்தனையும் கஷ்டப்பட்டு டேஸ்ட் செய்து நாலு கோடிக்கு பதிலாக நாலு கோழிகளைக் கொடுத்துள்ள ATM அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. //பின் குறிப்பு : நானும் கண்ணுல விளக்கெண்ணய விட்டு தேடி பாத்துட்டேங்க.

    ஒரு ஆண் கிட்சன் ப்ளாக்கர் கூட கண்ணுல படல. பெண்கள் தான் கிட்சன் கில்லாடிகள்னு சொன்னா "நளன் தான் பெஸ்ட் குக் தெரியுமா"னு சண்டைக்கு வருவாங்க...

    என்னமோ போ அப்பாவி...:)//

    கண்ணுக்கெல்லாம் விளக்கெண்ணெய் ஏதும் தடவாமல் இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கோ.

    http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html

    ReplyDelete
  3. எல்லாரும் அருமையான அறிமுகங்கள்...

    அப்பா... எவ்வளவு கலெக்ஷன்... அருமையான பணி...

    அருமை அக்கா...

    ReplyDelete
  4. தப்பித்தவறி நான் எழுதினது ஒர்ரே ஒரு சமையல் குறிப்புதான்!! அதை வச்சு என்னையும் கிச்சன் லேடின்னு அறிமுகப்படுத்திருக்கீங்களே? அத நம்பி, சுவையான சமையல் குறிப்புகளை எதிர்பார்த்து என் ப்ளாக் பக்கம் வர்றவங்க, உங்க இட்லியை எடுத்தே உங்களைக் காலி பண்ணப் போறாங்க, ஜாக்கிரதை!!! :-)))

    ReplyDelete
  5. மிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளீர்கள் வலைச்சர ஆசிரியருக்கும் இன்று வலம் வந்த சிறந்த தளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .மென்மேலும் உங்கள் தேடல் சிறப்பாக அமையட்டும் .

    ReplyDelete
  6. top 20 நம்மளையும் சேத்துக்கிட்டதுக்கு நன்னி.

    ”கோடி”- அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. அருமையான விதத்தில் அறிமுகம் செய்து உள்ளீர்கள் .. ரசித்தேன் :)

    ReplyDelete
  8. கிட்சன் கில்லாடிகளோ ?

    ReplyDelete
  9. என் வலைத்தளத்தை (வாழைக்காய் அப்பளம்) குறிபிட்டமைக்கு நன்றி.

    வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கு நன்றி.
    வலைச்சரத்தில் என் வலைத்தளம் இடம்பெற்று இருப்பதை அவர்கள் தான் சொன்னார்கள்.

    சில வேலைகளால் வலைச்சரம் வரவில்லை கொஞ்ச நாட்களாய்.
    நீங்கள் நல்ல நகைச்சுவையாக பதிவுகளை குறிபிட்டு உள்ளீர்கள்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  10. அட... போன வருஷம் வலைச்சரத்துல நான் வெளிப்படுத்தின அதே ஆதங்கத்தை இப்ப நீங்களும் வெளிப்படுத்திருக்கீங்க அப்பாவி மேடம்! வலையுலகில் ஒரு நளனையும் காணோமேன்னு..!

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

    சுவாரஸ்யமான உங்களின் அறிமுகப்படுத்தும் ஸ்டைல் வியக்க வைக்கிறது. சூப்பர்ப்! அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. நளன் இல்லையா? நிறைய நளன் இருக்காங்க அப்பாவி!

    லிஸ்ட் வேணும்னா தனிமடல்-ல அனுப்பறேன்! :)

    ReplyDelete
  12. Lovely post..kudos to all the kitchen killadis here.

    ReplyDelete
  13. வித்தியாசமான சமையல் குறிப்புக்கள்.அனைத்து கிச்சன் கில்லாடிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. "அப்பாவி டிவில கிட்சன் கிலேடி" ஹா...ஹா...

    கிச்சன் கில்லாடிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நாளைக்கு என்ன? ஹா..ஹா இப்பவே சிரிக்க தயாராகிவிட்டோம்.

    ReplyDelete
  15. எங்களையெல்லாம் பாத்தா கேணப் பய மாதிரியா தெரியுது எல்லாருக்கும்,ப்ளாக்கில சமையல் குறிப்பு எழுதி பொம்பளைங்களுக்கு உதவ???????ஹி!ஹி!!ஹீ!!!!!

    ReplyDelete
  16. ஒகே...எல்லாம் டேஸ்ட் பாத்துட்டேன். எல்லாமே சூப்பர்.

    ReplyDelete
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. ஏன் அப்பாவி, நீங்க வைகோ ஸார் எழுதிய 'அடை' பதிவைப் பார்க்கலையோ?
    அந்த ஒரு பதிவில் சமையலில் தான் ஒரு நளன், பீமன் என்று நிரூபித்து, பரிசும் பெற்றிருக்கிறாரே!
    ஆனால் அவர் ரெகுலர் நளன் இல்லை தான்!
    இன்றைய கிச்சன் கில்லாடிகளில் சிலர் என் தோழிகள். அவர்களுக்கும் மற்ற கில்லாடிகளுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. அப்பாவி, தேங்க்ஸ் அம்முணி! :) அதிலயும் மொத ஆளா என்ர பேரச் சொல்லிருக்கறே, ரொம்ப சந்தோஷம்!

    அறிமுகமான அனைத்து கிச்சன் கில்லாடிகளுக்கும் வாழ்த்துக்கள்!

    இருந்தாலும், நாலு கோடிய நாலு கோழியா மாத்திப்புட்டியே...அவ்வ்வ்வ்!

    ReplyDelete
  20. நல்ல வேளை! தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்!

    ReplyDelete
  21. Thanks u so much for including my name... My hearty wishes for all the Queens....

    ReplyDelete
  22. வலைச்சரத்தில் என் கிச்சனை குறிபிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.. அப்பாவிக்கு என் நன்றிகள். சந்தோஷங்க உந்தி. நானும் தெலுகுதான் அப்பாவி. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல நகைசுவையான பதிவு..

    ReplyDelete