Thursday, April 18, 2013

எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்...:)))

"இல்ல மாமி, எனக்கென்னமோ இது சரியா படல" என அப்பாவி கூற

"சரியா படலனா உன் இட்லிய தூக்கி போடு, மண்டை ஒடயற அளவுக்கு சரியா படும்" என சமயம் பார்த்து வாருகிறார் கீதா மாமி

"மாமி" என அப்பாவி டென்ஷன் ஆக

"என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட" என்றபடி என்ட்ரி ஆகிறார் அபுதாபி ரிடர்ன் அபூர்வ சிந்தாமணி அனன்யா

"ஹும்கும்... ஒண்ணு இப்படி தினசரி தரிசனம்... இல்லைனா வருஷம் நாலானாலும் எட்டி பாக்க மாட்டா இந்த அனன்யா" என மாமி சலித்து கொள்ள
 
 
"கீதா மாதா கி ஜே... ஆத்தா தாத்தா பாட்டி கி ஜே" என அனன்யா கிடைத்த வாய்ப்பில் கவுன்ட்டர் கொடுக்க
 
 
"என்னது?" என கீதா மாத்தா டென்ஷன் ஆனார்
 
 
அப்பாவி : ஐயோ இப்ப அதுவா பிரச்சனை? நம்ம பிரச்சனைக்கு வழி சொல்லுங்க மொதல்ல
 
 
அனன்யா : எப்பவும் இவ எழுதறது தான் புரியாது, இப்ப பேசறதும் புரியல
 
 
கீதா மாமி : அதொண்ணுமில்ல அனன்யா. நம்ம ATM ப்ளாக்கர் மீட் வெக்கணுமாம்
 
 
அனன்யா : ATM பணம் தானே குடுக்கும், இப்ப ப்ளாக்கர் மீட் எல்லாம் வெக்குதா
 
 
கீதா மாமி : நாராயணா, நான் சொன்னது அந்த ATM இல்ல, நம்ம அப்பாவி தங்கமணிய நான் செல்லமா ATMனு தான் கூப்பிடுவேன்
 
 
அனன்யா : நல்லா வெச்சீங்க செல்ல பேரு... சரி ப்ளாக்கர் மீட் தானே, ஏதோ பச்ச புள்ள ஆசப்படுது வெச்சுட்டு போகட்டும் விடுங்கோ மாமி
 
 
கீதா மாமி : விடாம நான் என்ன புடிச்சா வெச்சுருக்கேன், ATM எங்க ப்ளாக்கர்ஸ் மீட் வெக்கணும்னு சொல்றானு நீயே கேளு
 
 
அனன்யா : அப்படி எங்க வெக்கணும்ன அப்பாவி, மாமி ஏன் டென்ஷன் ஆகறாங்க
 
 
அப்பாவி : நீயே சொல்லு அனன்ஸ், இப்ப இருக்கற வெயிலுக்கு ஹில் ஸ்டேசன்ல ப்ளாக்கர்ஸ் மீட் வெச்சா நல்லா இருக்கும் தானே
 
 
அனன்யா : அதானே...அவ சொல்றதுல என்ன மாமி தப்பு?

கீதா மாமி : அனன்யா, நீ முழுசா கேக்காம பேசாத. ATM எந்த ஹில் ஸ்டேஷன் சொன்னானு கேளு

அனன்யா : அப்படி என்ன தான் சொன்ன மாமி டென்சன் ஆகற அளவுக்கு

அப்பாவி : அது வேற ஒண்ணுமில்ல அனன்ஸ், எப்பவும் ஊட்டி கொடைக்கானல்னு போர் அடிக்குதில்ல, அதான் அப்படியே பொடி நடையா இமயமலைக்கு போலாம்னு சொன்னேன், இது ஒரு தப்பா சொல்லு
 
 
"அடியேயேயேயேயேயேயேயே... நல்லா வாய்ல வந்துருமாமா" என அனன்யா அங்காளபரமேஸ்வரி அவதாரம் எடுக்க
 
 
"அயகிரி நந்தினி நந்தித மேதினி விஷ்ணு வினோதினி நந்தனுதே" என சமயோசிதமாய் பாடி சாமியை மலை ஏற்றினாள் அப்பாவி
 
 
கீதா மாமி : எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது. ஏன்னா இங்க கோபாலகிருஷ்ணன் , ரிஷபன், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி,நம்ம ஆதிவெங்கட் இப்படி பிரபலமான நெறய ப்ளாக்கர்ஸ் இருக்காங்க
 
 
அப்பாவி : ஏன் எங்க ஊர்ல இல்லையா? இராஜராஜேஸ்வரி அம்மா இருக்காக, சங்கவி இருக்காக, கணேசன் இருக்காக, எங்க ஊரு மயிலுவிஜி இருக்காக, சாமகோடங்கி இருக்காக, சம்பத்குமார் இருக்காக, வமுமுரளி இருக்காக, ஜீவாநந்தம் இருக்காக...
 
 
அனன்யா : இழுத்தது போதும், கொஞ்சம் உன் ஸ்பீக்கர ஆப் பண்ணு தாயே. ஹும்கும்... நாங்க இருக்கறது தலை நகரிலாக்கும், அங்க தான் ப்ளாக்கர்ஸ் மீட் வெக்கணும். ஒண்ணா ரெண்டா லட்சம் பேரு இருக்கோமாக்கும். சேம்பிளுக்கு சொல்றேன் கேளு RVS அண்ணாத்தே, ஆசியா, தேனம்மை லக்ஷ்மணன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், வீடுதிரும்பல் மோகன்குமார், எங்கள்ப்ளாக் ஸ்ரீராம், மின்னல்வரிகள் பாலகணேஷ் , தூரிகையின் தூறல் மதுமதி, எம்மாடி மூச்சு வாங்குது பாரேன். இந்த லிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
 
 
அப்பாவி : உங்க ஊர்ல வெயில் ஜாஸ்தி, எங்க ஊர் ஊட்டிக்கு பக்கமாக்கும், இங்கயே வெச்சுப்போம்
 
 
கீதா மாமி : ஒண்ணும் வேண்டாம், அசந்த நேரத்துல நீ இட்லி கிட்லி செஞ்சுட்டா எங்க நெலம என்னாகறது?

அப்பாவி : நாங்க இட்லி செஞ்சாலும் சொந்தமா செய்வமாக்கும், டீ கடைல வாங்கி தர மாட்டோம்

அனன்ஸ் : புடிச்சாளே ஒரு பாய்ண்டு (என முணுமுணுக்க)

கீதா மாமி டென்சனாய் ஏதோ சொல்ல வர, அதற்குள் ஒரு பரிட்சயமான குரல் இடையிடுகிறது

"எனக்கென்னமோ அப்பாவி சொல்ற மாதிரி இமயமலைல வெச்சுக்கறது தான் நல்லதுனு தோணுது" என்றபடி என்ட்ரி தருகிறார் நம்ம LK பிரதர்

``நம்பமுடியவில்லை....வில்லை...ல்லை...லை...``என அப்பாவி ஏக பீலிங்க்ஸ் பிழிய
 
 
"அதானே, நீ எப்பவும் அப்பாவிக்கு எதிரா தானே பேசுவ இன்னைக்கி என்னாச்சு LK" என இன்னொரு என்ட்ரி நம்ம திவாண்ணா
 
 
"நானும் அதே தான் கேக்கணும்னு நெனச்சேன் தம்பி, ஆனா நீ கேட்டுட்ட" என நம்ம வல்லிம்மா வர, இன்னும் களைகட்டியது
 
 
கீதா மாமி : முடிவா நீ என்ன தான் சொல்ற அப்பாவி

அப்பாவி : நான் கவிதை நடைல பதில் சொல்லட்டுமா

LK : இதுக்கு தான் நான் இமயமலைக்கே போகட்டும்னேன்... அப்படியாச்சும் கொஞ்ச நாள் இதுல இருந்து நாமெல்லாம் தப்பிக்கலாம்னு ஒரு நப்பாசை தான்
 
 
வல்லிம்மா : ஐயோ பாவம், ஏன் சின்ன பொண்ண அப்படி எல்லாம் சொல்ற LK (என வல்லிம்மா ஒருத்தர் மட்டும் அப்பாவிக்கு பரிந்துகொண்டு வர)
 
 
அனன்யா : யாரு சின்ன பொண்ணு... என் கண்ணுக்கு படலியே

அப்பாவி : ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே ஒரு வாட்டி கவிதைல பதில் சொல்லிக்கறேனே

கீதா மாமி : .அம்மா தாயே... நீ கவிதைலயும் சொல்ல வேண்டாம், கற்பனைலையும் சொல்ல வேண்டாம், உன் இஷ்டபடி இமயமலைல வெச்சாலும் சரி, இல்ல இமயத்துலையே வெச்சாலும் சரி, ஆளை விடு (என மொத்த கூட்டமும் எஸ்கேப்)
 
 
அப்பாவி : சக்சஸ் சக்சஸ் சக்சஸ்... எப்படி ஜெயச்சேன் பாத்தீங்களா. கோவைல தாங்க ப்ளாக்கர்ஸ் மீட். எங்கயா... அது சென்ட்ரல் ஜெயில்... இருங்க இருங்க ஓடாதீங்க... சென்ட்ரல் ஜெயில் பக்கத்துல இருக்கற க்ரௌண்ட்லனு சொல்ல வந்தேன். கண்டிப்பா வந்துருங்க. எப்பவா... ஏப்ரல் 1st 2014. பை பை சி யு...:)))

31 comments:

  1. அக்கா.... அருமையான அறிமுகங்கள்...

    ஒரு பெரிய பட்டாளத்தையே அறிமுகப்படுத்திக் கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  2. ஆஹா மூத்தவர்கள் பலரும் அதில் மின்னல்கணேஸ் ,மதுமதி எல்லாம் நட்பு வட்டம் என்பதில் சந்தோஸம் :))) தொடரட்டும் சிரிப்பொலி:))))

    ReplyDelete
  3. இன்றைய பதிவு செம ரகளையா இருக்கே... பல பதிவர்கள் அறிந்தவர்களே... அறியாதவர்களையும் இன்று அறிந்துகொண்டேன். அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி புவனா..

    (தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் தளம் திறக்கவில்லை. ஆசியா அவர்களின் தளமே அங்கும் திறக்கிறது. கவனித்து சரிபாருங்க....)

    ReplyDelete
  4. அனைவரும் தெரிந்த பதிவர்கள்......

    என்ற அம்மணியோட வலைப்பூவையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க்.......

    ReplyDelete
  5. எப்பவும் ஊட்டி கொடைக்கானல்னு போர் அடிக்குதில்ல, அதான் அப்படியே பொடி நடையா இமயமலைக்கு போலாம்னு சொன்னேன், இது ஒரு தப்பா சொல்லு..//

    கோவையில் வெய்யில் கொளுத்துதுங்க . வாங்க இமயமலைக்கே போகலாம் ..

    எமது பதிவையும் அறிமுகப்படுத்தியத்ற்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  6. தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது... இரு தளங்கள் தவிர அனைவரையும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  7. இமயமலைலேயே வைங்க அப்படியே தமிழ் பிளாக்குக்கு ஒரு கொடியை நட்டுவைத்துவிடு வாருங்கள்
    எல்லாருக்கும் தெரியட்டும் நம்ம புகழு உங்க இட்லி எப்படியோ தெரியாது நான் புதுசு ஆனா இன்னைக்கு சூப்பரா கூட்டான்சோறு பண்ணி டீங்க
    இன்றைய அறிமுகங்களுக்கு நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நன்றி அப்பாவி புவன். கோவையில் இருக்கின்ங்களா.

    ReplyDelete
  9. //அனன்ஸ் : புடிச்சாளே ஒரு பாய்ண்டு (என முணுமுணுக்க)// அடிப்பாவி அப்பாவி! இப்படி கோர்த்து விட்டுட்டியே.. கீத்தா மாத்தா, நான் அப்படியெல்லாம் முணுமுணுப்பேனா? ரொம்ப மோசம்.. தனியாவே யோசிச்சு இப்படி கலகலப்பா இத்தனை பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கே.. அடிபொளி! வாழ்த்துக்கள். இந்த பக்கத்துல என்னையும் சேர்த்துண்டதுக்கு பஹுத் பஹுத் நன்றீஸ், இதை எனக்கு அறிவிச்சதுக்கு தி.தனபாலனுக்கும் பஹுத் நன்றி ஹை! சூப்பர் போ அப்பாவி!சிரிச்சு முடியலை!

    ReplyDelete
  10. எதுக்கு இமயமலையெல்லாம் அப்பாவி?

    எங்கூருக்கு வரப்டாதோ? நாடே ஜில்லிச்சுப்போய் கிடக்கு எப்பவுமே!

    அதோட அபூர்வ பதிவரா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நாட்டுக்கே ஒருத்தியா நின்னு ஆடிக்கிட்டே இருக்கேனே:-)

    ReplyDelete
  11. அப்பாவி இன்றைக்கு மீட்ல நானும் இருக்கேன் போல, பை த பை எனக்கு கோவை என்றால் டபுள் ஓ.கே. 90 அப்புறம் ஒரு ரீ எண்ட்ரி கொடுக்க ஒரு சான்ஸ்.தகவல் சொன்ன தனபாலன் சாருக்கு மிக்க நன்றி.நீங்க அசத்துங்க ATM.

    ReplyDelete
  12. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  13. அப்பாவி இன் யூஷ்வல் ஃபார்ம்...... :-))))

    ReplyDelete
  14. ஏடிஎம், நாங்க இமயமலைக்கே போயிட்டு வந்திருக்கோமாக்கும், அதனாலே இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி! :P :P :P :P :P

    ReplyDelete
  15. டிடிக்கு நன்னி ஹை.

    ReplyDelete
  16. அப்பாவி.... பொதுக்குழு கூட்டப் போறீங்களா? அடுத்த வருஷம் தானே...As I am suffereing from லெட்டர் அப்புறம் மெல்ல எழுதிக்கலாம்! நன்றி அப்பாவி... 'எங்களை' வலைச்சரத்தில் இழுத்ததற்கு! :)

    ReplyDelete
  17. காட்டிக் கொடுத்த DD க்கு நன்றி! :)))))

    ReplyDelete
  18. மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ள ATM அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    கோவைக்காரர்களை இருக்காக .... இருக்காக .... இருக்காக .... என இழுத்து இழுத்துச் சொல்லியுள்ளது அழகோ அழகு. மிகவும் ரஸித்தேன்.

    >>>>>>

    ReplyDelete
  19. //கீதா மாமி : எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது. ஏன்னா இங்க கோபாலகிருஷ்ணன் , ரிஷபன், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி,நம்ம ஆதிவெங்கட் இப்படி பிரபலமான நெறய ப்ளாக்கர்ஸ் இருக்காங்க//

    எங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளதற்கு, திருச்சி பதிவர்கள் சார்பில் என் மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>>

    ReplyDelete
  20. //அப்பாவி : சக்சஸ் சக்சஸ் சக்சஸ்... எப்படி ஜெயச்சேன் பாத்தீங்களா. கோவைல தாங்க ப்ளாக்கர்ஸ் மீட். எங்கயா... அது சென்ட்ரல் ஜெயில்... இருங்க இருங்க ஓடாதீங்க... சென்ட்ரல் ஜெயில் பக்கத்துல இருக்கற க்ரௌண்ட்லனு சொல்ல வந்தேன். கண்டிப்பா வந்துருங்க. எப்பவா... ஏப்ரல் 1st 2014. பை பை சி யு...:)))//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    இதைப்படித்ததும் பலக்கச் சிரித்து விட்டேன். அடிக்கும் வெயிலில் வெளியே சுற்றிவிட்டு வந்துள்ள இவருக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒத்திக்கொண்டு, ராமா ராமா ராமா ராமா என ராமநாம ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

    அவள் ஏதோ ஸ்ரீராமநவமிக்காக அப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என நினைத்து நான் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன்.

    பிறகு தான் என்னை உலக்கி, ”ஏன் சிரிக்கிறீர்கள்” எனக்கேட்டாள்.

    ”2014 ஏப்ரல் 1, எப்போ வரும் என ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்” என்றேன்.

    ”முட்டாள்கள் தினமல்லவா அது, இப்போ தானே, உங்களுக்காகவே வந்துட்டுப்போச்சு” என்றாள்.

    ”ஏதாவது உள்றாதே, அன்று கோவையில் மாநாடு, பதிவர்கள் மாநாடு நடத்த ATM தீர்மானமே நிறைவேற்றி விட்டார்கள்” என்றேன்.

    ”ATM Cardஐ, முதலில் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு நீங்க எந்த மாநாட்டுக்கு வேண்டுமானாலும் போங்கோ” எனச்சொல்லி, என் ATM Card ஐ, பறிமுதல் செய்து விட்டாள்.

    கம்ப்யூட்டர் லாப்டாப் எல்லாவற்றையும் என் தலையைச் சுற்றி, குப்பைத்தொட்டியில் போடப் போவதாகச் சொல்லி மிரட்டிக்கொண்டு இருக்கிறாள்.

    நான் என்ன செய்வேன் ????????

    >>>>>>

    ReplyDelete
  21. இன்றைய அறிமுகங்கள் அத்தனையும் அருமை.

    அறிமுகம் செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அழகாக, வெகு அழகாக, நகைச்சுவை கலந்து இட்லியுடன் தொகுத்துக்கொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    >>>>>>>

    ReplyDelete
  22. என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    இன்று அதிகாலை கிளம்பி ஊரைச் சுற்றிவிட்டு மதியம் ஒரு மணிக்கு வந்ததும், என்னை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளதாக எனக்கு முதல் தகவல் அளித்துள்ள, தெய்வீகப்பதிவர் என் அன்புக்குரிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    தொடரட்டும் இதுபோன்ற மிகுந்த நகைச்சுவையுடன் கூடிய இனிய அறிமுகங்கள்.

    வாழ்த்துகள், அன்புடன் VGK

    oooooo

    ReplyDelete
  23. எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது.

    Welcome :)

    என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளதற்கு என் நன்றி.

    ReplyDelete
  24. நன்றி அப்பாவி தங்கமணி..

    திண்டுக்கல் தனபாலன் சாருக்கும் நன்றி.

    ஆனா பாருங்க தங்ஸ்.. எனக்கும் ஆசியாவோட ப்லாக்தான் ஓபன் ஆகுது.

    என் ப்லாகில எதப் பத்தி குறிப்பிட்டு இருக்கீங்கன்னு மண்டை காஞ்சிங்க்.. ப்ளீஸ்.. அத கரெக்டா கமா போட்டு சொல்லிடுங்க..:)

    ReplyDelete
  25. வாழ்த்துகள் சகோ..நன்றியும் மகிழ்ச்சியும்.. சென்னை பதிவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் சென்ற ஆகஸ்டைப் போல 2013 ஆகஸ்டு மாதமும் சென்னையில் ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பு நடைபெறும்.

    ReplyDelete
  26. அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  27. ஆஹா... அப்பாவி சொன்ன லொகேஷன் சூப்பருங்கோ! ப்ளாக்கர்ஸ் மீட் எங்க வெச்சாலும் சந்தோஷம் தானுங்க! இங்க என்னோட தளமும் அறிமுகமாயிருக்கறதப் பாக்கறப்பவே சந்தோஷமா இருக்குது. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட அப்பாவி மேடத்துக்கு என் நன்றி! (நேத்து வலைப்பக்கம் வர இயலாத சூழல். அதான் இப்ப லேட்டஸ்டா சொல்லிட்டேன்)

    ReplyDelete
  28. ஆஹா! திருச்சி பதிவர்களில் ஒருவராக அறிமுகமானதற்கு நன்றிகள் பல.

    திருச்சி பதிவர்கள் சார்பா நானும் உங்களை வரவேற்கிறேன்....:)

    கலக்குங்க...

    ReplyDelete
  29. இங்கும் ஹா..ஹா....
    பதிவர் சந்திப்பு நடத்திடலாம்.

    அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. இன்னிக்கி தான் பார்க்கிறேன். இவனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க...

    ReplyDelete