சில முக்கியமான அறிவியல் பதிவுகளைப் பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு இருந்தேன். பலர் பாராட்டினாலும், சிலர் கிண்டல் செய்து இருந்தனர். சம்பந்தப்பட்ட பதிவர்களை அல்ல...என்னை..
அவர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது என மெயில் அனுப்பி இருந்தார் ஒரு நண்பர்.
இந்த பிரச்சினைக்காகத்தான் நான் அறிமுகம் என்ற சொல்லை பயன்படுத்தாமல் , அனுபவ பகிர்வு என சொல்லி வருகிறேன். எனக்கு பிடித்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு அது புதிதாக இருக்கலாம் , அறிமுகமாக இருக்கலாம். சிலருக்கோ ஏற்கனவே படித்தவற்றை ரெஃப்ரெஷ் செய்வது போல இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது நல்லதுதானே.
***************************************************
இன்று சில இலக்கியம் / புத்தகம் சார்ந்த பதிவுகளை பார்க்க இருக்கிறோம். ஆனால் இலக்கியத்தில், புத்தக வாசிப்புல் ஈடுபாடு இல்லாத சிலர் இருக்க கூடும். சரி...இன்றைய பதிவில் நமக்கு பயன் இல்லை என இந்த வரியுடன் விலக வேண்டாம். பொதுவான சில பதிவுகள் குறித்தும் என் அனுபவங்களை சொல்ல இருக்கிறேன்.
இந்த டாபிக்க்கும் பிடிக்கவில்லையா... சரி.. அடுத்த பகுதியில் உங்களுக்கு பிடித்த டாபிக்குடன் சந்திப்போம்..வந்ததற்கு இந்த புத்தகத்தை டவுன் லோடு செய்து படித்து மகிழுங்கள்... நீலகண்ட பறவையை தேடி- படிக்க வேண்டிய நாவல்
இந்த நாவல் குறித்து ஜெய் மோகன்
சமத்துவமும் நீதியும் அமைந்த அமைந்த உலகை கனவுகண்டார் தஸ்தயேவ்ஸ்கி. அழகே உருவான இயற்கையை வேர்ட்ஸ் வர்த். முழுமை சமநிலை கொண்ட வாழ்க்கையை கதே. அவை மானுடனின் கனவுகளே. அக்கனவுகளை நோக்கி ஓடும் பாதையில்தான் அவன் தன் அனைத்துக் கலாச்சார சாதனைகளையும் அடைந்தான். அது எப்போதும் அவனுடைய கண்முன்னால் கைகளுக்கு அப்பால் ஒரு பேரழகுகொண்ட மாயப்பறவையாகப் பறந்துகொண்டிருக்கிறது.
அப்பறவையின் அழகிய படிமச் சித்திரத்தைக் காட்டும் மகத்தான வங்க நாவல் ‘நீலகண்ட பறவையைத் தேடி’
மற்றவர்கள் தொடர்ந்து படியுங்கள்...
********************************************************
எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீது பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. பெரும்பாலும் தத்துவ நூல்கள் படிப்பேன். ஜெ கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, யூஜி கிருஷ்ணமூர்த்தி என்று என் ஆர்வம் இருக்கும். தமிழில் பாலகுமாரன் மட்டும் படித்து வந்தேன். எனக்கு எப்படி இலக்கியம் சார்ந்த பதிவர்கள் மேல் ஈடுபாடு வந்தது என்பதை கொஞ்சம் சொல்லி விட்டு , அவர்கள் பதிவுகளைப்பற்றி சொல்கிறேன்.
சென்னை புத்தககண்காட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் பாஸ்கருடன் சென்று இருந்தேன். அந்த நேரத்தில் சாரு நிவேதிதாவும் அங்கு வந்து இருந்தார்.
பாஸ்கருக்கு சாருவுடன் நல்ல பழக்கம். நான் அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்
“ கொஞ்சம் இருங்க..பேசிட்டு வருகிறேன் “ என்றார் பாஸ்கர்.. நானும் வருகிறேன் என சொல்லி விட்டு சாருவிடம் சென்றோம்.
போனோமோ , கை குலுக்கினோமோ... ஆட்டோகிராப் வாங்கினோமா என இருந்திருக்க வேண்டும். ஆனால் விதி வலிது.
அப்போது பிளாக் எழுத தொடங்கி இருந்தேன் ..ஆங்காங்கு சில இலக்கிய வார்த்தைகள் கேள்விப்பட்டு இருந்தேன். அதை வைத்து சாருவிடம் பேசி , ஒரு போஸ்ட் தேத்திவிடலாம் என கணக்கு போட்டு அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
“ சாரு...அமைப்பியல் குறித்து உங்க பார்வை என்ன ? “ என கேட்டு விட்டு பாஸ்கரை பெருமையாக பார்த்தேன், பாஸ்கர் முகம் ஏன் கலவரமடைகிறது என புரியவில்லை.
சாரு எதுவும் சொல்லவில்லை. சரி.அந்த தமிழ் வார்த்தை சரியில்லை போல என நினைத்து ஆங்கில வார்த்தைக்கு தாவினேன்.
“ அதுதான் சாரு, Structuralism ... அதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன் “ என்றேன்.
அப்போதும் பதில் இல்லை..
சரி,,இது வேண்டாம் ..வேறு கேட்போம் என நினைத்து அடுத்த கேள்வி கேட்டேன் “ பின் நவீனத்துவம் என்றால் என்ன “
பதில் கிடைத்தவுடன் மேஜிக்கல் ரியலிசம் , சர் ரியலிசம் பற்றி கேட்க நினைத்து இருந்தேன்.
”பாஸ்கர்... அந்த ஸ்டாலில் மனுஷ்யபுத்திரன் வந்துட்டாரானு பார்த்துட்டு வாங்க “ என சொல்லி பாஸ்கரை அனுப்பி விட்டு , என்னை இரு ஸ்டால்களுக்கு இடையே இருந்த ஓர் இடைவெளிக்கு அழைத்து சென்றார்.
ஓஹோ..விரிவாக ஏதோ சொல்லப்போறாரு போல... டேப் ரிக்கார்ட் எடுத்து வந்து இருக்கலாமே...சரி..பரவாயில்லை.. பேப்பரில் எழுதிக்கொள்வோம் என நினைத்து கொண்டிருந்த போது அவர் பேச ஆரம்பித்தார்.
“ என்ன படிச்சு இருக்கிறீங்க.... எங்கே வேலை செய்றீங்க..”
சொன்னேன்.
“ உங்களுக்கெல்லாம் யாரு வேலை கொடுத்தது... யாரிடம் என்ன கேள்வி கேட்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கேள்வி கேட்குறீங்க...டெண்டுல்கரிடம் போய் , கிரிக்கெட் என்றால் என்ன.. ஸ்ட்ரைட் டிரைவ் என்றால் என்ன என்றா கேட்பது? இதையெல்லாம் ஏற்கனவே தெரிந்து வைத்துக்கொண்டுதான் அவரை கேள்வி கேட்கவே போக வேண்டும்..கேட்க வேண்டும் என எதையாவது கேட்க கூடாது”
இபப்டி ஆரம்பித்து கொஞ்ச நேரம் “இனிமையாக” பேசினார்..
மனுஷ்யபுத்திரன் இருக்கிறாரா என பார்த்து விட்டு வருவதற்கு அரை மணி நேரம் எடுத்து கொண்டு கடைசியில் அவர் இல்லை என்றபடி வந்தார் பாஸ்கர்.
“ ஒண்ணுமில்லை பாஸ்..அடுத்து எழுதப்போகும் நாவல் பற்றி கொஞ்சம் பெர்சனலா என்னிடம் பேசினார்..வேறொண்ணும் இல்லை ” என சொல்லி விட்டு கிளம்பினேன்.. நான் சொன்னதை பாஸ்கர் நம்பியதாக தெரியவில்லை.
**************************************************
பாஸ்கரை அதன்பின் வேறொரு சந்தர்ப்பத்தில் பெசண்ட் நகர் பீச்சில் சந்த்தித்தேன். பேசி விட்டு என்னை டிராப் செய்வதாக சொன்னார். வழியில் அவர் சாருவை சந்திக்க வேண்டி இருந்தது. என்னை சும்மா ஒரு பேச்சுதுணைக்கு அழைத்து போனார்,
வேறு சிலரும் வந்து இருந்தார்கள். இலக்கியம் , புத்தகங்கள் என பேசிக்கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே அனுபவம் இருந்ததால் , வாயை திறக்காமல் கேட்டுகொண்டு இருந்தேன். அப்போது எழுத்தில் பாலுணர்வு குறித்து ஒரு பேச்சு வந்தது.
அதற்கு முதல் நாள் , வெட்டியாக வீட்டில் அமர்ந்து இருந்தபோது பொழுது போகவில்லை. கூகிளில் சிலவற்றை சர்ச் செய்து கொண்டு இருந்தேன். என்ன சர்ச் செய்தேன் என சொல்ல வலைச்சர விதிகள் அனுமதிக்காது.
அப்போது தற்செயலாக ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. யார் எழுதியது , என்ன தலைப்பு என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு வாக்கியம் மட்டும் பளிச் என இருந்தது
செக்ஸ் என்பது ஒரு வகை மரணம் என்பது போன்ற வரி மனதில் பதிந்து விட்டது.
இப்போது பாலுணர்வு டாபிக் எழும் நிலையில் , அந்த வரியை எடுத்து விட்டேன். செக்ஸ் என்பது மரணம் போன்ற ஒரு நிலை என்கிறார்களே.. அப்படி என்றால் அது தியானம் போன்ற நிலை என்கிறார்களா அல்லது அழிவுடன் ஒப்பிடுகிறார்களா என்றேன்.
சாரு என்னை வியப்புடன் பார்த்தார். “ ழார் பத்தாய் சொல்வதை பற்றி கேட்கிறீர்கள்.. ரோலண்ட் பார்த் கூட இதைப்பற்றி பேசி இருக்கிறார்.இதைத்தான் என் நானோ சிறுகதையில் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு அதில் பதில் இருக்கும்.இல்லை என்றால் கேளுங்கள் “ என்றார்.
நான் ழார் பத்தாயை கண்டேனா. யாழ் ஒலியை கண்டேனா... நெட்டில் வேறு எதையோ தேடினேன். இது கண்ணில் பட்டது. அவ்வளவுதான்.ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் வந்து விட்டேன்.
நானோ கதை, ழார் பத்தாய் , ரோலண்ட் பார்த் பற்றியெல்லாம் அடுத்த முறை அவரிடம் விரிவாக பேசினால்தான் , முன்பு பட்ட சொற்காயம் ஆறும் என தோன்றியது.
அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்திக்கும் சூழ் நிலை இருந்ததால் , அதற்குள் கொஞ்சம் ரெடியாகி அவரை இம்ப்ரஸ் செய்ய விரும்பினேன்.
இதற்காக நெட்டில் அமர்ந்து zhaar paththai, laar paththaay. zaar baththaay. என அடித்து பார்த்து ஒன்றும் பயனில்லை.
இது வேலைக்காகாது என நினைத்தபோதுதான் லக்கிலுக் யுவா நினைவுக்கு வந்தார்.
முன்பே சொன்னது போல , நான் பதிவுலகை கவனிக்க ஆரம்பித்தபோது எழுதிக்கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர் அவர். அவரே மறந்து போய் இருக்க கூடிய ஒரு கட்டுரை லக்கிலுக் யுவாவின் ஒரு பழைய போஸ்ட்
அவருக்கு அனானியாக பின்னூட்டம் போட்டு இருக்கிறேன். மெயில் அனுப்பி இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் நன்றாக ரெஸ்பாண்ட் செய்வார் என்பதால் அவருக்கு போன் போட்டேன்.
” யுவா,,, சாருவின் நானோ கதை குறித்து உங்களோட விரிவான பார்வையை எனக்கு எழுதி அனுப்புங்க.. என் பிளாகில் பப்ளிஷ் பண்ண ஆசைப்படுறேன். உங்க கட்டுரை என் பிளாக்கில் வந்தா , எனக்கு சந்தோஷமா இருக்கும். ”
அவர் உற்சாகமாக பேசினார். கண்டிப்பாக செய்வதாக சொன்னார்.
அவர் எழுதினால் அதை படித்து விட்டு , என் கண்டுபிடிப்பு போல காட்டிக்கொள்ளலாம் என்பதே என் திட்டம்.
அதன் பின் பல முறை பேசி இருப்பேன். ஒவ்வொரு முறையும் செய்வதாக சொல்வார். ஆனால் எழுதியபாடில்லை.
பிறகுதான் தெரிந்தது. அவர் முன்பு போல இல்லை. பத்திரிக்கையாளராக ஆகி விட்டதால் மிகவும் பிசி ஆகி விட்டார். அதிலும் நான் பேசிய நேரத்தில் கவர் ஸ்டோரி பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.. நான் நேர காலம் புரியாமல் அவரை டார்ச்சர் செய்து இருக்கிறேன்.
அதுவும் நல்லதாக போய் விட்டது. நானாக ( பதிவுலகத்தின் துணையோடு ) பல புத்தகங்கள் தேடி படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக சாருவின் அனைத்து புத்தகங்களையும் தேடி தேடி படித்தேன். ஜெயமோகன் , எஸ் ரா, இ பா, அசோக மித்திரன் ,காப்ரிலா மார்க்கேஸ் , ழார் பத்தாய் ,சார்த்தர், காஃப்கா , தோப்பில் முகமது மீரான், சிங்காரம், சி சு செல்லப்பா என ஓர் உலகம் கண் முன் விரிந்தது.
சமீபத்திய சில ஆண்டுகளில் நான் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை , அதற்கு முன் என் வாழ்வில் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
அதற்கு முக்கிய காரணம் பதிவுலக நண்பர்கள்தான், அவர்கள் மூலம்தான் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது... விவாதங்கள் நடத்த முடிந்தது.
படிக்க படிக்கத்தான் , சாரு என் மீது கோபப்பட்டது நியாயம்தான் என்பது புரிந்தது. அதன் பின் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். கோபப்படும் வகையில் நடந்தது இல்லை.
********************************************
அவர்களில் முக்கியமானவர் நிர்மல் . அவர் பதிவுகளில் பல விஷயங்கள் கற்று இருக்கிறேன். சில சமயம் இரவு வெகு நேரம் எங்கள் விவாதம் நீளும்.
பின் நவீனத்துவம் , பிரதியை கட்டுடைத்தல், இருத்தலியம் என எல்லாவற்றை பற்றியும் பேசுவார்.
இவரிடம் நான் ரசிப்பது இவர் தமிழை. பேசுவது போலவே எழுதுவார், அதுவும் வட்டார மொழியில். வட்டார மொழியில் உலக இலக்கியத்தை பேசுவது ஓர் இனிய அனுபவம்.
அவரது சில கட்டுரைகள் ..உங்கள் பார்வைக்கு..
நிர்மல் கட்டுரை-1
நிர்மல் கட்டுரை 2
life-of-pi நச் பார்வை
********************************************
புதிய பதிவர் , பழைய பதிவர் என்ற பிரிவினை கோட்டை கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலர் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
இப்போதுதான் எழுத ஆரம்பித்தது போல இருந்தது. பார்த்தால் நாவலாசிரியர் ஆகி விட்டார்.
எந்த பாணியிலும் இல்லாத புதிய பாணியில் எழுதி இருக்கிறார். விரிவாக பிறகு எழுதுவேன்.
அவர் எழுத்தைப்ப்பற்றியும் , அவர் சிந்தனைப்போக்கை குறித்தும் ஒரு ஐடியா இந்த பதிவில் கிடைக்கும்..
நன்றிக்கான தருணம்
அவர் நாவல் குறித்த ஒரு விமர்சனம்
****************************************************************
பால கணேசன்.. இவரும் நான் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்.
வித்தியாசமான சிந்தனைகள் , படைப்பாற்றல் கொண்டவர்.
மேலே நான் சொன்ன நாவலை திட்டி இவர் எழுதி இருக்கிறார். அப்படி திட்டுவதை எவ்வளவு சுவையாக எழுதி இருக்கிறார் என பாருங்கள்.சிம்ப்ளீ சுப்பர்ப்.
அவர் கருத்துகள் சிலவற்றை நான் ஏற்கவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியையும் ரசிக்கிறேன்
இந்த அளவு என்னை எந்த புத்தகமும் நோகடித்ததில்லை !!!!
சரி,,எப்படி எழுத வேண்டுமாம்...அவரே சொல்கிறார்
எழுத்தாளன் ஆவது எப்படி
***********************************************************
மரப்பசு என்ற தளத்தை நடத்தும் விஜய் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர். கணக்கெடுத்து பார்த்தால் , பதிவுலகில் மெக்கானிக்கல்தான் அதிகம் இருக்கும் என தோன்றுகிறது.
இவர் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் . சிறிய வாக்கியங்களில் பெரிய விஷ்யங்களை சொல்லி விடுவார்.
இந்த பட்டாம்பூச்சி கதை அவரது மாஸ்டர் பீஸ் என்பேன். படித்து பாருங்கள்
ஒரு வித்தியாசமான கதை
***************************************************
படித்து முடித்தவுடன் , வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நம்பி ஒரு ஊருக்கு செல்ல முடியும் என்றால் அது கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர். நான் கொஞ்ச நாள் கோயமுத்தூரில் பணி ஆற்றி இருக்கிறேன். மறக்க முடியாத இனிய ஊர்,
அரசு நிறுவனங்களோ , அரசு ஆதரவோ இல்லாமல் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலாளார்களின் கூட்டு முயற்சியால் முன்னேறிய ஊர்கள் இவை.
ஆங்கிலத்தில் பிசினஸ் சார்ந்த புத்தகங்கள் ஏராளம் வருகின்றனவே.,.இந்த ஊர்களை வைத்து எவ்வளவோ எழுதலாமே ,,ஏன் வரவில்லை என்று பல காலம் யோசித்து இருக்கிறேன்.
எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் டாலர் நகரம் என்ற அற்புதமாக வந்து இருக்கிறது.
அந்த புத்தகம் குறித்த ஒரு விமர்சனம்...
வீடு சுரேஷ்குமார் விமர்சனம்
இவரைப் பற்றி விரிவாக பிறகு என் கருத்தை சொல்கிறேன்.. இப்போதைக்கு இந்த புத்தகம் மீது மட்டும் கவனம் செலுத்துவோம்
புத்தக வெளியீட்டு விழா
இன்னொரு விமர்சனம்
*****************************************************
வலைப்பதிவை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தும் சாத்திய கூறுகளை முயன்று பார்க்கும் ஒரு பதிவு எனக்கு மிக மிக பிடித்து இருந்தது.
ஒரு கட்டுரை , அதற்கேற்ற பாடல்கள் என ஒரு தேர்ந்த பிரண்டேஷன் போல இருந்தது.
பட்டனை பிரஸ் செய்யுங்கள்..கட்டுரை முடிவதற்குள் லோடு ஆகி விடும் என்ற அறிவிப்பு பிடித்து இருந்தது. end user இடத்தில் இருந்து சிந்தித்து உருவாக்கப்படும் சேவைகள் , பொருட்க்ள்தான் வெல்ல முடியும்.
இதோ அந்த பதிவு..
படித்தே ஆக வேண்டிய கட்டுரை
இதை படைத்த திண்டுக்கல் தனபால் சிறப்பாக எழுதுகிறார். ஆனால் ஏன் வெகு குறைவாக எழுதுகிறார் என தெரியவில்லை. இவரைபோன்ற நேர்மறை சிந்தனையாளர்கள் குறைவாக எழுதுவதும் , வெறும் பரபரப்புக்காக எழுதுபவர்கள் 24 மணி நேரமும் எழுதுவதும் ஒரு முரண்
*********************************************************
எவ்வளவு முயன்றாலும் என்னால் இப்படி ஒரு போஸ்ட் போடவே முடியாது என மலைக்க வைத்த போஸ்ட் இது..அடேங்கப்பா... மிக மிக விரிவான போஸ்ட்,,
மிக நீளமாக இருந்தாலும் , ஒரு வரியைக்கூட ஸ்கிப் செய்ய இயலாது. சிந்தனை , நகைச்சுவை , ஆன்மீகம் என ஃப்லோ செமையாக இருந்தது. கடைசி வரி வரை தொய்வில்லாமல் ஒரு ஜோக்குடன் முடிந்தது சிறப்பு..
மலைக்க வைத்த போஸ்ட்
இதை படைத்தவர் சமுத்ரா,,,பெங்களூரில் சாஃப்ட்வேர் துறையில் இருக்கிறார், சாஃப்ட்வேர் துறையில் இருந்து கொண்டு இவ்வளவு ஆழமாக எழுத முடியும் என்பது வியப்பாக இருக்கிறது..
*****************************************
நிகழ் காலம் என்ற இந்த வலைப்பூ அறிவு சார்ந்த தளத்தில் இயங்குகிறது.
இதில் இந்த பதிவை அனைவரும் படித்தே ஆக வேண்டும்
ஆண்களுக்கான பெண்களின் படம்
பெரும்பாலும் மூளை சார்ந்த விஷ்யங்களாக இருந்தாலும், உணர்வு சார்ந்த இந்த பதிவு மனதை கவர்ந்தது
இனிய அணிலே !!
***********************************************
இவர் பல ஆண்டுகளாக எழுதி வரும் சீனியர் பதிவர். இவரிடம் நான் ரசிப்பது சமையல் குறிப்புகளை. வெறும் சமையல் குறிப்பை சொல்லி செல்லாமல் , பின்னணி தகவல் கொடுக்கும் பாணி அட்டகாசம்
உதாரணமாக இதை பாருங்கள்
சூப்பர் சமையல் ..சூப்பர் எழுத்து
இது போன்ற சமையல் குறிப்புகள் ஆண்களுக்குதான் அதிகம் பயன்படுகிறது என்பது பலருக்கு தெரியாது... காரணம் , பெண்களுக்குத்தான் ஏற்கனவே தெரியுமே. ஆண்கள் திடீர் என சமைக்க வேண்டிய நிலை வரும்போது , நெட்டில் சர்ச் செய்து , இது போன்ற பதிவுகளால்தான் சமாளிக்கிறார்கள்..
************************************************************
அடுத்து சில முக்கிய கான்செப்டுகளைப் பற்றிய ஒரு பார்வை..
************************************************************
பின் நவீனத்துவம் குறித்த முக்கிய கட்டுரை
****************************************************
இருத்தலியல்
இருத்தலியல் - மேலும்
****************************************************
சர் ரியலிசம்
*************************************************
கட்டுடைத்தல் எனும் அற்புதம்
ஒரு முக்கியமான நாவல் குறித்து முக்கியமான கட்டுரை
****************************************************************
கவிஞர் றியாஸ் குரானாவின் எழுத்துகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ஒரு சாம்பிள் கொடுக்கிறேன். படித்து பாருங்கள்.
கவிதையின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்ப்பவர் இவர்.
நான் லீனியர்
*******************************************************
இலக்கிய ஆர்வம் கொண்டு எழுதும் பதிவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்... இன்னொரு கட்டுரையில் மேலும் சொல்கிறேன். இதற்கு மேல் எழுதினால் உங்களால் படிக்க முடியாது.
நாளை கொஞ்சம் ஈசியான டாபிக்கை பார்த்து விட்டு , அதன் பின் இன்னொரு சவாலான டாபிக்கிற்கு செல்லலாம் என நினைக்கிறேன்.
ஓகே யா?
( அலைகள் ஓய்வதில்லை )
//அவர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது என மெயில் அனுப்பி இருந்தார் ஒரு நண்பர்.//
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் பழையவர்களாக இருந்தாலும் எங்களைப் போன்றவர்கள் அவர்களைப் பற்றி அதிகம் அறிந்தததில்லை. சம காலத்தவர்க்கு அவர்கள் சூரியன்கள் தான். தற்போது எழுதிக் கொண்டிருக்கும் புதியவர்களை நாங்கள் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பழையவர்களை வலைசரம் மூலமாகவே அறிகிறோம். அதனாலே அறிமுகம் என்று சொல்வதில் தவறில்லை.
இன்றைய பதிவர்களில் திண்டுக்கல் தனபாலன், சுரேஷ்குமார், யுவ கிருஷ்ணா இவர்களைத் தவிர மற்றவர்களின் பதிவுகளை இப்போதுதான் படிக்க இருக்கிறேன்.
அதனால் நீங்கள் ரசித்ததை அறிமுகப்படுத்துங்கள். சிறந்ததை நாங்களும் அறிந்து கொள்கிறோம்.
முரளிதரன் சார்..உங்கள் கருத்து மிகவும் மன நிறைவை தந்தது... நன்றி
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை... இத்தனை புத்தக விமர்சகர்களா என்று ஆச்சரியப்படவைக்கிறது... தேவியர் இல்லம், திடங்கொண்டு போராடு, திண்டுக்கல் தனபாலன், வீடு சுரேஷ்குமார் என்று அறிந்த பதிவர்களின் பதிவுகளையும் அறிமுகப்படுத்திய சிறப்பு.... மற்றவர்களின் தளத்துக்குச் சென்று பார்க்கிறேன்...
ReplyDeleteஸ்கூல் பையன், அவர்கள் அறிந்த பதிவர்கள்தான் என்றாலும் நான் குறிப்பிட்டு இருக்கும் பதிவுகள் இன்னொரு முறை படிக்கும் தரம் கொண்டவை..அதனால்தான் அவற்றை சொல்லி இருக்கிறேன்
ReplyDeleteஅறியாத பல தளங்கள்... 7 தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅறிமுகம் செய்த தளங்களின் பதிவுகளை வாசித்துக் கொண்டே வந்தால் எனது தள அறிமுகம்... மிக்க நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
Thanks for introducing me
ReplyDeletegood introductions
ReplyDeleteஅடேயப்பபா எவ்வளவு பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள்...
ReplyDeleteஅட இடையில் என்னையும் சுட்டியிருகீங்க... மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
என் பதிவு அறிமுகத்திற்கு மிக்க நன்றி..! சில முத்துகள் அறிந்ததுதான் அறியாத சில முத்துகளை படிக்க நல்ல தொகுப்பு..!
ReplyDeleteஇன்ப அதிர்ச்சி என்பது இதைத் தான் சொல்றாங்களோ.
ReplyDeleteநன்றி தல.
ReplyDelete// சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது //
சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது என்றக வாக்கியம் என்னைப்போன்றவருக்கு சரியாக விளங்க வில்ல.
பிறவிக்குருடனுக்கு சூரியன் தெரியாது. சூரியன் ஒருவன் ஒளி கொடுக்கிறான் என்பதையும் அவன் ஒரு
கன்செப்சுவல் லெவலிலோ அல்லது வெப்பத்தை உணர்ந்தோ அதன் மூலம் வெப்பத்தைக்கொடுக்கத்தர
இயன்ற ஒன்று ஒளியையும் தர இயலும் என ஊகித்தே அறிய இயலும்.
கண்ணை இறுக்கி மூடிக்கொண்டோரும் சூரியனைப் பார்க்க மாட்டார்.
கண் என்பதும் சூரியனும் என்பதும் இங்கே உருவகங்கள்.
எனக்குத் தெரியாதது என்னே இங்கே இருக்கப்போகிறது என்ற நிலை.
மேதைகள் என தம்மைத்தாமே நினைத்துக்கொள்ளும் மேல் கனம் பொருந்திய மக்கள்
எந்த ஒரு அவையிலுமே மற்றவர் சொல்வதை கூர்ந்து கவனித்து, எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவக்கோட்பாடைப் புரிந்தவர் போல் இல்லை.
இன்னொரு கோணமும் இருக்கிறது.
சூரிய கிரஹண நேரம். சூரியனின் உட்புறத்தையும், பரிதியின் வெகு அருகில் உள்ளவற்றினையும் பார்ப்பதற்கு
இதை விட சிறந்த நேரம் இல்லை.
வெகு சக்தி வாய்ந்த டெலஸ்கோப்புகள் மூலமாகத்தான் அதுவும் ஒரு ஒளியை அனுப்பித்தான் அப்பொழுது
சூரியனைப் பார்க்கிறார்கள் .
இருப்பினும்,
உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருப்பவையைப் பார்ப்பதற்கு அறிமுகம் தேவையா என்னும் பொருள் பட
உரைத்திருந்தாலும்,
அதுவும் இக்காலத்தே தேவைப்படத்தான் செய்கிறது.
சினிமா, அரசியல், அவற்றுள் இருப்பவரின் குடும்பவாழ்வை தான் அலசுவதில் வெகுவாரியான வலைகள்
அவற்றினை காண வரும் நேயர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதால்,
அறிவு என்று ஒரிடத்தில் நீங்கள் கண்டு பிடித்தால், அதுவும் அது உண்மையான அறிவே என்னும் உணரும்
நிலையில், அதுவும் தமிழ் சமூகத்தை மேம்படுத்தும் அறிவு என நம்பும் நிலையில்
டார்ச் அடித்துக் காண்பியுங்கள்.
டார்ச்சர் என்று நினைத்து ஒதுங்கவேண்டாம்.
சுப்பு தாத்தா.
அருமையான பதிவுகள் அறிமுகமான பதிவர்களின் பதிவுகள்... அவர்களிடையே என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி... உங்களுடைய பதிவுலக அனுபவம் குறித்த எழுத்தும் ,அனைத்து பதிவர்களுடைய சில பதிவுகளையும் படிக்கும் போது எனக்கு ஒன்று புரிந்தது நான் கல்லாதது உலகளவு....
ReplyDeleteபதிவுகள் அனைத்தும் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை படித்தேன் ,ரசித்தேன் ,மகிழ்ச்சியோடு நன்றியையும் உங்களுக்கு சமர்பிக்கிறேன் தொடர்ந்து இப்படிப்பட்ட பதிவுகளை அறிமுகபடுதுங்கள்
ReplyDeleteபுத்தக விமர்சகர்களுடன் சின்னு ரேஸ்ரியும் என வியந்துதான் போனேன். அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅறியத்தந்த திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றிகள்.
அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகமான வலைப்பூக்கள் எனக்கு புதியவை அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் புதிய தளங்களையும் அறிமுகப்படுத்துவதாகவும் இருக்கிறது பதிவு.
ReplyDeleteஎன்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி. வேறு வார்த்தைகள் சொல்ல தெரியவில்லை. தொடர்ந்து எழுதுவேன். . .
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.தொடருங்கள்
ReplyDeletegood introductions.
ReplyDeleteஅழுத்தமான கைகுலுக்கல்கள்.
ReplyDeleteநீங்கள் என் வலைதளத்தை படிக்கிறீர்கள் என்பதே நான் எதிர்பார்க்காத விஷயம் நண்பா! அதிலும் என்னைப் அப்ற்றி எழுதும் அளவிற்கு படித்துல்லீர்களே ன்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. நன்றி......நீங்கள் கொடுத்திருக்கும் பல கட்டுரைகளில் சில ஏற்கனவே படித்ததுதான். பல எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்திருக்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கும், தங்களின் விரிவான வாசிப்பனுபவுத்திற்கும் தலை வணங்குகிறேன்.
ReplyDelete