Sunday, May 19, 2013

நிறைவு - சாய் ராம்

ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்ற வேண்டுமென சீனா மின்னஞ்சலில் என்னிடம் கேட்ட போது உடனே சரியென சொன்னேன். என்னுடைய வலைப்பதிவுலகம் குறுகியது. அங்கு நண்பர்களின் எண்ணிக்கையும் குறைவு. வேறொரு விரிந்த உலகத்திற்கு எழுதுவது மீடியாகாரனான எனக்கு சந்தோஷமளிக்கும் விஷயமாக தோன்றியது.

இங்கே மற்றவர்களுக்கு நான் வலைப்பதிவுகளை பரிந்துரை எழுதியது போக இந்த ஒரு வாரக்காலத்தில் எனக்கும் பல புது அனுபவங்கள் கிட்டின. முதலாவது தினமும் பதிவு எழுத வேண்டும் என்கிற கமிட்மெண்ட். நேரத்தை மடித்து ஒடித்து ஆங்காங்கே எழுதி பதிவிட்டது இப்போது எனது சொந்த வலைப்பதிவிற்கு எழுதுவதற்கு பயிற்சியாக அமையுமென நம்புகிறேன். ஒவ்வொரு பதிவிற்கு வந்த மறுமொழிகள், அது பதிவான வேகம் இவை ஆச்சரியமேற்படுத்துகின்றன. வலைச்சரத்தினை தினமும் வாசிப்பவர்கள் என ஒரு பெரும் கூட்டம் இருப்பதை உணர முடிகிறது. மற்றொரு முக்கியமான அனுபவம் தமிழ் வலைப்பதிவுலகத்தை அதிகமாய் இந்த ஒரு வார காலம் அலைந்து மேய்ந்தேன். எண்ணிக்கையில் மலைக்க வைக்கிறது தமிழ் வலைப்பதிவுலகம். தொடர்ச்சியாக எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆங்காங்கே இதன்காரணமாக நட்பு வட்டமும் சில இடங்களில் அது எதோ ஒரு நோக்கத்திற்காக முன்னெழுவதும் காண கிடைக்கிறது. ஆங்கில வலைப்பதிவுலகம் காட்டும் வெரைட்டி விரைவில் தமிழ் வலைப்பதிவுலகத்திலும் தோன்றும் என நம்பிக்கை ஏற்படுகிறது.

வாய்ப்பளித்த சீனாவிற்கும் வலைச்சர நண்பர்களுக்கும் இந்த ஒரு வார காலம் எனது பதிவுகளை பார்வையிட்ட தோழர்களுக்கும் எனது நன்றி.

3 comments:

  1. வணக்கம்
    சாய்ராம்(ஐயா)

    ஒருவார காலமும் சிறப்பாக பணியாற்றியமைக்கு மிக்க நன்றிஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பல புதிய தளங்களை அறிமுகம் செய்து சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
  3. நன்றி ரூபன் & தனபாலன்!

    ReplyDelete