எல்லாருக்கும்
வணக்கம்.
இந்த வாரம்
உங்களுடன் பொழுதை கழிக்கப்போறது
திவாண்ணா என்கிற திவாஜி என்கிற
திருமூர்த்தி வாசுதேவன்.
முதல்ல
அறிமுகப்படுத்திக்கொள்ளணும்ன்னு
சொல்லி இருக்காங்க.
சொல்லிக்க பெரிசா
ஒண்ணுமில்லைன்னாலும் அப்படி
சொல்லறதே ஒரு அறிமுகம்தானே?
:-)
2008
ஆம் வருஷத்திலேந்து
வலைப்பூக்களில உலாத்திகிட்டு
இருக்கேன்.
ஆரம்பத்தில
நல்ல சேதி ன்னு ஒரு வலைப்பூ
ஆரம்பிச்சேன்.
எது நல்லது
என்கிறது பத்தி நம்ம கற்பனையும்
மத்தவங்க கற்பனையும் ஒண்ணா
இருக்காதுன்னு சீக்கிரமே
புரிஞ்சது!
மேலும் அதுல
அனேகமா எல்லா பதிவுகளுமே
பேப்பர்களிலிருந்து காபி
பேஸ்ட் ஆ இருந்தது.
நாமா சொந்தமா
எழுதணும்ன்னு முடிவு செய்து
என்ன எழுதலாம்ன்னு யோசிச்சப்ப
ஆன்மீக விஷயங்களை கேட்டு
படித்து புரிந்து கொள்வதில
இறங்கி இருந்தேன்;
அது குறித்தே
எழுதலாம்ன்னு தோணித்து.
என்னைப்பொருத்த
வரை ஒரு விஷயம் புரிஞ்சாதான்
அதை என் நடையில எழுத முடியும்.
சரி,
விஷயம் புரிஞ்சுக்கவும்
புரிஞ்சுக்கலாம்.
பதிவு எழுதவும்
எழுதலாம் ன்னு இறங்கிட்டேன்!
மத்த விஷயங்களுக்கும்
வலைப்பூக்கள் ஆரம்பிச்சாலும்,
அதுதான் என்
"ஃப்லாக்
ஷிப்"
(flagship) ஆ இருக்கு!
ஆயிரம் பதிவுகளை
தாண்டியது இறைவன் செயல்தான்.
குறிப்பா கோளாறான
எண்ணங்கள்,
உரத்த சிந்தனைகள்
பகவான் கொடுத்த ஒரு இன்ஸ்பிரேஷன்ல
எழுதினவைதான்.
இதை ஆரம்பிச்ச போது டம்மீஸ் ன்னு ஒரு சீரீஸ் புத்தகங்கள் பிரபலம். முன்னால விஷயம் எதுவும் தெரிஞ்சிருக்க அவசியமில்லாம வெகு சுளுவா, சுவையா பேசிக் விஷயங்களிலேந்து சொல்லிக்கொண்டு போகிறது இவங்க உத்தி. அதே போல செய்யணும்ன்னு நினைச்சு பேர் வெச்சேன். அப்ப ஏதும் காப்பிரைட் ன்னு யாரும் ஆரம்பிக்கக்கூடாதேன்னு ஸ்பெல்லிங் ஐ மாத்தி வெச்சேன்!
கதை சொல்ல
எப்பவுமே பிடிக்கும்!
சின்ன பசங்க
ஆர்வமா கேட்பாங்க!
ரைட், எழுதவே
எழுதலாமேன்னு ஆரம்பிச்சது
கதை கதையாம் காரணமாம்!
இதுல என்னோட
பேவரிட் தேடல்
http://kathaikathaiyaam.blogspot.com/2009/02/1.html
தொடர்தான்.
அடுத்து
போட்டாக்ராபில இறங்கி இருந்தேன்.
பழைய புத்தகங்களை
கொஞ்சம் டிஜிட்டலா சேமிக்க
வழி வகைகளை கண்டு பிடிக்க
இங்கே அங்கே கன்சல்ட் செஞ்சப்ப
ஜீவ்ஸ் என்கிற ஒரு கலைஞரின்
தொடர்பும் பிட் என்கிற தமிழில்
போட்டாக்ராபி என்ற வலைத்தள
தொடர்பும் கிடைச்சது.
அப்ப நம்ம படங்களை
நம்ம ப்லாக்ல வலையேத்திட்டு
சுட்டி கொடுக்கணும்ன்னு
சொல்லி இருந்ததாலே ஆரம்பிச்சது
சித்திரம் பேசுதடி. உதாரணத்துக்கு http://chitirampesuthati.blogspot.com/2011/03/blog-post_6823.html
பின்னால சப்மிட்
செய்யற முறையை மாற்றிவிட்டாங்க.
அப்பப்ப நம்ம
'மகத்தான'
கலை படைப்புகளை
போஸ்ட் பண்ண இன்னும் இது
உபயோகமாகிறது.
என்
குடும்பத்திலேயே வயசானவங்க
ஒரு ஆர்வத்துல கணினி பயன்படுத்த
கத்துக்கொண்டாங்க.
வீட்டுல இருக்கிற
சின்ன பசங்க ஆனேகமா காலேஜ்
படிச்சுகொண்டு இருப்பாங்க.
ஆனா இந்த
வயசானவங்களுக்கு கணினி சார்ந்த
விஷயங்களை சந்தேகம் கேட்டாக்கூட
சொல்ல அவங்களுக்கு அலுப்பா
இருக்கும்.
புரியாத மாதிரி
ஏதாவது சொல்லுவாங்க.
இப்படிப்பட்ட
வயசானவங்களுக்காகவே உருவாக்கினது
தொண்டு கிழங்களுக்கு கணினி.
http://techforelders.blogspot.com/2010/11/blog-post_06.html
சமீபத்துல
ஆண்ட்ராய்ட் போன் ஒண்ணு வாங்கினப்ப
அது பத்தியும் எழுதத்தோணித்து.
எழுதினேன்.
தமிழ்ல
டைப் செய்யக்கத்துகிட்டு,
என்னத்தை டைப்
செய்யறதுன்னு யோசிச்சேன்.
தமிழ் கொஞ்ச்
கொஞ்ச் தெரியும் என்கிறதால
நிறைய தமிழாக்கம் செய்துகிட்டு
இருக்கேன்.
உபுண்டு
இயங்குதள ...
சரி சரி...
ஆபரேடிங்
சிஸ்டத்துக்காக ஆரம்பிச்சு
இப்ப க்னோம் இடைமுக தமிழாக்கம்
பல வருஷங்களா....
ரிலிவ் பண்ணிடுங்கன்னு
இப்பதான் ரிக்வெஸ்ட் வெச்சு
இருக்கேன்.
இப்ப இரண்டு
வருஷங்களா ஸ்போகன் டுடோரியல்ன்னு
மும்பய் ஐஐடி ப்ராஜக்ட்....
முன்னேயே சொன்னேன்
இல்லையா,
புரிஞ்சாத்தான்
எழுத முடியும்ன்னு?
இதுக்காக லேடக்
என்கிற சமாசாரத்தை கையில்
எடுக்க வேண்டி வந்தது.
அது டிடிபி (DTP)
சமாசாரம்.
தமிழ்ல அது வேலை
செய்யுமான்னு மூழ்கி ஆராய
வேண்டி இருந்தது.
கொஞ்சம் சிரமப்பட்டு
வழி வகைகளை கண்டு பிடிச்சேன்.
மத்த இந்திய
மொழிகளிலேயும் இதை செய்ய
முடியும்.
அதனால இது குறித்த
லிமிடெட் பதிவுகள் tecfromelder
என்கிற வலைப்பூவா
ஆங்கிலத்துல பதிஞ்சு வெச்சேன்.
http://tecfromelder.blogspot.com/2011/10/oomthis-is-test-postthis-is-entirely.html
அதே போல
ஆன்மீக பதிவுகளை ஆங்கிலத்தில்
-
Spirituality
for Youth
-
எழுத ஆரம்பிச்சு
அப்படியே நிக்குது!
நேரமில்லை!
என்னிக்கோ ஒரு
நாள் தொடர்வேனோ என்னமோ.
பகவான் விட்ட
வழி!
ம்ம்ம்ம் .... அப்புறம் சொந்த சமாசாரம் எனக்கு 90ம்ம்ம்.. ச்சீ, ச்சீ ... 60 வயசு நடக்குது. பொறி துயில் ஆழ்த்துனரா வேலை செய்யறேன். ஒரு பையன், பேரன், பேத்தி. என்
சுய புராணம் அவ்வளோதான்.
இதுவே அதிகமா போச்சு! அடுத்த பதிவில
சந்திப்போம்!
சுய அறிமுகம் நன்று... உங்களின் இரண்டு தளங்களும் இன்று தான் அறிமுகம்... நன்றி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...
ReplyDeleteசுய அறிமுகம் நன்று.... உங்கள் தளத்திற்கு இது வரை வந்ததில்லை... இனிமேல் வருகிறேன்....
ReplyDeleteவாரம் முழுவதும் நல்ல அறிமுகங்கள் செய்ய வாழ்த்துகள்...
அன்பின் திவாஜி - நீண்டதொரு சுய அறிமுகம் - பொறுமையாகப் படிக்க வேண்டும் - செய்கிறேன் - அனைத்து அறிமுகங்களுக்கும் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபணிசிறக்க எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகப்பகிர்வுகள்..
ReplyDeleteபயனுள்ள தளங்களைத் தந்து சிறப்பித்த வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்...
வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள் திவாஜி.
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துகள் திவாஜி...
ReplyDeletekalakunga
ReplyDeleteவலைச்சரத்தின் இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteGreat Ti Va Anna! :))
ReplyDeleteவாழ்த்துக்கள் திவா அண்ணா!
ReplyDeleteவானிலிருந்து பொழியும் நீர் எல்லாம்
ReplyDeleteவெள்ளமாகிப்பெருகி வரும்
வழியெல்லாம் நீராக்கும் . தனக்கென
வழி ஒன்று தான் எனினும்
வழக்குச் சொல் ஆறு ஆகும்.. .
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர்
கொண்டாலும் இறுதியில் கடலுடன்
இணைந்து யானும் கடலே என்ற
உணர்வினைப் பெறும்.
அது போல் எங்கு இவ்வலையுலகில் சஞ்சரித்தாலும்
எத்துறையில் எப்பொருளில் எழுதினாலும் இறுதியில்
தமிழ் என்னும் பாற்கடலில் தான் எல்லோரும் சங்கமம்.
ரோஜா, மல்லிகை, ஜாதி, முல்லை, தாழம்பூ, பச்சை எல்லாமே அதனதன் இடத்தில் ஒரு மணம்.
கதம்பமானாலோ அது புது மணம்.
சொர்க்க வாசல் திறந்தாச்சு.
உள்ளே நுழையவேண்டும். அது தான் பாக்கி.
சுப்பு தாத்தா.
Is it U R Sixty !!
வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சர வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம் வாசுதேவன் ஸார்!
ReplyDeleteநீங்கள் தான் திவாஜி யா?
வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துக்கள்.களைகட்டட்டும் வலைச்சரம்!
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களைப் பற்றியும் உங்கள் வலைதளங்கள் குறித்தும் இன்றுதான் அறிந்து கொண்டேன்! சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்பப்போ பின்னூட்டங்கள்ள படிச்சாலும் உங்க பதிவுகளை இனிமேல் தான் படிக்கப் போகிறேன். நிறைய சாதிச்சிருக்கீங்க.. தெரியாம போச்சே!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அப்பப்போ பின்னூட்டங்கள்ள படிச்சாலும் உங்க பதிவுகளை இனிமேல் தான் படிக்கப் போகிறேன். நிறைய சாதிச்சிருக்கீங்க.. தெரியாம போச்சே!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஒரு பிளாக் வைத்து நடத்துவதே பெரிய கஷ்டமாக் கிடக்கு.நீங்க இத்தனை பிளாக் எழுதிறீங்களே.பெரிய ஆளு தான் நீங்க.
ReplyDeleteவலைச்சரத்திலும் கலக்குங்க
வலைச்சரத்தில் ஜொலிக்க வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteவாழ்த்துகள் :))
ReplyDeleteவாவ்.... எவ்ளோ விஷயங்கள் செய்யறீங்க திவாண்ணா... கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. அதுவும் எவ்ளோளோளோ......ப்ளாக்கு. நான் ஒண்ணை வெச்சுட்டே திண்டாடிட்டு இருக்கேன், வெட்டியா இருந்துட்டே டைம் இல்லைனு சொல்லிட்டு இருக்கேன்....ஹ்ம்ம். கிரேட் திவாண்ணா
ReplyDelete//பொறி துயில் ஆழ்த்துனரா// - ஒ... மயக்க ஊசி டாக்டருக்கு இதான் தமிழாக்கமா திவாண்ணா...சூப்பர்...:)
தொடர்ந்து படிக்க காத்திருக்கோம். நன்றி
-
ReplyDeleteவெளிய தெரியிறது ஒரு ரூபம். உள்ளுக்குள்ள பல ரூபங்கள்னு அண்ணன் வடிவேலு சொன்னதை நிஜமாக்கிய திவாண்ணாவுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete@ தனபாலன், வெங்கட் நாகராஜ்
ReplyDeleteநன்றி!
@சீனா ரொம்ப நீளமா போயிடுத்தோ! சாரி!
@ கவியாழி, இராஜராஜேஸ்வரி, ரா.ல, சிவா, எல்கே, கீதாக்கா,
ஒரு க்ரேட்டி, இன்னொரு தரம் கிரீட்டி வாழ்த்திய அநந்யா, நன்றி!
@ சுப்பு தாத்தா, நீங்க எலக்ஸ்ன்னு தெரியாதே! :-)) ஆமா இப்ப 60 நடக்குது!
@ ஸ்ரீராம், கௌதமன் நன்றி!
@ ரஞ்சனி அக்கா, நான் ... நான் .. நானேதான்! மண்டபத்து ஆசாமி யாரும் இல்லை!
@ ஜயந்தி, சுரேஷ் நன்றி! நல்வரவு!
@ அப்பாதுரை, மாட்டிகிட்டீங்க, பாவம்!
@ டினேஷ், அத்தனியும் எப்பவும் ஆக்டிவ் இல்லை. ஆன்மீகம் மட்டுமே ஓரளவு ரெகுலர். மத்தது அப்பப்ப!
@ தனிமரம், விஜி நன்றி!
@ அப்பாவி, உனக்கு எதுக்கும்மா பொறாமை? நான்தான் உன்ன மாதிரி நகைச்சுவையா எழுத போறாமை... ச்சீ... முடியலியேன்னு பொறாமை பட்டுகிட்டு இருக்கேன்!
//பொறி துயில் ஆழ்த்துனரா// ஆமாம். என் சேலத்து கசினுக்குத்தான் க்ரெடிட்!
@ வாசு பாலாஜி, பய்மாக்கீது!
ReplyDelete//சுப்பு தாத்தா, நீங்க எலக்ஸ்ன்னு தெரியாதே! :-)) ஆமா இப்ப 60 நடக்குது!//
என்னது ? நான் எலக்ஸா ?
ஏன் ஸ்வாமி.!
புரியாமயே பேசணும்னு எத்தனை பேர் கிளம்பி இருக்கீக அப்படின்னு புரியல்லையே...
ஃபோடோமெட்ரி அப்படிங்கற ஒரு சப்ஜெக்ட்டிலே தான் எல்.எக்ஸ் பத்தி பேசறாக. ஒரு யூனிட் ஏரியாவிலே
எத்தனை வெளிச்சம் வருதுன்னு கணக்கு பண்ற சிம்பலுக்கு பேரு எல்.எக்ஸ்.
வெளிச்சத்துக்கும் எனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாதே !!
அது சரி... ரோமன் நம்பர்ஸ் அப்படின்னு பார்த்தா..
நான் LXXII
வேறவிதமாச் சொல்லணும்னா
XXCII
பேச்சிலே கூடவா லிக்னோகைன் போடுவீக..? எல்லாமே மறந்து போச்சே !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
ஹிஹிஹி, சூரி சார், தி.வா. உங்களைக் கலாய்க்கிறார். கவிதைப் பின்னூட்டத்துக்குச் சொல்றார். நீங்க இலக்கியவாதினு தெரியாதேனு சொல்றார்.
ReplyDeleteஅகில உலகத் தமிழ்ப் பதிவர்கள் வலை உலகிலே இலக்கியவாதிகளை "எலக்ஸ்" னும், "தம்பி"யை "தம்ப்ரி" என்றும் சொல்லுவாங்க. எப்படி கணவன் ரங்கமணி என்றும் மனைவி தங்கமணி என்றும் ஆனாளோ அதே சட்டம் தான் இங்கேயும். :)))))))))))))))))))))