Tuesday, May 7, 2013

ஆன்மீக எழுத்தாளர்கள்


அனேகமா எப்பவும் இன்பார்மலாவே எழுதுவேன். சாதாரணமா 2 பேஜ் டவுன் க்கு மேலே ஒரு பதிவை எழுதறதில்லை. ரொம்ப மனசை ஈர்க்கிற மாதிரி இல்லைன்னா அதுக்கு மேலே யாரும் படிப்பதில்லைன்னு ஒரு கணக்கு!

ரைட்! இப்ப நான் படித்த, படித்துக்கொண்டு இருக்கிற சில வலைப்பூக்களை அறிமுகப்படுத்தறேன். அதுதானே இந்த பதிவுகளோட இலக்கு? இந்த லிஸ்ட் எந்த ஒரு ஆடர்லேயும் இல்லை. ரேண்டமாத்தான் இருக்கும். அத்தோட சில பல பதிவர்களை மட்டுமே இங்கே குறிப்பிடறேன். பலருதும் விட்டுப்போகலாம். யாரும் கோபித்துக்கொள்ள வேணாம்!

என்னை போலவே... சரி சரி, என்னைவிட நல்லா... ம்ம்ம் இதுவும் சரி வரலை.... விடுங்க. ஆன்மீகம் எழுதற மற்ற வலைப்பதிவர்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது சிலரை. இதுல ஒத்தர் பின்னாலே வேறு கேடகரில வருவார். ஆறேழு வருஷங்களா அலுக்காம சளைக்காம ஆன்மீக பதிவுகள் எழுதறது கீதா அக்கா. இதுக்காகவே ஆராய்ச்சி எல்லாம் பண்ணிகிட்டு, தேவையானா பலரையும் கன்சல்ட் செஞ்சு சீரியஸான பதிவுகள் எழுதுவாங்க. http://aanmiga-payanam.blogspot.com/ இப்போதைக்கு ஸ்ரீரங்கம் மட்டையடித்திருவிழா அமர்களப்படுது!

இவங்க பொதுவான சமூக பிரச்சினை போன்ற சமாசாரம் கூட நிறையவே எழுதுவாங்க. அவங்க எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறாங்க! 1534 எண்ணங்கள் பதிவாயாச்சு!


இதே போல கபீரன்பன் என்கிற உமேஷ். பெங்களூரில் இருந்த இவர் வேலை மாறி குஜராத் போன பிறகு எழுதறது நின்னு போச்சு. ஏதேனும் ஒரு சிச்சுவேஷன் சொல்லி, பெயருக்கு ஏத்தாபோல பொருத்தமான கபீருடைய தோஹாக்களை எழுதி, அதை மொழிபெயர்ப்பும் செய்து, மிகப்பொருத்தமா பல தமிழ் பாடல்களையும் மேற்கோள் காட்டுவார். மிகவும் ரசித்துப்படித்த பதிவுகள். இப்ப சமீப காலமா மீண்டும் எழுத ஆரம்பிச்சு இருக்கார். அவசியம் படிங்க.

பிஸியான ஆடிட்டர். உங்க ஊருக்கே வந்து இருந்தாலும் இதோ வரேன்னு சொன்னாலும் நேரம் கிடைக்காது! (பழி வாங்கிட்டேன்!) அப்படிப்பட்டவர் அப்பப்ப ஆன்மீக பதிவு போடுவார்
தி..ச என்று அழைக்கப்படும் தி.. சந்திரசேகரன் பதிவுகளை படிச்சு ரசிங்க!

இன்னொரு ஆன்மீகபதிவாளர் கவிநயா. எங்கூருல படிச்சவர்ன்னு பெருமை சொல்லிக்கலாமாக்கும்! :-)) தேவியை பத்தி எழுதறதுடன்  அடிக்கடி குழந்தைகளுக்கும் பாட்டு, கதை எல்லாம் எழுதுவாங்க. http://kavinaya.blogspot.in/


பலவருஷங்களாக விசாகப்பட்டினத்தில் தமிழ் வளர்த்து வருபவர் திவாகர். இவருக்கும் எனக்கும் பெயர் குழப்பம் ஏற்பட்டது! திவா என்று நான் சுருக்க கையெழுத்திட பலரும் திவாகர் என்று நினைக்க..... இதான் சாக்கு என்று நான் திவாஜி ஆகிவிட்டேன்! சரித்திர ஆராய்ச்சியுடன் ஆன்மீகம் உட்பட பல சப்ஜெக்ட்களையும் நன்கு ஆராய்ச்சி செய்து நூல்கள் எழுதுகிறார். வம்சதாரா என்ற இவருடைய நாவல் பிரபலம். இவருடைய வலைப்பூவும் சுவையானது!
இவரது ஆன்மீக பதிவுகள் எனக்குப்பிடிக்கும்! http://vamsadhara.blogspot.in/2011/07/blog-post.html
மற்ற விஷயங்களுக்கு இன்னொரு வலைப்பூ வைத்திருக்கிறார்!

25 comments:

  1. முடிவில் உள்ள இரு தளமும் எனக்கு புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இப்போதைக்கு ஸ்ரீரங்கம் மட்டையடித்திருவிழா அமர்களப்படுது!//
    இன்னிக்குச் சித்திரைத் தேர். காலம்பர ஆறரை மணிக்கு இன்னிக்கு உங்களோட இந்தப் பதிவைப் பார்க்கவே கணினியிலே உட்கார்ந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏழு மணி வரை பதிவு வெளிவரலை. அப்புறமும் உட்கார்ந்தா வேலை கெட்டுப் போகும்னு அலுத்துப் போய் எழுந்துட்டேன். இப்போப்பார்த்தா டிடி முதல் ஆளாப் பின்னூட்டம் கொடுத்துட்டு எனக்குச் சுட்டியும் கொடுத்திருக்கார். என்னத்தைச் சொல்ல!

    ஹிஹிஹி இலவு காத்த கிளி! :))))))

    ReplyDelete
  3. திவாஜி சார் வலைச்சரத்திலா!!
    அண்ட்ராயருக்கும் என் செல்போனுக்கும் தொடர்பில்லை. அதனால் குழப்பிக்கொள்வதில்லை.
    வாழ்த்துகள் தம்பி வாசுதேவன்.

    ReplyDelete
  4. //திவாஜி சார் வலைச்சரத்திலா!!//

    ஹிஹிஹிஹி, திவாண்ணாஜி சார்னு சொல்லி இருக்கணும் வல்லி. :))))))

    நானும் தான் இந்த அன்ட்ராயருக்கும் நம்ம செல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் குழப்பிக்கலை. இதுவே வேண்டிய குழப்பம் தருது! பத்தாதா? :)))))

    ReplyDelete
  5. ஆன்மீக தளங்களை அறிமுகபடுத்தி எங்களை பக்தி பரவச படுத்திய உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிட்டடும்

    ReplyDelete
  6. //ஆறேழு வருஷங்களா அலுக்காம சளைக்காம ஆன்மீக பதிவுகள் எழுதறது கீதா அக்கா//

    சூப்பர் ஆரம்பம்... ஆனா கீதா பாட்டி இல்லையோ...நாட் அக்கா...:)



    //பிஸியான ஆடிட்டர்.உங்க ஊருக்கே வந்து இருந்தாலும் இதோ வரேன்னு சொன்னாலும் நேரம் கிடைக்காது//

    ரெம்ப சரியா சொன்னீங்க... ஐ லைக் இட்...:)


    அறிமுகமான அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. டிடியை பீட் பண்ணப் பார்த்தீங்களா? நடக்குமா? :)

    ReplyDelete

  8. கபீரன்பன் வலைக்கு வழி காட்டியதற்கு நன்றி.

    என்னதான் இவருக்கு மயக்க ஊசி போட்டு தூங்க வைக்க முயற்சி பண்ணினாலும்
    ( புகழாரம் போட்டாலும் ) அந்த மயக்கத்துக்கு ( அந்த புகழுக்கு ) அப்பாற்பட்ட
    ஜீவன் இவரே.

    உமேஷ் என்னும் இவர் என்னையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார். இவர் ஒரு சித்திரக் கலை
    நிபுணர் கூட. அதற்கென ஒரு வலையிலும் என்னை சிக்க வைத்திருக்கிறார்.

    தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை இவரிடம் பார்க்க முடியாது.
    புரியாதது எதையும் புகுத்தித்தான் ஆகவேண்டும் என்ற பிடிவாதம் இவரிடம் இல்லை.

    ஆன்மீக பதிவு உலகில் இவர் ஒரு அப்பர் என்றால்

    இவர் (kabeeranban )எழுதியதைப் படிக்கையிலே தான் புரிகிறது.

    நான் ரொம்ப இல்லை ரொம்பவே லோயர்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  9. //சூப்பர் ஆரம்பம்... ஆனா கீதா பாட்டி இல்லையோ...நாட் அக்கா...:)//

    ஏடிஎம், பிடிஎம், கோடிஎம், அடுத்த மட்டையடித் திருவிழா உங்களுக்குக் காத்துட்டு இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  10. ஏடிஎம், என்னமா பின்னூட்டம் போடறே! கலக்கு. நான் அப்புறமா வந்து எல்லாருக்கும் பதில் போடறேன்!

    ReplyDelete
  11. ஆன்மீக அறிமுகம் அருமை! (அப்பாடி 'ஆ'னாவுக்கு 'அ' னா வருவதுபோல எழுதியாச்சு!)
    1534 எண்ணங்களா?

    (எல்லோரும் 900+, 1500+ ன்னு எழுதித் தள்ளும்போது, 300 பதிவுக்கு இத்தனை அலம்பலா? - மனசாட்சி)

    உங்களுக்கும் அறிமுகம் ஆனவர்களுக்கும் வாழ்த்துகள்!

    எல்லோருக்கும் முன்னோடியாயிருக்கும் கீதாவிற்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து!

    ReplyDelete
  12. அறிமுகங்கக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. கீதா எப்பவும் ஆன்மிகத்தை அருமையா எழுதுவாங்க. நானும் பல சமயங்களில் என் பயணத்தில் பார்த்த ஒரு குறிப்பிட்ட கோவில் சரித்திரத்தைப் பற்றி என்ன சொல்லி இருக்காங்கன்னு தேடிப்போய் வாசிப்பேன்.

    வாழ்த்து(க்)கள் கீதா.

    ReplyDelete
  14. பல பெரியவங்களோட இந்த சின்னப் பொண்ணையும் அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி திவாஜி :) வழிகாட்டிய தனபாலன் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  15. //இந்த சின்னப் பொண்ணையும்//


    அநியாயமா இருக்கே,என்னோட போட்டி போடாதீங்க கவிநயா! :))))))))

    ReplyDelete
  16. கீதாம்மா, பாப்பான்னு சொல்லலையே, சின்னப் பொண்ணுன்னுதானே சொன்னேன்? :P

    (பெரியவங்கன்னு சொன்னது எழுத்தை வெச்சு...)

    ReplyDelete
  17. ஆன்மீகப் பதிவர்களின் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  18. கபீர் வலைப்பக்கத்தை 1130 வாசகர்களுக்கு அறிமுகம் செய்த திவாஜிக்கு 1130 நன்றிகள். உடனடியாக மின்னஞ்சல் அனுப்பிய திண்டுக்கல் சகோதரருக்கும் நன்றி- [நான் அதை எட்டு மணி நேரம் கழித்து பார்த்தேன் என்பது வேறு விஷயம்]
    எனக்கு சுப்பு சார் மயக்க ஊசி போட்டாலும் ஆழ்துயில் வல்லுனரின் கவனிப்பில் உள்ளதால் எதுவும் கட்டுக்குள்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி. வலைச்சரத்தில் திவாஜியின் பரிந்துரைகளுக்காக காத்திருக்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  19. கீதா மேடம் பதிவுகள் தவிர மற்ற பதிவர்கள் தெரியாது எனக்கு! ஆன்மிகம் கண்ணில் பட்டால் படிப்பேனே தவிர, தேடிப் போவதில்லை! ஹிஹி.....! இப்படி அப்பப்போ உண்மையைச் சொல்லிடுவேன்!

    ReplyDelete











  20. @Kavinaya,

    athuuuuuuuuuu!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:))))))))))))























    ReplyDelete
  21. @முதலில் வடை பெற்ற DD, நன்றி!
    @ கீதா அக்கா, நான் இதை எழுதினப்ப மட்டயடி திருவிழாதான்!
    உங்கள் கருத்தை கொண்டு எல்லா பதிவுகள் காலை 5 மணிக்கு வெளீயிட அமைத்துவிட்டேன். நன்றி!
    @வல்லிக்கா! அதென்ன அவ்வளோ ஆச்சரியம்? :-))
    @கீதா அக்கா //திவாண்ணாஜி சார்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    @ கோவை சரளா, நன்றி அக்கா!
    @ATM முன்னாலேயே பதில் போட்டாச்சு! தாங்கீஸ்!
    @அப்பாதுரை, அதானே!
    @சூரி சிவா, நன்றி அண்ணா. உமேஷ் சித்திரக்காரரா? தெரியாத தகவல்.
    @கீதா அக்கா ஹிஹிஹி!
    @ ரஞ்சனி அக்கா, நல்வரவு! ஆமாம் கீதா அக்காதான் வலையுலக பிதாமஹி! அதான் ஏடிஎம்மே சொல்லி இருக்காங்களே!
    @தனிமரம், நன்றி. ஏன் தனியா இருக்கீங்க?
    @துளசிகோபால், நன்றி அக்கா.
    @ கவிநயா, ஆன்மீகத்துல யாரும் சின்னவங்களும் இல்லை பெரியவங்களும் இல்லை!
    @கீதா அக்கா, கவிநயா போட்டி போடலை. அவங்க சின்ன பொண்ணு, நீங்க குழந்தை!
    @ இராஜராஜேஸ்வரி, நன்றி அம்மா!
    @கபீரன்பன், நலமா? சூரி சார் உங்களை சித்திரக்காரர் ன்னு சொல்லறாரே? ஏதும் வலைப்பூவில வெளியீடு உண்டா?
    @ஸ்ரீராம், அப்பப்ப உண்மையை சொல்லிடுறது என்பதே ஆன்மீக முன்னேற்றம்தானே?

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. //..சூரி சார் உங்களை சித்திரக்காரர் ன்னு சொல்லறாரே? ஏதும் வலைப்பூவில வெளியீடு உண்டா?///
    திவாஜி ! இதுக்குதான் ரீடரிலும் ஓடையிலும் பதிவை படிக்கக் கூடாதுங்கறது :)). சித்திரமும் கைப்பழக்கம் -ன்னு ஒரு சின்ன விட்ஜெட்-டை கபீர் வலைப்பக்கத்தில் போட்டு வச்சிருக்கிறதே யாராவது பார்க்கட்டுமே-ங்கறதுக்காகத்தான். நேரம் கிடைக்கும் போது அதையும் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்!

    ReplyDelete
  24. அட, நம்ம வலைப்பூவைப் பற்றி திவாஜி
    எழுதினதை இப்பதான் பார்த்தேன். நன்றி திரு தனபாலன்.
    அன்புடன்
    திவாகர்

    ReplyDelete