Wednesday, May 8, 2013

கலை, டெக்!


டெக் சமாசாரம் எழுதற பதிவர்களை பிடிக்கும். கணினி சம்பந்தமா நம்ம தொண்டு கிழத்தை அடிச்சுக்க ஆள் இல்லைன்னாலும் (பின்ன எப்படித்தான் வெளம்பரம் செய்யுறது?) மத்த ஃபீல்ட் எல்லாம் இருக்கறதால போனாப்போறதுன்னு ...

ஜோசியம் பத்தி பேராசிரியர் ... அது கூட இல்லை... பிஹெச்டின்னு சொல்லலாமா? அந்த லெவல்ல இருந்து கொண்டு எழுதுவது நம்ம வாத்தியார் சுப்பையா அவர்கள். ஜோசியம் படிக்க நல்ல நினைவாற்றலும் நல்ல கூர்மையான புத்தியும் வேணும். கணக்கு போட முடியணும். அப்படிப்பட்டவங்க இவரோட வலைப்பூக்களை படிச்சு ரொம்பவே உசரத்துக்கு போகலாம்!

இன்னொரு ஜோசிய கரும்புலி ஸ்வாமி ஓங்கார். இவரை இன்னார்ன்னு கணிக்கறதே கஷ்டம்! சாமியார் மாதிரி இருப்பார், ஆனால் சாமியார் இல்லே. ஊர் அக்கப்போர் எல்லாம் மேஞ்சுண்டு இருப்பார்! அதே சமயம் மக்களை வெள்ளியங்கிரி, திருவண்ணாமலைன்னு பயணம் அழைச்சுப்போவார். அதிகம் எழுதறதில்லைன்னாலும் இவர் பதிவுகளிலே ஆன்மீகமும் இருக்கும், பகடியும் இருக்கும்! இவரைவிட இவரோட ஆல்டர் ஈகோ சுப்பாண்டி இன்னும் பேமஸ்! மொத்தத்தில் சுவாரசியமா இருக்கும்

'தமிழ்கம்ப்யூட்டர்' குமரேசன் கொஞ்சம் நடப்பு கால சமாசாரமா கணினி சார் பதிவுகள் போடுகிறார்.

கட்டிடக்கலை பத்தி பல பதிவுகள் நண்பர் வடுவூர் குமார் போட்டிருக்கார். சிங்கப்பூர், வளைகுடான்னு பல இடங்களிலும் வேலை பார்த்த அனுபவம்!
சமீபத்தில் நடந்த விபத்து பத்திய பதிவு இங்கே.

செமத்தியான சென்னை வெயிலில் இருந்து தப்பிக்க இவர் செய்து இருக்கறதைப் பாருங்க.

இசையா ரசிச்சு போட்டுத்தள்ளறது http://jeevagv.blogspot.in/
நமக்கு பொலகேசி வம்சம். இசை பத்தி தெரியாது என்கிறதால ரெபரன்ஸோட நிறுத்திக்கறேன்!

கல்லிலும் ஐம்பொன்னிலும் கலை வண்ணம் காண்பது விஜய்
பலரும் கோவிலுக்குப்போகிறார்கள், சாமி கும்பிடுகிறார்கள். அங்கே இருக்கிற அழகான சிலைகளை எவ்வளவு பேர் நின்னு பார்க்கிறார்கள் ன்னு நியாயமான கேள்வியை கேட்கிறார். தான் வல்லுனர் இல்லை ரசிகன் என்றூ அடக்கத்தோட சொல்லிக்கொள்ளும் இவர் பல சிற்பங்கள், சிலைகள் பற்றி சுவையான தகவல்களை தருகிறார்.

7 comments:

  1. என் வாசகம் எனக்கு புதிய வாசகம்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைத்தும் சிறந்த தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. dd vazakam pola firste first/ :))))))

    ellaarume therinjavangka than.

    ReplyDelete
  3. ஸ்வாமி ஓம்கார்.... இவரது பதிவுகள் படித்ததுண்டு.... தில்லியில் ஒரு முறை சந்தித்ததுண்டு.....

    சிலர் புதியவர்கள் எனக்கு.... படிக்கிறேன்...

    அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி....

    ReplyDelete
  4. மிக்க நன்றி,

    மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. @ DD, தன் குரியர் பணியை செவ்வனே செய்து வரும் DD க்கு நன்றி!
    @ கீதா அக்காவுக்கு எல்லாருமே தெரிஞ்சவங்கதான்!
    @ வெங்கட் நாகராஜ், வடுவூர் குமார், குமரேசன், நன்றி!

    ReplyDelete