நான் சாரு நிவேதிதா ரசிகன் என்பதால் , ஜெயமோகன் வாசகர்களின் தளங்களை நான் படிப்பதில்லை என சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஜெயமோகனின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கோபியின் எழுத்துகளுக்கு நான் ரசிகன் மட்டும் அல்ல. அவரை தனிப்பட்ட முறையிலும் நண்பராக நினைப்பவன். இந்த கோபி வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று சிறப்பாக அறிமுகங்கள் கொடுத்தவர் என்பதால் அவரை உங்களுக்கு முன்பே தெரிந்து இருந்தாலும் , அவரைப்பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.
சென்ற ஆண்டு என் கல்லூரி நண்பன் அவன் ஊரில் இருந்து டெல்லி செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்திருந்தான், வழியனுப்ப நானும் போய் இருந்தேன்.
ரொம்ப முன்னாடியே போய் விட்டோம்,. அதாவது மூன்றரை நேரத்துக்கு முன்பாகவே.
வெளியில் போய் விட்டு வந்தால் , லேட் ஆகி விடும் என்பதற்காக அங்கேயே அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம்,
பிரமிள் கவிதைகளில் காணக்கிடைக்கும் படிமங்கள், வரலாற்று மீளுருவாக்கம், பொருள் முதல் வாதம், நடிப்பில் சிறந்தவர் தமன்னாவா, இலியானவா, சிம்ரனின் இடத்தை தற்போது பிடித்து இருப்பவர் யார் , இந்திய பொருளாதாரம் என பேச்சு சென்று கொண்டு இருந்தது.
அப்போது ஒரு விமானத்தை சுட்டி காட்டிய நான் , “ ஒரு விமானத்தை பார்த்து அது உள் நாட்டு விமானமா , வெளி நாட்டுக்கு செல்வதா அப்படீனு எப்படிறா கண்டு பிடிக்கிறது “ என்றேன். அவன் அடிக்கடி பறப்பவன், நானோ லோக்கல்..அதனால் அவனிடம் கேட்டேன்.,
சுய நினைவு வந்த அவன் கைக்கடிகாரத்தை பார்த்து பதறினான் “ அட நாயே..இதுதாண்டா நான் போக வேண்டிய ஃப்ளைட்... பேசி பேசி மிஸ் பண்ணிட்டொமே” என்றான் எரிச்சலுடன்.
அதன் பின் ஒரு டிரெயின் பிடித்து போனான் என்பது வேறு கதை.
நண்பன் என்பதால் ந்ஷ்ட ஈடு ஏதும் கேட்கவில்லை.
இப்படி நீண்ட நாள் நண்பனுடன் பேசும் அனுபவம் கோபியுடன் பேசும்போது கிடைத்தது. வெளி நாட்டில் இருந்து லீவுக்கு ஊருக்கு போய்க்கொண்டு இருந்தவர் எனக்காகவும் நேரம் ஒதுக்கியிருந்தார். ஏற்கனவே புத்தக கண் காட்சியில் பார்த்து இருந்தாலும் ( சுமார் 40 நொடிகள் ) பேச இயலவில்லை.
இப்போது புதிதாக பார்க்கும் உணர்வே இல்லாமல் இயல்பாக , பல தரப்பட்ட விஷ்யங்களை பேசிக்கொண்டு இருந்தோம். அந்த விமான அனுபவம் இருந்ததால் கொஞ்சம் அலர்ட்டாகவே இருந்தேன் . அப்படி இருந்தும் டிரெயின் லேசாக மூவ் ஆன் பின்புதான் அவர் பாய்ந்து ஏறினார். நல்ல வேளை ..இல்லை என்றால் ரயில்வே ஸ்டேஷனில் சாரு - ஜெயமோகன் வாசகர்கள் கை கலப்பு என்று யாராவது போஸ்ட் போட வேண்டி இருந்திருக்கும்.
ஆழ்ந்த வாசிப்பனுபவன் கொண்டவர். செறிவான மொழி நடை கொண்டவர்.
அவர் புத்தகங்கள் மேல் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது பயணம் குறித்த கட்டுரையில்கூட தெரியும்...
பாருங்கள்
ஜெயமோகனின் தளபதி கோபி
**************************************
சுசீலா...இவரும் ஜெயமோகனின் தீவிர வாசகர். குருவின் பெயரை கெடுக்காத சிஷ்யர்.. நல்ல எழுத்தாளரும் கூட. தாஸ்தயேஸ்கியின் இடியட் நாவல் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான வரவேற்பு பெற்றது.
சமீபத்தில் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது.
***********************************************
ஜெயமோகனின் ஆதரவு பெற்ற இந்த தளத்தில் பல புத்தகங்கள் குறித்து அறியலாம்..
*********************************************************
பொதுவாக ஜெயமோகன் வாசகர்கள் எழுத்து கொஞ்சம் புரிவது போல இருக்கும்...புரியாதது போலவும் இருக்கும் .
இவர் எழுத்து புரியும்படி இருப்பது தனி சிறப்பு.
*************************************************************
ஓக்கே.... இனி பொதுவான சில வலைப்பூக்கள்.
***********************************************************
நான் மதுரைக்கு அடிக்கடி சென்று வந்தாலும் , மதுரை பற்றி அவ்வளவாக தெரியாது.
இந்த வலைப்பதிவு என்னை ஆச்ச்ரயப்படுத்தியது...
படித்து பாருங்கள்மதுரையின் வரலாற்று சிறப்பு- மதுரை வாசகன் வலைப்பூ
*******************************************
அந்த காலத்தில் ஒரு ஆங்கில புத்தகம் , ஏதோ அரைகுறையாக புரிந்து கொண்டு என் பார்வையை எழுதி இருந்தேன். இந்த பதிவர் பின்னூட்டத்தில் அதை விட அருமையாக எழுதி இருந்தார் , எனவே அதையே தனி பதிவாக எடுத்து போட்டேன்
பதிவை மிஞ்சிய பின்னூட்டம்
அவர் ஆங்கில புலமை , எழுத்தாற்றல் என்னை கவர்ந்து தொடர்ந்து வாசிக்கலானேன்.
அவரது பஞ்ச் லைன் எனக்கு மிக மிக பிடிக்கும்
இது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...
அவரது இந்த பதிவை படித்து பாருங்கள். தந்தையுடன் கொண்டிருக்கும் நட்பு , ஆழ்ந்த அறிவு என பல விஷ்யங்கள் புரியும்.
அப்பாவுடன் ஓர் உரையாடல்
*********************************************************************
என் பதிவுகளில் போட்டோக்களை அதிகம் இணைப்பதில்லை. கேமிரா இல்லை எனபதுகூட இரண்டாம் பட்சம்தான். போட்டோ பதிவுகளை என்னுடைய டுபாக்கூர் செல்போனில் அவ்வளவு தெளிவாக பார்க்க முடியாது என்பதே காரணம்.
ஆனால் வலைப்பூக்களில் போட்டோக்கள் மூலம் புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும் பணியை சிலர் செய்கிறார்கள். வசன சினிமா என்பது காட்சி சினிமா என மாறியது போல , வருங்காலத்தில் வலைப்பூக்களும் இப்படி மாறக்கூடும்.
இவரது இந்த பதிவை பாருங்கள் . விஷுவலும் சூப்பர்.அதற்கான கமெண்டுகளும் சூப்பர்
விஷுவல் ட்ரீட்
**********************************************
இவரும் மதுரைக்காரர் என்பதில் எனக்கு ஒரு சந்தோஷம். எல்லா விஷ்யங்களையும் பற்றி எழுதும் சுவையான எழுத்துக்கு சொந்தக்காரர்.
அவர் எழுத்துக்களில் இந்த போஸ்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஏன் என படித்தால் உங்களுக்கே தெரியும் சூப்பர் போஸ்ட்
*******************************************************
பதிவர் பெயருக்கும் போஸ்ட்டிற்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது இந்த வலைப்பூவின் ஸ்பெஷல்.
நான் முன்பு சொன்ன போட்டோ கான்சப்ட் இவருக்கும் பொருந்தும்.
இந்த பயணக்கட்டுரையும் நச்... புகைப்படங்கள் வல்வி
ஸ்கூல் பையனுடன் ஆலப்புழா பயணம்
******************************************************************
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள இவர் வலைப்பூவை நாடுவேன். சூப்பர் சீனியர் பதிவர்...
க்ரியேட்டிவாக இருக்கும். ஒன்றிரன்டு லேசாக ,மிக லேசாக வரம்பை மீறுவதாக தோன்றும். நான் அதையும் ரசிப்பேன் என்றாலும் சிலர் முகம் சுளிக்க கூடும். கொஞ்சம் பார்த்துக்குங்க..
கும்மாச்சியுடம் இணைந்து ரசித்து சிரிக்கலாம்
*****************************************
இவரும் பல்சுவை பதிவர். அனைத்தையும் ரசிக்கும்படி எழுதுவார். இவர் கதைகள் எனக்கு பிடிக்கும்..
நிமிட கதை
*************************************************************
இன்னும் பலரது பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.. ஆனால் அனைத்தையும் ஒரே பதிவில் சொன்னால் படிக்க்க முடியாது.
இதில் சிலரை ஏற்கனவே படித்து இருப்பீர்கள். கோபி, சுசீலா மேடம் போன்ற , வலைச்சர ஆசிரியர்கள் உட்பட , சில சீனியர் பதிவர்களையும் சொல்ல காரணம் நல்ல விஷ்யங்களை பேசுவது நல்லது என்ற கான்செப்ட்தான்.
அடுத்த பகுதியில் சில கொள்கை சார்ந்த பதிவர்கள் , எதிர் கருத்து கொண்ட ஆனால் ரசிக்க கூடிய பதிவர்கள் , கவிதை சார்ந்த பதிவர்கள் என பார்க்க இருக்கிறோம்..
மீண்டும் சந்திப்போம்..
பதிவர்களை பற்றிப் படித்துக்கொண்டே வரும்போது அட..... என்று ஆச்சரியப்படவைத்தது என்னுடைய பதிவின் அறிமுகம்.... நன்றி பிச்சைக்காரன் சார்... மற்றவர்களைத் தொடர்கிறேன்....
ReplyDeleteபதிவுலகில் ஆழ்ந்த புலமையுடன் கூடிய வாசிப்பை சுவாசிப்பது போல பயன்படுத்தும் பலரும் உள்ளனர் என்பதை உங்களைப் போன்றவர்கள் தான் நிரூபிக்கின்றார்கள்.
ReplyDeleteஉங்கள் அறிமுகங்கள் பலருக்கு வழிகாட்டி
நன்றி ஸ்கூல் பையன்
ReplyDeleteநன்றி ஜோதிஜி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னடைய வலைப்பூவை குறிப்பிட்டதற்கு நன்றி.
ReplyDeleteசரி அது என்ன "சூப்பர் சீனியர் பதிவர்"
நன்றி.
nice introductions
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete@கும்மாச்சி,. என்னை விட முன்பே எழுத வந்தவர் என்ற முறையில் உங்களை அப்படி குறிப்பிட்டேன்
ReplyDeleteநன்றி ஜோதிஜீ
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDeleteநன்றி ரூபன்
ReplyDeleteநன்றி அருள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete