கிட்டதட்ட எழுபது வருடங்களாக தமிழக வெகுஜன ஊடக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பெரும்படைப்பாக திகழ்கிறது பொன்னியின் செல்வன். யாகூ குரூப்கள் இணையத்தில் பாப்புலராக இருந்த போது சில இளைஞர்கள் அதில் ஒரு குரூப்பாக கூடி பொன்னியின் செல்வன் பற்றி விவாதித்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள், கமலகண்ணன், ராமசந்திரன், லாவண்யா, கோகுல் மற்றும் க்ருபாசங்கர் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள ஊர்களுக்குச் சுற்றுபயணம் மேற்கொள்வதென முடிவு செய்தார்கள். அப்படி தொடங்கிய பயணம் பிறகு சரித்திர ஆய்வாளர்களோடு தொடர்பு என நீண்டு வரலாறு என்றொரு இணையத்தளத்தினை உருவாக்கி அதில் சரித்திர ஆய்வு குறித்த தகவல்களை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட தூண்டியது. பலவிதமான வரலாற்று தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன.
வரலாறு ஆய்வு தளத்தினைப் போலவே சென்னையில் உள்ள வரலாறு மற்றும் பண்பாடு குறித்த ஆர்வமுள்ளோர் தொடர்ந்து எழுதி நடத்தி வரும் வலைப்பதிவு 'தமிழ் பாரம்பரியம்'. ஆங்கிலத்தில் பல பதிவுகள் இருந்தாலும் தமிழிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுலகில் எந்த சார்பும் அல்லாத ஆய்வு கண்ணோட்டத்தில் வரலாற்றுக்காக நடத்தபடும் வலைப்பதிவு சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால் இந்த வலைப்பதிவு கவனிக்கதக்க வலைப்பதிவாக இருக்கிறது. பிரபல வலைப்பதிவர் பத்ரி சேஷாத்ரி இதை நடத்தி கொண்டிருக்கிறார்.
- தமிழ்க் கல்வெட்டுகளின் வழியே பெண்களின் நிலை: மார்க்ஸிய காந்தி
- கரு. இராசேந்திரன் - புதுக்கோட்டைக் கல்வெட்டுகளில் நீர்ப்பாசனம் வீடியோ
- ‘சித்தன்னவாசல் ஓவியங்கள் என் பாட்டன் வரைந்தவை’
முனைவர் பா. ஜம்புலிங்கம் சோழ நாட்டில் பௌத்தம் என்றொரு வலைப்பதிவு எழுதி கொண்டிருக்கிறார். பல ஆய்வு கட்டுரைகள் இதில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.
...மேலும் பேசுவோம்...
...மேலும் பேசுவோம்...
அறிமுகங்கள் அருமை அய்யா
ReplyDeletedifferent introductions
ReplyDeleteசத்தியமா நான் கொல்லலை சாமி!
ReplyDeleteஅருமையான வலைத்தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான பகிர்வுகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் !
ReplyDeleteஅறியாத தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteகுந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்
ReplyDeleteஇந்த மாதிரி தலைப்பைப் பார்த்தா இந்த லின்க் போட்டு விடுவோம்
எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தங்களின் எழுத்து என்னை இன்னும் எழுதவும் ஆய்வு செய்யவும் துணை புரிகிறது. ஜம்புலிங்கம்
ReplyDeleteகரந்தை ஜெயக்குமார், அருள், அப்பாதுரை, இமா, இக்பால் செல்வன், தனபாலன், சுரேஷ் & ஜம்புலிங்கம் ஆகியோருக்கு நன்றி!
ReplyDeleteஅறிமுகமான அனைத்துத் தளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் நன்றி பகிர்ந்துகொண்ட ஆசிரியருக்கு .
ReplyDelete