இன்றைக்கு
இதுவா அதுவான்னு இல்லாம பலவற்றையும் பதிவாக்கிப் பகிர்ந்து கொள்கிற சிலரைப் பற்றிப்
பார்க்கலாம்…
தன்
அனுபவங்களிலிருந்து எளிமையாகவும் இனிமையாகவும் நகைச்சுவையாகவும் பலப் பல விஷயங்களைப்
பகிர்ந்துக்கிறவர், சுப்பு தாத்தா. இவரோட இசையார்வத்துக்கு அளவே
கிடையாது, பாகுபாடும் கிடையாது. ஒருவருடைய கவிதையை, பாடலை ரசிச்சா, உடனடியா மெட்டு
போட்டுப் பாடி வலையேற்றி விடுவார்! சின்ன, இளைய, குட்டிப் பதிவர்களா இருந்தாலும் தட்டிக்
கொடுத்து தாராளமா பாராட்டுவார்! தமிழ்த் தாத்தா போல, இவரை நம்மளோட அன்பான வலையுலகத்
தாத்தான்னு சொல்லலாமா? :)
தமிழர் மறை தமிழ் நெறி என்பது இவருடைய பல வலைப்பூக்களில் ஒண்ணு. ஒரு சோற்றுப் பதம்
போல இந்தப் பதிவை நீங்களும் வாசிச்சுப் பாருங்க.
நான்
சந்தித்த மிக அன்பானவர்களில் ஒருத்தர், வல்லிம்மா. இவர் பேசுவதே அவ்வளவு இனிமையாக
இதமாக குளுமையாக இருக்கும். இவர் பதிவுகளும் அப்படியே. அனுபவங்கள், கதைகள், ஆன்மீகச்
செய்திகள், இப்படிப் பலவற்றையும், அழகான படங்களுடன் அன்பாகப் பகிர்ந்து கொள்கிறார்.
புகைப்படக் கலையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். ‘ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர்களை’
இவருடைய சொந்தப் புகைப்படங்களுடன் இங்கே பார்க்கலாம்.
என்.கணேசன் அவர்களைப் பற்றித் தெரியாதவர்கள்
அரிதாகத்தான் இருப்பார்கள். இவர் எழுதுவது எல்லாமே, விதிவிலக்கே இல்லாமல், பயனுள்ள
விஷயங்கள்தான்! இவருடைய சமீபத்திய உபவாசம் எதற்காக என்ற பதிவைப் படித்துப் பாருங்கள்.
இவருடைய வாசிப்பனுபவம் மிகவும் விரிவானது. கருத்துக்களை எழுத்தில் கொண்டு வரும் நேர்த்தி
வியக்க வைப்பது. சமீபமாக ‘பரம(ன்) ரகசியம்’ என்ற பரபரப்பான, ஆன்மீகம் கலந்த மர்மத்
தொடரை எழுதி வருகிறார்.
அரவிந்த
அன்னை மீது அபாரமான பக்தி கொண்ட திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஸ்ரீ அன்னையைப் பற்றி நிறைய சிந்தனைகளையும், அவர்
சொன்ன கருத்துகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அரசியல் சம்பந்தமான பதிவுகள் நிறைய
இடும் பதிவர்.
‘அச்சோ
என் பதிவை இன்றைக்கு யாருமே படிக்கல, யாருமே பின்னூட்டல’, அப்படின்னு யாரும் வருத்தப்படாத
அளவுக்கு ஒவ்வொருவர் பதிவிலும் போய் தவறாமல், அதுவும் முதல் ஆளா பின்னூட்டம் இடுவதில்
திண்டுக்கல் தனபாலனுக்கு நிகர் அவரேதான்! இதைத் தவிர
சீனா ஐயா சொன்னது போல வலைச்சரத்தில் வரும் பதிவுகளுக்கெல்லாம் இவரே சென்று தகவல் தெரிவித்து
விடுகிறார். இதையும் தவிர, மிகவும் பயனுள்ள, தகவல் செறிவுள்ள, சிந்திக்க வைக்கும் பதிவுகளையும் இவர் எழுதுகிறார். இவருக்கு
மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருக்குமோ என்று எனக்கு ஒரு குட்டி டவுட்!
தேவையான
விஷயங்களை, சுவையாகவும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் எழுதக் கூடிய எழுத்து நடைக்குச்
சொந்தக்காரர், ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள். இவருடைய இந்தக் காலக்
குழந்தைகள் பற்றிய ஆதங்கத்தை இவர் பகிர்ந்து கொண்டிருக்கும்
விதத்தை வாசித்தால், நீங்களும் ரசிப்பீர்கள், சிந்திப்பீர்கள்!
பிரபலமான
கவிஞரான யெஸ்.பாலபாரதி, மக்களுக்குத் தேவையான ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை வழங்கி வருகிறார்.
வாசித்து, வேண்டியவர்களுக்கு அறிமுகப்படுத்திப் பயன் பெறுங்கள்.
வல்லமை
மின்னிதழின் ஆசிரியரான பவள சங்கரி அவர்கள் வலைப்பூவும் வெச்சிருக்காங்கன்னு
தாமதமாத்தான் கண்டு பிடிச்சேன்! கவிதை, கதை, சுய முன்னேற்றக் கட்டுரை, பொது நலக் கட்டுரைன்னு பலவிதமா
கலக்கறவங்க.
ராமலக்ஷ்மிக்கு அறிமுகமே தேவையில்லை… ஆனாலும்
அவங்க இவ்ளோ புகழ் பெறும் முன்பிருந்தே நல்ல தோழி என்பதாலும், இவ்வளவு புகழ் பெற்ற
பின்பும் இன்னும் அதே போல இருக்கும் அன்பிற்காகவும் அவரைக் குறிப்பிடறேன். அவரும் ஒரு
மிகச் சிறந்த பன்முகக் கலைஞர், (அதில் புகைப்படக் கலையும்
அடக்கம்) என்பது எல்லோருக்கும் தெரியும்.
கே.பி.ஜனா, இன்னொரு அருமையான எளிமையான
எழுத்தாளர். அன்புடன் ஒரு நிமிடம் என்று இவர் எழுதியிருக்கும்
கதைகள் குடும்ப வாழ்வைப் பற்றிப் பல விஷயங்களை மனசுக்கு இதமாக எடுத்துச் சொல்கின்றன. இதைத் தவிர, நல்லதா நாலு வார்த்தை அப்படினு பல பெரியோர்களுடைய
பல நல்ல வார்த்தைகளை நல்ல தமிழில் கவிதை போல மொழி பெயர்த்துத் தருகிறார்.
நிலா மகள் என்ற அழகான பெயர் கொண்ட இவர்
பலப்பல விஷயங்களையும் பற்றிய தன் கருத்துகளைத் தெளிவாகப் பகிர்ந்து கொள்கிறார். இவருடைய
ஞிமிறென இன்புறு பதிவைப் படித்தால் நீங்களும்
இன்புறுவீர்கள்!
திருமதி
பக்கங்கள் என்ற வலைப்பூவில் தன்னுடைய இனிமையான எண்ணங்களையும், அனுபவங்களையும் அருமையான படங்களுடன்
பகிர்ந்து கொள்கிறார், கோமதி அரசு அம்மா.
சுவாரஸ்யமான
பலப்பல பதிவுகளுக்குச் சொந்தக் காரர், அபி
அப்பா. சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம்,
பின்னே சமதர்மம்
என்ற பதிவில் வித்தியாசமான பெயர்களால் ஏற்பட்ட அனுபவங்களை வேடிக்கையாகப் பகிர்ந்திருக்கிறார் :)
நல்ல
தமிழில், பல படைப்புகளின், புத்தகங்களின் விமர்சனங்களை அழகாகப் பகிர்ந்து வருகிறார்,
கிரி
ராமசுப்ரமண்யன்.
விரிவான வாசிப்பனுபவம் உள்ள இவர், வாசித்தவைகளை தன் பார்வையில் பகிர்ந்து கொள்கிற நேர்மையும்,
சிரத்தையும் பாராட்டுக்குரியவை.
ஸ்கூல் பையன் என்று இவர் சொல்லிக்கிட்டாலும்
எழுத்தைப் பார்த்தா அப்படித் தெரியல. பயணக் கட்டுரைகள், சொந்த அனுபவங்கள், விமர்சனங்கள்னு பலவும் எழுதித்
தள்ளிக்கிட்டிருக்கார்.
பண்டிகை
மாதிரி வருஷத்துக்கு ஓரிரு முறைகளே பதிவிடறார் தம்பி கோபிநாத். முன்னெல்லாம் பிறர் பதிவுகளைப்
படிக்கவாச்சும் வருவார், இப்ப ரொம்ப நாளாச்சு பார்த்து. இசைஞானியின் பக்தர் என்பதால் அவர் பிறந்த
நாளுக்கு கண்டிப்பா ஒரு பதிவு இருக்கும்!
வயிறு
வலிக்கச் சிரிக்கணும்னா நீங்க கண்டிப்பா தக்குடுவோட பதிவுகளைப் படிக்கணும்! ரொம்ப
இயல்பான நகைச் சுவையோட சொந்த அனுபவங்களை சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துக்கறவர். உதாரணத்துக்கு
இவரோட சமையலும் சங்கீதமும். வலையுலகில் பல பேருடைய செல்லப்
பிள்ளை. சீக்கிரமே திரும்ப எழுத வாங்க தம்பீ! We miss you!
இன்னொரு
சிரிசிரி பதிவர், எங்க ஊருக்காரர், நல்ல பாட்டுக்காரர். மீனா
சங்கரன் என்பது
இவர் பேரு. ரொம்ப அருமையா பாடுவார். இன்னொரு முருக பக்தை. எங்க ஊர்ல இலவசமா திருப்புகழ்
வகுப்புகள் எடுக்கறார். இவரோட Stand up comedy எங்கூர்ல ரொம்ப பிரபலம் :) அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும்
என்ன தொடர்புன்னு
அவர் இங்கே சொல்றார். படி(சிரி)ச்சுப் பாருங்க! இவரும் ரொம்ப நாளா எழுதலை :(
அப்பாடி!
இன்னும் ஒரே ஒரு நாள்தான்! அப்புறம் விடுதலை… உங்களுக்கு!
அன்புடன்
கவிநயா
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன். பிறகு வருகிறேன்...
ReplyDeleteஎனது தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி. (இப்போது தான் கவனித்தேன்)
ReplyDeleteஅதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! வாசித்தீர்களா...? (http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html)
வேவி 1 (வேகம் விவேகம்) ஆரம்பித்து உள்ளேன். சில தளங்கள் சில மாற்றங்கள் செய்தால் அனைவருக்கும் எளிதாக வாசிக்க கருத்திட இயலும்... வேவி முடிவதற்குள் அனைவருக்கும் புரியும்...
பதிவு எழுதி பப்ளிஷ் செய்வதற்குள் கருத்துரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை...!! ஹிஹி... சும்மா... மீண்டும் வருவேன்...
அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள் ...நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இவ்வளவு கமெண்ட் போட எப்படித்தான் முடிகிறதோ ?அவருக்கும் .உங்களுக்கும் நன்றி !
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபவளசங்கரியின் பழைய பதிவுகளில் நிறைய பொக்கிஷங்கள் உண்டு. தனபாலனுக்குச் சோர்வே வராதிருக்க வேண்டும்!
கதம்பச்சரத்தில் இடம் பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். திருமதி.பவளசங்கரி அவர்களின் வலைப்பூவைக் குறித்து இப்போது தான் தெரிந்து கொண்டேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteதனபாலன் சாரைப் பற்றி தாங்கள் சொன்னது ரொம்பச் சரி. ஒரு நாளைக்கு அவருக்கு மட்டும் 48 மணி நேரமாங்கிற டவுட் எனக்கும் உண்டு. மேலும், வாயு வேகம், மனோ வேகம் என்பதையெல்லாம் தாண்டி படுவேகமாக செயல்படுவதன் ரகசியம் தெரிந்து கொள்ளவும் ஆவல் எனக்கு.
தங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி.
வலைச்சர பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் பதிவை இனிமையான எண்ணங்கள் என்று குறிப்பிட்டமைக்கு நன்றி.
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் செய்தி தெரிவித்தார், அவர்களுக்கும் என் நன்றி.
ஊருக்கு போய்விட்டதால் பதிவுகளை படிக்க முடியவில்லை.
நேற்றுதான் ஊரிலிருந்து வந்தேன்.
நீங்கள்குறிப்பிட்ட பதிவர்கள் ஒரு சிலர் தான் புதியவர்கள் எனக்கு. எல்லா பதிவுகளையும் படித்து விடுகிறேன்.
இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDeleteகதம்பச்சரத்தில் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி... எழுதித்தள்ளுகிறார் என்ற அளவுக்கு இன்னும் எழுதவில்லை... எழுத முயற்சிக்கிறேன்...
ReplyDeleteமற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி...
அன்பான அறிமுகத்துக்கு நன்றி கவிநயா:)! அறிமுகமாகியுள்ள மற்றவருக்கும் என் இனிய வாழ்த்துகள்!
ReplyDeleteகவிநயா என்கிற மினாவுக்கு என் வாழ்த்துகள். என்னையும் நினைவு கொண்டு ஒரு பதிவு செய்ததற்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும்:)
ReplyDeleteஇனிமையான தோழிகளில் நீங்களும் ஒருவர். வலைச்சரம் சிறக்க வாழ்த்துகள். வண்டாய்ப் பறந்து வந்து சேதி சொன்ன தனபாலனுக்கு நன்றி சொல்லியே மாளவில்லை:)
இவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருக்குமோ என்று எனக்கு ஒரு குட்டி டவுட்!//
ReplyDeleteஅதானே! :)))))
கேபி ஜனா, கிரி ராமசுப்பிரமணியன் ஆகியவர்கள் மிகப் புதியவர்கள். அறிமுகத்துக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல வாசனைக் கதம்பம். :)
அருமையானன அரிமுகம் அனைவர்க்கும் வாழ்த்து.
ReplyDeleteநல்ல ஊக்க போனஸ் கொடுத்துள்ளீர்கள் கவிநயா. நன்றி
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு.காற்றாய் வந்து சேதி சொல்லிடும் தனபாலன் சாருக்கு நன்றி.அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி கவிநயா அவர்களே
ReplyDeleteஎன்.கணேசன்
பெரும்பாலான பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களை மட்டுமே தேடிச்சென்று கமெண்ட் போடுவார்கள்..அப்படி இல்லாமல் பரந்த
ReplyDeleteமனப்பான்மையுடன் எல்லாருடைய தளங்களுக்கும் சென்று சலிக்காமல்
பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் திண்டுக்கல் தனபாலன்
அவர்கள் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர் .
என் பதிவுகளுக்கு அதிக பின்னூட்டம் எல்லாம் வராது. ஏதோ 3 , 4 வரும்.
அதில் ஒன்று கண்டிப்பாக தனபாலன் அவர்களுடையதாக இருக்கும்.
என்னடா யாருமே கவனிக்க மாட்டேன்கிறாங்களே ...நாம் எழுதி என்ன பயன் என்று சில சமயம் விரக்தி அடையும் என்னைப் போன்ற அமெச்சூர் பதிவர்களுக்கு அவரது பின்னூட்டம் ஒரு நல்ல டானிக்....
கதம்ப சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலரது பதிவுகளையும் அடியேன் படித்துள்ளேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல தேர்வு கவிநயா.
திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி.
மிக்க நன்றி கவிநயா அவர்களுக்கு. என் பதிவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.அது போல் மற்ற அறிமுகம் செய்விக்கப்பட்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிநயா,
ReplyDeleteஎம் தளத்தை அறிமுகம் செய்துவைத்தமைக்கு மிக்க நன்றி.
நான் மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து இன்னமும் ஏழு நண்பர்கள் ஆம்னிபஸ் தளத்தில் தொடர்ந்து எழுதுகிறோம். அது மட்டுமல்லாமல், சிறப்புப் பதிவர்களான பிற நண்பர்களும் அவ்வப்போது தாங்கள் வாசித்த நல்ல புத்தகங்களைப் பற்றி அறிமுகம் செய்கிறார்கள். (ஆம்னிபஸ் தளத்தின் வலதுபுறப் பட்டையில் அங்கே எழுதுபவர்கள் பட்டியல் இருக்கிறது)
உங்கள் வார்த்தைகளிலேயே சொல்லவேண்டுமென்றால், “நல்ல வாசிப்பை வாடிக்கையாகக் கொண்ட, படித்ததை நேர்மையும் சிரத்தையுடனும் பகிர்ந்து கொள்ளும் மனம் கொண்ட” எவரும் ஆம்னிபஸ்சில் புத்தக அறிமுகம் / விமர்சனம் எழுதலாம்.
மீண்டும் நன்றிகள் :)
சமுத்ரா,
ReplyDeleteநீங்க அமெச்சூர் பதிவரா? நான் உங்க வெரி சீரியஸ் ரசிகனுங்கோ. நீங்க அமெச்சூருன்னா, நாங்களெல்லாம் இன்னமும் பொறக்கவேயில்லை
அநேகமானவர்கள் இங்கு நானும் அறித்தவர்கள் தான் சிறப்பான
ReplyDeleteபகிர்வு வாழ்த்துக்கள் தோழி .இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும்
என் வாழ்த்துகள் உரித்தாகட்டும் .
வணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிமையான அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteகிரி, நீங்க என் ரசிகரா? நன்றி...
ReplyDeleteஎல்லா எழுத்தும் some or the other way அமெச்சூர் தான் என்று நினைக்கிறேன்.
ஜென் ஞானி ஒருவரை உண்மையைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதும்படி
அரசன் ஒருவன் வற்புறுத்துகிறான். அவர் அந்தப் புத்தகத்தை
'உண்மை எழுதப்படும்போது பொய் ஆகிறது' என்று ஆரம்பிக்கிறார்.
உண்மையான வில்லாளி வில்லை எறிந்து விடுவான் என்பார்கள். உண்மையான
எழுத்தாளன் எழுத மாட்டான்...:0 முரண்பாடாகத் தோன்றுகிறது அல்லவா?அது தான் ஜென்.:)
anyway , எழுதுவோம்.....படிப்பவருக்கு இதழோரம் ஒரு புன்னகை, இவர் எப்படா மீண்டும் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு இவைகளை ஏற்படுத்தினால் அதுவே
சந்தோஷம்...:)
ஆகா...நன்றி அக்கா ;))
ReplyDeleteபதிவுகள் படிக்கிறது என்னிக்கும் இருந்துக்கிட்டே இருக்கு...பின்னூட்டம் தான் ;))
நீங்கள் சொன்னது போல இன்று இசை தெய்வத்தின் பிறந்த நாளுக்கு ஒரு பதிவு போட்டாச்சி ;))
மீண்டும் நன்றி அக்கா ;)
தனபாலன் அவர்களுக்கும் ஸ்பெசல் நன்றி ;)
ReplyDeleteசமுத்ரா.. நீங்க அமெசூர் பதிவர்னா எங்களை என்னா சொல்றது..?
ReplyDeleteகிரி இதையே எனக்கு முன்னாடி சொல்லிட்டாரே!
ReplyDeleteSamudra - I read your kaleidoscope regularly in google reader
ReplyDeleteஅன்பின் கவிநயா,
ReplyDeleteஎன் வலைப்பூ தங்களின் கவனம் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. வல்லமையின் உதவி ஆசிரியராக தங்களுடைய தன்னலமற்ற சேவை பாராட்டிற்குரியது. தங்களுடைய பன்முகத் திறமைகளில் நாட்டியப் பேரொளி என்று அழைப்பது என் தனி விருப்பம். நன்றி அன்புத் தோழி. வலைச்சரத்தில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பின் திரு தனபாலன்,
ReplyDeleteநனி நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
அன்பின் கோமதி அரசு,
ReplyDeleteதங்களுடைய பாராட்டிற்கும், வாழ்த்திற்கும், என் வலைப்பூவிற்கு வருகை புரிந்ததற்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
அன்பின் திரு அப்பாதுரை சார்,
ReplyDeleteநான் வலைப்பூ துவங்கிய காலத்திலிருந்து எனக்கு பல விதத்திலும் ஊக்கம் கொடுத்து, தங்களுடைய பின்னூட்டம் மூலம் என்னை மேலும் சிந்திக்க வைத்து, என்னை நானே செப்பனிட்டுக்கொள்ள உதவி வரும் தங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். வலைப்பூவில் மற்ற பதிவர்களை (என் போன்று மற்றவர்கள் வலைதளத்திற்கு சென்று ஒழுங்காக நன்றி செலுத்தாத சோம்பேறி பதிவர்களுக்கும் கூட)உற்சாகமூட்டி ஆதரவு அளிக்கும் தங்களைப் போன்றோரின் மூலமாக இன்னும் பல பொக்கிசங்கள் எழுத்துலகிற்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
//தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன். பிறகு வருகிறேன்... //
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்!
//அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! வாசித்தீர்களா...? //
வாசித்தேன்; நிறைய பயனுள்ள தகவல்கள் தந்திருக்கீங்க. ரொம்ப நன்றி :)
வேகம் விவேகம் வாசிக்க ஆவலுடன்...
நன்றி வெங்கட் நாகராஜ்!
ReplyDeleteநன்றி Bagawanjee KA!
நன்றி அப்பாதுரை!
நன்றி பார்வதி!
நன்றி கோமதி அரசு அம்மா!
நன்றி கரந்தை ஜெயக்குமார்!
ReplyDelete//எழுதித்தள்ளுகிறார் என்ற அளவுக்கு இன்னும் எழுதவில்லை... எழுத முயற்சிக்கிறேன்...//
எதிர்காலத்தில் சொல்றதை இப்பவே சொல்லிட்டேன்னு வெச்சுக்கங்க :) நிறைய எழுதித் தள்ள என்னோட வாழ்த்துகள், ஸ்கூல் பையன்!
நன்றி ராமலக்ஷ்மி!
ReplyDelete//என்னையும் நினைவு கொண்டு ஒரு பதிவு செய்ததற்கும்//
வல்லிம்மா, என்ன இப்படிச் சொல்லிட்டீங்களே. மறந்தால்தானே நினைக்க :) கீதாம்மா, நீங்க எல்லோரும் எப்போதும் என்னோட இருக்கீங்க. நன்றி அம்மா.
//நல்ல வாசனைக் கதம்பம். //
ReplyDeleteகீதாம்மா, நீங்களே இப்படிச் சொன்னதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் :) நன்றி அம்மா.
நன்றி பால கணேஷ்!
ReplyDeleteநன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்!
நன்றி என்.கணேசன்!
//பரந்த மனப்பான்மையுடன் எல்லாருடைய தளங்களுக்கும் சென்று சலிக்காமல்
ReplyDeleteபின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர் .//
உண்மைதான் சமுத்ரா!
//என் பதிவுகளுக்கு அதிக பின்னூட்டம் எல்லாம் வராது. ஏதோ 3 , 4 வரும். அதில் ஒன்று கண்டிப்பாக தனபாலன் அவர்களுடையதாக இருக்கும்.//
ஸேம் பிஞ்ச்! :)
//என்னைப் போன்ற அமெச்சூர் பதிவர்களுக்கு//
கிரி மற்றும் அப்பாதுரை சொன்னது போல் - நீங்களாவது, அமெச்சூராவது! நானும் உங்கள் ரசிகையாகி விட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் :)
நன்றி திரு.கைலாஷி!
ReplyDeleteநன்றி அபி அப்பா!
நன்றி கிரி ராமசுப்ரமணியன்! ஆம்னிபஸ் தளம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்தமைக்கும் மிகவும் நன்றி! உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
நன்றி அம்பாளடியாள்!
ReplyDeleteநன்றி ரூபன்!
நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!
//நீங்கள் சொன்னது போல இன்று இசை தெய்வத்தின் பிறந்த நாளுக்கு ஒரு பதிவு போட்டாச்சி ;))//
கோபி! உங்களை இங்கே பார்த்ததில் சந்தோஷம்ப்பா :) நன்றி!
அன்புக்கு மிகவும் நன்றி பவளா! :)
ReplyDeleteஎல்லோருக்கும் சேதி சொன்ன தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி!
ReplyDelete
ReplyDeleteஅட நானும் இருக்கேனா
அசடே இப்பதானே "நான்" என்று ஒண்ணு இல்லை.
அப்படி ஒண்ணு இருந்தாலும் அது சாஸ்வதம் இல்லை அப்படின்னு
சமுத்ரா வில் சொல்லிவிட்டு வந்தாய்.
இந்த வலைக்குள் நான் இருக்கேன் என்று ஒரு அல்ப சந்தோசப்படுறியே
அது இன்னிக்கு தேதியிலே சரிதான்.
ஆனா என்னிக்குமே நீ இருக்கணும்னா, உன்னோட சந்தோசம் இருக்கணும்னா,
என்ன நினைச்சா, என்ன எழுதினா பேசினா என்ன செஞ்சா,
உலகம் உன்னை தொடர்ந்து நினைக்குமோ
அது போல நீ இரு.
அப்படின்னு இந்த மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு சொல்லுது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
அன்புள்ள கவினயாக்காவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்! விரைவில் உங்கள் ஆசைபடி எழுத அம்பாள் அனுக்கிரஹம் செய்யட்டும்! :)
ReplyDelete@ தனபாலன் சார் - தனபாலன்= தளர்வில்லாத பாலன் :)
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//ஆனா என்னிக்குமே நீ இருக்கணும்னா, உன்னோட சந்தோசம் இருக்கணும்னா,
ReplyDeleteஎன்ன நினைச்சா, என்ன எழுதினா பேசினா என்ன செஞ்சா,
உலகம் உன்னை தொடர்ந்து நினைக்குமோ
அது போல நீ இரு.
அப்படின்னு இந்த மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு சொல்லுது. //
வாங்க சுப்பு தாத்தா! உங்க மனசு சொன்னா அது சரியாத்தான் இருக்கும்! நாங்களும் கேட்டுக்கறோம்... மிக்க நன்றி தாத்தா!
//அன்புள்ள கவினயாக்காவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்! விரைவில் உங்கள் ஆசைபடி எழுத அம்பாள் அனுக்கிரஹம் செய்யட்டும்! :)//
ReplyDeleteதக்குடுவை இங்கே பார்த்ததே எனக்கு பரம சந்தோஷம்! திரும்ப எழுத ஆரம்பிச்சிட்டா சந்தோஷம் பல மடங்காயிடும் :) நன்றி தம்பீ!
//@ தனபாலன் சார் - தனபாலன்= தளர்வில்லாத பாலன் :)//
சூப்பர்! நல்லாச் சொன்னீங்க!
நன்றி மாதேவி!
ReplyDeleteஅறிமுகப்படுத்தலுக்கு மகிழ்வும் நன்றியும். சக பதிவர்களுக்கு வாழ்த்தும் ...! நன்றி பாலண்ணா... அறிவிப்புக்கு.
ReplyDeleteவாங்க நிலாமகள், நன்றி. மன்னிச்சுக்கோங்க, உங்க பின்னூட்டம் இப்பதான் பார்க்கிறேன்...
ReplyDelete