Monday, June 17, 2013

அறிமுக மலர்

அன்பிற்கினிய வலைச்சர நட்புள்ளங்களுக்கு வணக்கம்.

இந்த  வார ஆசிரியப் பணிக்கு அழைப்பு விடுத்த  மதிப்பிற்குரிய சீனா ஐயா வர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு என்னை இங்கு பலமுறை அறிமுகம் செய்த தோழ, தோழியருக்கு என் பாசமிகு நன்றி.

முதல் இரண்டு முறை ஐயா என்னிடம் கேட்ட பொழுது, என்னால் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. என்றாலும் மூன்றாம் முறை அழைப்பு வந்த பொழுது, மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டேன். பலத் திறமையான பதிவர்கள் எல்லாம் ஏற்றுச் செம்மையாக செய்த இப்பணியை சமையல் வலைப்பூ நடத்தும் என்னால் திறம்படச் செய்ய முடியுமா என்ற ஐயம் எழாமல் இல்லை.

நான் எழுதுவதும், வாசிப்பதும் மிகக் குறைவுஇப்பணிக்காக அநேக வலைப்பூக்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது
வலையுலகில் தான் எத்தனை திறமைசாலிகள். வலைச்சரம்  தன் அற்புதமான பணி மூலம் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்துவது எத்தனைச் சரியானது
இல்லையெனில், பல நல்ல படைப்பாளிகள் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் போயிருக்கக்கூடும்வலைச்சரக் குழுவின் இந்த சிறப்புச் சேவைக்குப் பாராட்டுக்கள் பல.

வலையுலகில் நான் காலடி எடுத்து வைத்தது  அறுசுவை மற்றும் தமிழ்குடும்பம் என்ற சமையல் தளங்களில்தான்.

2010-ல் நெல்லையில் இருந்த சமயம், சிக்கன் குனியா என்னையும் தொற்றிக் கொண்டது. வீட்டை விட்டு எங்கும் போக முடியாத சூழல். அச்சமயம் தட்டுத் தடுமாறி என் வலைப்பூவான "சமைத்து அசத்தலாமை" தொடங்கினேன். ஆரம்பித்த வேளை உடல் நலக் குறைவால் சமையலறை கைமாறியிருந்தது.

இது தவிர சென்ற வருடம் என் ஆங்கில வலைப்பூவான மை ஹெல்த்தி ஹேப்பி கிச்சன், சமையல் தவிர மற்றவற்றை பகிர மணித்துளி என்ற வலைப்பூவும் ஆரம்பித்து அங்கும் எழுதி வருகிறேன்.

சமையல் குறிப்புகள் தான் அதிகமாக பகிர்ந்திருக்கிறேன். என்றாலும், என் ஒரு சில பகிர்வுகள் உங்கள் பார்வைக்கு.

ஆஹா!"தோசைகூட சுடத் தெரியாத நான்"   எப்படி  "ஈசியா பரோட்டா சுடுறேன்னு  . ஆச்சரியமாக இருக்கா? பரோட்டா அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என்று எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் என் வலைப்பூவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களினால் முன்னணியில் இருக்கும் பாப்புலர் போஸ்ட் அது தான். ஒரு சில வீடியோ சமையல் பகிர்வும் இருக்கு. ஆனால், பாருங்க வெஜ் சமையல் பகிரும் பொழுது தான் ஹிட்ஸ் குவியும்.

சமையலை விடுங்க. அது எல்லாக் குடும்பத் தலைவிகளும் செய்து அசத்துவது தான். அறிமுகத்தில்  பெயரையும்ஊரையும் சொல்லாமல் எப்படி? சும்மா இருக்காமல்  எம்மா என்று சிறுகதை எழுதினேன். அதற்கு தமிழ்மணம் -2010 பெண் பதிவர்கள் போட்டியில் முதல் பரிசும், தங்க பதக்க விருதும் கிடைத்தது. தொடர்ந்து நேசம் + யுடான்ஸ் புற்று நோய் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் எனது  வலி சிறுகதைக்கு ஆறுதல் பரிசும் கிடைத்தது.

நேரம் கிடைக்கும் பொழுது நல்ல இலக்கியங்கள் கிடைத்தால் ஆர்வமுடன் வாசிப்பேன்அப்படி வாசித்தவற்றுள்முதல் முதலாய் நான் எழுதிய  நாவல் விமர்சனம் இதோ!!

ஒரு நாள் நடை பயிற்சியின் பொழுது ஏற்பட்ட அனுபவம் தான், குறுக்கே கோழியும் முருங்கைக்கீரையும், ஊருக்கு சென்றிருந்த சமயம் ஒரு சிறிய சுற்றுலா அனுபவம் தான்  முஸ்லிம் சத்திரமும் முட்டைபஜ்ஜியும் இங்கிருந்து சென்று வந்த  உல்லாச படகு பயணம் பகிர்வும் உங்கள் பார்வைக்கு.

பொழுதைப் போக்க  சின்னஞ் சிறிய உலகத்தில் என் மனத் திருப்திக்காக ஆற்றிய பணி.

என் பிரிவால் வாடும்  என் வீட்டு தோட்டம் இது நான் புதுக் கவிதை எழுத முயற்சித்தது என்று சொல்லலாம்.

என் சிறுவயது  பொங்கல் சிறப்பு நினைவுகள், சொந்த ஊரில்  என் தகப்பனாருடன்  கழித்த நாட்கள் அவை.பார்த்து வியந்த காலங்கள் அவை. பின்பு திருச்சி சென்று விட்டேன். நேற்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாட்டம். என் தகப்பனார் அவர்களைப் பற்றிய நினைவு மனதை அழுத்தியது.

மணித்துளியில் என்னுடைய  அரைகுறை உணர்வுமலரும் நினைவுகள் மை ஹெல்தி ஹேப்பி கிச்சனில் நடத்திய சமையல் போட்டி பற்றிய   ஒரு சிறிய பகிர்வு பெரிய மகிழ்ச்சி. 

இத்துடன் இன்று என் பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.
பார்வையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
மீண்டும் நாளை நல்ல நல்ல அறிமுகங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.


என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.



46 comments:

  1. அருமையான அறிமுகப்பகிர்வுகள்..

    வலைச்சர்ம் தொடுப்பதற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. பரோட்டா 'பாப்புலர்கள்' அதிகம், நாவல் விமர்சனம், தோட்டம், சிறப்பு நினைவுகள் உட்பட சுய அறிமுகப் பகிர்வுகள் சொன்ன விதம் அருமை... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அறிமுகம் அருமை.. ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ என்ற புதுக் கவிதை ஒரு வேளாண் விஞ்ஞானியையும் அவருள்ளே இருந்த கவிஞரையும் வெளிக்காட்டியது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சகலகலாவல்லி தான் நீங்க. சமையல் முதல் சமயத்தில் கதைகள் வரை கலக்குங்க சகோதரி.

    ReplyDelete
  5. இங்கு வலைசரத்தில் ஆசிரியர் பதவியை அலங்கரிக்க வந்திருக்கும் என் அன்புத்தோழி ஆசியாவைப்பார்க்கும் பொழுது சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் உள்ளது.சமையலிலும் பதிவுகளிலும் அசத்துவது போல் வலைச்சர ஆசிரியர் பணியிலும் அசத்த என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  6. அருமையான அறிமுகப்பதிவுகள்.

    //சும்மா இருக்காமல் எம்மா என்று சிறுகதை எழுதினேன்// ஆஹா..வரிகளில் கவித்துவம் நர்த்தனம் ஆடுகிறதே தோழி.அசத்துங்க.மற்ற பதிவுகளுக்காகவும் வெயிட்டிங்...:)

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரி முதலில் வந்து பார்வையிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

    ReplyDelete
  8. தனபாலன் சார், பகிர்வுகளை குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. அறிமுகப்பதிவே அருமை.

    இதிலும் நன்றாகவே எழுத்தில் ’சமைத்து அசத்திட்டீங்க’. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வேத நடனசபாபதி சார், வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,தங்கள் ப்ளாக் பார்வையிட முடியவில்லை,துள்ளிக் குதிக்கிறது.

    ReplyDelete
  11. நிரஞ்சன் தம்பி,கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  12. ஸாதிகா வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.கதை எழுதின கதை தான் உங்களுக்குத் தெரியுமே.
    தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுது எல்லாப் பகிர்வுகளையும் பார்வையிடுங்கள்.நன்றி தோழி.

    ReplyDelete
  13. வை.கோ.சார் கருத்திற்கு மிக்க நன்றி.பாராட்டிற்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. எழுத்து, சமையல் என எடுத்த அனைத்திலும் மிளிரும் உங்கள் பற்றிய அறிமுகப் பதிவுகளின் தொகுப்பு நன்று.
    வலைச்சர வாரத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அசத்துங்கள்:)!

    ReplyDelete
  15. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. ஆசியா... வணக்கம்!
    வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    உங்கள் சுய அறிமுகமே அசத்தல்!.

    தொடரும் உங்கள் பணிக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  17. அன்பின் ஆசியா உமர் - அருமையான சுய அறிமுகப் பதிவு. அத்த்னை சுட்டிகளையும் சென்று பார்க்கிறேன். நலலதொரு துவக்கம் - வாரம் முழுவதும் பதிவுகளை அறிமுகப்படுத்தி தூள் கிளப்புவதற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. ரொம்ப சந்தோசமா இருக்கு. கலக்குங்க ஆசியாக்கா. வாழ்த்துகள்

    ReplyDelete
  19. அப்துல் பாசித் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    மனமார்ந்த நன்றி ராமலஷ்மி.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. சமுத்ரா உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    இளமதி உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியை தருகிறது.மிக்க நன்றி.

    ReplyDelete
  21. சீனா அய்யா, பகிர்வுகளை பார்வையிட்டு கருத்திடுவதற்கு மிக்க மகிழ்ச்சி.தங்கள் ஊக்கத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  22. சகோ.ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.

    ReplyDelete
  23. வலைச்சர வாரத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  24. நல்லதொரு ஆரம்பம் ஆசியா. தொடர்ந்து உங்க ஆசிரியப்பணி இவ்வாரம் வலைச்சரத்தில் சிறப்பிக்க‌ என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!!

    ReplyDelete
  26. நல்வரவு! இனிய பாராட்டுகள்!

    ReplyDelete
  27. தம்பி குமார் வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

    அப்பாதுரை சார் வருகைக்கும் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  28. ப்ரியசகி நல்வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி,மீண்டும் நன்றி.

    மேனகா ரொம்ப மகிழ்ச்சிபா.மிக்க நன்றி.

    துளசிதளம் வரவேற்பிற்கு மனமார்ந்த நன்றி.உங்களைப் போன்றவர்கள் என் பகிர்வினை பார்வையிட்டது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

    ReplyDelete
  29. வணக்கம்
    திருமதி,ஆசியா உமர்


    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  30. அன்பு ஆசியா!

    வலைச்சர ஆசிரியர் பதவியேற்றதற்கு என் அன்பு வாழ்த்துகள். நிச்சயம் வெகு சிறப்பாகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் ஒவ்வொரு நாளும் ஜொலிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

    ReplyDelete
  31. ரூபன் இன்று சுய அறிமுகம் தான் நாளை முதல் சகபதிவர்கள் அறிமுகம், தொடருங்கள் நன்றி.

    ReplyDelete
  32. அன்பு மனோ அக்கா,இக்கட்டான சூழ்நிலையிலும் வந்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றி.
    வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  33. வலைச்சரம் தொடுப்பதற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  34. வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. ரியாஸ் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  36. மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி.வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    ஆசியா ,

    உங்கள் வாரம் அசத்துங்கள் ,கண்டிப்பாக பல பயனுள்ள பதிவுகளை அறிமுகபடுத்துவீர்கள் என்பதில் சந்தேகமில்லை./.
    மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

    கலக்குங்க ஆசியா :-))

    ReplyDelete
  40. ஜலீலா மீண்டும் மனமார்ந்த நன்றி!

    ஹுசைனம்மா மனமார்ந்த நன்றி!

    அமைதிச்சாரல் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  41. இவ்வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    உங்கள் சிறந்த பணியால் வாரம்சிறப்புறும்.

    படிக்க காத்திருக்கின்றோம்ஆசியா.

    ReplyDelete
  42. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் ஆசியா.
    சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.
    ஊருக்கு போய்விட்டதால் இப்போது தான் பார்த்தேன்.

    ReplyDelete
  43. மாதவி மனமார்ந்த நன்றி,மகிழ்ச்சி.

    விஜி மிக்க நன்றி,மகிழ்ச்சி.

    கோமதிக்கா மிக்க நன்றி,மகிழ்ச்சி.

    ReplyDelete