நம் பதிவுலகில் அனுபவத்தினை எழுதாத வலைப்பதிவரே இருக்க முடியாது. சுவாரஸ்யமாய், விழிப்புணர்வாய், நகைச்சுவையாய், படிப்பினையாய், பயன்தரும் விதமாய் அமைந்த ஒரு சில அனுபவப் பகிர்வுகளைப் பகிர்ந்த பதிவர்களை இன்று சந்திப்போம்.வாழ்க்கைக்கு பயன்படும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டு அனுபவ அறிவினை பெற்றுக் கொண்டால் நிச்சயம் நாம் முழுமை அடையலாம்.
இளமையின் ரகசியம் – தீராக் கற்றலில் முடிவாக திருமதி பக்கங்கள் கோமதியக்காவின் முதுமையிலும் இன்பம் காணலாம் என்ற பகிர்வை வாசித்து பாருங்க.
ருக்மணி அம்மா தன் மகளுடன் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட
இளமையின் ரகசியம் – தீராக் கற்றலில் முடிவாக திருமதி பக்கங்கள் கோமதியக்காவின் முதுமையிலும் இன்பம் காணலாம் என்ற பகிர்வை வாசித்து பாருங்க.
ருக்மணி அம்மா தன் மகளுடன் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட
குழந்தைகளை வைத்துக் கொண்டு
செய்யக் கூடாத அனுபவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
குறையொன்றுமில்லை லஷ்மிமா –ATM - ல் பென்ஷன் எடுக்கும் பொழுது ஏறபட்ட அனுபவத்தைக் குறிப்பிடுகிறார்.
அவங்களோட எதார்த்தமான எழுத்து நடை எல்லோருக்குமே பிடித்து போகும். ஆனால் லஷ்மீமாவை இப்ப எங்கேயுமே பார்க்க முடியவில்லைன்னு கொஞ்சம் மனசு சங்கடமாக இருக்கு.
முத்துச்சிதறலில் மனோ அக்காவின் முதுமையைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் பகிர்வு , இன்றைய இளம் பெண்களுக்கு.
சகோ.அப்துல் காதரோட க..ஜா..னா என்ற தலைப்பில் உள்ள அனுபவம் மிகவும் சுவாரசியம். நாட்டாமைக்கே நாட்டாமையா ? !
வெங்கட் நாகராஜ் சொல்லும் குறுந்தாடி பற்றிய சுவையான பகிர்வு.
வெங்கட் நாகராஜ் சொல்லும் குறுந்தாடி பற்றிய சுவையான பகிர்வு.
சகோ.ஜெய்லானி ஒரு காலத்தில் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர், இப்ப சுத்தமாக ஆளையே காணோம்.அவருடைய விழிப்புணர்வு பகிர்வு படிக்க ஆவலா?
நான் வாழும் உலகம் ரியாஸ் மனிதர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என்பதை தன் அனுபவத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன அவசரம் ராஜி ? என்று கல்லூரி தோழியுடனான அனுபவத்தை கூறுவதை கேளுங்கள், முடிவில் மனது மிகவும் கனத்து விட்டது..
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது ? என்கிறார்,அமைதிச்சாரல் சாந்தி. இந்த அனுபவம் யாருக்காவது பயன்பட்டால் சந்தோஷம்னு சொல்றாங்க.
அமெரிக்க அனுபவங்கள் - பிருந்தாவனம் விட்டில் பூச்சிகள்.
வாசித்து பாருங்க,
வேலைக்காரியை தேடி ஒரு பயணம். - ஆமினா குட்டிச்சுவர்க்கத்தில் பகிர்கிறார்.
//அடப்பாவிகளா என்
மாமியார்கிட்ட கூட கெட்ட பேரு வாங்கினதே இல்ல. ஆனா வந்த ஒரே நாள்ல என்னைய
கொடுமைக்காரின்னு சொல்லிட்டாங்களேன்னு அழுக்காச்சி தான் போங்க.//
மிடில் கிளாஸ் மாதவி டீன் ஏஜ் பருவம் பற்றி என்ன கூறுகிறார்?
டீன் ஏஜ் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு விழிப்புணர்வினை பகிர்ந்திருக்கிறார்.
டீன் ஏஜ் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு விழிப்புணர்வினை பகிர்ந்திருக்கிறார்.
ஏ புள்ள சித்ரா...... தலைப்பை
பார்த்தா விவகாரமான .....சாரி...... விவரமான மேட்டர் ஆகத் தெரியுது. பாத்து பதில் சொல்லு...... உன் புத்திசாலித்தனத்துக்கு வந்த
சோதனையோ, இல்லை, உன் அறியாமைக்கு வந்த வேதனையோ? தெரியல. ... சொல்றதை
சொல்லிப்புட்டேன், ஆமா!
திடங்கொண்டு போராடுவில் - திருநெல்வேலி அல்வா பற்றி - சீனு
திடங்கொண்டு போராடுவில் - திருநெல்வேலி அல்வா பற்றி - சீனு
//ஒருவேளை நழுவாமல் கையில் சிக்கிய அல்வாவை எடுத்த வேகத்தில்வாயில் வைத்தாலும் அவ்வளவு தான், அல்வாவின் சூடு மொத்தமாக நாக்கைப் பதம்பார்த்துவிடும். ஐந்து நிமிடத்திற்கு வாயைத் திறந்து காத்தாட நின்றால் மட்டுமே சூடுகுறையும்.//
என் பக்கம் - அப்பாவின் அட்வைஸ்
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் அதிராவின் அப்பாவின் அட்வைஸ் பற்றி அனுபவத்தில் சுவாரசியமாக குறிப்பிடுவதைக் கேளுங்கள். இவருடைய ஒவ்வொரு பகிர்வும் அழகோ அழகு.
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் அதிராவின் அப்பாவின் அட்வைஸ் பற்றி அனுபவத்தில் சுவாரசியமாக குறிப்பிடுவதைக் கேளுங்கள். இவருடைய ஒவ்வொரு பகிர்வும் அழகோ அழகு.
இமாவின் உலகத்தில் - மனதை தொட்ட மனதோடு ஒரு மழைக்காலம் பகிர்வு.
முன்பே தொலைபேசியூடாகக் கேட்டிருக்கிறோம், எப்போதும் 'நாட்டுக்குச் சமாதானம் தாரும்' அல்லது 'எனக்குச் சமாதானத்தைத் தாரும்,' என்று சத்தமாகப் பிரார்த்தித்தபடியே இருப்பார். இந்த பிரார்த்தனை பலித்ததா?
முன்பே தொலைபேசியூடாகக் கேட்டிருக்கிறோம், எப்போதும் 'நாட்டுக்குச் சமாதானம் தாரும்' அல்லது 'எனக்குச் சமாதானத்தைத் தாரும்,' என்று சத்தமாகப் பிரார்த்தித்தபடியே இருப்பார். இந்த பிரார்த்தனை பலித்ததா?
நாலும் தெரிந்த 4 பெண்கள் பக்கத்தில் அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி என்றும் இன்னும் பல அனுபவமுள்ள சுவாரஸ்யமான தொடர், டிப்ஸ்,விழிப்புணர்வு என்று அசத்திகிட்டு இருக்காங்க.
வீட்டுத்தோட்டம் ரொம்ப ஈசி தான் என்று தோழி மனதோடு மட்டும் கௌசல்யா பகிர்ந்திருக்கிறார்.
அனுபவம் - பகுதி -1
அனுபவம் - பகுதி - 2
அனுபவம் - பகுதி -1
அனுபவம் - பகுதி - 2
இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பு – நம்ம கவியோட கற்பனை அனுபவம் இரண்டு பகுதிகளாக..சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்.
செந்தமிழ்செல்வி அக்கா தன் மலர்வனத்தில் – திருப்தியாக முடித்த வேலை.
ஒப்புக் கொண்ட வேலையை எத்தனை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் என்று பாருங்க, பயன் தரும் பகிர்வு.
உறவுகள் தொடரும் வழி - வல்லி சிம்ஹன் அம்மாவின் சுவாரஸ்யமான பகிர்வு.பெண்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு பற்றி சுமன் தெரிவிக்கிறார்.
மாதவிடாய் நோய் - மருத்துவம் பேசுகிறது - விழிப்புணர்வு பகிர்வு. Premenstrual Syndrome அறிகுறிகள்,தவிர்க்க என்ன செய்யலாம்.
பெண்களை பாதிக்கும் மார்பக புற்று நோய் பற்றி ஆயிஷா ஃபரூக்கின் விழிப்புண்ரவு பகிர்வு.
பெண்களுக்கு இதயநோய் பற்றி திருவரங்கத்திலிருந்து பகிர்கிறார்.
பெண்கள் கர்ப்பப்பை கட்டிகள் பற்றிய அருணா செல்வத்தின் விழிப்புணர்வு பகிர்வு.
பெண்களை பாதிக்கும் மார்பக புற்று நோய் பற்றி ஆயிஷா ஃபரூக்கின் விழிப்புண்ரவு பகிர்வு.
பெண்களுக்கு இதயநோய் பற்றி திருவரங்கத்திலிருந்து பகிர்கிறார்.
பெண்கள் கர்ப்பப்பை கட்டிகள் பற்றிய அருணா செல்வத்தின் விழிப்புணர்வு பகிர்வு.
தேனம்மை லஷ்மணன் - விழிப்புணர்வு பகிர்வு - பெண்களுக்கு ஏற்படும் நீர்க் கசிவு நோயும் நிவாரணமும் பற்றி குறிப்பிடுகிறார்.
இன்றைய அனுபவம் மற்றும் விழிப்புணர்வு பகிர்வுகள் அனைத்தும் பயன் உள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் நாளை அருமையான பதிவர்களோடு சந்திக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
எனது தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி... மற்ற தளங்களுக்கு சென்று விட்டு பிறகு வருகிறேன்...
ReplyDeleteவாழ்க்கை முழுசும் அனுபவங்கள்.
ReplyDeleteஅனுபவங்களே வாழ்க்கை!!!
அருமையான தொகுப்பு.
அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.
அனுபவ மலரில் என் பதிவு இடம் பெற்றது மகிழ்ச்சி , நன்றிஆசியா.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் விரைந்து வந்து தகவல் தெரிவித்தார் அவருக்கும் மிகவும் நன்றி.
தேனீபோல் சுறுசுறுப்பாய் பதிவுகளை படிப்பதும் பாராட்டுவதும், வலைச்சரத்தில் குறிப்பிட படும் பதிவர்வர்களுக்கு முந்தி சென்று தகவல்கள் சொல்வதற்கும் தனியாக திண்டுக்கல் தனபாலன் அவர்களை மிகவும் பாராட்ட வேண்டும்.
இன்று இங்கு இடம் பெற்றுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
செந்தமிழ் செல்வி அவர்களின் தளமும் S.சுமன் அவர்களின் தளமும் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteவிழிப்புணர்வு பகிர்வுகள், உடல்நலம் பற்றிய பகிர்வுகள் அனைத்தையும் தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் பல... நன்றி...
சிலர் தொடர்ந்து பகிர்ந்திட வேண்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
Thank you very much, akka! :-)
ReplyDeleteஇவ்வளவு தெளிவாக அலசி என் பதிவையும் படித்துப் பாராட்டிய பொறுமைக்கு நன்றி.
ReplyDeleteதிரு தன்பாலன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.தகவலுக்கு மிகவும் நன்றி தனபாலன்.
மற்ற எழுத்தாளர்கள் பதிவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.அனைவரும்
எழுத்தில் முதிர்ச்சி பெற்றவர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.
நன்றி ஆசியா உமர்.
எனது வலைத்தளத்தை இன்றைய அனுபவ மலரில் அறிமுகம் செய்து வைத்திருப்பதற்கு இனிய நன்றி ஆசியா!! அறிமுகம் பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎன்னையும் நியாபகம் வச்சு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆசியா :-)
ReplyDeleteவலைச்சர பொறுப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
அருமையான அறீமுகங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆஹா! இன்றைய அனுபவ ம்லர் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteஎத்தனை எத்தனைப் பதிவர்கள்!!
ஆரம்பம் முதல் நிறைவு முடிய அனைவருமே பெரும்பாலும் எனக்குத்தெரிந்தவர்களாகவே !
இன்று அடையாளம் காட்டி சிறப்பித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
தொகுத்தளித்துள்ள தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள்.
தனபாலன் சார் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நானும் சென்று பகிர்ந்ததை நன்றியுடன் தெரிவிக்க வேண்டும் என்று வந்தபொழுது அந்தப் பொறுப்பை நீங்கள் செய்து உதவுவதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.நலம்,வளம் பெற்று நீடுழி வாழ்க சகோ.
ReplyDeleteஎனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteவிபரத்தைத் தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி
வணக்கம் ஆசியா.
ReplyDeleteஇன்றும் எனது 'திருவரங்கத்திலிருந்து' தளத்திலிருந்து ஒரு பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி!
இன்றைக்கு என்னுடைய வலைப்பதிவு தோழிகள் திருமதி கோமதி, திருமதி ருக்மிணி,திருமதி லக்ஷ்மி, திருமதி மனோ, திருமதி வல்லி, திருமதி ஆயிஷா ஃபாரூக், திருமதி அருணா செல்வம், திருமதி தேனம்மை லக்ஷ்மணன் ஆகியோருக்கும் நல் வாழ்த்துக்கள்!
நான்குபெண்கள் தளத்திலிருந்து நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் தொடரையும் எழுதுபவள் நான் என்பதால் அந்த அறிமுகத்திற்கும் நன்றி!
நேற்று எனது ஒரு தளம், இன்று இரண்டு தளம் என்று ஹாட்ரிக் அறிமுகம் செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்ததற்கு என்ன கைம்மாறு என்று தெரியவில்லை.
நன்றி ஆசியா!
நிறைய படிப்பீங்க போல! அதனால்தான் இத்தனை தளங்களை அறிமுகப்படுத்த முடிகிறது.
வாழ்க, வளர்க!
துளசி கோபால் மேம் வருகைக்கு மிக்க நன்றி.மிகச் சரியாகச் சொன்னீங்க.
ReplyDeleteகோமதியக்கா மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்,உங்க பகிர்வுகள் அனைத்துமே அருமை.
ReplyDeleteசித்ரா வாங்க, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.
ReplyDeleteமிகமிக அருமை ஆசியா!
ReplyDeleteஇன்றைய அறிமுகப்பதிவர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
வல்லிமா, வாங்க..கருத்திற்கும் வாழ்த்திற்கும்,பாராட்டிற்கும் மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி.
ReplyDeleteமனோ அக்கா வாங்க,உங்களிடம் தொலை பேச வேண்டும் என்று நினைத்தே நாட்களும் நேரமும் கழிந்துகொண்டிருக்கிறது.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteஆமினா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.
ReplyDeleteரமணி சார் வாங்க, கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteவை.கோ அய்யா வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி. உங்க சுடிதார் வாங்கிய அனுபவத்தைப் பகிர நினைத்திருந்தேன்,விட்டுப் போனது.உங்க ப்ளாக்கில் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கிறதே!
ReplyDeleteமிடில் கிளாஸ் மாதவி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteஆஹா ! ரஞ்சனிமா,அப்படியா! மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். கருத்திற்கும் வருகைக்கும் மீண்டும் நன்றி.
ReplyDeleteஇளமதி வாங்க,மிக்க நன்றி.வாழ்த்திற்கு மனமார்ந்த மகிழ்ச்சி.நன்றி.
ReplyDeleteஎனது வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியது மிகமிக சந்தோஷம் ஆசியா.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
எனக்கு விபரத்தைத்தெரிவித்த ஆசியா,தனபாலன் சார் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஆசியா..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஆசியா.
ReplyDeleteநன்றி ரஞ்சனி மேடம்.
நன்றி திண்டுக்கல் தனபாலன் மற்றும் சீனா சார்.
சித்ரா சாலமனுக்கு அடுத்தபடியா அதிக ப்லாகுகளை விசிட் செய்து ஃப்ளையிங் கமெண்ட் போடும் தனபாலன் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி..:) மேலும் நமக்கும் வந்து அது பற்றிய தகவல் கொடுக்கும் அவரின் நேயத்துக்கும் நன்றி. :)
Thank you for mentioning my article in valaisaram
ReplyDeleteI felt so happy
அறிமுகத்திற்கு நன்றிப்பா..
ReplyDeleteப்ரியசகி மனமார்ந்த நன்றி,மகிழ்ச்சி.
ReplyDeleteஅமைதிச்சாரல் கருத்திற்கு மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.
தேனக்கா, கவிதைகள்,கதைகள்,சமையல் என்று அசத்தி வரும் உங்கள் பகிர்களில் நான் எதைப் பகிர?
ReplyDeleteமீண்டும் மனமார்ந்த நன்றியக்கா.
கோமா, வருகைக்கு மிக்க நன்றி.பகிர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
ReplyDeleteஅமுதா வாங்க,மனமார்ந்த நன்றி.
//Asiya Omar said...
ReplyDeleteவை.கோ ஐயா வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.
உங்க சுடிதார் வாங்கிய அனுபவத்தைப் பகிர நினைத்திருந்தேன்,விட்டுப் போனது.
உங்க ப்ளாக்கில் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கிறதே!//
ஆஹா, மிக்க மகிழ்ச்சி.
ஆம், நான் சுடிதார் வாங்கப்போனபோது என்னுடன் ஏராளமானவர்கள், நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு, வருகை தந்து, கருத்துச்சொல்லி மகிழ்வித்திருந்தார்கள்.
http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html ”சுடிதார் வாங்கப்போறேன்....”
அதைத் தாங்கள் இங்கு நினைவூட்டியுள்ளதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மிக்க நன்றி, மேடம்.
அனுபவ மலர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபலரையும் அறிமுகம் செய்துள்ளீர்கள். அனைத்தும் சிறப்பான அறிமுகங்கள்.
ஆசியா என்னையும் ஞாபகம் வச்சு அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. இதற்காகவே மீண்டும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன் :). மிக்க நன்றி!
ReplyDeleteஎத்தனை தளங்கள் !!
ReplyDeleteஎத்தனை எத்தனை அனுபவங்கள் !!
அத்தனை பதிவர்களையும் இங்கே ஒரே இடத்தில் ஒன்றாக சந்தித்ததை போன்று அவ்ளோ சந்தோசம் எனக்கு !!
பதிவுலகம் வரமுடியவில்லையே என்ற கவலை இன்று தீர்ந்தது போல இருக்கிறது, வேலை ஜாஸ்தி இருந்தாலும் தொடர்ந்து எழுதணும் என நினைக்க வச்சிடிங்க தோழி. என் அன்பான நன்றிகள் ஆசியா.
இங்கே அறிமுகமான எல்லோருக்கும் என் பாராட்டுகள்.
@தனபாலன் சாரின் பங்களிப்பு பதிவுலகத்துக்கு பெரிய பலம். நன்றிகள் சார்.
ஆவ்வ்வ்வ் ஆசியா... அன்று வந்ததுக்கு இன்றுதான் வருகிறேன்ன் மன்னிச்சிடுங்க.
ReplyDeleteஒரே மூச்சில் எத்தனை தளங்களை அறிமுகம் செய்துவிட்டிருக்கிறீங்க... காணாமல் போனோரை எல்லாம் தேடித் தேடி அறிமுகம் செய்தமை மனதுக்கு மகிழ்ச்சியைத் தருது....
அறிமுகப் படுத்தியிருக்கும் வலைய்லக ஓனர்கள் அனைவருக்கும்.. இனிய வாழ்த்துக்கள்... மேன்மேலும் எல்லோரும் தொடர்ந்து எழுத இது ஒரு ஊக்குவிப்பாக இருக்கட்டும்.
தனபாலன் அவர்கள், கோபு அண்ணன் , இளமதி அனைவருக்கும் என் நன்றிகள்...
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மியாவும் நன்றிகள் ஆசியா.
ReplyDeleteஇனிய அனுபவங்கள். தொடருங்க
ReplyDeleteமிக்க நன்றி சகோ... திருநெல்வேலி அல்வா பகிர்ந்தளித்த உங்களுக்கு...
ReplyDeleteஎன்னை அறிமுகபடுத்தியமைக்கு முதல் நன்றி
அறிமுகத்தை அறியத்தந்த டி.டி க்கு இரண்டாம் நன்றி
அறிமுகமான சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் சகோ...
ReplyDeleteலக்ஷ்மி அம்மாவிடம் கடந்த மாதம் பேசினேன்.. நல்லா இருக்காங்க... பதிவு எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை என சொன்னார்கள்...
பதிவில் குறிப்பிடப்பட்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள்...
என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கும், தெரிவித்ததற்கும் மிக்க நன்றி அக்கா.
ReplyDeleteதி. தனபாலன், உங்களுக்கும் நன்றிகள் பல.
அக்கா, அமுதாவின் பதிவு சுட்டி சரியாக இல்லை, மாற்றிவிடுங்கள்:
அக்கம் பக்கம் அமுதா கிருஷ்ணா –
என்ன அவசரம் ராஜி ?
வணக்கம்
ReplyDeleteஆசியா உமர்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ்வாசி பிரகாஷ் கருத்திற்கும்,வாழ்த்திற்கும்,தகவலுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஹுசைனம்மா கருத்திற்கும்,வருகைக்கும் நன்றி.அமுதா கிருஷ்ணா பகிர்வை சரி செய்து விட்டேன்,சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
ஆசியாக்கா, அழகழகான மலர்களைச் சரமாகத் தொடுத்து தரீங்க தினமும்! பாராட்டுக்கள்! :)
ReplyDelete
ReplyDeleteவை.கோபு ஐயா லின்க் பகிர்வுக்கு மகிழ்ச்சி.தொடரும் கருத்திற்கு நன்றி.
மாதேவி தொடர் வருகைக்கு மிக்க நன்றி
கவிசிவா வாங்க, மிக்க நன்றி, வலைப்பூவில் தொடர்ந்து எழுதுங்க.
கௌசல்யா வாங்க,நீண்ட நாட்கள் கழித்துப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteகருத்திற்கு மனமார்ந்த நன்றி.
அதிரா,வாங்க தோழி,சமைத்து அசத்தலாம் பெயரே நீங்க தந்தது தானே! மனமார்ந்த நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஸ்டார்ஜன் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteவாங்க ரூபன்,தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.மகிழ்ச்சி.
சகோ.சீனு வருகைக்கும்,வாழ்த்திற்கும்,
ReplyDeleteமனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.
அடடா, மகி இப்பத்தானே உங்க கருத்தை பார்க்கிறேன்,வருகைக்கு அளவில்லா மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றியும் கூட.
ReplyDeleteஅருமையாய் தொடுத்த அனுபவமலர்களுக்கு
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்..
Thank you Akka..
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி மேம் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteரியாஸ் வாங்க,வருகைக்கு மிக்க நன்றி.
Nice introductions. Nalla pathuvu.
ReplyDeleteவிஜி வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteஓவ்வொருவருவரும் எழுதியுள்ள அனுப்பவ பயனுள்ள பகிர்வையும் , பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மிகவும் தேவையான சுட்டிகளை மிகவும் சிரத்தையுடன் அழகாக கோர்த்து இருக்கீங்க ஆசியா.
ReplyDeleteவாழ்த்துக்கள்
இங்கு அறிமுக படுத்தி உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
அருமையான தொகுப்புகள்.மிகவும் சிரத்தை எடுத்து அனுபவமலர்களை தொகுத்துள்ளீர்கள்.உங்கள் உழைப்பு வரிகளில் தெரிகிறது தோழி.
ReplyDeleteஜலீலா வாங்க,
ReplyDeleteவாழ்த்திற்கும்,ஊக்கம் தரும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.
நன்றி ஸாதிகா,நீங்கள் எல்லாம் தான் எனக்கு உதாரணம் ,நீங்கள் வலைச்சரத்தில் செய்த ஆசிரியப்பணி அத்தனை நேர்த்தியான பணி,நான் கண்டு மிகவும் வியந்த ஒன்று.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ஸாதிகா.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி ஆசியா.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வலைப்பூக்களையும் பார்வையிட வேண்டும். குறித்து வைத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இமா நலமா?வாங்க,கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஅன்புள்ள ஆசியா,
ReplyDeleteஎனது வலைபதிவு தோழிகள் லிஸ்டில் திருமதி ஹூசைனம்மா, திருமதி புதுகைத் தென்றல், திருமதி அமைதிச்சாரல், திருமதி ஆமீனா இவர்களை விட்டுவிட்டேன். மன்னிக்கவும் - தோழிகளும், நீங்களும்.
அதேபோல திரு வெங்கட், திரு தனபாலன், திரு சீனு இவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க மறந்து போனேன். இன்னொருமுறை இவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
ரஞ்சனி மேம்,உங்க வலைப்பூ நட்பு வட்டம் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.வருகைக்கு மகிழ்ச்சி.வாழ்த்திற்கு நன்றிமா.
ReplyDelete//எனது வலைபதிவு தோழிகள் லிஸ்டில் திருமதி ஹூசைனம்மா,//
ReplyDeleteமேடம், மிக்க நன்றி. :-)
நண்பர் சொல்லி,, லேட்டா வந்து இப்ப தான் பார்க்கிறேன். அருமையா தொகுத்திருக்கீங்க, அதில் என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி மேடம் என்று சொன்னா சரியா வராது சகோ.:)
ReplyDelete