Thursday, July 25, 2013

சமையல் கலை முத்துக்களின் அணிவகுப்பு இன்று (3 ம் நாள் )


வணக்கம் எனது அன்புக்கினிய உறவுகளே .இந்த ஆக்கத்தினை வெளியிடும்போது மனதிற்கு எவ்வளவு கட்டுப்பாடு தேவை என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .எல்லாம் உங்களுக்காகத் தான் .என் வாழ்க்கையையே ஓர் அர்ப்பணிப்போடு தான் வைத்துக் கொண்டு இந்த ஆக்கத்தினை எழுதுகின்றேன் .இது பொய்யென்றால் இந்தத் தளத்திற்குப் போய் வாருங்கள் http://khanamasala.blogspot.ch/ .இப்போது சொல்லுங்கள் குண்டானாலும் பறுவாயில்லை urmi அம்மா சமையலை ருசி பார்க்காமல் மனம் ஓயுமா ?.....:) .ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா இங்கேயும் அதே வாசனை http://samayalsuvaikal.blogspot.ch/ மூக்கைத் துளைக்குதே ம்ம்ம்ம் ......சமையல் சுவைகள் கலக்குறாங்கப்பா !! அடுத்த தண்டனை என்ன ?இறால் கிரேவியாம் முடியாது முடியவே முடியாது நீங்க வேணும் என்றால் போய் பாருங்கள் http://packya-kitchen.blogspot.ch/ பாக்கியாவின் சமையல் பக்குவத்தை .

         சரி கொஞ்சம் துப்பரவாக்குவோமா ?...எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பிடுகின்றமோ அவ்வளவுக்கு அவ்வளவு கொஞ்சம் உடலை வளைத்து வேலையும் செய்ய வேண்டும் .அப்போதுதான் உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் இருக்கும் .சமைத்த சாப்பாட்டுப் பொருட்களில் இருந்து எஞ்சும் கழிவுப் பொருட்களை ,எமது வீட்டில் சேரும் கஞ்சல் குப்பைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று மிக அழகான தகவலை இங்கே பாருங்கள் 
 http://kanavuillam.blogspot.ch/2013/01/waste-management-1.html கனவு இல்லம் கொடுத்த தகவலைப் பார்த்தாச்சா ?....கொஞ்சம் பொறுங்கப்பா நானும் மனுசி தானே எனக்கும் நாவூறும் .சிவசிவா ......இப்போது யாருடைய வீட்டிற்குப் போகின்றோம் .... .

என் சமையல் அறையில் நீ உப்பா சக்கரையா ?..:).http://geethaachalrecipe.blogspot.ch/
என்ன சொல்லுது கீதா ஆச்சலுடைய சமையல் ?.......சரி சரி அங்கேயே நில்லாமல் ஓடி வாருங்கள் சமையல் எக்ஸ்ப்ரஸ் வந்தாச்சு http://samayalexpress.blogspot.ch/ வித விதமா சமைச்சுப் போட்டால் மனம் ஏங்காமல் என்ன செய்யும் ?....அதிலும் இது எங்கள் தோழி ஆமினா வின் வீடு :)  
எவ்வளவு தான் மனத்தைக் கட்டுப்பாடாக வைத்துக் கொண்டாலும் தெரிந்த நண்பர்கள் வீட்டுக்கு போகும் போது வரும் சமையல் வாசனையை அடக்கிக் கொள்ள முடியுமா ?....http://sinnutasty.blogspot.ch/ இது நம்ம மாதேவி அக்காவின் வீடு வெக்கத்தை விட்டு வாங்கிச் சாப்பிடலாம் :)) .அங்க இங்க எங்க போனாலும் நல்ல சாப்பாடு என்றால் வாயூறுவதைப் பாருங்கள் ...!! இது எங்கள் விஜி பார்த்தி அவர்கள் வீட்டுச் சமையல் http://vijiparthi.blogspot.ch/ மோர்க்குழம்பு வாசனை என்ன சொல்லுது ?..........இது மகி யின் சமையல் அறை ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் இங்கே போங்கள்http://mahiarunskitchen.blogspot.ch/ தமிழில் வேண்டும் என்றால் இங்கே போங்கள் http://mahikitchen.blogspot.ch/ மொத்தத்தில் இங்கு சமையல் மட்டும் அல்ல இதர குறிப்புகளும் உள்ளது .கூடவே இந்தத் தளத்தையும் பாருங்கள் .இது எங்கள் லக்ஸ்மி அம்மாவின் தளம்.குறை ஒன்றும் இல்லை  .மிகவும் சுவையான உணவுகளைத் தயாரிக்கும் முறையை எங்களுக்குத் தந்து சென்றுள்ளார்http://echumi.blogspot.ch/ .அது சரி இதுவரைக்கும் சமைத்த உணவுகளை உண்டு களித்த உங்களுக்கு பழங்களைப் பற்றியும் ,மூலிகை வகைகளின் பயன்பாடுகள் பற்றியும் நாலு நல்லது கெட்டது தெரிய வேண்டாமா ?....அப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இருக்கவே இருக்கு நிறையத்  தளங்கள் தொடர்ந்தும் வாருங்கள் இன்று போல் நாளையும் அனுபவித்து மகிழ்வோம் .
                                மிக்க நன்றி உறவுகளே மீண்டும் சந்திப்போம் .

35 comments:

  1. பதிவர்களைத் தொகுத்து அறிமுகம் செய்யும் நேர்த்தி
    மனம் கவர்கிறது.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்..... பாராட்டுகள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தோழி... உங்கள் தொகுப்பு எம்மை ஈர்த்து தொடரவைக்கிறது...

    மிக மிக அருமை!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    த ம.2

    ReplyDelete
  5. வணக்கம்
    இன்று சமயல் வலைப் பக்கங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி
    தொடருகிறேன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சமையல் கலை முத்துக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்கள் தொகுப்பு அருமை.

    ReplyDelete
  7. சமையல் முத்துக்களை வலைச்சரத்தில் கோர்த்து நாவில் நீர் ஊற வைத்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
  8. சமையல் கலைஞர்களில் சிலரின் வலைகளைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்துள்ள முத்துமாலைக்குப் பாராட்டுக்க்ள்.

    அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. அருமையாக கோர்த்து நிறைவாக தந்துள்ளீர்கள்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    சின்னுரேஸ்ரி அறிமுகத்துக்கு மகிழ்ச்சியும் மிக்க நன்றியும்.

    ReplyDelete
  11. சமயலறை ராணிகளுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  12. பெண் பதிவர்களுக்கு பிடித்த தளங்கள் அறிமுகம் சிறப்பு தோழி.

    ReplyDelete
  13. மூன்றாம் நாள் சமையலை பக்குவமாய் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள் அம்மா....

    சொல்ல மறந்துட்டேன்... அருமையான சமையல் குறிப்புக்களை வழங்கி சிறப்பிக்கும் ஒரு பானை சோற்றுக்கு சில சோறுகள் பதமாய் வந்திருக்கின்றன.... அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. பயனுள்ள சமையல் முத்துக்கள்..அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    எனது ஆங்கில வலைப்பூவையும் சேர்த்து அறிமுகப்படுத்தி ஆச்சர்யத்தில் ஆழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! :)

    ReplyDelete
  15. மிக்க நன்றி ஐயா முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  16. மிக்க நன்றி சகோ கூடல் பாலா .வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  17. மிக்க நன்றி சகோ தனி மரம் .வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  18. மிக்க நன்றி தோழி வளர்மதி .வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  19. மிக்க நன்றி சகோ ரூபன் .

    ReplyDelete
  20. மிக்க தோழி கோமதி .வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  21. மிக்க சகோ சுரேஸ் .வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  22. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

    ReplyDelete
  23. மிக்க நன்றி சகோ தனபால் . வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  24. மிக்க நன்றி தோழி மாதேவி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  25. மிக்க நன்றி தோழி ஹேமா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  26. மிக்க நன்றி தோழி சசி கலா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  27. மிக்க நன்றி சகோ குமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  28. மிக்க நன்றி தோழி மகி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  29. சமையல் வாசம் கமகம.....!

    ReplyDelete
  30. ருசியான சமையல் முத்துகள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  31. சுவையான அறிமுகம்!

    முதல் படம் - கொஞ்சம் டிங்கரிங் பார்த்து இருக்கீங்க போல :)

    ReplyDelete
  32. வணக்கம் தாமதத்திற்கு வருந்துகிறேன். இப்பொழுது தான் பார்த்தேன் . மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது . மிக்க நன்றி.....

    பயனுள்ள சமையல் முத்துக்கள்..அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்தி
    ஆச்சர்யத்தில் ஆழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  33. வணக்கம் தாமதத்திற்கு வருந்துகிறேன். இப்பொழுது தான் பார்த்தேன் . மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது . மிக்க நன்றி.....

    பயனுள்ள சமையல் முத்துக்கள்..அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்தி
    ஆச்சர்யத்தில் ஆழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....

    ReplyDelete
  34. அனைத்து சமையல் ராணிகளுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete