இன்பக் கவிதை வடிப்பதனாலே
எத்தனை எத்தனை ஆர்வமிங்கே
அத்தனை இனிய உறவுகளையும்
அறிமுகம் செய்திடவா முடியுமிங்கே ....!!!!
(1) ஆதிரா முல்லை !
இதமாய் கவிதை வரிகளினால்
எம் இதயம் மகிழப் பொருளுரைப்பார்
அழகாய் கவிதை வடிக்கும் இனிய
ஆதிரா என்னும் அழகிய முல்லை ...!!
துயரம் தழுவிய போதினிலே மனம்
துவண்டு வந்த வரிகளைப் பார் .......!!!!
(மரபுக் கவிதையாலும் எம் மனங்களில் நிற்கிறார் ...!! )
ஆதிரா பக்கங்கள் (ஆதிரா முல்லை )
http://tamizhnodigal.blogspot.ch/
குட்டைச் சட்டை
உன் கழுத்தோடு
ராட்டினமாடும்
ரெட்டை ஜடை
உன் ஆள்காட்டி
விரலின் வழியே
பார்த்த அந்த
மேகக்குதிரை
அடிவானத்தில்
அரவணைத்துக் கொண்டே
பறந்துபோன அந்திநேர
மைனாக் குஞ்சுகள் -
எத்தனை எத்தனை ஆர்வமிங்கே
அத்தனை இனிய உறவுகளையும்
அறிமுகம் செய்திடவா முடியுமிங்கே ....!!!!
(1) ஆதிரா முல்லை !
இதமாய் கவிதை வரிகளினால்
எம் இதயம் மகிழப் பொருளுரைப்பார்
அழகாய் கவிதை வடிக்கும் இனிய
ஆதிரா என்னும் அழகிய முல்லை ...!!
துயரம் தழுவிய போதினிலே மனம்
துவண்டு வந்த வரிகளைப் பார் .......!!!!
(மரபுக் கவிதையாலும் எம் மனங்களில் நிற்கிறார் ...!! )
ஆதிரா பக்கங்கள் (ஆதிரா முல்லை )
http://tamizhnodigal.blogspot.ch/
சாய்ந்ததோ தளிரின் வாழை
சரிந்ததோ இளைய ஈழம்
ஓய்ந்ததோ உயிரின் ஓசை
ஒடிந்ததோ ஆலின் விழுது
ஆய்ந்ததோ தந்தை வீரம்
அகத்தினில் உளதோ என்று
பாய்ந்ததோ குண்டு மாரி
பாலச் சந்திரன் மார்பில்
(2)
சொல்லில் பொருளைச் சுவைமிகவே
அள்ளிக் கொடுக்கும் கவிஞன் இவன்
நெல்லுக்கிறைத்த நீர் தானே இனியும்
நெருங்கிக் கொஞ்சம் வாழ்துரைப்போம் .
செய்தாலி (செய்தாலி)
நடுநிசிவரை
அறையை தலைகீழ் கமிழ்த்தி உதறி
விளக்கணைத்த பிந்திய
இரவில் எப்போதோ
உறங்கிப் போயிருந்தேன் சலனச் சுமையோடு
தலைமாட்டில் இருந்து
நகைத்தபடி யாரோ சிலர்
விருட்டேழுந்தேன் நேரம் தவறி இருந்தது
மீண்டும் ஒரு முயற்ச்சியாய்
குடியிருப்பச் சுற்றி வட்டமிட்டது விழியும் மனமும்
(3)
ஒரு கவிதையிலேயே உள்ளம் துலைந்தது
இது கவிதை என உணர்ந்தது மனம்
வரிகளிலே உணர்சிகளையும் கொஞ்சம்
வகைப்படுத்தித் தான் காட்டுகின்றார் ...!!
கரைசேரா அலைகள் (அரசன் சே )
வெளிநாட்டில் இருந்த என்னை அழைத்து
நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்
உன் அப்பா
உன்னைத் தேடிக் கண்கள்
கதவிடுக்கையில் சிக்கிக்கொண்டன
பின்புறம் நின்றுகொண்டிருந்தாய்
பிறகு
(4)
சின்னச் சின்ன வரியெடுதுக்
கவிதை புனைகிறார் மனதில்
இன்னும் இன்னும் வேண்டும் என்றே
உணர வைக்கின்றார் ..........!!!!!
அனாதைக் காதலன் கவிதைகள் (பிரபாகரன் சரேவஞ்சி )
எது பூ ?...எது நீ ?.......
உன் எழில் இப் பிரபஞ்சத்தின்
அழகென்று சொல்லிக்கொண்டிருக்கையில்
கேட்டுக் கொண்டிருந்த பிரபஞ்சம்
கள்ளத் தனமாகத் தன்னழகைக்
கூட்டிக் கொண்டே போனது ......!!!!
(5)
அழகான வார்த்தைக் தொகுப்பினால்
கவிதைச் சரங்களைத் தொடுத்து வழங்கும்
திறன் படைத்தவர் -இவரின் வளர்ச்சிக்குத்
தோள்கொடுக்க வாருங்கள் உறவுகளே ....
தமிழ் கவிதைகள் (பாஸ்கர் .S)
எறும்புக் கூட்டம்
மெல்லென நடை பயிலும்
பாவையின் பின் நடக்கும்
காளையின் நடைக்கு ஒப்ப
மேவிய ஒலியெழுப்பி முன் செல்லும்
வண்டி தொட்டு .......
(6)
மறக்க முடியாத நினைவுகளை
மனம்போல எடுத்துரைத்துக்
கவிதை இங்கே புனையும் அழகு
மிக அழகாகத்தான் இருக்குறது ...!!
காக்கைச் சிறகினிலே (அகல் )
பட்டாம் பூச்சிகள் நிறைந்த
உனது பட்டுப்பாவாடை குட்டைச் சட்டை
உன் கழுத்தோடு
ராட்டினமாடும்
ரெட்டை ஜடை
உன் ஆள்காட்டி
விரலின் வழியே
பார்த்த அந்த
மேகக்குதிரை
அடிவானத்தில்
அரவணைத்துக் கொண்டே
பறந்துபோன அந்திநேர
மைனாக் குஞ்சுகள் -
(7)
கடற்கரையின்றிக் கவிதைகள் ஏது
கவிதைகள் மட்டுமா தருகுது பாரு என
இளையவன் எழுதிய கவிதையைக் கண்டு
மனமது மகிழ வாழ்த்துங்கள் இங்கே ......
சிதறல்கள் (விஜய் ஆனந்த்.S )
கடற்கரை காவியம் படைக்க
கவின்மிகு இடம் - என
கதை எழுதுவோர் உரைப்பர்...
ஆம்,
கடற்கரை காவியம் படைக்க மட்டுமல்ல
கலங்கரை விளக்காய்
கலங்கா மனிதரை -கருவாக்கும்
புனித மடி!
(8)
அழகிய கவிதை வரிகளைப் புனையும்
புதியவன் வருகையைப் புரிந்துணர்வோடு
மனமது மகிழ வாழ்துரைத்து
வாழ வைக்கலாம் வாருங்கள் உறவுகளே ....
கவியரங்கம் ( கவி ரூபன் )
எந்த ஜென்மத்து தொடா்போ
என் மடியில் தவழ்கின்றாள்
என் செல்வ மகள்
என் மடியில் தவழ்கின்றாள்
என் செல்வ மகள்
பூமிக்கு வந்த புது உயிர்
நீ என்று சொல்லத்தான் ஆசை…
ஆனாலும் உனக்கிது
எத்தனையாவது வருகையோ?
நீ என்று சொல்லத்தான் ஆசை…
ஆனாலும் உனக்கிது
எத்தனையாவது வருகையோ?
கால் கொண்டு உதைக்கின்றாள்
கை கொண்டு அடிக்கின்றாள்
பூவுக்கு கை, கால் முளைத்ததென
எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்!
கை கொண்டு அடிக்கின்றாள்
பூவுக்கு கை, கால் முளைத்ததென
எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்!
(9)
கவிதை சொல்ல வந்த மகள்
நற் கருத்தும் சொல்லிச் செல்கின்றாள்
விரைந்து இவள் கவி வளம் பெறவே
விருப்புடனே நல் வாழ்துரைப்போம் வாருங்கள் ..
பூவிழி (பூவிழி )
காதல் நெறி ..........
காதல் நெறியாம்
கவிதை படைப்பது
என்னவென்று
விழைந்தால் அது
காவியமாய்
கண்ணை கட்டுது
இட்டுகட்டி நிரப்பலாம்
என்றால் ....
இலக்கணம் உதைக்குது
இடைவிடாது சிந்தித்தாலும்
இயல்பை ....
இயம்ப முடியவில்லை
இறுதியில்
காகிதசட்டியில்
எழுத்துகளை அள்ளியிட்டு
வதக்கி விட்டேன்
பதார்த்தமாய் ...
பதமாய் வந்ததா தெரியாது
(10)
பூங்கோதை படைப்பினிலே
புதிதாகப் பூத்த மலர் இனியும்
ஏங்காமல் சிரித்திருக்க எம்
வாழ்த்தை நாமுரைப்போம் வாருங்கள் !...
பூங்கோதை படைப்புகள் (பூங்கோதை செல்வன் )
http://poonka.blogspot.ch/
கானல் நீர் உறவுகள்...
கருக்கொண்ட கனவுகளை
இது நி
கருவிலேயே சிதைத்துவிட்டு
அருவமாய் ஓரு கரியமூலைக்குள்
சுருண்டு போகிறேன்.... என்
கசந்த பார்வையில்
குவியம் தொலைந்து போன
காட்சிகளாய் உலக உறவுகள்
கையேந்தி நிற்கா கடினமனம்...
பிடிவாதம் உடுத்திக்கொண்ட
பிச்சைக்காரியாய்...பாசத்தைத் தேடி
நாவரண்டு தவித்த போது.............
(11)
வலைத்தளம் என்பதே எம் வாழ்வை
வசப்பட வைத்தது அன்பாலே .........
நிலைத்திடுமோ துயர் வரும் பிரிவாலே என
நினைத்திட வைத்த கவிதை வரி (லி ) கள் இங்கே ...!!!!
மழைகழுவிய பூக்கள் (அதிசயா )
விடைகேட்டு வருகின்றேன் வாசல் திறவுங்கள்
விடை கேட்டு
விரல் அசைத்து
விலகப்போகிறேன்.-வாசல் திறவுங்கள்.
நான் "அதிசயா"-"மழை கழுவிய பூக்கள்" தான்விலாசம்.
அன்றொரு நாள் பொறி ஒன்று விழுந்த வேகத்தில்எம்பிப்பறந்தவள்
அதனால் தான் வானங்கள் எனக்கும் வசப்பட்டது,
வார்த்தைகள் வரிக்குள் சிறைப்பட்து.
அறிந்திரா முகங்களோடு அணுஅணுவாய் நெருங்கி
சொந்தமென்று தேர்ந்துகொண்டேன.
சேர்த்துக்கொண்டீர்.
இதுவரை இங்கு வாழ்ந்தது மெய்தான்-இனியும்
வாழ்வேன் சிறு .....
(12)
ஒரு சின்னக் கிறுக்கல் எம்
எண்ணத்தைச் சரிசெய்கின்றது இவள்
வண்ணக் கவிதைகள் வலம்வர வேண்டும் என
வாழ்த்துங்கள் உறவுகளே ..............
சின்னச் சின்ன சிதறல்கள் (அகிலா )
சித்திரமாய் ..........
அமிலத்தைக் கொண்டு
பெண்மையைச் சிதைக்க
அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்...
அதை விற்க தடை கோரி
ஏழு வருடமாய் தவமிருக்கிறது
இன்னொரு கூட்டம்...
சட்டம் இயற்றச் சொல்லி
பதினோரு வாரமாய் காத்திருக்கிறது
வழக்காடு மன்றம்...
பெண்மையைச் சிதைக்க
அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்...
அதை விற்க தடை கோரி
ஏழு வருடமாய் தவமிருக்கிறது
இன்னொரு கூட்டம்...
சட்டம் இயற்றச் சொல்லி
பதினோரு வாரமாய் காத்திருக்கிறது
வழக்காடு மன்றம்...
(13)
தன் எண்ணத் திரைதனில் விழுந்த நற் கருத்தனை
எந்நாளும் கவிதையாய் வடிக்கின்றார்
இவர் இன்னும் வளம்பெற வேண்டும் என்று
இனிதே ஊக்கம் அளித்திடுங்கள்...............
கவிதை (சீனி )
இது நி
யாயமா!?
அரசு அனுமதி பெற்ற-
''இடம்'' தான்!
படித்த என் மகன்-
அங்கு வேலைக்கு-
போவது பிடிக்கவில்லை-
எனக்கு தான்!
என்னை தான் -
இந்த ஊர் -
தூற்றியது -
''சாராய -
வியாபாரி''-என!
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே .முடிந்தவரை கவிதை படைக்கும் படைப்பாளிகளை அறிமுகம் செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன் .நான் அறியாது சிலரைத் தவற விட்டிருப்பேன் .அவ்வாறு தவறுகள் நிகழ்ந்திருந்தால் பொறுத்தருளவும் .ரிஷபன் என்னும் பெயருடைய சகோதரரர் மிக அழகாகக் கவிதை வடிப்பார் .அவரது தளம் சலங்கையின்றி ஆடுகின்றது இப்போது .இதுபோல் ஒரு சிலரின் தளம் வாசிக்க முடியாமல் உள்ளது .இதனைச் சரி செய்து கொள்ளுங்கள் உறவுகளே .மீண்டும் நாளை சிந்திப்போம் .மிக்க நன்றி என்னை ஊக்குவிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் .
நமக்கு தெரிஞ்ச பலர் இருக்காங்க.. நண்பர்களில் அதிசயா இப்போ எழுதுவதில்லை.. அரசன் கலக்குகிறார்.. பூங்கோதை அக்காவும் கலக்ஸ் தான்.. அறிமுகமான மற்றவர்களுக்கும் மன நிறை வாழ்த்துக்கள்..
ReplyDeleteகடந்த 3 பதிவுகளிலும் உங்கள் அறிமுக அணிவகுப்பு கலக்கல்..
அறிமுகங்கள் அனைவரும் கலக்கல் பதிவர்கள்தான்...
ReplyDeleteரிஷபன் தளம்போல சில தளங்கள் திறக்காமல் கண்ணாம்பூச்சி ஆடுகிறது...
அறிமுகங்கள் தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete//ரிஷபன் என்னும் பெயருடைய சகோதரரர் மிக அழகாகக் கவிதை வடிப்பார்.//
இதைக்கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ச்ந்தோஷம். மிக்க நன்றி.
//அவரது தளம் சலங்கையின்றி ஆடுகின்றது இப்போது. இதுபோல் ஒரு சிலரின் தளம் வாசிக்க முடியாமல் உள்ளது //
திரு. ரிஷபன் அவர்களின் தளம் வாசிக்க முடிகிறதே.
கீழ்க்கண்ட இணைப்பில் திறந்து படிக்க முடிகிறதே.
http://rishaban57.blogspot.com/
இது தங்கள் தகவலுக்காக மட்டும்.
மிக்க நன்றி சகோதரரே(ஹாரி. R )தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே(சே .குமார் )தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .
ReplyDeleteennaiyum inaiththamaikkum mikka nantri sako..!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா தகவலுக்கு .நான் மீண்டும் முயற்சித்துப் பார்த்தேன்
ReplyDelete.COM என்று இருப்பது எமக்கு CH என்றே காட்டுகின்றது .இடையில் GOOGLE ஏற்படுத்திய மாற்றத்தின் பின்னர் இவ்வாறு தளங்கள் ஆடும் ஆடி முடித்தபின் சேவை துண்டிக்கப் பட்டு விடும் .இதற்குத் தீர்வு சொல்கின்றார் எங்கள் ப்ளாக்கர் நண்பன் .துள்ளித் திரியும் ப்ளாக் -தீர்வு என்ன ? என்ற தலைப்பில் .
இதை எங்கள் சென்னைப் பித்தன் ஐயாவுக்கும் தெரிவிக்க முடிந்தால் மகிழ்ச்சியே .
http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
நான் என் கடமையைத் தான் செய்தேன் .எனினும் இந்த நன்றி உணர்வைப் பாரட்டுகின்றேன் சகோதரா .மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் .
ReplyDeleteபுதுக்கவிதை முத்துக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுத்துக்களை கோர்த்து மாலை ஆக்கி தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பலர் எனக்கு புதியவர்கள், யாவருக்கும் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅன்புள்ள வலைச்சர ஆசிரியர் அவர்களே,
ReplyDeleteவணக்கம். தாங்கள் எனக்குக் கொடுத்துள்ள பின்னூட்டத்தில் சொல்லியுள்ள தகவலை, திரு. சென்னைப்பித்தன் ஐயா அவர்களின் சமீபத்திய பதிவின் பின்னூட்டப்பெட்டியின் மூலம் தெரிவித்து விட்டேன்.
ooooooo
அன்புள்ள திரு. சென்னைப்பித்தன் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா,
இந்த வார வலைச்சர ஆசிரியரான Ms. அம்பாளடியாள் அவர்கள் தங்களுக்குக் கீழ்க்கண்ட தகவலைத் தெரிவிக்கச்சொல்லியுள்ளார்கள்.
இணைப்புகள்:
1] http://gopu1949.blogspot.in/2013/07/29.html
2] http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html
Ambal adiyal has left a new comment on the post "29] நிலையான சொத்து தருபவர் குரு !":
மிக்க நன்றி ஐயா தகவலுக்கு .நான் மீண்டும் முயற்சித்துப் பார்த்தேன் .COM என்று இருப்பது எமக்கு CH என்றே காட்டுகின்றது .இடையில் GOOGLE ஏற்படுத்திய மாற்றத்தின் பின்னர் இவ்வாறு தளங்கள் ஆடும் ஆடி முடித்தபின் சேவை துண்டிக்கப் பட்டு விடும் .இதற்குத் தீர்வு சொல்கின்றார் எங்கள் ப்ளாக்கர் நண்பன் .துள்ளித் திரியும் ப்ளாக் -தீர்வு என்ன ? என்ற தலைப்பில் .
இதை எங்கள் சென்னைப் பித்தன் ஐயாவுக்கும் தெரிவிக்க முடிந்தால் மகிழ்ச்சியே
http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
ooooo
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
E-mail: valambal@gmail.com
வணக்கம்
ReplyDeleteஅனைத்துப் பதிவுகளும் மிக அருமை தொடருகிறேன் பதிவுகளை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சொந்தங்களே இப்போது இங்கே நள்ளிரவு இரண்டு மணி .இந்த
ReplyDeleteஇரண்டு நாட்களிலும் என் எண்ணம் சிந்தனை அனைத்தும் என்
கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் தான்
நகர்கின்றது .உங்கள் அம்பாளடியாள் இந்தத் தருணத்தைத் தனக்குக்
கிடைத்த வரப் பிரசாதமாகக் கருதுகின்றாள் .உங்களின் ஒத்துழைப்பு
என் மனதிர்க்குக் கொடுக்கும் மகிழ்வோடு முடிந்தவரை என் தேடலை விரிவு படுத்தி சிறந்த தளங்களையும் இதுவரை அறிமுகம் ஆகாத தளங்களையும் அதிக எண்ணிக்கையில் அறிமுகப் படுத்தவே
எண்ணியுள்ளேன் .இங்கு குறைகள் நிகழ்ந்தால் தயவு கூர்ந்து
பொறுத்தருளவும் .மிக்க நன்றி அனைவரினது ஒத்துழைப்பிற்கும் .
சிறப்பாகவும் நுட்பமாகவும்
ReplyDeleteசிறந்த பதிவர்களை மிகச் சிறப்பாக
அறிமுகம் செய்த விதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஒரு அறிமுகம் புதிது... நன்றி... தங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள் பல...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
கவிதைகள் உலவும் தளங்களை அறிமுகம் செய்த கவிதாயினிக்கு நன்றி......
ReplyDeleteரிஷபன் தளம்போல சில தளங்கள் திறக்காமல் கண்ணாம்பூச்சி ஆடுகிறது...
ReplyDeleteஆச்சர்யமாய் இருக்கிறது இன்று காலை பதிவிட்ட கவிதைக்கு 7 பின்னூட்டங்கள் வந்தன. உங்களுக்கு மட்டும்.. நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்..
முத்துக்களாய் ஜொலிக்கும் தளங்களின் பகிர்வுகள் அருமை,பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்கள் தூய பணி தொடரட்டும். சிறப்பாக அறிமுகம் செய்கின்றீர்கள். நீங்கள் அறிமுகம் செய்யும் அழகே எம்மை, பதிவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் எனத் தேடி வாசிக்க வைக்கின்றன. அத்தனை அழகாக அறிமுகம் தருகின்றீர்கள் தோழி!!
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிகவர்களுக்கும் உங்களுக்கும் என் இதயங் கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!!!
கவிதை முத்துக்களின் தொகுப்பு சிறப்பு தோழி.. தங்கள் கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழி கோமதி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா .சிரமம் பாராது தாங்கள் செய்த உதவிக்கு .
ReplyDeleteமிக்க நன்றி ரமணி ஐயா மனம் மகிழப் பாராட்டியமைக்கு !
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி ராஜி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ ஸ்கூல் பையா
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா (தனபாலன் )வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா (வெங்கட் நாகராஜ் )வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிகவும் சிறப்பான கருத்துக்களை எனக்களித்து என் வளர்சிக்குக் காரணமாகவும் இருந்த தங்களை அறிமுகம் செய்வதை விட இங்கே வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும் சகோதரா ?...காரணம் புரியவில்லை குறிப்பிட்ட சில தளங்களை ஏன் எம்மால் மட்டும் பார்வையிட முடியவில்லை என்று .பல்சுவை பதிவுகள் தரும் முத்துக்கள் என்ற தலைப்பின் கீழேனும் தங்கள் தளத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் தான் மனதில் நின்ற தங்களின் பெயரை எனது ஆக்கத்தில்
ReplyDeleteபிரசுரித்தேன் .எனக்கும் தங்களை அறிமுகம் செய்ய முடியவில்லை என்ற கவலை உள்ளது சகோதரா .தயவு செய்து மனம் நோக
வேண்டாம் .
மிக்க நன்றி தோழி ராஜேஸ்வரி தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
ReplyDeleteமிக்க நன்றி இளமதி தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
ReplyDeleteமிக்க நன்றி சசி கலா தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
ReplyDelete//(1) ஆதிரா முல்லை !
ReplyDeleteஇதமாய் கவிதை வரிகளினால்
எம் இதயம் மகிழப் பொருளுரைப்பார்
அழகாய் கவிதை வடிக்கும் இனிய
ஆதிரா என்னும் அழகிய முல்லை ...!!
துயரம் தழுவிய போதினிலே மனம்
துவண்டு வந்த வரிகளைப் பார் .......!!!!
(மரபுக் கவிதையாலும் எம் மனங்களில் நிற்கிறார் ...!! )//
இவ்வளவு அழகான அறிமுகம். கவிதை கவிதயைப் பாராட்டுகிறது. அழகிய கவிதை தோழி. என் வலைப்பூவை இங்கு அறிமுகப் படுத்திய தங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி.
சிறப்பான கவிதை தளங்களை அறிமுகம் செய்தமை சிறப்பு! நன்றி!
ReplyDeleteகவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநிறையத்தளங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் நன்றி.
உங்களுக்கு இனிய பாராட்டுகள்.
அறிமுகங்கள் அருமை தோழி..அதுவும் பாஸ்கர் மற்றும் சீனி ஆகியோர் எனக்கு புது அறிமுகமாய்...
ReplyDeleteஎன்னையும் என் கவிதை தூறல்களையும் இதில் இணைத்து பெருமைப்படுத்திவிட்டீர்கள்...
மிக்க நன்றி
அட நாமளும் இந்தப் பட்டடியலில் இருக்கிறோமா? ம்... எழுதிறது கவிதையா என்ற ஒரு சந்தேகம் இருந்தது... ஏதோ நீயும் எழுதிறாய் கவிதை என்று சிறு அங்கீகாரம் கொடுப்பது போல் இணைத்தமைக்கு நன்றி அம்பாளடியாள்! (தனபாலுக்கு விசேஷ நன்றி!)
ReplyDeleteவணக்கம் சொந்தமே!!!!அறிமுகம் கிடைத்தமை மிகவே மகிழ்ச்சி!உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.என் நீண்டநாள் இல்லாமையையும் சகித்தபடி என்னை அறிமுகம் செய்துள்ளீர்கள்.அங்கீகாரம் தந்துள்ளீர்கள்.அறிமுகமாகஎன் அன்புச்சொந'தங்கள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகற்பனையில்லா நிஜத்தில்
ReplyDeleteஒரு கவிதை படித்தவனாய்
என்னை அறிமுகபடுத்தியமைக்கு
உங்களில் ஒருவனாக
என்னை இணைத்தமைக்கு
பெருமைப்படுகிறேன்!
அன்புடன்
நெல்லை பாஸ்கர்
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅழகிய கவிதைகள்
என்னையும்
முத்துச் சரத்தில் கோர்த்து
பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ
மீண்டும் ஒருமுறை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு அம்பாள் அடியாள் மற்றும் வலைச்சரத்திற்கு மிக்க நன்றி...
ReplyDeleteஎன்னையும் ஓர் பொருட்டாய்
ReplyDeleteமுன்னே நிறுத்தி விட்ட தோழி...
என்னவென்று நன்றி சொல்வேன்
பாவாலே என் கவிக்கு
பூமாலை சூடி வைத்து
பூங்கோதை என்னை-இந்த
பதிவுலகில் பதிந்து வைத்து
பெருமை சேர்த்த தோழிக்கு
பல கோடி நன்றிகள் தந்தேன்....
அதிகம் இணையத்துக்கு வர முடியாத நிலையில் இருக்கும் எனக்கு இந்த விடயத்தை அறியத் தந்த மதிப்பிற்குரிய சகோதரன் பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...