உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் உள்ளம் கவர்ந்த வலைச்சரம் தளத்தில் ஆசிரியர் பொறுப்பேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் .
இந்த பெருமையை எனக்கு அளித்து சிறப்பித்த வலைச்சரம் நிர்வாகிகள் சீனா ஐயா அவர்களுக்கும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னைப் போலவே பல பதிவர்களுக்கும் வலைப்பூ தொடங்கிய காலத்தில் பதிவுலகத்தில் நமது எதிர்காலம் இன்னவாக இருக்கும் என்பதை கணிக்க முடியாமல்தான் இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.
பல்வேறு பதிவுகளையும் வாசித்து பல்வேறு அனுபவங்களைப் பெற்று வந்த நான் பதிவுலகத்தில் பிறருக்கும் பல்வேறு பயனுள்ள தகவல்களை அளிக்கப் போகிறேன் என்பது நான் சிறிதும் அறியாதது.
பதிவுலகில் நான்கு பேருக்கு என்னுடைய எண்ணங்களை பகிர வைத்த பெருமை பதிவுலக நண்பர்களையே சாரும்.
இத்தனைக்கும் என்னை ஊக்கப்படுத்தி வளர்த்தவர்கள் யாருமே நான் முன் பின் அறிந்தவர்களல்ல. அவர்கள் மனிதர்கள்!
என்னை ஊக்கப்படுத்தி பதிவராக்கிய பதிவுலக நண்பர்களுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இப்பதிவுலகில் நான் எண்ணிடலங்கா நண்பர்களை பெற்றுள்ளதால் இந்த பட்டியலில் நமது பெயரை விட்டுவிட்டானே என்று கவலை கொள்ளவேண்டாம். கருத்து வேறுபாடுகள் நிறைந்த பதிவுலகில் பதிவர்கள் என்ற முறையில் அனைத்து பதிவர்களுமே எனது நண்பர்கள்தான்.
முதலாவதாக பஹரைனிலிருந்தாலும் பக்கத்து ஊர் காரராக விளங்கும் நான் சந்தித்த முதல் பதிவர் ...மிரட்டல் பதிவர் ...ஆம் ...நாஞ்சில் மனோ அண்ணன்தான் அவர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை மாத்திரமல்ல பல புதிய பதிவர்களையும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்திவரும் பாசமிகு சகோதரர் கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இந்த பதிவில் தனது பின்னூட்டத்தை கவிதையாகவே வழங்கி வாழ்த்திய புலவர் ஐயா அவர்களின் ஊக்கம் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தியது.
பிரபல பதிவராக விளங்கிக்கொண்டிருக்கும் அண்ணன் சிபி அவர்கள் எனக்கு பின்னூட்டம் அளித்தபோதெல்லாம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் .
மேலும் எனது மாவட்டத்துக் காரர்களாகிய பாசமிகு உணவு ஆய்வாளர் உணவு உலகம் சங்கரலிங்கம் ஐயா அவர்களுக்கும் சமூக விழிப்புணர்வை சொல்லில் மட்டுமல்லாமல் செயலிலும் காண்பித்துக்கொண்டிருக்கும் சகோதரி மனதோடு மட்டும் கௌசல்யா ராஜ் அவர்களுக்கும் நாய்க்குட்டி மனசு ரூபினா அவர்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு பல்வேறு நண்பர்களை அடையாளம் காட்டியது கூடங்குளம் போராட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. நான் 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தபோது தினம் தினம் எனக்கு போன் செய்து பல பதிவர்கள் நலம் விசாரித்தனர். அப்போதுதான் பதிவுலகமும் நம் குடும்பத்திற்கு இணையானதுதான் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
பதிவுலகிலும் , தனிப்பட்ட முறையிலும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக்கொண்டிருக்கும் சகோதரர்கள் வேடந்தாங்கல் கருண் , பிரபு கிருஷ்ணா, மகேந்திரன், தமிழ்வாசி பிரகாஷ் , என் ராஜபாட்டை ராஜா, கோகுல், சகோதரி ராஜராஜேஸ்வரி , தோழர் ரெவரி ,பாசமிகு மாமா விக்கியுலகம் வெங்கட் ஈழத்து சகோதரர்கள் நிரூபன், மதி சுதா , மதுரன் , மைந்தன் சிவா , சுவிஸ் ஹேமா , சகோதரி அம்பாளடியாள் ஆகியோருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவுலகில் என்றும் இளமையோடு விளங்கும் சென்னை பித்தன் ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
அன்று முதல் இன்று வரை அனைத்து பதிவர்களுக்கும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் ஐயா ரமணி அவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடைசியாக மண்ணைவிட்டு மறைந்தாலும் என் மனதில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டிருக்கும் மாய உலகம் ராஜேஷ் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.
மீண்டும் நாளை சந்திப்போம் வணக்கம்!
வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்ரீ....
வலைச்சரம் தளத்தில் ஆசிரியர் பொறுப்பேறறதற்கு வாழ்த்துகள்..!
ReplyDelete@ அப்பாதுரை நன்றி!
ReplyDelete@ ஸ்ரீ.... நன்றி!
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி... நன்றி!
ReplyDeleteஅன்பின் பாலா - ஆக்கமும் ஊக்கமும் அளித்த நண்பர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பதிவு அமைந்துள்லது - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
ReplyDeleteநீண்டநாளாக வலைப்பக்கம் வராமலிருக்கும் தங்களை வலைச்சரம் வாயிலாக , வரச் செய்த சீனா ஐய்யா, தமிழ்வாசி ஆகிய இருவருக்கும் முதற்கண் நன்றி! உங்களுக்கு வாழ்த்து!எப்பணி செய்யினும் , அப்பணி சிறக்க செய்யும் உம் ஆற்றலை நான் அறிவேன் நன்றி!
வாழ்த்துக்கள் சகோ,இந்த வாரம் கலக்கலாக இருக்கட்டும்
ReplyDeleteவாழ்த்துதலுக்கு நன்றி திரு சீனா ஐயா , புலவர் திரு ராமானுஜம் ஐயா , திரு டினேஷ் சுந்தர்...
ReplyDeleteநல்வரவு.
ReplyDeleteசுவாமி வெங்கியுடன் பேசியபோது உங்களை அன்பாக நினைவு கூர்ந்தார்,
வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலக்கலான வாரமாக அமைய வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே! சீரிய முறையில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி திரு துளசி கோபால் , திரு சே.குமார் , திரு .எஸ்.சுரேஷ்....
ReplyDeleteவாழ்த்துக்கள். இனிதே பயணம் தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி...
இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி
ReplyDeleteமிகச் சிறப்பாக அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@ Sasi Kala நன்றி சகோதரி!
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன்!
ReplyDelete@ Ramani S நன்றி ஐயா !
ReplyDeleteமுதலிலேயே சொல்லிவிடுகிறேன் இப்பதிவுலகில் நான் எண்ணிடலங்கா நண்பர்களை பெற்றுள்ளதால் இந்த பட்டியலில் நமது பெயரை விட்டுவிட்டானே என்று கவலை கொள்ளவேண்டாம். கருத்து வேறுபாடுகள் நிறைந்த பதிவுலகில் பதிவர்கள் என்ற முறையில் அனைத்து பதிவர்களுமே எனது நண்பர்கள்தான்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா தங்களின் இந்தக் கருத்து வெளியீட்டால் நான் என்
மனதைச் சாந்தப் படுத்திக் கொண்டேன் :) வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே
என்றுமே வளமான ஆக்கத்தினால் நற் புகழை அடைந்து சிறந்து விளங்குங்கள்
மிக்க நன்றி சகோதரரே தங்கள் ஆசிரியப் பணியும் சிறந்த பாராட்டுக்களைப்
பெற்றுத் தொடரட்டும் .
வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சகோதரி அம்பாளடியாள் , திரு ஸ்கூல் பையன் ...
ReplyDelete#கடைசியாக மண்ணைவிட்டு மறைந்தாலும் என் மனதில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டிருக்கும் மாய உலகம் ராஜேஷ் அவர்களுக்கு எனது அஞ்சலிகள். #
ReplyDeleteமேல்கண்ட வாசகத்தில் ,கடைசியாக என்பதற்கு அடுத்து கமாவைப் போடாததால் எங்களுக்கு எல்லாம் இறவா வரம் அளித்துள்ளீர்கள் ...நன்றி !
தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் !
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பாலா சார்...
ReplyDeleteஉங்க வலைப்பூவை தவறாம படிக்கிற எவ்வளவோ பேர்ல நானும் ஒருத்தன். பின்னோட்டம் போடறது இது தான் முதல் முறை.
தொடரட்டும் உங்கள் பணி...!!!