பணத்தின் மூலமாக எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நிலையில்தான் இன்று உலகம் இயங்கி வருகிறது. ஆனால் பணத்தால் வாங்க முடியாதது என்றும் கடவுள் சிலவற்றை வகுத்துள்ளார்.
எவ்வளவு பணமிருந்தாலும் வாழ்கையில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று நிம்மதி. அந்த நிம்மதியை கடவுளை வணங்குவதாலும் நல்ல நூல்களை படிப்பதாலும் பெற முடியும்.
இன்றைய வலையுலகில் ஒரு சில பதிவர்களால் மட்டுமே மன நிம்மதியளிக்கும் வகையிலான பதிவுகளை தந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையிலே எனது போற்றுதலுக்குரியவர் திரு என்.கணேசன் அவர்கள். பல்வேறு தருணங்களில் அவருடைய சில பதிவுகள் எனக்கு உண்மையிலேயே ஆறுதல் அளித்திருக்கின்றன.
உதாரணமாக ஆறாத் மனக் காயங்களை ஆற வைப்பது எப்படி , திறமை இருந்தும் தோல்வி ஏன் , உங்களுக்கு பிரச்சனையா? இதை அவசியம் படியுங்கள் போன்ற பதிவுகளைக் கூறலாம் .
இவர் போன்ற சிறந்த எழுத்தாளர்களைப் பெற்றுள்ளமைக்கு நம் பதிவுலகம் பெருமைப்படவேண்டும்.
அடுத்தபடியாக எனக்கு மட்டுமல்ல அனைத்து கணவன் மார்களுக்கும் தேவையான பதிவு கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் என்பதை பற்றி சகோதரி ராஜி அருமையாக பதிவிட்டுள்ளார். மனைவியிடம் அடி வாங்குவதை தவிர்க்க இப்பதிவு நிச்சயம் உதவும் என நம்பலாம் (என்னா அடி!!!...அவ்வவ் )
அடுத்தபடியாக குறிப்பிடத்தக்க ஒரு பெண் பதிவர். சகோதரி சசிகலா அவர்கள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை கடிகாரத்தை உதாரணமாக்கி ஒரு பதிவிட்டுள்ளார். அவசியம் படியுங்கள் மாறாத மனித இயல்பு. ஏன் சகோதரி இந்த சீனா காரங்களுக்கு ( நம்ம சீனா ஐயா இல்லை) கடிகாரம் பிடிக்காதாமே...ஏன்னு தெரியுமா???
மேலும் நிலை கொள்ளாமல் அலையும் மனதை அடக்க வலியுறுத்தி நிழலுக்கு நீரூற்றி என்ற தலைப்பில் சகோதரி பதிவிட்டுள்ளது அருமை.
மேலும் அன்பே ஆயுதம் என்ற தலைப்பில் அன்பின் வலிமையை அருமையான கவிதையாக வடித்துள்ளார் சகோதரி.
அடுத்தபடியாக பண ஆசையால் வரும் தீங்கினை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக கொடுத்துள்ளார் மூத்த பதிவர் பழனி.கந்தசாமி அவர்கள். கோடிகளில் புரள ஆசைப் படுங்கள் என்ற தலைப்பில் அவர் இட்டுள்ள பதிவு பேராசையின் விபரீதத்தை உணர்த்துவதாக உள்ளது.
நிறைவாக குடந்தையூர் தளத்தை நிர்வகித்து வரும் திரு சரவணன் அவர்கள் எழுதிய ஏட்டிக்கு போட்டி என்ற நகைச்சுவை பதிவை பகிர்ந்து இன்று விடை பெறுகிறேன்....
மீண்டும் நாளை பல அறிமுகங்களுடன் சந்திப்போம்....
நான் தவறாது தொடரும்
ReplyDeleteஅருமையான பதிவர்கள்
அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
எல்லாரும் நான் வாசிக்கும் அருமையான படைப்பாளிகள்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்களை அறிமுகம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடருங்கள்... தொடர்கிறோம்...
நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteஉங்களுக்கும் இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!
கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி திரு .ரமணி ஐயா , திரு சே.குமார்
ReplyDeleteநல்லதொரு அறிமுகங்கள்...
ReplyDeleteகலக்குங்க பாலா சார்
அறிமுகப்படுத்தியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..!
ReplyDeleteதிரு.என்.கணேசன் அவருடைய வலைப்பதிவு எனக்குப் பிடித்தவைகளுள் ஒன்று.. பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துகளும் :)
ReplyDeleteஎனக்கு அறிமுகமான பதிவர்கள்... ஒருவரைத் தவிர... அவரையும் தொடர்கிறேன்...நன்றி...
ReplyDeleteசிறப்பான பதிவாளர்கள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் தொடர்ந்து பணி சிறக்க பாலாவுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறந்த பதிவர்களை சிறப்பித்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDelete@ நிகழ்காலத்தில் சிவா , ezhil , தனிமரம் , s suresh ...நன்றி சொந்தங்களே !
ReplyDeleteநன்றி நண்பரே.
ReplyDelete-என்.கணேசன்
@ N.Ganeshan தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஅனைத்து தளங்களும் நான் தொடரும் சிறந்த தளங்கள்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
என்.கணேசன் அவர்களின் தளத்திற்கு முன்னரும் சென்று பார்த்திருக்கின்றேன்.அற்புதமாக எழுதுவார்.அறிமுகங்கள் நன்று.தொடருங்கள்
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! இருவர் தவிர மற்றவர்கள்லாம் என் சொந்தமே!
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே !
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்திட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி சொந்தங்களே!
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete