கணினி பயன்பாட்டாளர்கள் மற்றும் பதிவர்கள் அனைவருமே கணினி தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாக உள்ளது . இத்தகைய தொழில்நுட்பங்களை நம் தாய் மொழியில் அறியக் கிடைப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
கணினி மற்றும் வலைப்பதிவு தொழில் நுட்பங்களை பல பதிவர்கள் வழங்கி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோரை நாம் அறிந்திருந்தாலும் இங்கே அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
முதலில் என்னுடைய வலைப்பதிவு ஆசான் பிளாக்கர் நண்பனை அறிமுகப்படுத்துகிறேன். இவருடைய ஒரு பதிவைப் பார்த்துதான் பிளாக் ஆரம்பிப்பதைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். பிளாக் பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர்களுக்கும் பிளாக்கை மேம்படுத்த விரும்புபவர்களுக்கும் இவருடைய தளம் ஒரு வரப்பிரசாதம்.
அடுத்தபடியாக நண்பர் சசிகுமார் அவர்கள். இவரும் பிளாக் தொழில்நுட்பம் மற்றும் கணினி தொழில் நுட்பங்களை சிறந்த முறையில் வழங்கி வருகிறார். தொழில்நுட்பம் அறிய வருகை தாருங்கள் வந்தேமாதரம். சில சந்தேகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகக்கூட உதவி செய்து வருகிறார்.
அடுத்தபடியாக சகோதரர் பிரபு. நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலகட்டத்தில்தான் இவரும் எழுத ஆரம்பித்தார். இப்போது கற்போம் என்ற தொழிநுட்ப இதழையும் நடத்தி வருகிறார். கணினி பயனாளர்கள் , மொபைல் பயனாளர்கள் மற்றும் பதிவர்களுக்கு பயனுள்ள தளம் கற்போம்.
அடுத்தபடியாக நான் அறிமுகப்படுத்துவது நண்பர் கான் அவர்களை .இவருடைய தளம் தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள். கணினி மூலம் DTP வேலை செய்பவர்களுக்கும் போடோஷாப் வேலை செய்பவர்களுக்கும் இவருடைய தளம் மிக்க உதவிகரமாக இருக்கும். MS OFFICE , XL , PHOTOSHOP எளிய தமிழில் பயில உதவுகிறார் நண்பர் கான்.
அடுத்தபடியாக சகோதரி பொன்மலர் அவர்களை அறிமுகம் செய்கிறேன். சமீப காலமாக இவர் குறைவாகவே பதிவுகள் எழுதி வந்தாலும் இவருடைய முந்தைய இடுகைகள் அனைத்துமே பயனுள்ளவைதான். வாருங்கள் பொன்மலர் பக்கங்கள்.
மேலும் 99likes.blogspot.com , வேலன் , Cybersimman\'s Blog மற்றும் Tamil Computer College போன்ற தளங்களும் தமிழில் சிறந்த தொழில்நுட்பப் பதிவுகளை வழங்கி வருகின்றன.
இயன்ற அளவு எனக்கு தெரிந்த தொழில்நுட்ப தளங்களை பகிர்ந்துள்ளேன். யாருடைய தளமாவது விடுபட்டிருப்பின் மன்னிக்கவும்.
அறிமுகப்படுத்தியவர்களின் சேவை இல்லாத தளம் ஏது...?
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி...
கற்போம் தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அண்ணா :-)
ReplyDeleteநன்றி திரு . திண்டுக்கல் தனபாலன் ...
ReplyDeleteவருகைக்கு நன்றி பிரபு....
ReplyDeleteபயனுள்ள பதிவர்கள்... நான் சென்ற வாரம் யார் யாரையெல்லாம் அறிமுகப் படுத்தலாம் என நினைத்தேனோ, நீங்கள் அவர்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள், நேரமின்மையால் என்னால் பதிவினை எழுத முடியவில்லை... வாழ்த்துகள் அனைவருக்கும்...
ReplyDeleteஅன்பின் கூடல் பாலா - தமிழில் தொழில் நுட்பத்தளங்கள் - அறிமுகங்கள் அனைஉத்துமே அருமை - பயனுள்ள தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அண்ணா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி இரவின் புன்னகை, திரு.சீனா ஐயா , திரு.சே.குமார்...
ReplyDeleteசிறந்த தளங்களுடன் என் தளங்களையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ! நண்பர் கூடல் பாலா...
ReplyDelete- அன்புடன்: கான்
http://tamilcomputertips.blogspot.com
http://tamilpctraining.blogspot.com/
அனைவரும் அறிந்த அறிய வேண்டிய தொழில்நுட்ப பதிவர்கள்! அறிமுகம் செய்து கவுரவித்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனக்கு மிகவும் பயன்படக் கூடிய தளங்கள் ஏனெனில் தற்போதுதான் என் வலைப்பக்கத்தி மாறுதல்கள் செய்ய முயற்சித்துக்கொண்டுள்ளேன்... நன்றி
ReplyDeleteஇன்று குறிப்பிட்டவர்களீல் வந்தே மாதரம் வலைத்தளம் மட்டும் அறிவேன்.
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .
ReplyDeleteபதிவர்கள் அனைவரும் அவசியம்
ReplyDeleteஅறிந்திருக்கவேண்டிய பதிவர்கள்
அருமையாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
www.99likes.blogspot.com தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..நன்றி..நன்றி.. கூடல் பாலா ஐயா...
ReplyDeleteஉங்கள் அறிமுகங்கள் உண்மையில் பயன்மிக்க வலைப்பூக்களே!
ReplyDeleteஉங்களுக்கும் அறிமுகப் பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!
நன்றி திரு.கான் , திரு.எஸ்.சுரேஷ் !
ReplyDelete@ எழில்...நன்றி!
ReplyDelete@ கோமதி அரசு ...நன்றி!
ReplyDeleteநன்றி திரு.ரமணி ஐயா , சகோதரி அம்பாளடியாள் !
ReplyDelete@ nawsin khan & இளமதி.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteஎன் ப்ளாக்கையும் பரிந்துரைத்ததற்கு நன்றி சகோ.!
ReplyDeleteஎனது தளத்தினையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி பாலா சார்..
ReplyDeleteவாழ்க வளமுடன்
வேலன்.
பயனுள்ள தளங்களின் பகிர்வு அருமை..
ReplyDeleteவாழ்த்துக்கள் பாலா...
அருமை தோழா!
ReplyDeleteசிறந்த தளங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்னை போன்று புதியதாக வலைப்பதிவு தொடங்குபவர்களுக்கு தேவையான பதிவு. நன்றி.
ReplyDeleteபயனுள்ள தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி கூடல் பாலா.....
ReplyDelete