Wednesday, July 10, 2013

அனுபவம் புதுமை !!!

சமூகத்தில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். சில அனுபவங்கள் ஒரு ஊழலில் அடுத்த ஊழலை மறந்துப் போவது போல் இருக்கும். ஒரு சில அனுபவங்கள் 83ல் கிரிக்கெட்டில் வெற்றிப் பெற்ற உலக கோப்பையை 2011 வரை நினைவில் வைத்து கொண்டது போல் நீங்காமல் இருக்கும்.

நண்பர்கள் சிலர் தங்களது பதுவுகளில் தினசரியில் நடந்த வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களின் அனுபவத்தையும் பாடத்தையும் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.

*
சமூக அனுபவம்

'வீடுதிரும்பல்' மோகன் முன்பே வலைச்சரத்தில் பொறுப்பாசிரியர் ஏற்று பிரபலமானவர். அவர் முன் நடந்த சாலை விபத்துக்களைப் பற்றிய தனது அனுபவங்களை எழுதியிருக்கிறார். நமக்கு வண்டி ஓட்டும் போது கொஞ்சம் குடும்பதை நினைத்து ஓட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வை கொடுத்திருக்கிறார். 

இனிய நண்பர் சுரேகா "கேட்டால் கிடைக்கும்" பதிவில் மூலம், நம்மிடம் நமக்கே தெரிந்து திருடும் கார்ப்ரேட் மால்கள், தியேட்டர்கள், பெரூந்துகள் என்று பல விஷயத்தை பகிர்ந்து பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இவர் எழுதும் பதிவால் நம்மை "எவனோ ஒருவன்" மாதவன் போல் ஆக்கிவிடுகிறார். சில இடங்களில் நானும் சண்டைப் போட்டு வெற்றிப் பெற்றுயிருக்கிறேன்.

மருத்துவார்களின் மாற்றத்தை நம் வாழில் கடந்து போது, பெரிய விஷயத்தை தனது சின்ன பதிவில் நொந்தக்குமார் சொல்லியிருக்கிறார்.

*
சுய அனுபவம்

சமூக பிரச்சனை மட்டும் அல்லாமல் ஒரு சிலர் தங்கள் அனுபவத்தை நகைச்சுவையாக எழுதியிருக்கிறார்கள்.

உலகநாதன் தனது வீட்டு சாவியை தொலைத்த அனுபவத்தை இனியவன் என்கிற உலகநாதன் சொல்லும் போது கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது.

கிரி என்ற பதிவர் தனது சிங்கை பஸ் பயணத்தில் பார்த்த பக்திமானை பற்றிய அனுபவம் நல்ல நகைச்சுவையாக கொடுத்திருக்கிறார். இறுதியில், ‘தவசி’ பட நகைச்சுவை வீடியோ இணைப்பை கொடுத்து அந்த காட்சியோடு நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு நம்மை சிரிக்க வைக்கிறார்.

*
சாப்பாட்டு அனுபவம்

 பலருக்கு கேபிள் சங்கர் என்றால் சினிமா விமர்சனம் தான் ஞாபகம் வரும். ஆனால், எனக்கு அவர் எழுதும் சாப்பாடுக்கடை ஹோட்டல் தான் நினைவுக்கு வரும். வார இறுதியில் இவர் அறிமுகம் படுத்தும் ஹோட்டலுக்கு ஒரு முறை சென்று சுவைப்பதை வாடிக்கையாக்கிவிட்டேன். அவர் அறிமுகப்படுத்தும் உணவகங்களை நண்பர்கள் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம். 

பஜ்ஜி சாப்பிடுவது எல்லாம் ஒரு அனுபவமா என்று நினைத்து தான் ருபக்ராமின் இந்த வலைப்பதிவை படிக்க தொடங்கினேன். படித்து முடித்ததும், நமக்கும் மழைச்சாரலில் சுடான வடை, பஜ்ஜி சப்பிட வேண்டும் போல இருந்தது. பஜ்ஜி கடை தேடி செல்கிறேன்.

மீண்டும் நாளை சந்திப்போம்.

6 comments:

  1. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. வீடு திரும்புதல் அல்ல, வீடு திரும்பல்...


    நொந்தகுமார் என்று மாற்றிக்கொள்ளவும்...


    நன்றி...

    ReplyDelete
  3. அருமையான அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. // வீடு திரும்புதல் அல்ல, வீடு திரும்பல்...


    நொந்தகுமார் என்று மாற்றிக்கொள்ளவும்...


    நன்றி...//

    மாற்றிவிட்டேன் நன்றி !!

    ReplyDelete
  5. குகன் ஐயா...
    சமூக அனுபவம்,சுய அனுபவம்,
    சாப்பாட்டு அனுபவம், நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete