Tuesday, July 9, 2013

ஹைக்கூ தோட்டம் !!

படைப்பிலக்கியத்தில் மிக கடினமானது கவிதை தான். ஆனால், பலர் எழுத முயற்சிக்கும் போது கவிதையில் இருந்தே தொடங்குகின்றனர். அதனாலையே கவிதையில் நவீன், புதுக்கவிதை, மரபு என்று பல பிரிவுகள் உருவானது. பல வாசகரகள் இத்டனை பிரிவுகளை புரிந்து கொண்டு வாசிக்க வேண்டியதாக இருந்ததால் கவிதையை தொடங்கிவிட்டனர்.

கவிதையை ஒதுக்கிய வாசகர்களாலும் ஒதுக்க முடியாத கவிதை - ஹைக்கூ கவிதை என்று சொல்லலாம். மூன்று வரிகளில் மூன்று பக்க அனுபவத்தை கொடுக்க கூடியது ஹைக்கூ கவிதை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஹைக்கூ கவிதைகள் எழுதிய பதிவர்களை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

இந்த ஹக்கூ கவிதைகளை விமர்சனம் செய்வதை விட படித்து உணர்வதே சிறந்தது என்று நினைக்கிறேன்.

முதல் பதிவாக பிஸ்மில் ரசிக்கின் ஹைக்கூ கவிதைகள்.

அணுகுண்டு

அறிவியலின் 
 படைப்பில்
 பூகம்பம்... 

பசிக்கொடுமை

எதுவும் விளையாத 
சமவெளிப் பகுதி 
ஏழையின் வயிறு 

மேலும் இவரது கவிதைகளை வாசிக்க
 *
அடுத்து, நாம் பார்க்க இருக்கும் பதிவர் ஜோ.சம்யுக்தா கீர்த்தி உடையது. இவரது "தாலி" மற்றும் "கணவன்" பற்றிய ஹைக்கூ கவிதை ஈர்ப்பாக இருக்கிறது.

தாலி

பெண்ணவளுக்கு 
துணைவனின் 
உத்தரவாதம்! 

கடவுள்

நேற்றையதினமே 
எதிர்கால 
வித்திட்டவன்! 

மேலும் இவரது கவிதைகளை வாசிக்க....
 *

அரசியலை பற்றி பதிவிடும் கோவி.கண்ணன் அவர்கள் ஹைக்கூ கவிதையும் எழுதுவார் என்பதில் இந்த பதிவில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

பெற்ற கடன் 

மணக்கோலத்தில் மகள் 
பெற்ற 'கடன்' 
கண்ணீருடன் தந்தை !

*
அஸீஸ் நிஸாருத்தீன் தனது ஒவ்வொரு ஹைக்கூ கவிதைகளையும் பதிவாக பகிர்ந்திருக்கிறார். குரு என்ற பதிவர் தனது ஹைக்கூ கவிதைகளை இமேஜாக பகிர்ந்து இருக்கிறார்.

பிச்சைக்காரன் சாவில் 
இறந்து கிடக்கின்றன 
சில்லறைகள்

கண்ணன் சேகரன் என்ற பதிவர் தனது 'ஹைக்கூ' தொகுப்பை நூலாக கொண்டு வராமல், ஒரு பதிவாக வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறார். 
*

ஹைக்கூ கவிதைகளை பற்றி எழுதும் போது இவருடைய பதிவைப் பற்றி சொல்லாமல் எழுத முடியாது. ஹைக்கூ கவிதைகளை பல நூல்கள் எழுதியிருக்கும் இரா.ரவி அவர்கள். மற்றவர்களின் ஹைக்கூ கவிதை நூல்களுக்கு எழுதிய விமர்சனத்தையும் நூலாக தொகுத்திருக்கிறார்.

ஹைக்கூ ( சென்றியு ) 

பாலைவன வெயிலில்
நடந்தும் வியர்ப்பதில்லை
ஒட்டகம் !

 *
 “ஹைக்கூ வாங்கலையோ ஹைக்கூ” என்ற நகைச்சுவையாக கே.ஜி.ஜவஹர்லால் தலைப்பு வைத்தாலும், கீழ் காணும் இவரது ஹைக்கூ கவிதை ரசிக்கும் படியாக இருந்தது.

மழைக்கு ஒதுங்கியதில்லை
எங்கள் பள்ளியில்
கூரை இல்லை மேலும்

இவரது கவிதைகளை வாசிக்க....

*

ஒரு சில கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று தலைப்பு வைத்துக் கொண்டு ஐந்து, ஆறு வரிகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பதிவை இதில் குறிப்பிட்ட விரும்பவில்லை. ஹைக்கூ கவிதைகளை பற்றி எழுத விரும்பும் பதிவர்கள் சுஜாதா எழுதிய "ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம்" (உயிர்மை வெளியீடு) நூலை படித்தால் உதவியாக இருக்கும்.

மேலும், பரிதி.முத்துராசன் ஜப்பானிய முன்னனி கவிஞரான டானிகுச்சி ஹைக்கூ கவிதைகளை பரிதி.முத்துராசன் பகிர்ந்துள்ளார். அவர்களுடைய வலைப்பதிவில் ஹைக்கூ கவிதைகள் பற்றி பல விளக்கங்கள் தந்துள்ளார். பதிவர் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் நாளை பார்க்கலாம்.

11 comments:

  1. அறியாத பல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிட வலை பக்கங்களை படித்தததில்லை . நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  3. வணக்கம்...!!!
    இந்த வலைப்பூக்கள் எல்லாம் நல்லதொரு அறிமுகம். என்னை மாதிரி புதுசா எழுத வரவங்களுக்கு நல பக்கங்களை அடையாளம் காண கண்டிப்பாக உபயோகமா இருக்கும். சந்தேகம் இல்லை. நான் ரொம்ப நாளாவே அறிவியல் பத்தி எழுதற வலைப்பூக்களை தேடிட்டு இருக்கேன். ஆனா, இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியல.
    உங்களுக்கு தெரிஞ்ச சில அறிவியல் பத்தி சொல்ற வலைப்பூக்களை இங்க சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  4. அறியாத பல அருமையான கவிதைத்
    தளங்களைச் சிறப்பான முறையில்
    அறிமுகம் செய்தமைக்கும்
    சிறப்பாக இவ்வார ஆசிரியர் பணிதொடரவும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. புதிய தளங்கள் நன்றி அறிமுகத்திற்கு

    ReplyDelete
  6. ஹைக்கூ கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நல்ல அறிமுகங்கள்.... நன்றி.

    ReplyDelete
  9. மிக்க நன்றி குகன்.

    ReplyDelete
  10. அறியாத புதிய பதிவர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. குகன் ஐயா...நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(www.99likes.blogspot.com)

    ReplyDelete