Sunday, July 14, 2013

பிரேம் குமார் குகனிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் குகன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி பூரண மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                                : 007
இவர் அறிமுகப் படுத்திய  பதிவர்கள்   : 056
இவர் அறிமுகப் படுத்திய பதிவுகள்       : 030
இவர் பெற்ற மறுமொழிகள்                        : 063

இவர் உலக சினிமா, சிரிச்சுக்கிட்டே இருங்க, உலக அரசியல், அனுபவம் புதுமை, ஹைக்கூ தோட்டம், புத்தகங்கள் அறிமுகம், நன்றி அறிவிப்பு என்ற பல்வேறு தலைப்புகளில் பதிவுகள் எழுதி உள்ளார்.

நண்பர் குகனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

நாளை துவங்க இருக்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை அன்புடனும் ஆர்வத்துடனும் ஏற்க இசைந்துள்ளார் நண்பர் பிரேம்குமார்.சி. இவர் என் ரசனையில் என்னும் தளத்தில் 2010 ஆகஸ்ட்டில் இருந்து எழுதி வருகிறார். இது வரை 369  பதிவுகள் காதல் கவிதைகள், பிளாக்கர் டிப்ஸ், சினிமா, தொலைக்காட்சி, கவிதை உலா, கிரிக்கெட் என்னும் தலைப்புகளை லேபிளாகக் கொண்டு பதிவுகளை எழுதி இருக்கிறார்.

இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப் பிடாரம். தற்போது திருச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிகிறார்.  இவரது இரச்னைக்கு உட்பட்ட அனைத்தையும் இவரது தளத்தில் பதிகிறார். கவிதைகளின் காதலன் நான் எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். 

நண்பர் பிரேம் குமாரினை வருக ! வருக ! என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்று சிறந்த அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் குகன் 

நல்வாழ்த்துகள் பிரேம்குமார் சி

நட்புடன் சீனா 


7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வணக்கம்

    ஒரு வார காலமும் சிறப்பாக வலைச்சரத்தில் வலைப்பூக்களை தொகுத்து வழங்கிய திரு ,குகன் அவர்கட்கு என் நன்றிகள் உதித்தாகட்டும்

    அத்தோடு இந்த வாரம் புதிதாக வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் திரு, சி,பிரேம் குமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. குகன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டு
    இந்த வார ஆசிரியர் பொறுப்பை ஏற்று வந்திருக்கும் சகோதரர் பிரேம்
    குமார் அவர்களுக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
    பெருமை கொள்கின்றேன் .வருக வருக வந்து சிறப்பான முறையில்
    அறிமுக விழாவை நடாத்தி நற் பெறு பேறுகளைப் பெற்றுச் செல்லுங்கள் .
    மிக்க நன்றி பொறுப்பினை ஏற்றுக் கொண்டமைக்கு .

    ReplyDelete
  4. பிரேம் அவர்களே... அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பிரேம்....

    ReplyDelete
  6. வாய்ப்பு வழங்கிய சீனாவுக்கு நன்றி.

    பிரேம் குமார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete