வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம் .வலைசரத்தில் எழுத வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி .இந்த வாரம் முழுவதும் எனக்கு பிடித்த பெரிதும் ஈர்க்கின்ற தளங்களை அறிமுகபடுத்தலாம் என நினைக்கிறேன்.முதலில் எனது தளத்தை பற்றி இங்கே
தள அறிமுகம் :கவிதைகள் (www.kavithaiprem.in )என்ற தளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக எழுதி வந்தேன் .சமீபத்தில் டொமைன் புதுப்பித்தலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 195 followers களை இழந்து தற்போது என் ரசனையில் என்ற தளத்தில் எழுதி வருகிறேன் .எனது பதிவின் மூலம் கவிதைகள் தான் என்றாலும் அவ்வப்போது என் ரசனைக்கு உட்பட்ட சினிமா விமர்சனங்கள் பாடல் விமர்சனங்கள் மற்றும் எனக்கு தெரிந்த பிளாக்கர் டிப்ஸ் என பலவற்றை எழுதி வருகிறேன் அவை பற்றி கீழே
காதல் கவிதைகள்
என் ரசனைக்கு உட்பட்டு என் கைகள் கிறுக்குவது தான் கவிதைகள் என நினைக்கிறேன் .எனக்கு பிடிக்காமல் எந்த கவிதைகளையும் நான் வெளியிட்டதில்லை இருப்பினும் என் மனம் கவர்ந்த பல கருத்துரைகளை பெற்ற சில கவிதைகள் கீழே
- என் வீட்டு இணையத்தை பெண்ணுடன் ஒப்பிட்டு எழுதிய கவிதை இங்கே இணையமும் நீயும் ...
- கோபங்களின் ஆயுள் எவ்வளவு வென ஆராய்ந்த கவிதை என் கோபங்களின் ஆயுள் .
- மேலும் பல காதல் கவிதைகளை படிக்க இங்கே கிளிக்குங்கள்
- பதிவர் சீனு அவர்கள் நடத்தும் காதல் கடிதம் போட்டிக்காக நான் எழுதிய கடிதம் இங்கே ஆசையில் ஓர் கடிதம் ...(திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)
இணையத்தில் பணம் சம்பாதிக்க :
நம்ம பதிவுகளையும் copy paste அடிக்க ஆள் இருக்காங்களே என நினைக்க வைத்த பதிவு .இணையத்தில் உலவும் நேரங்களில் சிறிது சம்பாதிக்க நான் பணம் பெற்ற தளங்களின் தொகுப்பு payment proof உடன் இப்பதிவில்..
தினமும் 5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்
WINDOWS-8
WINDOWS 8 எனது லேப்பில் வாங்கியதும் அதை பற்றி நான் எழுதிய பதிவுகள் பலரால் படிக்கப்பட்டது .4TAMILMEDIA.COM என்ற தளம் எனது அனுமதி பெற்று வெளியிட்டது .நான் எழுதிய ஒரே தொடர் பதிவு இது தான் வாசிக்க இங்கு செல்லுங்கள் WINDOWS 8 ஓர் அலசல்
WINDOWS 8 எனது லேப்பில் வாங்கியதும் அதை பற்றி நான் எழுதிய பதிவுகள் பலரால் படிக்கப்பட்டது .4TAMILMEDIA.COM என்ற தளம் எனது அனுமதி பெற்று வெளியிட்டது .நான் எழுதிய ஒரே தொடர் பதிவு இது தான் வாசிக்க இங்கு செல்லுங்கள் WINDOWS 8 ஓர் அலசல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் / சினிமா/பாடல் விமர்சனங்கள்
- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-2 பற்றி நான் எழுதிய NVOK-2 யார் பெஸ்ட் சூர்யா -பிரகாஷ் ராஜ் ?பலரால் படிக்க பட்ட கருத்து இடப்பட்ட ஒரு பதிவு
- சமீபத்தில் எழுதிய விஜய் யின் தலைவா பட பாடல்கள் பற்றிய எனது ரசனை இங்கே விஜய் யின் தலைவா பாடல்கள் எப்படி ஓர் அலசல்
மேலும் பல பதிவுகள் எனது ரசனைக்கு உட்பட்ட அனைத்தையும் என் ரசனையில் தளத்தில் பதிந்து வருகிறேன்.நாளை முதல் எனது ரசனைக்கு உட்பட்ட பல தளங்களை பகிர்கிறேன் நன்றி
-பிரேமத்துடன்-
பிரேம்குமார் .சி
வாங்க பிரேம்.....
ReplyDeleteவாரம் முழுசும் அசத்த வாழ்த்துக்கள்
@ தமிழ்வாசி பிரகாஷ் //நன்றி அன்பரே வாழ்த்துக்கு ...
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரேம் வாரம் முழுதும் வாழ்த்து மழையில் நனையுங்கோ
ReplyDeleteசுருக்கமாக ஆயினும் சுய அறிமுகம் அருமை
ReplyDeleteஇவ்வார ஆசிரியர் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
பணம் சம்பாதிக்கும் தளங்கள் / தகவல்கள் உட்பட சுய அறிமுகம் நன்று... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் பிரேம் - அருமையான துவக்கம் - சுய அறிமுகப் பதிவுகள் அனைத்தையும் சுட்டிகளைச் சுட்டி - சென்ற் - பார்த்து - படித்து - இரசித்து - மறுமொழிகளூம் அங்கேயே இட்டு வந்தேன் - அனைத்துமே மட்டுறுத்தலுக்காகவே காத்திருக்கின்றன - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅறிமுகம் அருமை! நானும் உங்க பாலோயர்ஸ்ல ஒருவன்! திரும்பவும் இணைந்து விடுகிறேன்! நன்றி!
ReplyDelete@ கவியாழி கண்ணதாசன்//நன்றி கவிஞரே நனைய காத்து இருக்கிறேன்
ReplyDelete@Ramani S//நன்றி அன்பரே
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன் //நன்றி அன்பரே வருகைக்கு
ReplyDelete@cheena (சீனா)/மிக்க நன்றி ஐயா அனைத்தும் வெளியிடப்பட்டது
ReplyDelete@ s suresh//நன்றி அன்பரே இணைந்தமைக்கு
ReplyDeleteநல்ல துவக்கம்.
ReplyDeleteவாரம் முழுவதும் அசத்தலாய் பதிவிட வாழ்த்துகள்....
ப்ரேம் !!
ReplyDeleteஉங்க கவிதை எல்லாத்தையுமே
ஃப்ரேம் போட்டு வரவேற்பறையிலே வைக்கலாம்.
அப்படின்னு நினைச்சேன்.
ப்ரேம் !!
உங்க வாரம் நல்ல வாரமா இருக்க நானும்
ப்ரே பண்ணுவேன்.
ஃபீல் ரொம்ப பண்றீகளா !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
@வெங்கட் நாகராஜ் //நன்றி அன்பரே
ReplyDelete@ meenakshi //நன்றி மேடம் வருகைக்கு
ReplyDeleteயோவ் பிரேம்.., இந்த வாரம் நீங்களா வலைச்சர ஆபீசர்...?
ReplyDeleteவாழ்த்துக்கள்யா., கலக்குங்க.! :-)
@ வரலாற்று சுவடுகள்//ஆமா பாஸ் எங்க ஆளையே காணோம்
ReplyDelete