Tuesday, July 16, 2013

பதிவுலக கவிஞர்கள்-என் ரசனையில் ..


அன்பர்களுக்கு வணக்கம்

பதிவுலகம் எண்ணற்ற கவிஞர்களை கொண்டு இருக்கிறது .அவர்களுள் பொறுக்கி எடுத்த சில பதிவர்கள் கீழே



படைப்பாளி 

  • படைப்பாளி என்ற தளத்தில் எழுதி வரும் இவரின் கவிதைகள் புதிதாக இனிமையாக இருக்கும் .இயற்கையின் கோபம் என்று இவர் சொல்ல வருவதை படியுங்களேன் இங்கே பேராண்மை இல்லா இயற்கை!
காக்கை சிறகினிலே :
  • குறுஞ்கவிதைகளில் நம்மை குதுகலிக்க வைப்பவர்  இவர் .ஒவ்வோர் கவிதையும் ஆயிரம் சொல்லும் .மழை மௌனித்த நேரம் இங்கே 
சின்ன சின்ன சிதறல்கள் 
  •  அகிலா என்ற பெண் பதிவரின் வலைப்பூ இது .ஒவ்வோர் கவிதையும் கூற வந்ததை தெளிவாய் கூறி செல்கிறது .தளம் முழுவதும் ஏக்கம் வலி பிரிவு என காதலின் பல நிலைகளில்  கவிதைகள் இருக்கிறது 
  • பெண்களுக்கு எதிரான சட்டங்கள் முடக்கப்படுவது பற்றி இவரது பதிவு சித்திரமாய்...
  • மின்சாரம் எப்படி வந்தது இவரது இந்த  கவிதை சொல்கிறது  தேடிய காதல்

மனசு :

  • மனசு என்ற வலை பதிவில் கவிதையோடு பலவற்றையும் எழுதி வரும் குமாரின் கவிதைகளில் சமுதாய கோபம் கொப்பளிக்கிறது .உண்மையும் கூட .இவரது குடைக்குள் காதல் எவ்வளவு உண்மை .
  • இவரது காதல் மனைவி கவிதையை படித்தால் கல்யாண  ஆசை வரக்கூடும் .அத்தனை இயல்பாக அழகாக இருக்கிறது 
                           -இறுதியாக ஆனால் சிறப்பாக -

கரை சேரா அலை 
  • கவிதையை நேசிக்கும் பலருக்கும் இத்தளம் தெரிந்துருக்கும் .எனக்கு பிடித்தமான ஒரு தளம் .அரசன் தளம் முழுவதும் காதல் கவிதைகள் கொட்டி கிடக்கின்றன .
  • காதலி வெளியூர் சென்று இருக்கும் வேலைகளில் அரசன் தேடுவது இங்கே படியுங்கள் படுக்கை அறையில் ...
இன்னும் பல பதிவுலக கவிஞர்கள் இந்த பதிவுலகில் கவிதைகளை பிரித்து 
மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.கவிஞர்களுக்கு கிடைக்கும் கருத்துரைகளும் பக்க பார்வைகளுமே அவர்களை மேலும் பல கவி படைக்க உந்தும் .நாளை மற்றுமோர் தலைப்பில் சந்திக்கிறேன் 

                                                                                                               -பிரேமத்துடன்-

                                                                                                              பிரேம்குமார் .சி 


22 comments:

  1. அனைத்தும் தொடரும் நல்ல கவி தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களது அறிமுகத்தில் எனது கவிதைகளையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி...

    அறிமுகம் ஆன வலைச்சரப் பதிவை நான் பார்க்கும் முன்னரே எனது அறிமுகம் குறித்தான தகவலை எனக்குத் தெரிவித்த தனபாலன் சார் அவர்களுக்கும் நன்றி.

    மேலும் என்னுடன் அறிமுகமான அத்தனை கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    தொடருங்கள்... தொடர்கிறோம்....

    ReplyDelete
  3. இந்தவார பொறுப்பாசிரியர் திரு.பிரேம் சி.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அறிமுகமான அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் மீண்டும் ஒருமுறை எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்... நீங்கள் அறிமுகப்படுத்தியர்கள் அனைவரும் பழையவர்கள்.... அடுத்த பதிவில் புதியவர்களை அறிமுகப் படுத்துவீர்கள் என நம்புகிறேன்...

    ReplyDelete
  6. எனது வலைப்பூவை இங்கு மறுபடியும் கண்டேன்...நன்றி நண்பரே...

    இந்த அறிமுகம் மேலும் நிறைய நல்ல கவிதைகள் படைக்க எனக்கு ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    நன்றி...

    ReplyDelete
  7. @இரவின் புன்னகை //எனக்கு இந்த தளங்கள் அனைத்தும் புதியது அரசன் தளத்தை தவிர அதனால் தான் பகிர்ந்தேன் அன்பரே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் எனது வலைப்பூவையும் கோர்த்து தொடுத்து மணம் பரப்பியதற்கு மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே...

    ReplyDelete
  10. வணக்கம்

    இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. அறிமுக கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள்! நன்றி!

    ReplyDelete

  12. வணக்கம்!

    அழகு வலைகளை ஆழ்ந்தளித்தீா்! நன்றி!
    பழகும் தமிழின் பயன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  13. என் ரசனையில், காதல் கவிதைகள், பிரேம்.சி, வலைச்சரம் - mikka nanru. Eniya vaalththu...here Kaathal..also.....http://kovaikkavi.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

    ReplyDelete
  14. @ திண்டுக்கல் தனபாலன்//நன்றி அன்பரே வருகைக்கு

    ReplyDelete
  15. @சே. குமார்//நான் செய்ய வேண்டியதை அவர் செய்து இருக்கிறார் நன்றி அன்பருக்கு ..

    ReplyDelete
  16. @Kayathri//நன்றி மேடம் வருகைக்கு

    ReplyDelete
  17. @ அகல்//நன்றி அன்பரே

    ReplyDelete
  18. @Ahila D//நன்றி மேடம்

    ReplyDelete
  19. @kovaikkavi, கி. பாரதிதாசன் கவிஞா் , s suresh,2008rupan ,படைப்பாளி , கோவை ஆவி,கவிதை வீதி... // சௌந்தர் //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பர்களே

    ReplyDelete
  20. அட, எல்லாருமே நான் தொடர்ந்து வாசிக்கும் தளம்தான். எல்லாரும் நல்லாவே எழுதுவாங்க. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  21. @ ராஜி //நன்றி மேடம்

    ReplyDelete