வணக்கம் நண்பர்களே, சகோதர சகோதரிகளே !
ஒரு வார காலத்துக்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பதிவு எழுதவந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப்படி ஒரு வாய்ப்பு அளித்ததற்கு மதிப்புக்குரிய சீனா ஐயா அவர்களுக்கும் திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதே நேரத்தில் நான் மேலும் சிலருக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரத்துக்கு வந்திருக்கிறேன். அவர்கள் - என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய பதிவர்கள். கடுமையான பணிச்சுமை, நேரமின்மை போன்ற காரணங்களால் எழுத முடியாமல் துவண்டிருக்கும் வேளையில் ஒரு வலைச்சர அறிமுகமும் அதனைத்தொடர்ந்து வரும் பார்வையாளர்களின் கருத்துகளும் புத்துணர்வு அளிக்கும் விதமாக இருக்கும் என்பது நானே உணர்ந்த உண்மை. அறிமுகப்படுத்திய அன்றே அந்த ஆசிரியர்களுக்கு பின்னூட்டத்தில் எத்தனை பெரிதாக நன்றி சொல்லிக்கொண்டாலும் அது அவர்கள் செய்த பணிக்கு ஈடாகாது. ஆகவே ஸ்கூல் பையன் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு இந்த முதல் நாளில் வலைச்சர ஆசிரியராக நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இதோ, அந்தப் பதிவர்கள் தேதி வாரியாக:
1. திடங்கொண்டு போராடு சீனு - 31.01.2013
2. தி.தமிழ் இளங்கோ - 24.02.2013
3. அருணா செல்வம் - 24.03.2013
4. பிச்சைக்காரன் - 24.05.2013
5. கவிநயா - 01.06.2013
இவர்களைத் தவிர ஆறாவதாக கடந்த வார ஆசிரியர் சக்கரகட்டி அவர்களும் 06.08.2013 அன்று ௦என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு நன்றி.
====================
என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவருக்கு ஒரு பெரிய பிரச்சனை. மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கோ இரண்டு கால்களும் வளைந்தே இருந்தது. அதனை சரி செய்ய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிவிட்டனர். இதனால் மனமுடைந்த அவர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து கால்கள் சரியாகிவிட்டால் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை நடந்தே வந்து தரிசிப்பதாக வேண்டியிருந்தார். ஒருமுறை இருமுறையல்ல. மாதா மாதம், அதுவும் வாழ்நாள் வரை. வேண்டியது போலவே அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது, குழந்தைக்கும் கால்கள் சரியானது. அன்றிலிருந்து இன்று வரை நண்பர் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் மதியம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு ரயிலேறி விடுவார். நானும் இவருக்குத் துணையாக பலமுறை பாத யாத்திரையாக திருப்பதி சென்றிருக்கிறேன். அப்படி சென்று வந்ததையே முதல் பதிவாக பதிந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
கடந்த வருடத்தில் ஒரு நாள் அலுவலக நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து ஒரு சுற்றுலா சென்றுவரலாம் என்று முடிவு செய்திருந்தோம். அதற்காக சிறப்பு அனுமதியும் வாங்கியிருந்தோம். ஒரே துறையைச் சேர்ந்த ஐந்து பேர் விடுப்பு எடுப்பதற்காகவே அந்த சிறப்பு அனுமதி. ஏதாவது ஒரு வித்தியாசமான இடத்துக்குச் சென்று பொழுதைக் கழிக்க வேண்டி இணையத்தில் தேடியதில் ஐவருக்குமே கேரள மாநிலம் ஆலப்புழை சிறந்ததாகப் பட்டது. அங்கு போன அனுபவமும் அங்கே அனுபவித்ததும் பயணக்கட்டுரையாக:
ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிடுவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சாதாரண ஹோட்டல்களைவிட நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம். வித்தியாசமான ஹோட்டல்களைத் தேடிப்பிடித்து சாப்பிட்டிருக்கிறேன். அவற்றில் சில
ஹோட்டல்களில் சாப்பிடுவது போலவே சினிமா பார்ப்பதென்றால் மிகவும் பிடிக்கும், அதுவும் முதல் நாளே. சினிமா விமர்சனம் எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும் அதிக நண்பர்கள் வருவதற்காகவும் மற்ற நண்பர்களின் வேண்டுகோளுக்காகவும் எழுதி வருகிறேன். நான் எழுதிய பதிவுகளிலேயே மிகவும் அதிக பார்வையிடப்பட்ட பதிவு ஒரு சினிமா விமர்சனமே. இதோ அந்த நம்பர் ஒன் பதிவு.
ஹரிதாஸ் - சினிமா விமர்சனம் (நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த சினிமா விமர்சனம்)
திடீரென்று ஒரு கவிதை உதயமாகும் என் மனதில். அது நன்றாக இருக்கிறதோ இல்லையோ, பதிவிடவேண்டும் என்று என் மனம் கிடந்தது துடிக்கும். அப்படிப் பதிவிட்டதில் நன்று என்று அனைவராலும் பாராட்டப்பட்ட கவிதைகளுக்கான சுட்டிகள் கீழே.
கவிதையைப் போலவே கதையும் திடீரென்று உதயமாகும். ஆனால் சிறுகதைகளை உடனடியாக பதிவிட முடியாது. நீட்டி வளர்த்து வார்த்தைகளை சரிபார்த்து என பல வேலைகளுக்குப் பின்னரே வெளியிடுகிறேன். அப்படி வெளியிட்டும் சில தவறுகள் பின்னூட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. நான் எழுதிய கதைகள் உங்கள் பார்வைக்கு
வலைப்பூ என்பது நாம் நமது அனுபவங்களைப் பதிவு செய்யும் டைரி என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை என் வலைப்பூவில் பதியவிருக்கிறேன், பதிந்ததில் உங்கள் பார்வைக்கு
நண்பர்களே, இன்று என் வலைப்பூவில் வெளியாகியிருக்கும் ரத்தம் பார்க்கின் என்ற சிறுகதையையும் படியுங்கள். கருத்துக்களைப் பகிருங்கள்.
நாளை: எனது தேடல்கள்
நன்றி
vaazhthukkal sako..
ReplyDeleteநன்றி சீனி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி விக்கி அண்ணே...
Delete.ஸ்கூல் பையன் ஆசிரியர் ஆனது சிறப்பு. .நல்ல பதிவுகளை அறிமுகம் செய்ய வாழ்த்துக்கள்.
ReplyDeleteகண்டிப்பாக செய்கிறேன் சார்....
Deleteஅசத்தலான தொடக்கம், சுயதம்பட்டம்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்கூல்பையன்
Good! :)
Deletereply comment option enabled in valaicharam
DeleteOk, Thanks...
Deleteஅருமையான தொடக்கம்.....
ReplyDeleteவாரம் முழுவதும் அசத்த வாழ்த்துகள் சரவணன்.
அசத்துகிறேன் வெங்கட் அண்ணா....
Deleteவருக!.. வருக!..பையன் மாதிரி தெரியவில்லை!.. ஸ்கூல் மாஸ்டர் மாதிரி அல்லவா தெரிகின்றது!...
ReplyDeleteஹா ஹா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..
Deleteதங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளும்படியாக
ReplyDeleteசுருக்கமான ஆயினும் முழுமையான அறிமுகம் அருமை
இந்த வார ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி ஐயா..... தங்களது வாழ்த்து எனக்கு பெருமை....
Deleteதங்களின் ஸ்கூல் பையனாய் இருந்தும் வலைச்சரம் ஆசிரியர்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஹா ஹா.... நன்றி ஐயா...
DeleteMy heartful wishes to you Dear School Paiyan...! asathunga...!
ReplyDeleteகடுமையான வேலை பளு இருந்தும் போனில் பின்னூட்டம் இட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா...
Deleteமிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஇவ்வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
நன்றி சகோதரி...
Deleteவாழ்த்துகள் நண்பா!!
ReplyDeleteநன்றி ஆனந்த்...
Deleteஸ்கூல் பையன் ஆசிரியனாவது சாதனைதான் வாழ்த்துக்கள் & பாரட்டுக்கள்
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழரே...
Deleteவாழ்த்துக்கள்!!!!!
ReplyDeleteநன்றி சகோதரி...
Deleteவலைச்சரப்பணிக்கு இனிய வாழ்த்துகள்..!
ReplyDeleteநன்றி அம்மா..
Deleteவலைச்சரப்பணிக்கு இனிய வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteவாழ்த்துக்கள் மாணவ ஆசிரியருக்கு பணி சிறக்கட்டும்
ReplyDeleteநன்றி அக்கா...
DeleteCongrats brother! I hope you will do it better!
ReplyDeleteநன்றி நண்பா...
Delete// சாதாரண ஹோட்டல்களைவிட நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம்.// நட்சத்திர பதிவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டலில் சாப்பிடுவது தானே சிறப்பு
ReplyDeleteஎன்னால் பாராட்டப்பட்ட காலும் அறையையும் விட்டுவிட்டதால் நான் இதனை கண்டித்து இன்று வெளிநடப்பு செய்து நாளை வருகிறேன் :-))))))))
நட்சத்திர பதிவரா.... ஹா ஹா....
Deleteகாலும் அரையும் கவிதையை பப்ளிக் படித்தால் நாளை பின்னூட்டம் இட ஆள் இருக்கமாட்டார்கள் என்பது உறுதி...
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...நீங்கள் குறிப்பிட்டுள்ள சிறந்த பதிவுகள் சிலவற்றைப் படித்து விட்டேன்....
ReplyDeleteநன்றி சகோதரி...
Deleteதேடல்கள் சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி கோகுல்...
Deleteவாங்கோ ஜி வாங்கோ.. ஸ்கூல் பையா இந்த வாரம் முழுசா கலக்குயா..
ReplyDeleteநன்றி ஹாரி...
Deleteசிறப்பான வாரத்தை எதிர்நோக்கி.....
ReplyDeleteவாழ்த்துக்கள்
தங்கள் ஆதரவு வேண்டி....
Deleteஸ்கூல் பையன் வலைசர ஆசிரியர் ஆனதன் மூலம் பட்டதாரி ஆகிவிட்டார் என்று தோன்றுகிறது. ஆசிரிய பதவிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹா ஹா.... நன்றி அம்மா...
Deleteஇந்த வார ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteVetha.Elangathilakam.
நன்றி சகோ...
Deleteசாப்பாட்டு பிரியரா நீங்க..? (சும்மா) ஆமா இனிம ஸ்கூல் பையன் பெயர் வலைக்கு தகாது தகாது...
ReplyDeleteபேரை மாத்திரவா? இதுவே நல்ல பேரா இருக்கே...
Deleteவாழ்த்துக்கள் அண்ணே , முடிந்தவரை புதியவர்களை அறிமுகம் செய்யுங்கள்
ReplyDeleteகண்டிப்பாக ஒவ்வொரு நாளும் புதியவர்கள் இடம்பெறுவார்கள்...
Deleteதோழமைக்கு வாழ்த்துகள். தங்கள் பணி இனிதே தொடரட்டும்..:)
ReplyDeleteநன்றி சகோ....
DeleteVaazhthugal...
ReplyDeleteநன்றி வெற்றிவேல்...
Deleteஅட்டகாசமான சுய அறிமுகம். தொடர்ந்து கலக்குங்கள். . .
ReplyDeleteநன்றி அண்ணே....
Deleteஅறிமுகப்படுத்தியவர்களை குறிப்பிட்டது சிறப்பு... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணே...
Deleteசகோதரிக்கு Major Operation (வயிற்றில் கட்டி) நல்லபடியாக operation முடிந்து விட்டது...
ReplyDeleteஇணையம் கொடுத்த நண்பருக்கு நன்றி...
ஆடி மாதம் ஆடித்தான் போயுள்ளேன்...
விரைவில் இணையம் வருகிறேன்...
சகோதரிக்கு உடல் நலம் தேறவேண்டும்...
Deleteஆடி முடிந்து ஆவணி வந்தால் எல்லாம் நன்மையே.... நல்லதே நடக்கும்...
இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் அவ்வப்போது இணையத்தையும் கவனிக்கிறீர்களே.... பெரிய விஷயம் தான்...
காடாறு மாதம் அப்பா...
ReplyDeleteநாடாறு மாதம் அப்பா...
ராஜாக்கள் கதை இது தான்ப்பா...
நம்ப நிலை தேவலையப்பா...!(?)
முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு...!
இல்லை ஓடுற வரைக்கும் ஓடு...!
இதுக்கு போய் அலட்டிக்கலாமா...?
இதுக்கு போய் அலட்டிக்கலாமா...?
என்னடா பொல்லாத வாழ்க்கை...?
அட என்னடா பொல்லாத வாழ்க்கை...!
நேரம் சரியில்லை என்றால் எதுவும் நடக்கும்... கடவுளை நம்பினோர் கைவிடப்படார்....
Deleteவாழ்த்துக்கள் ஸ்கூல் பையனுக்கு! ஃபீல்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆகமுன்னமே உங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு! இதுவே உங்கள் திறமைக்கு சரியான ஆதாரம்! தொடர்ந்து கலக்குங்கள்!!!
ReplyDeleteநன்றி பிரபல எழுத்தாளர் மணி மணி...
Deleteவணக்கம்
ReplyDeleteதிரு சரவணன் (அண்ணா)
அழகாக வலைப்பூக்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி அண்ணா
இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் தம்பி (தம்பியா!)
Deleteவாழ்த்துக்கள் ஸ்கூல் பையன்
ReplyDeleteமைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒரு வசனம் வரும்...
Deleteஊர்வசி: கிராமும் குக்கு... நீங்களும் குக்கா....
அதே போல்...
என் பேரும் சரவணன், உங்க பேரும் சரவணனா....
என் முதல் பதிவும் திருப்பதி பற்றியது.... உங்க பதிவுமா...
ஹா ஹா ஹா...
வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteவலைச்சரத்தோடு நின்று விடாமல் வாழ்நாள் முழுவதும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....
http://kambarkal.blogspot.com/
http://tamilisbest.blogspot.com/
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.... இனி உங்களது தளத்தையும் தொடர்கிறேன்..
Deleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteசீர்திருத்தப் பட்ட வலைச்சரம்
தமிழ் களஞ்சியம்
நன்றி அசோக் குமார்...
DeleteUKG படிக்கிறபோதே Phd லெவலுக்கு உயர்ந்துவிட்ட ஸ்கூல் பையனுக்கு வாழ்த்துகள் !மனிதம் தேடும் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள் என ஆசையோடு [?]எதிர்ப் பார்க்கிறேன் !
ReplyDeleteநன்றி ஐயா.. தினம் தங்களது நகைச்சுவைகளை படித்துவருகிறேன்... நன்றி....
Deleteவாழ்த்துக்கள் ஸ்கூல் பையன்.இந்த வாரம் வலைச்சரத்தில் கலக்குங்கள்
ReplyDeleteநன்றி டினேஷ்சாந்த்...
Deleteநன்றி சென்னை பித்தன் ஐயா...
ReplyDelete
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்கூல் பையன்
நன்றி ரூபக்...
Delete
ReplyDeleteரத்த தானம் பற்றிய உங்களின் சிறுகதை அருமை.
நன்றி அண்ணே...
Deleteசுயதம்பட்டம் வெகு அருமை.
ReplyDeleteபதிவர் அறிமுகங்களையும் சிறப்புற செய்ய நல்வாழ்த்துக்கள்!
நன்றி நிஜாமுதீன்....
Deleteஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டு இங்கே வருகை தந்தமைக்கு
ReplyDeleteஎன் இனிய வாழ்த்துக்கள் சகோ .
நன்றி சகோதரி...
Deleteவாழ்த்துகள்... வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி...
Deleteவலைச்சரப்பணிக்கு இனிய வாழ்த்துகள்
ReplyDelete