வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பினை ஏற்ற சக்கரக்கட்டி பதிவர் , தமது வலைச்சர பணியை சிறப்பாக முடித்து, நம்மிடமிருந்தும், உங்களிடமிருந்தும் விடைபெறுகிறார்.
இவர் தமது வலைச்சர வாரத்தில், பதிவர்களையும், பதிவுகளையும் தேர்ந்தெடுத்து தனித்தனி தலைப்புகளில், சிறு குறிப்புகளுடன் பதிவிட்டு, வாசகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார்.
எழுதிய பதிவுகள்:
சக்கரகட்டி என்னும் நான் ? (முதல் நாள்)
கலக்கல் பதிவர்களும் - பதிவுகளும் (இரண்டாம் நாள்)
திரை விமர்சகர்களும் - விமர்சனங்களும் (மூன்றாம் நாள...
அறிமுகப்படுத்திய பதிவர்கள்: மொத்தம் 58
பெற்ற பின்னூடங்கள்: சுமார் 175
சக்கரக்கட்டி அவர்களை சென்று வருக என வாழ்த்தி வழியனுப்புவதில் உங்களுடன் இணைந்து நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பினை ஏற்க ஸ்கூல்பையன் என்ற வலைப்பூவை எழுதி வரும் திரு. சரவணன் அவர்களை அழைக்கின்றேன்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இவர், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்று, கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2006-ம் ஆண்டு முதலே வலைப்பூக்களை வாசித்து வரும் இவர், பதிவுலகில் தனக்கென வலைப்பூவை உருவாக்கியது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தான்.
இவர் தன்னைப்பற்றி, வலைப்பூக்களை பற்றி, " இன்னதென்று இல்லாமல் கதை, கட்டுரை, நகைச்சுவை, ஜோதிடம், ஆன்மீகம், சினிமா என்று எல்லாவற்றையும்
படிக்கிறேன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் ஸ்கூல் பையனாகவே
இருக்கிறேன்" என சொல்கிறார்.
ஸ்கூல்பையன் அவர்களை வருக, வருக என வரவேற்று, ஆசிரிய பணியில் அமர்த்துவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
நல்வாழ்த்துக்கள் சக்கரக்கட்டி,
நல்வாழ்த்துக்கள் ஸ்கூல்பையன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...
சோதனை பின்னூட்டம்!
ReplyDeleteநாலை முதல் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறேன்... அனைவரது ஆதரவை வேண்டி... நன்றி...
ReplyDeleteவாழ்த்துககள் ஸ்கூல் பையன்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதிரு. சரவணன் (அண்ணா)
கடந்த வாரம் பலவகைப்பட்ட வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி திறமையாகப்பணியை நிறைவு செய்த சக்கர கட்டிக்கு எனது நன்றிகள் பல,பல,
இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் சரவணன்(அண்ணா)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் (தம்பி)....
Deleteபல்சுவை வாரமாக கலக்கிய சக்கரக்கட்டிக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஸ்கூல்பையனாக வந்து ஆசிரியராய் கலக்க இருக்கும் இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..
கலக்குங்க... தொடர்ந்து வாசிக்கிறோம்...
நன்றி குமார்...
Deleteவாழ்த்துக்கள்..கலக்குங்க..
ReplyDeleteநன்றி ப்ரேம்...
Deleteவாருங்கள் சரவணர்ர்ர்ர்ர்.. வந்து ஒரு கலக்கு கலக்குங்கள்...
ReplyDeleteகலக்கிருவோம் சீனு...
Deleteபல நல்ல தளங்களை அறியத் தந்த சக்கர கட்டியைத் தொடந்து .. ’’வருக!.. வருக!.. ஸ்கூல் பையன்..’’ தங்கள் வரவு நல்வரவாகுக!..
ReplyDeleteவாழ்த்துகள் சரவணன்
ReplyDeleteவருக! ஸ்கூல் பையன்
ReplyDeleteவலைசர ஆசிரியர் பொறுப்பேற்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அறிமுகப் படுத்தும் வலைப் பதிவருக்கும் தகவல் தெரிவித்தல் நன்று. எந்தப் பதிவை குறிப்பிடுகிறீர்களோ அந்தப் பதிவின் கருத்துப் பெட்டியில் தகவல் தெரிவிப்பதை விட அவருடைய சமீபத்திய பதிவில் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteசென்ற வார வலைச்சர ஆசிரியர் சக்கரகட்டிக்கு பாராட்டுகள்....
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் ஸ்கூல் பையன் சரவணனுக்கு வாழ்த்துகள்.....
இவ்வார ஆசிரியராக பொறுப்பேற்கும் ஸ்கூல் பையன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சரவணன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சரவணன்...(இப்போதான் உங்க பெயர் தெரிஞ்சிருக்கேன்)
ReplyDelete