வணக்கம் நண்பர்களே, சகோதர சகோதரிகளே
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். இன்றைய கலக்கல் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் முன் ஒரு சிறு விஷயம். ஹீரோ என்பவர் யார்? சினிமாவில் நாற்பது அடியாட்களை ஒரே நேரத்தில் அடித்து துவம்சம் செய்து நம்மைக் கிறங்கடிப்பவரா? ஆனால் அவர்களைத்தான் நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம். நிஜ ஹீரோ என்பவர் கடும் குளிரிலும் மழையிலும் சிரமம் பாராது நமக்காக எல்லையில் காவல் காக்கும் வீரர்கள் தானே? இவர்கள் இல்லையென்றால் நாமெல்லாம் நிம்மதியாக வீட்டில் உறங்க முடியுமா? எத்தனை முறை தீவிரவாதிகளின் ஊடுருவல், அண்டை நாட்டு ராணுவத்துடன் சண்டை என்று செய்தித்தாள்களில் வாசிக்கிறோம்? இந்தப் பிரச்சனைகளில் தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேர்? இந்த சுதந்திர நாளில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து காவல் காக்கும் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
நம் பதிவுலகிலும் ஒரு ஹீரோ இருக்கிறார். அவர் திரு.சதீஷ் செல்லத்துரை அவர்கள். எல்லை பாதுகாப்பு படையில் இருக்கும் அவர் நேரம் கிடைக்கும்போது பதிவு எழுதிவருகிறார். இந்த சுதந்திர நாளில் அவரது படைப்புகளை இங்கே அறிமுகம் செய்வதில் பெருமைகொள்கிறேன்.
இவரது பதிவில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோடு பற்றியும் வேலிகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார். பைனாகுலரில் செல்போன் கேமரா கொண்டு பாகிஸ்தானின் observation point-ஐ படம் பிடித்திருக்கிறார். அப்படியே இவர் வேலை செய்யும் அலுவலகத்தையும் பாருங்கள்.
ஸ்னைப்பர் என்கிற அதி நவீன துப்பாக்கியைப் பற்றி அலசி ஆராய்கிறார் பாருங்கள்.
படித்தீர்களா? இவரும் நம் நிஜ ஹீரோக்களில் ஒருவர் தானே? இனி நாம் கவிஞர்களைப் பார்க்கலாம்.
1. கவிஞர் கி. பாரதிதாசன்
கவிதை உலகில் இவரைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. இவர் இயற்றிய கவிதைகளில் எனக்குப் பிடித்தவை
2. புலவர் ராமானுஜம்
புகழ்பெற்ற கவிஞரான இவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த சில.
இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே (மனைவியை இழந்த ஒரு வயோதிக கணவனின் நிலைப்பாடு)
3. அருணா செல்வம்
கவிதை மட்டுமின்றி கதை, நிமிடக்கதை என்று அசத்துகிறார். இவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த சில.
4. ரமணி
இவர் கவிதை உட்பட எல்லா விதமாகவும் எழுதுகிறார். இவரது கவிதைகளில் சில
5. தென்றல் சசிகலா
கிராமிய மணம் வீசும் தென்றலின் கவிதைகளில் சில
6. கவியாழி கண்ணதாசன்
கண்ணதாசன் என்ற பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ, தினம் தினம் கவிதைகளை எழுதித் தள்ளுகிறார். அத்தனையும் எதுகை மோனையுடன் நயம். இணைய எழுத்தாளர் என்பதையும் மீறி இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். இவரது கவிதைகளில் சில..
கவிஞர் வாலியின் மறைவு தாங்காமல் அவருக்கு நம் கவிஞர் எழுதிய இரங்கற்பா...
7. தளிர் சுரேஷ்
பல்சுவை மன்னரான இவரின் கவிதைகளில் சில
8. கவிதை வீதி சௌந்தர்
தன் படைப்புகளுக்கு கவர்ந்திழுக்கும் தலைப்பு வைப்பதில் கில்லாடி இவர். இவரது கவிதைகளில் சில.
9. சீராளன்
காதல் கவிதைகள் எழுதுவதில் வல்லவர். இவரது தளம் முழுவதும் கவிதைகளால் நிரம்பிக்கிடக்கிறது.
10. சேஷாத்ரி
கலக்கல் கவிஞர்களின் அணிவகுப்பு தொடரும்....
இன்று என் தளத்தில் "ரத்தம் பார்க்கின் - நிறைவுப்பகுதி" விரைவில் வெளிவரும்.
நண்பர்களே, அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நன்றி...
nanbaa.. Soopar pathivar introductions.
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteசிறந்த பதிவர்களுடன் என்னையும் இணைத்து
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
நன்றி ஐயா.. தங்களுக்கும் என் மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
Deleteஇனிய சுதந்திரம் என்றும் வாழ்க!..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் - கார்மேகக் கூட்டங்கள்!..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...
Deleteகவிதைப்பூங்காவில் தென்றலும் வீசியது கண்டு மகிழ்ந்தேன். சுதந்திர தின வாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கிறோம்.
ReplyDeleteதென்றல் இல்லாத கவிதை ஏது? நன்றி...
Deleteஅனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .உங்களுக்கும்
ReplyDeleteஎன் நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோ .
நன்றி சகோதரி...
Deleteசங்கத்து படைத் தளபதியை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteசீராளன் சேசாத்திரி இவர்களைத் தவிர மற்ற எல்லாரையும் படித்துள்ளேன்..
மற்றும் ஒரு தகவல் சதீஷ் அவர்களின் கவிதைகளும் சிறப்பாக இருக்கும் அதனால் கலக்கல் கவிஞர்கள் என்ற தலைப்பின் கீழும் அவர் மிகப் பொருத்தமானவர்
இன்றைய தேதிக்கு சதீஷ் அவர்களின் படைப்புகளில் நான் அறிமுகப்படுத்தியவையே பொருத்தமானதாக இருக்கும்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு...
Deleteசுதந்திர திருநாளும் அதுவுமாக சதீஷ் செல்லத்துரை அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..கலக்கல் கவிஞர்களில் சிலரைப்பற்றி மட்டும் முன்பு தெரியும்... மற்றவர்களை தற்போது அறிந்துகொண்டேன்.
ReplyDeleteநன்றி அண்ணே..
Deleteஅறிமுகத்துக்கு நன்றி.சுதந்திரதின வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteதிறமையான கவிஞர்களும் அருமையான அவர்தம் படைப்புக்களும்
ReplyDeleteபெருமையாக இங்கு அறிமுகமாகப் பகிர்ந்தீர்கள் சகோதரரே!
மிகமிகச் சிறப்பு!
உங்களுக்கும் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரி...
Deleteஇன்று அறிமுகமான எல்லா கவிஞர்களும் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநன்றி மணி....
Deleteகலக்கல் கவிஞர்களின் அணிவகுப்பு தொடரும்....///
ReplyDeleteதொடரட்டும்! இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள்! காத்திருக்கிறோம் ஸ்கூல் பையா :)
நிறைய பேர் இருப்பதால்தான் இரண்டு பாகங்களாக தொகுக்கிறேன்..... மிக்க நன்றி மணி...
Deleteஞாயிற்றுக் கிழமை முதல் கணிணி மக்கர் செய்து விட வலையில் உலவ முடியவில்லை! இன்று ஓரளவு சீர் ஆயிற்று! வலைக்குள் வந்ததுமே வலைசசரத்தில் அறிமுகமான செய்தியும் கிடைத்து இரட்டை மகிழ்ச்சி! என்னையும் கலக்கல் கவிஞர்களில் ஒருவனாக அங்கிகரித்து வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி! என்னோடு அறிமுகமானவர்களில் சீராளன் வலைப்பக்கம் மட்டும் நான் சென்றதில்லை! மற்றவர்களின் படைப்புக்களை ரசித்துள்ளேன்! அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ் அண்ணே...
Deleteசுகந்திர தினத்தன்று சதீஷ் அறிமுகம் சிறப்பு..... உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ரூபக்...
Deleteவணக்கம்
ReplyDeleteஇனிய சுதந்திர தினவாழ்த்துக்கள்
இன்று வலைச்சரத்தில் கலக்கல் கவிஞர்கள் என்ற தலைப்பில் அறிமுகம்மான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்...
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete
Deleteவணக்கம்!
பள்ளிப் பையன் எனும்பெயரில்
பதிவைப் படைக்கும் நற்றோழா!
துள்ளிக் குதித்து நீ..ஆடும்
துணிவைக் கண்டு வாழ்த்துகிறேன்!
அள்ளி அளித்த வலைப்பதிவின்
அழகைக் கண்டு சுவைக்கின்றேன்!
தள்ளிச் சாய்க்கும் இவ்வுலகில்
தமிழால் என்னை உயா்த்தினையே!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ஆஹா ஐயா... நன்றியைக் கூட பாடலாகப் பாடிவிட்டீர்களே... மிக்க நன்றி ஐயா...
Deleteஅனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சிவநேசன்...
Deleteஇன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்......
ReplyDeleteஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் அண்ணே...
Deleteஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.... அறிமுகம் செய்யப்பட்ட பெதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி..
Deleteநல்ல படைப்புகளை அறிமுகப் படித்தியதில் மகிழ்ச்சி
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி சார்...
Deleteஇன்றும் பல புதியவர்கள், சில தெரிந்தவர்கள். எல்லோருமே கலக்கல் கவிஞர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தொடரட்டும் உங்கள் ஆசிரியர் பணி.
ReplyDeleteஇனிய சுதந்திரதின வாழ்த்துகள்!
நன்றி அம்மா..
Deleteசுதந்திர தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்கும் கவிஞர்களை நல்லா அறிமுகம் செய்து
எங்களுக்கு சில பதிவுகளைச் சுட்டிக் காட்டியதற்கு
நன்றி ஸ்கூல் பையன்!
-- -- --------- ----------- --------- -- --
பாடலின் முதல் பகுதி, இந்தியத் தாய் திருநாட்டின்
பெருமைகளைப் பாடுகின்றது.
" பாடல் : 7
[குழுவினர்: எஸ்.பீ .பி. - எஸ்.ஜானகி ] :
என் தாயின் மணிக்கொடியே வாழ்வோடு சங்கமமானவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா
உன் மூன்று நிறங்களால் தாய் நாட்டின் மூலங்கள் தந்தவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா
இந்து கிறிஸ்து முஸ்லிம் பௌத்தம் சமணம்
உனது சபையில் ஒன்று அன்றோ?
நாங்கள் உண்ணும் சோறும் பருகும் நீரும்
அன்னை நீயே தந்ததன்றோ?
நீ வாழ்க தாயே! நீ வெல்க தாயே!
என்றும் எங்கள் கோட்டையில் ஜெயக்கொடி நீதானே!
லாலலலலாலா லலாலாலாலா
ஒ... ஒ... ஒ... ஒ...
;;இந்தியத் தாய் திருநாட்டின் பெருமை
நன்றி கலையன்பன்... தங்களது தளத்தை காண்கிறேன்...
Deleteஅனைவரும் அருமையான எழுத்தாளர்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...
நன்றி குமார்...
Delete
ReplyDeleteகுட்டிப் பையன் கொள்ளும்
சுட்டிக் குணங்கள் இன்றித்
தட்டிக் கொடுத்து தலைநிமிர
கொட்டிக் குவித்த வலைப்பூக்கள்
மெட்டுக் கட்டி நிற்கிறதே
கட்டிக் கரும்பு சுவைபோலே..!
அழகிய வலைப்பூக்களின் அறிமுகம் கண்டு பெருமைகொள்ளும் இவ் வேளையில் என் வலைப்பூவையும் அறிமுகம் செய்த ஸ்கூல் பையனுக்கு இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும், வலைச் சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வலைப்பதிவர்களையும் மனமார வாழ்த்தி நிற்கின்றேன்
நன்றி
வாழ்கவளமுடன்...!
எதுகை மோனையுடன் கூடிய தங்களது கவிதையை ரசித்தேன்.... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.....
Delete