Monday, August 5, 2013

சக்கரகட்டி என்னும் நான் ? (முதல் நாள்)



என் இனிய வலைச்சர அன்பான வாசகர்களே உங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மிக பிரபலமான சிறப்பாக எழுத கூடிய பதிவர்கள் ஆசிரியர்களாக பணி புரியும் இந்த வலைச்சரத்தில் எனக்கும் வாய்ப்பு அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் அண்ணன் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் முதலில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

சுய அறிமுகம்

சிறுவயது முதலே பள்ளிக் கூடத்தில் நடத்தும் பாடங்களை படிப்பதை விட சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாவல்கள்,வரலாறு போன்றவற்றை படிப்பதில் தான் ஆர்வம் இருந்தது. எனக்கு பிடித்த கவிதைகளை நோட்டில் எழுதி வைத்து கொள்வேன். அப்போதெல்லாம் எனக்கு படிக்க மட்டுமே பிடிக்கும் நாமளும் இது போல எழுதலாம் என்று தோன்றியது இல்லை.

எனக்கு இணையத்தில் வாசிக்கும் பழக்கமே 2011 ம் ஆண்டில் இருந்து தான் ஆரம்பம் ஆனது. அப்போது தான் நான் வீட்டில் கணினி வாங்கி இணைய இணைப்பு பெற்று இருந்தேன். அப்போது அறிமுகமானதே இந்த வலைத்தளங்கள். 

எத்தனை வலைத்தளங்கள், எவ்வளவு அற்புதமான கருத்துக்கள், என்ன ஒரு எழுத்துநடை என ஆச்சரியமாகி அனைத்து பதிவர்களின் தளங்களுக்கும் சென்று படிப்பேன். என்ன ஒரு நகைச்சுவையான எழுத்து நடை நமது பதிவர்களுக்கு. அப்படி படித்து நாமளும் ஒரு வலை தளம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றி நான் உருவாக்கியதே என்னுடைய இந்த வலைத்தளம் சக்கரகட்டி.

நாம் எத்தனை நல்ல செய்திகளை படித்து அதை மற்றவர்களும் படிக்க வேண்டும், பயன் பெற வேண்டும் என்று அதை நாம் பதிவு செய்தாலும் அது அதிகமான வாசகர்களை கவர்வது இல்லை. இந்த சினிமாவின் செய்திகளை பகிர்ந்தால் எத்தனை வாசகர்கள் படிக்கின்றனர். அப்படி போட்ட பதிவே இது. நான் எழுதிய பதிவுகளிலேயே அதிகமான வாசகர்களை சென்றது அந்த பதிவு தான். அதை படிக்க இங்கே கிளிக்குங்கள்.

நமது பதிவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் தலைப்பிட்டு பல்வேறு தகவல்களை ஒரே பதிவில் தருகின்றனர். அது போல நாமும் எழுத வேண்டும் என்று உருவானதே இந்த தலைப்பிலான பதிவு அதை படிக்க இங்கே  கிளிக்குங்கள்.

எனக்கு அறிவியல் தகவல்களை படிப்பது என்றால்ரொம்ப பிடிக்கும் நான் மட்டும் படித்தால்போதுமா? மக்களுக்கும் அறிவியல் செய்திகள் கூற நான் உருவாக்கிய கற்பனை மனிதரே இவர். அவரை பற்றி படிக்க இங்கே கிளிக்குங்கள்.

சாதனையாளர்களின் ஒவ்வொரு சொல்லும் அவர்களை போல நாமும் வாழ்கையில்  என்ற உத்வேகத்தை நமக்கு அளிக்கும் அவ்வாறு சாதனை புரிந்த சாதனையாளர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு உங்களுக்காக இங்கே

இரண்டாம் உலக போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே அவர் தான் அடால்ப் ஹிட்லர் அவரை பற்றிய சுவாரசியமான தொகுப்பு உங்களுக்காக அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

மக்களுக்காகவே வாழ்ந்து கடைசி வரை மக்களுக்காவே தொண்டு புரிந்த ஒரு மாபெரும் அரசியல் தலைவர். இவரது ஆட்சிக்காலமே தமிழக மக்களின் பொற்காலம். இனி இவரை போல் ஒரு தலைவன் நமக்கு மீண்டும் கிடைக்க போவது இல்லை. என்னை கவர்ந்த அரசியல் தலைவரும் இவரே அவரை பற்றிய தகவலுக்கு இங்கே  செல்லுங்கள்.

இனி என்னையும் எழுத தூண்டிய அந்த பதிவர்கள் யார்? அவர்களின் பதிவுகளில் என்னைக் கவர்ந்த பதிவுகளையும்,

நான் படித்த தளங்களை அதன் சிறப்புகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகின்றேன்.

மீண்டும் நாளை சந்திப்போம்.



இப்படிக்கு உங்கள் நண்பன் சக்கரகட்டி.

நன்றி!


39 comments:

  1. சுய அறிமுகம் நன்று... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என்றைக்கும் முதல் ஆளாக வந்து ஊக்கம் அளிக்கும் தனபாலன் அண்ணனிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. உங்கள் அறிமுகம் கலக்கல்....

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  4. அண்ணேன்...
    சக்கரகட்டி அண்ணேன்
    சுய அறிமுகம் என்று சொல்லி
    உங்கள் ஏழு பதிவுகளை
    என்னைப் படிக்க வைத்ததற்கு...
    அதிலும்
    பெருந்தலைவர் பற்றிய பதிவு
    மிகவும் சிறப்பானது....
    நீங்க ரொம்ப நல்லா வந்திட்டீங்க,,,

    ReplyDelete
  5. மிக்க நன்றி சே.குமார் எல்லாம் உங்கள் உற்சாகம் தான்

    ReplyDelete
  6. ஹாஹா பரிதி முத்துராசன் அண்ணே எல்லாம் உங்களிடம் கத்து கொண்டது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச தலைவர் அண்ணே

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சக்கரகட்டி....

    ReplyDelete
  8. வாழ்த்துகள்... கலக்குங்கள் நண்பா...

    ReplyDelete
  9. தங்கள் வாழ்த்திற்கு நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete
  10. புன்னகையான வாழ்த்திற்கு நன்றி இரவின் புன்னகை

    ReplyDelete
  11. அறிமுகம்!.. நம்ம ஊர்க்காரங்களுக்குச் சொல்லியா தர வேண்டும்!... வாழ்க!.. வளர்க!.. தொடர்க!..

    ReplyDelete
  12. சுய அறிமுகம் நன்று...

    வாரம் முழுவதும் வலைச்சரத்தில் கலக்கிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. ஆரம்பமே செம கலக்கல் சக்கரகட்டி... தொடருங்கள்..

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும்.

    சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  15. அன்பின் சக்கர கட்டி - சுய அறிமுகம் அருமை - அனைத்துப் பதிவுகளுமே அருமை - ஆறினையும் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழி இட்டு, திரும்ப வந்தேன். ஹிட்லர் தொடர் பதிவாகத் துவங்கி 4 பகுதி வந்துள்ளது - முதல் பகுதி மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது - மீதம் பிறகு படிக்கிறேன்.நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அழகான சுய அறிமுகம்...
    தொடர்ந்து கலக்கிட வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. பதிவுகள் அசத்தலாக உள்ளது.
    ஆசிரிய வாரத்திற்கு இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  19. துரை செல்வராஜ் அண்ணே நீங்களும் தஞ்சையா மிக்க சந்தோசம் கண்டிப்பா ஒரு நாள் சிந்திப்போம் அண்ணே

    ReplyDelete
  20. நன்றி பிரகாஷ் அண்ணே

    ReplyDelete
  21. வலைக்கும் சலாம் ஆஷிக் பெருநாள் நல்வாழ்த்துக்கள் வருகைக்கு வாழ்த்திற்கும் நன்றி

    ReplyDelete
  22. மிக்க நன்றி நிசாமுதீன் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ரொம்ப நன்றி சீனா ஐயா தொடர் பதிவு அனைத்தும் எனது தலத்தில் இடம் பெற்று உள்ளது

    ReplyDelete
  24. வாழ்த்திற்கு ரொம்ப நன்றி வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. மிக்க நன்றி மனோ அண்ணன்

    ReplyDelete
  27. கலக்குங்கள் நண்பா ! வாழ்த்துக்கள் தொடர் பணியான வலைச்சர ஆசிரியர் பதவிக்கு .தொடர்கின்றேன்

    ReplyDelete
  28. ஆசிரியர் பணியை செவ்வனே செய்ய வாழ்த்துகள் !

    ReplyDelete
  29. மிக்க நன்றி நண்பா நேசன்

    ReplyDelete
  30. மிக்க நன்றி நண்பா கூடல் பாலா

    ReplyDelete
  31. கலக்குங்கள் நண்பா. . . . பல புதியவர்களை அறிமுகம் செய்யுங்கள். . .

    ReplyDelete
  32. நல்ல தொடக்கம்!தொடருங்கள்

    ReplyDelete
  33. மிக்க நன்றி ராஜா சார்

    ReplyDelete
  34. மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா

    ReplyDelete
  35. சுய அறிமுகம் நன்று. வாழ்த்துகள்

    ReplyDelete
  36. மிக்க நன்றி சகோதரி ராஜி

    ReplyDelete
  37. வலைச்சரம் ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  38. ரொம்ப நன்றி சகோதரி எழில்

    ReplyDelete