Tuesday, August 6, 2013

கலக்கல் பதிவர்களும் - பதிவுகளும் (இரண்டாம் நாள்)



இன்றைக்கு அனைத்து விடயங்களையும் கலந்து கட்டி எழுதும் பதிவர்களை பார்க்க போகிறோம்.

1. சேட்டைக்காரன்

பெயறுக்கு ஏற்றார் போல ஆளு செம்ம சேட்டை அவரு தான் அப்படி என்றால் அவருடைய தளத்தில் இடம் பெற்று இருக்கும் பதிவுகளோ சேட்டையோ சேட்டை படிச்சு பாருங்க அதை அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

2. அவர்கள் உண்மைகள் 

மதுரை தமிழன் அண்ணன் எல்லா விஷங்களையும் கலந்து கட்டி தருபவர். அனைத்து பதிவுகளும் சுவாரசியமாக எழுதுபவர் இந்த பதிவே உதாரணம்  இங்கே 

3. நாஞ்சில் மனோ 

தலைப்பு எப்படி வைக்க வேண்டும் என்று நம்ம நாஞ்சில் மனோ அண்ணனிடம் தான் கத்துக்க வேண்டும் எப்படி எல்லாம் யோசிக்கிராருயா
ரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...? படிச்சுட்டு ஒன்னும் சொல்லாம போன கனவுள்ள வந்து கண்ணா குத்திருவாறு.

4. அரசர் குளத்தான் 

அரசியல் பதிவுகள் மட்டுமே சூடாக இடம் பெரும் தளம் அண்ணன் ரஹீம் கசாலியின் இந்த இணையதளமாகும். நடுநிலையான விமர்சனங்கள் இடம் பெரும் அற்புதமான அரசியல் இணைய தளம் பரிதி இளம்வழுதிக்கு சில கேள்விகள்....

5. நண்பர்கள்

இந்த தளத்தில் எழுதி வரும் தம்பி ராஜ் தீவிர கங்குலியின் ரசிகர். இவரின் விளையாட்டு குறித்து வரும் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. தம்பிக்கு பிடித்த இன்னொருவர் சரண்யா மோகன் அவரை நினைத்து தம்பி வடித்த காதல் கடிதம் அதை படிக்க இங்கே நான் எழுத நினைத்த காதல் கடிதம்

6. கிஷோகரின் பக்கங்கள்

இந்த வலை தளத்தில் எழுதி வரும் தம்பி கிஷோகர் அற்புதமான எழுத்தாற்றல் உள்ளவர். கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரிது என்பார்கள் அதுபோல வயதில் சிரியவரயினும் அவரது எழுத்து முதிர்ச்சியுடன் காணப்படும் நீங்களே படித்து பாருங்களேன் கலைஞர் டி.வி தீர்மானித்த தமிழ் சினிமாவின் எதிர்காலம்

7. இரவு வானம்

நண்பர் சுரேஷின் தளம் இப்போது இவர் பதிவு எழுதுவது குறைந்து விட்டாலும் புதியவர்களை ஊக்க படுத்துபவர். நான் அறிமுகமான பொழுது ஊக்கம் அளித்தவரும் இவரே. அவருக்கும் இந்த வலைச்சரத்தின் வாயிலாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் அவரது பதிவு இங்கே

8. கவியாழி

அண்ணன் கண்ணதாசனின் தளமான இந்த கவியாழி என்னும் வலை தளத்தில் இடம் பெரும்  அனைத்து கவிதைகளும் அற்புதம். அதில் ஓன்று உங்களுக்காக
இடையில் வந்த சாதியாலே

9. திண்டுக்கல் தனபாலன்

பசங்க திரைபடத்தில் இடம் பெரும் ஜெய பிரகாஷின் கதாபாத்திரமும் திண்டுகள் தனபாலன் அண்ணனும் ஓன்று. அனைவரின் மனமும்  ஒரு சிறு பாராட்டுக்காகவே ஏங்குகிறது. அதை வஞ்சனை இல்லாமல் வழங்குபவர் எந்த தளத்திற்கு சென்றாலும் இவரது கருத்தே முதன்மையானதாக இருக்கும் அனைத்து புதிய பதிவர்களுக்கும் அண்ணன் ஒரு உற்சாக டானிக். அதே போல பதிவுகளும் அதில் இடம் பெரும் கருத்துகளும் பாடல்களும் உற்சாகம் அளிக்கும். அந்த உற்சாகத்தை அனுபவிக்க இங்கே எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் 

10. மைந்தனின் மனதில்

மைந்தன் சிவா பார்பதற்கே சினிமா ஹீரோ போல இருப்பாரு. நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது இவரிடம் சந்தேகங்கள் கேட்டு அறிந்து கொண்டது உண்டு. அனைத்து பதிவுகளும் அமர்க்களம் அவை இங்கே

11. மனசு

இந்த தளத்தில் எழுதி வரும் நண்பர் சே.குமார் எல்லா செய்திகளையும் கலந்து தருகிறார். அதில் மனிதர்களின் மனங்கள் குறித்து இவர் எழுதிய பதிவு உங்களுக்காக மனிதர்கள்..

12. காணமல் போன கனவுகள்

இந்த தளத்தில் எழுதி வரும் சகோதரி ராஜி யின் அனைத்துபதிவுகளும் என்னை கவர்ந்தவை அதில் ஓன்று உங்களுக்காக சரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்?!

13. மூங்கில் காற்று

டி.என் முரளிதரன் 2010 ம் ஆண்டு முதலே கலக்கி வரும் பதிவர் அவர் நமக்கு மிகவும் பயன்பெறும் வகையில் கொடுத்த ஒரு பதிவு இது இரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது?

14. இரவின் புன்னகை

இந்த தளத்தில்எழுதி வரும் நண்பர் கவிதைகளை படைப்பதில் வல்லவர். அவருடைய கவிதை உலா இதோ இங்கே

15. ஸ்கூல் பையன்

பெயர பார்த்து இவரு ஸ்கூல் பையன்ன்னு நினச்சுராதிங்க அவர் ஸ்கூல் முடிச்சு ரொம்ப நாள் ஆகுது அவருடைய கணினி அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார் படித்து பாருங்கள் எனது கணினி அனுபவங்கள் - தொடர்பதிவு

என்ன நண்பர்களே இன்று கலக்கல் பதிவர்களை பார்த்து விட்டோம் நாளை நம்மை விமர்சனங்கள் மூலம் ரசிக்க வைக்கும் பதிவர்களை பார்க்கலாம்.

நன்றி!வணக்கம்!

இப்படிக்கு உங்கள் நண்பன் சக்கரகட்டி

46 comments:

  1. நீங்கள் சொன்ன அனைத்து பதிவர்களுமே மிக அருமையாக எழுத கூடிய பதிவர்கள் . அனைவரையுமே தொடர்கிறேன் .

    ReplyDelete
  2. நாஞ்சில் மனோ லாப் டாப் வாங்கிய பதிவை படித்து இன்று வரை சிரிக்கிறேன் .

    ReplyDelete
  3. நண்பர்கள் : ராஜ் காதல் கடிதம் கலக்கல்

    ReplyDelete
  4. எனது தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  6. மனங்கவர்ந்த பதிவர்கள் அறிமுகம்;நன்று

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜா சார் மனோ அண்ணன் பதிவ படிச்சுட்டு சிரிக்காம இருக்க முடியுமா

    ReplyDelete
  8. தனபாலன் அண்ணே உங்களுக்கு அறிமுகமே தேவ இல்லண்ணே ரொம்ப நன்றி அண்ணே வருகைக்கு

    ReplyDelete
  9. வருகைக்கு கருத்திற்கு நன்றி வேத.இலங்கா திலகம்

    ReplyDelete
  10. மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா நம்ம பதிவர்களை யாருக்கு தான் பிடிக்காது

    ReplyDelete
  11. பெயருக்கேற்றார் போல சுவையான வலைத் தளங்களை அறிமுகம் செய்திருக்கின்றீர்கள்.. நன்று!.. வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி!

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி துரை செல்வராஜ் ஐயா

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி தனிமரம் நேசன் நண்பா

    ReplyDelete
  15. வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...

    அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    தொடருங்கள் தொடர்கிறோம்....

    ReplyDelete
  16. சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்து வலைச்சரத்தை மணக்கச்செய்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. வருகைக்கு கருத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ்

    ReplyDelete
  18. மிக்க நன்றி

    முடிந்த வரை அதிகமாக புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்.

    பணி சிறக்க வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  19. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அனைத்து தளங்களும் அறிந்தவை தொடருகிறேன் பதிவுகளை,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சே குமார்

    ReplyDelete
  21. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இரவு வானம் சுரேஷ் எனக்கு தெரிந்தவரை புதியவர்களை அறிமுகம் செய்கின்றேன்

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரூபன்

    ReplyDelete
  23. வணக்கம், இன்றைய அறிமுகங்களில் என்னையும் சேர்த்துக்கொண்டது எனக்கு பெருமையளிக்கிறது... அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
    அறிமுகப்படுத்தப்பட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete
  25. சுரேஷ் அவர்களின் தளம் எனக்கு புதியது.ேட்டைக்காரன் ஐயாவின் பதிவுகள் எனக்குப் பிடித்தமானவை.

    ReplyDelete
  26. ரொம்ப நன்றி டினெசாந்த்

    ReplyDelete
  27. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  28. வருகைக்கு கருத்திற்கு நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  29. வாழ்த்துகள் சக்கர கட்டி

    ReplyDelete
  30. வாழ்த்திற்கு நன்றி கோகுல்

    ReplyDelete
  31. பல பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஆசிரியர் சகோதரர் சக்கரக்கட்டிக்கு வாழ்த்துகள். அறிமுகமாகியிருக்கும் அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துகள்.
    சகோ சொல்வது உண்மையே சகோ.திண்டுக்கல் தனபாலன் எழுத்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான டானிக் :)
    தம்பி சே.குமாருக்கு வாழ்த்துகள். (பரிவை பாரதிராஜா)

    ReplyDelete
  32. பல பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஆசிரியர் சகோதரர் சக்கரக்கட்டிக்கு வாழ்த்துகள். அறிமுகமாகியிருக்கும் அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துகள்.
    சகோ சொல்வது உண்மையே சகோ.திண்டுக்கல் தனபாலன் எழுத்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான டானிக் :)
    தம்பி சே.குமாருக்கு வாழ்த்துகள். (பரிவை பாரதிராஜா)

    ReplyDelete
  33. அருமையான பதிவர்கள்;
    அழகிய பதிவுகள் அறிமுகங்கள்.

    ReplyDelete
  34. மிக்க நன்றி காயத்ரி

    ReplyDelete
  35. மிக்க நன்றி சகோ நிசமுதீன்

    ReplyDelete
  36. அன்பின் சக்கர கட்டி - தூள் கெளப்புபூறீங்க - 15 அறிமுகமும் அருமை - அத்தனை ( 15 ) பதிவிற்கும் சென்று - பார்த்து - படித்து - மகிழ்ந்து - மறுமொழி இட்டு - திரும்ப இங்கு வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  37. எனது தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  38. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. ரொம்ப நன்றி சீனா ஐயா

    ReplyDelete
  40. ரொம்ப நன்றி இரவின் புன்னகை

    ReplyDelete
  41. ரொம்ப நன்றி சென்னை பிலசா

    ReplyDelete
  42. எனது தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி... சீனா ஜயா இந்த செய்தி எனக்கு தெரிவித்தார் அவருக்கும் உங்களுக்கும் எனது நன்றி

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    சக்கரகட்டி


    நானும் தஞ்சாவூர்காரந்தான் அதாவது தஞ்சாவூருல இருந்து எட்டிப்பார்க்கும் தூரத்தில் இருக்கும் மதுரைதானப்பா அதனால நானும் தஞ்சாவூர்காரந்தானப்பா.

    யார் பிரபல ஒளிவட்ட பதிவர்; பற்றி படித்து ரசித்து சிரித்தேன்.சூப்பர் அது போல நீங்கள் நகைச்சுவையாக எழுதிவாருங்கள் சீக்கிரம் நீங்கள் பிரபல பதிவாளர் ஆகி யாருக்கும் கருத்துகள் இட வேண்டியதில்லை

    ReplyDelete
  43. கலக்கல் பதிவர்கள் நிறைய பேருடைய வலைதளங்களை தொடர்கிறேன்...மற்றவர்களை இன்று படித்து விடுகிறேன்

    ReplyDelete
  44. கருத்திடமைக்கு ரொம்ப நன்றி மதுரை தமிழன் அண்ணே

    அண்ணே வேணாம்னே நான் இப்படியே இருந்துட்டு போறேன் ஹாஹா

    ReplyDelete
  45. ரொம்ப நன்றி சகோதரி எழில்

    ReplyDelete
  46. பதிவர்கள் அனைவருக்கும் மற்றும் உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete