Wednesday, August 7, 2013

திரை விமர்சகர்களும் - விமர்சனங்களும் (மூன்றாம் நாள்)



இன்றைக்கு நமது பதிவர்களில் சினிமா விமர்சனம் கலக்கலாக எழுதும் பதிவர்களில் எனக்கு பிடித்த பதிவர்களை பற்றி கூற போகிறேன்.


இந்த தளத்தில் எழுதி வரும் நண்பர் முத்துசிவா தமிழ் படங்களுக்கு மட்டும் அல்லாமல் தெலுங்கு படங்களுக்கும் விமர்சனம் எழுதி வருகிறார். அவரின் விமர்ச்சனங்களுக்கு நான் ரசிகன். இவரிடம் பாராட்டு பெரும் படங்கள் வெற்றி பெறுவது உறுதி. அவருடைய சிங்கம் 2 பட விமர்சனத்தை இங்கே படித்து பாருங்கள். சிங்கம் 2- ஓடிருங்கலே!!!! மற்றும் அவரின் தெலுங்கு பட விமர்சனம் இங்கே  பலுபு (2013) -அதே டெய்லர்! அதே வாடகை!!
கவுண்டமணி பாணியில்  இவர் எழுதி இருக்கும் அநேக பதிவுகள் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது எனக்கு பிடித்த அந்த பதிவு இங்கே வடக்கு பட்டியில் பவர் ஸ்டார் 


அண்ணனோட ப்ளாக் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். இவர் விமர்சனங்களின் இடையிடையே இவர் பகிர்ந்து இருக்கும் படங்களும் அந்த படத்தினிலே இவர் காட்டி இருக்கும் மேஜிக் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது. நீங்களே அதை பாருங்களேன்  மரியான் விமர்சனம் இங்கே 


எந்த புது படம் ரீலிஸ் ஆனாலும் காலைலேயே படத்த பார்த்து உடனே விமர்சனம் போட்டு நமக்கு துட்ட மிச்சம் பண்ணி கொடுத்துருவாங்க. அண்ணே பலாப்பழம் மாதிரி பழம் பார்க்க தான் முரட்டு தனமா இருக்கும் அதில் உள்ள கனி எவ்வளவு சுவையோ அந்த அளவு அண்ணின் பதிவுகளும் சுவையானதாக இருக்கும். அண்ணே படம் பார்க்க போனதவிட அந்த படத்தை பார்க்க அவருக்கு ஏற்படும் அனுபவத்தை படிக்கவே சுவாரசியமாக இருக்கும் நீங்களும் படித்து பாருங்களேன் அலைந்து திரிந்து மரியான் பார்த்த கதை

4.  பேபிஆனந்தன்

இந்த தளத்தில்அட்டகாசமான சினிமா பதிவுகளும், சினிமாவை பற்றிய கட்டுரைகளும் அதிகமாக எழுதி வருகிறார் நண்பர். இயக்குனர் ராஜமௌளியைபற்றி அருமையான  தொகுப்பை வெளியிட்டுள்ளார் நீங்களும் படித்து பாருங்களேன் அதை இங்கே

5. கீதப்ப்ரியன்

இந்த நண்பரின் தளத்தில் இடம் பெறாத உலக சினிமா படங்களே இருக்க முடியாது. அந்த அளவு அனைத்து மொழி படங்களின் விமர்சனங்களும் இடம் பெற்று இருக்கும். மொழி பேதமில்லாமல் நல்ல ஒரு சினிமாவை விரும்பும் மனிதர் அவரது விமர்சனம் இங்கே

6. ஓஹோ புரொடக்சன்

இந்த தளத்தின் பெயருக்கு ஏற்றவாறு பதிவுகளும் ஓஹோ என இருக்கும். இளையராஜாவின் தீவிர பைத்தியம் இவர் நான் சொல்லவில்லை அவரே சொல்கிறார் படித்து பாருங்களேன் ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்

7. சினிமா சினிமா

இந்த தளத்தில் எழுதி வரும் நண்பர் ராஜ் சினிமா பதிவு எழுதுவதில் கெட்டிகாரர். அவரது விமர்சனம் இதோ உங்களுக்காக ராஞ்ஜனா தலைவலி இலவசம் !!

8. ஐடியா ஹாரி

ஹாரிஅருமையான சினிமா விமர்சகர் இவருடைய தரவரிசை அனைத்தும் காண படிக்க சிறப்பாக இருக்கும் இவர் வகுத்துள்ள டாப் 10 பாருங்களேன் விஜய் டாப் 10 மூவிஸ்

இன்று விமர்சகர்களை பார்த்தாச்சு நாளை ஸ்பெஷல் தலைப்புகளில் கலக்கும் பதிவர்களுடன் சந்திக்கிறேன் நன்றி நண்பர்களே!

இப்படிக்கு உங்கள் நண்பன் சக்கரகட்டி 



19 comments:

  1. சக்கர, நீயே நல்ல விமர்சனம் எழுதுவியே....

    ReplyDelete
  2. கருத்திற்கு நன்றி பிரகாஷ் அண்ணே
    ஹாஹா அப்ப எண்ணையு சேத்துக்க சொல்றிங்களா பிரகாஷ் அண்ணே

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள்... தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

    ReplyDelete
  4. முதன்முறையாக நீங்கள் சுட்டிக் காட்டிய பதிவுகள் கண்டேன். சரிதான்!.. தேர்வுகள் அருமை..பாராட்டுகள்..

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  6. விமர்சனம் எழுதும் பதிவர்களை சிறப்பித்து வலைச்சரத்தில் தொகுத்தமை சிறப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கருத்திற்கு நன்றி இரவின் புன்னகை

    ReplyDelete
  8. கருத்திற்கு நன்றி துரை செல்வராஜ் ஐயா

    ReplyDelete
  9. கருத்திற்கு நன்றி சே.குமார்

    ReplyDelete
  10. கருத்திற்கு நன்றி எஸ்.சுரேஷ்

    ReplyDelete
  11. மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா

    ReplyDelete
  12. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. மிக்க நன்றி நாகராஜ்

    ReplyDelete
  14. திரை விமரைசனம் எழுதுவதிலேயே சிறந்த பதிவர்களை அறிமுகம் செய்துள்ளது நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள்.
    -கலையன்பன் (இது பாடல் பற்றிய தேடல்)

    ReplyDelete
  15. கருத்திற்கு ரொம்ப நன்றி கலையன்பன்

    ReplyDelete
  16. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  17. உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி தனிமரம் நேசன்

    ReplyDelete