Thursday, August 8, 2013

ஸ்பெஷல் பதிவர்களும் - ஸ்பெஷல் தலைப்புகளும் (நான்காம் நாள்)



நம்ம பதிவர்கள் அனைவரும் தமது தளங்களில் தனித்துவமான தலைப்பில் அனைத்து விஷயங்களையும் ஒரே பதிவாக கலந்து தருகின்றனர். அவ்வாறு தனித்துவமான தலைப்புகளில் வெளிவரும் பதிவுகளையும் தளங்களையும் இன்று நாம் பார்ப்போமா நண்பர்களே.


அண்ணன் சிவக்குமார்அவர்களால் கல்லா கட்டப்படும் அருமையான பவன் இந்த மெட்ராஸ் பவன். அதிலும் இவர் பரிமாறும் இந்த ஸ்பெஷல் மீல்ஸ் ற்கு நான் அடிமை என்று கூட சொல்லலாம்.


பதிவுலகின் செல்லபிள்ளை இவர். குடி குடியை கெடுக்கும் என்பார்கள் ஆனால் இவரது கடையில்  உள்ளவை அனைத்தும் மக்களுக்கு நன்மை அளிப்பதாகவே இருக்கும் நீங்களும் குடித்து பாருங்கள் மன்னிக்கவும் படித்து பாருங்கள் பிரபா ஒயின்ஷாப்


வாரம் வாரம் அண்ணனின் தளத்தில் தவறாது இந்த தலைப்பில் வெளி வரும் ஒரு பதிவு. என்ன பதிவு என்று கேட்குறிங்களா நமக்கு வீட்டில் சோறு தண்ணி தாமதமாக கிடைப்பதற்கு என்ன காரணம் வேற என்ன தொலைக்காட்சி. அதுவே நமது தொல்லைக்காட்சி படித்து பாருங்கள் தொல்லைக்காட்சி


பதிவு உலகில் நம்ம ஆள தெரியாதவங்க யாரும் கிடையாது அண்ணின் அனேக பதிவு சினிமாவை பற்றியது என்றாலும் நான் அவருடைய கொத்து பரோட்டாவின் விசிறி. சூடாகவும் சுவையாகவும் இருக்கும் நீங்களே சாப்பிட்டு பாருங்கள் கொத்து பரோட்டா அண்ணன் படம் வேறு இயக்குவதாய் கேள்விப்பட்டேன் அந்த படம் சிறப்பை வர வேண்டும் என இந்த வலைச்சரத்தின் சார்பாக கேட்டு கொள்கிறேன்.


நாம எதாவது ஸ்பெஷலா சாப்பிட்டால் யாரிடமும் சொல்ல மாட்டோம் ஏன் என்றால் வயிற்று வலி வந்து விடும் கண்ணு வச்சுருவாங்க என்று. ஆனால் ஜீவா அண்ணன் அதற்கெல்லாம் பய பட மாட்டார். தான் எங்கு,எப்போது, என்னென்னே, எவ்வளவு விலை என்று அனைத்தையும் படத்துடன் தரமான உணவகங்களையும் விதவிதமான உணவுகளையும் நமக்கு அறிமுகபடுத்தி நம்மை உசுப்பேத்திவிடும் பதிவர். நான் முதன் முதலில் எழுதிய பதிவின் தவறை சுட்டி காட்டிநேர்வழிபடுத்தியவர். அவருக்கு நினைவு இருகிறதா என்று தெரியவில்லை என்னால் மறக்க முடியாது. அவருக்கு இந்த வலைச்சரத்தின் வழியாக  நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவரது சிறப்பு தலைப்பின் சுட்டி இங்கே கரம் 


பால கணேஷ் அண்ணனின் கைவண்ணத்தில் அனைத்து பதிவுகளும் அருமை. அதிலும் இவரின் ஸ்பெஷலான மொறுமொறு மிக்சர்  இங்கே.


இந்த நண்பரின் தளத்தில்இடம் பெரும் பலசரக்கு கடை என்னும் பதிவில் நல்ல சரக்கான பதிவுகள் இடம் பெற்று இருக்கும் அதை படிக்க சொடுக்குங்கள்  பல சரக்கு கடை


இவரது அஞ்சரை பெட்டி என்னும் பதிவு உள்ளுரில் இருந்து உலகம் வரை அனைத்து நடப்புகளையும் எடுத்துரைப்பதாக உள்ளது அவை இங்கே  அஞ்சறைப்பெட்டி

என்ன நண்பர்களே அனைவரின் பதிவுகளையும் படித்தீர்களா? மீண்டும் நாளை நகைச்சுவையான பதிவுகளை அள்ளி தரும் கில்லாடி  பதிவர்களுடன் சந்திக்கிறேன்.

நன்றி வணக்கம்.

இப்படிக்கு உங்கள் சக்கரகட்டி

22 comments:

  1. பதிவுலகில் கொடிகட்டி பறக்கும் பதிவர்கள் இவர்கள். . . .

    ReplyDelete
  2. தொடர்ந்து கலக்குங்கள். . .

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஆமாம் ராஜா சார் உங்கள் கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  5. உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி ரூபன்

    ReplyDelete
  6. வலைச்சரம் ஆசிரியர் ஆனதற்கு கொஞ்சம் லேட்டான வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  7. ரொம்ப நன்றி தினகர நாதன்

    ReplyDelete
  8. நகைச்சுவை பதிவர்களின் உங்களின் பதிவைக் காணக் காத்து கிடக்கிறேன் ..எனக்கு தெரியாதவர்களை அறிமுகப் படுத்துவவீர்கள் என நம்பிக்கையுடன் !

    ReplyDelete
  9. மிக்க நன்றி சக்கர கட்டி.

    ReplyDelete
  10. தொடர்ந்து அறிமுகப்படுத்தும் தளங்கள் அனைத்தும் சிறப்பு. நினைவில் நிற்பவை.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி பகவான் ஜீ

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி கோகுல்

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி துரை செல்வராஜ் ஐயா

    ReplyDelete
  14. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. என்னோட ஹோட்டலை அறிமுகம் செய்ததற்கு நன்றி தம்பி. மற்றவர்களும் நமக்கு பிடித்த பதிவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  16. ரொம்ப நன்றி சே. குமார்

    ReplyDelete
  17. கருத்திற்க்கு ரொம்ப நன்றி சிவகுமார் அண்ணே

    ReplyDelete
  18. இன்றைய அறிமுகங்களனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.....

    தொடரட்டும் அறிமுகங்கள்.

    ReplyDelete
  19. அறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. கருத்திற்க்கு நன்றி தனிமரம் நேசன்

    ReplyDelete
  21. கருத்திற்க்கு நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்

    ReplyDelete