Friday, August 9, 2013

நகைச்சுவை பதிவர்களும் - பதிவுகளும் (ஐந்தாம் நாள்)


வணக்கம் நண்பர்களே! முதலில் நம் வலைச்சர வாசகர் நண்பர்களுக்கு இனிய பெருநாள் நல்வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.

இன்று நகைச்சுவையில் கலக்கும் பதிவர்களை பார்க்க போகிறோம்.

1செங்கோவி 

முதன்முதலாக எனக்கு வலைத்தளம் என்று அறிமுகம் ஆனதும் படிக்க ஆரம்பித்ததும் அண்ணனுடைய ப்ளாக் தான். எல்லா விதமான பதிவுகளும் கலந்து கட்டி அட்டகாசமாக எழுதுபவர். இவரின் அனைத்து பதிவுகளும் நகைச்சுவையாகவும் அதே சமயம் கருத்தாகவும் இருக்கும் அப்படியான ஒரு பதிவு தான் இது படித்து பாருங்கள் எனக்கு பிடித்த பதிவு. அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி? இப்போதெல்லாம் அண்ணனின் பதிவுகள் வருவதே கிடையாது மீண்டும் முன்பு போல வாரம் ஒரு பதிவாவது தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என இந்த வலைச்சரத்தின் வாயிலாக கொள்கிறேன்.

2. ஸ்டார்ட் மியூசிக் 

பன்னிகுட்டி ராமசாமி பதிவு உலகில் இவரை தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. அண்ணனுடைய அத்துனைபதிவுகளும் நகைச்சுவைதான். அண்ணனுக்கு அதுவும் நடிகர் விஜய் என்றால் அல்வா தான் போங்க. கிழிகிழி என்று கிழித்து தொங்க விட்டு விடுவார். ரொம்ப நாளாக பதிவே எழுதாம இருந்தவரு விஜய்யின் தலைவா படம் வருகிறது என்று தெரிந்த உடன் போட்டாரு பாருங்க ஒரு பதிவு. தலைவா.... எனது பார்வையில்...!

3. அவிய்ங்க

ராசா இந்த பெயரை கேட்டாலே மன்மதராசா பாடல் தான் நினைவுக்கு வரும் முன்பு. ஆனால் ப்ளாக் படிக்க ஆரம்பித்தது முதல் இப்போதெல்லாம் அவிங்க ராசா தான் நினைவுக்கு வருகிறார். தானே கற்பனையாக ஒரு நண்பனை உருவாக்கி அவருடன் உரையாடுவது போலவே நகைச்சுவையாக பதிவு இடுவார். திரை விமர்ச்சனமாகட்டும் அன்றைய நாட்டு நடப்பு செய்திகள் ஆகட்டும் அனைத்தையும் கலந்து கட்டி எழுதுவதில் கில்லாடி ராசா இவர். அவருடைய நகைச்சுவை பானையில் ஒரு சோறு இந்த பதிவு படித்து பாருங்கள் சிரிக்காமல் இருக்க முடியாது கோவாலு கலந்துகொண்ட நீங்களும் வெல்லலாம் கோடி

4. சிரிப்பு போலீஸ்

நம்ம ஆளபத்தி சொல்லவே வேணாம் இவரது ப்ளாக் பெயரை பார்த்தாலே தெரியும். அதுவும் அவரது சுய தம்பட்டத்தை படிச்சு பாருங்களேன் எப்படி எல்லாம் யோசிக்கிறாருயா. ஆனா இப்போதெல்லாம் மாசத்துக்கு ஒன்னு இரண்டு என எழுதுகிறார். இவர் பதிவு எழுதுவது எப்படின்னு சொல்லி தரார் படிச்சு பாருங்க பதிவு எழுதுவது எப்படி?

5. அகாதுகா அப்பாடக்கர்ஸ்

இந்த ப்ளோக்கின் தலைப்புலேயே இவங்க சந்தானம் ரசிகர்கள் அப்படின்னு சொல்லிறாங்க. சந்தானம் நடிக்கும் படங்கள் அவரை பற்றிய தகவல்கள் அதிகமாக இருக்கும். சந்தானம் ரசிகர்கள் அதனால வெறும்  நகைச்சுவை பதிவு மட்டுமே இடம் பெரும் என்று நினைக்க வேண்டாம். அனைத்து விசயங்களையும் கலந்து கட்டி எழுதுவார்கள் அவ்வாறு அவர்களின் ஒரு விழிப்புணர்வு பதிவு  இங்கே

6. பரிசல்காரன்

அண்ணனை போலவே அவரது எழுத்து நடையும் ரொம்ப அழகாக இருக்கும். தனக்கு ஏற்படும் அனுபவங்களையே பதிவாக அதிகமாக எழுதி இருக்கிறார். நாமளும் தான் தினமும் வெளியே போறோம் வரோம் ஆனா நமக்கெல்லாம் இதுபோல எழுத வரவில்லையே என்ற ஆதங்கம் இவரது பதிவுகளை படிக்கும் பொழுது எனக்கு ஏற்படுவதுண்டு. அவ்வாறான பதிவுகளில் அவரது அனுபவம் உங்கள் பார்வைக்காக இங்கே துப்பாக்கி லைசென்ஸ் எடுக்க என்ன ப்ரொசீஜர்ஸ்?

7. பாலாவின்-பக்கங்கள்

இந்த தளத்தில் எழுதி வரும் நண்பர் பாலா சுவாரசியமாக பதிவுகளை எழுதி வருகிறார். போன ஆண்டு வரை அதிகமாக எழுதி இருக்கிறார். தற்பொழுது அவ்வபோது ஓன்று இரண்டு பதிவுகளை மட்டுமே எழுதி வருகிறார். பதிவுக்கு எவ்வாறு தலைப்பு இடுவது என்று சொல்லுகிறார் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே இங்கே

8. நாய் நக்ஸ்

ரொம்ப நாட்கள் எழுதாமல் இருந்த நக்கீரன் அண்ணன் தற்பொழுது பதிவு எழுத ஆரம்பித்து உள்ளார். அண்ணன் குறைவான பதிவுகளே எழுதி இருந்தாலும் ஒவோவ்ன்றும் நச் என்று இருக்கும். அதில் ஒரு நச் உங்களுக்க இங்கே

9. பக்கி - லீக்ஸ்

நான் அடிக்கடி இந்த தளத்தில் படிப்பது உண்டு. அதும் இந்த குறிப்பிட்ட பதிவு எப்போது படித்தாலும், எத்தனை தடவை படித்தாலும் குபீர் சிரிப்பு வரவழைக்கும் பதிவு இது இங்கே


மேலே குறிப்பிட்ட அனைத்து பதிவர்களும் யாருக்கும் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தற்பொழுது பதிவு எழுதி ரொம்ப நாட்கள் ஆகின்றன. முன்பு போல் எழுதுவதில்லை எனவே அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

இந்த பதிவு எழுதிய நேரமோ என்னவோ தெரியல்ல ரொம்ப நாள் எழுதாம இருந்த நம்ம பதிவர்கள் எழுத ஆரம்பிச்சு இருகாங்க. ஒரு வேல உளவுதுறைல இருந்து தகவல் போயி இருக்குமோ.

நாளை நமக்கு பயன் அளிக்கும் தகவல்களை கூறும் பதிவர்களும் சிந்தனை ஊட்டும் பதிவர்களுடனும் சந்திக்கிறேன்.

நன்றி மீண்டும் நாளை சந்திப்போம்!

இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் சக்கரகட்டி

24 comments:

  1. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....ஒரே குஷ்டமப்பா.....பதிவு போடுன்னு...

    சரக்கு இருந்தா போடா மாட்டேனா....????

    ஹி...ஹி....

    நன்றி...நன்றி....நரி....அறிமுகத்துக்கு...

    ReplyDelete
  2. ஹாஹா ரொம்ப நன்றி நக்கீரன் ஜீ

    ReplyDelete
  3. வாங்கோ சிரிப்பு போலீஸ் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. சங்கவி இப்போ எழுத ஆரம்பித்திருக்கிறார்...
    ராம்சாமியும் எழுதுகிறார்...
    அனைவரும் எழுத ஆரம்பிக்கட்டும்... பதிவுலகம் சிரிப்புலகமாகட்டும்...

    அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  5. உண்மைதான் இவர்கள் மறுபடியும் முன்னர் போல பதிவுகள் தொடர்ந்து எழுதணும் என்பதே என் ஆசையும் .அறிமுகங்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சே.குமார்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி தனிமரம் நேசன்

    ReplyDelete
  8. என்னை பற்றிய அறிமுகத்துக்கு நன்றி நண்பரே. சமீபகாலமாக சொந்த அலுவல்கள் அதிகம். குடும்பஸ்தன், தகப்பன் என்று இரு பொறுப்புகள். ஆகவேதான் சின்ன கேப். கூடிய விரைவில் பாலா ரிடர்ன்ஸ். மீண்டும் நன்றி

    ReplyDelete
  9. சில சமயம் இவங்க பதிவைப்பத்தி நினைச்சாலே சிரிப்பு வரும்.

    ReplyDelete
  10. சிறப்பான சிரிப்பு தளங்கள் !

    ReplyDelete
  11. நல்ல அறிமுகம்!.. சிரிக்க வைப்பதிலும் இத்தனை ரகங்களா!...

    ReplyDelete
  12. சிரி(ற)ப்பான அறிமுகங்கள்... நன்று!

    ReplyDelete
  13. சிறப்பான அறிமுகங்கள்.....

    வாழ்த்துகள் சக்கர கட்டி.

    ReplyDelete
  14. கருத்திற்க்கு நன்றி செங்கோவி அண்ணே

    ReplyDelete
  15. கருத்திற்க்கு நன்றி பாலா

    ReplyDelete
  16. கருத்திற்க்கு நன்றி கோகுல்

    ReplyDelete
  17. கருத்திற்க்கு நன்றி கலா குமரன்

    ReplyDelete
  18. கருத்திற்க்கு நன்றி துரை செல்வராஜ் அய்யா

    ReplyDelete
  19. கருத்திற்க்கு நன்றி ராம்சாமி அண்ணே

    ReplyDelete
  20. கருத்திற்க்கு நன்றி நிஜாமுதீன்

    ReplyDelete
  21. கருத்திற்க்கு நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete