இன்றுடன் முடியும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்ற நண்பர் கோவை ஆவி - தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும், பொறுப்புணர்ச்சியோடும், தனித்துவத்துடனும் நிறைவேற்றிய பின், நாளை ஆசிரியப் பொறுப்பேற்க இருக்கும் அனுசூயாவிடம் பொறுப்பினை மன நிறைவோடு ஒப்படைக்கிறார்.
நண்பர் கோவை ஆவி பதிவுகளைப் புதுமையான முறையில் கொண்டு சென்றிருக்கிறார். முதல் பதிவில்திருவோணம் பற்றிய குறிப்புடன் துவங்கி - தனக்குப் பிடித்த தன்னுடைய பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.இரண்ாம் நாள் முதல் வாசகர்களுக்குப் பிடித்த ஒரு புதிய முக்கிய நபர் பதிவர்களைச் சந்திக்க வருகிறார் என்று கூறி ஒரு சஸ்பென்ஸை ஏற்படுத்தி விடுகிறார்.
மறு நாளில் இருந்து வார இறுதி வரை ஒரு கற்பனைக் கதையை நிஜ கதா பாத்திரங்களைக் கொண்டு படைத்திருக்கிறார். வெகு சுவாரசியமாக இவரது தோழியான நஸ்ரியாவினை ஆவி கொலை வழக்கினைத் துப்பறீய வரும் டிடெக்டிவாக அறிமுகப் படுத்தி - அவரது செயல்களுக்கு உதவிவதற்கு ஆண்ட்ரியாவினையும் பதவியில் அமர்த்தி - இறுதியில் நமீதாவையையும் களத்தில் இறக்கி தொடரை முடித்து வைத்து விட்டு விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 042
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 043
பெற்ற மறுமொழிகள் : 356
வருகை தந்தவர்கள் : 1264
நண்பர் கோவை ஆவியினை பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை ஆசிரியப்பொறுப்பேற்க இருக்கும் அனுசூயா மிகுந்த ஆர்வத்துடன் தன் பணியினைத் துவங்கக் காத்திருக்கிறார்.
இவர் பெயர் வெ.அனுசுயா
படிப்பு முதுகலை பொறியாளர் M.E.(கட்டுமானம், அரசு பொறியியற் கல்லூரி, கோவை)
தொழில் பன்னாட்டு நிறுவனத்தில் கட்டிட வடிவமைப்பாளர்.
சென்ற நாடுகள் : இத்தாலி, பிரான்சு, தான்சானியா. விரைவில் எத்தியோப்பியா.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் இவரால் எழுத முடியும் என்ற நம்பிக்கையில் கூட இல்லாத இவர் பல ஆண்டுகளாக தமிழ் மடலாடற்குழுக்களை படித்தது உண்டு. இவர் சகோதரரின் உதவியால் வலைப் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தார்.
பிறகு படித்த வலைப்பூக்களில் கருத்துக்களை வெளியிட ஒரு வலைப்பூ தேவை என எண்ணி தனி வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்தார். தற்போது அனு என்னும் தளத்தில் அழகாக எழுதி வருகிறார்.
வலைப்பூக்களுக்குள் வரும்வரை கணிணியில் தமிழ் என்பது எந்த அளவு சாத்தியம் என்ற ஆச்சரியத்துடன் இருந்த இவரின் இன்றைய நிலைமை வேறு ஆகிவிட்டது.
இது போக பூக்கள் இவருக்கு மிகவும் பிடித்ததாக இருப்பதால் இவரது எழுத்து பெரும்பாலும் பூக்களையும் அது சம்பந்தமான படங்களாகவுமே இருக்கின்றன.
அனுசூயாவின வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமரத்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கோவை ஆவி
நல்வாழ்த்துகள் அனுசூயா
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவருக வாழ்த்துகள் அனுசூயா.
ReplyDeleteவாருங்கள் அனுசுயா...
ReplyDeleteகலக்கலான வாரமாகத் தொடர வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் அனுசூயா.
ReplyDeleteபாராட்டுக்கள் கோவை ஆவி!
ReplyDeleteவாழ்த்துக்கள் அனுசூயா!
அனுசூயா அவர்களே... அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteanu suyaa ...
ReplyDeletevaazhthukkal....
வணக்கம்
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள் சூயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சீனா ஐயா.
ReplyDeleteவாங்க அனுசூயா கலக்குங்க.
ReplyDeleteஆவிக்குவாழ்த்துக்களுடன்அனுசுயாவைவரவேற்கிறேன்
ReplyDeleteஆவிக்குவாழ்த்துக்களுடன்அனுசுயாவைவரவேற்கிறேன்
ReplyDeleteஅனுசுயா அவர்களை வருக.. வருக.. என அன்புடன் வரவேற்கிறேன்!..
ReplyDelete