Monday, September 23, 2013

அனுசுயா - தாராசுரம்

           பிரசித்தி ​பெற்ற தலங்களுக்கு ​செல்லுதல் பலருக்கும் ஈடுபாடான விசயமாகும். எனக்கு வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் என்றால் ​கொள்​ளை பிரியம். நம்மவர்களின் க​லை திற​மை​யை கண்டு மகிழ இந்த ஒரு பிறவி ​போதாது. அத்த​​கைய க​லை கருவூலங்கள் ​செறிந்தது நம் தமிழ்நாடு. புகழ்​பெற்ற தலங்க​ளுக்கு ​செல்லும் ​போது நம்மவர்கள் ​நேரமின்​மை அல்லது ​போதிய ​விவரமின்​மை காரணமாக சிலவற்​றை தவற விட்டுவிடுகிறார்கள். உதாரணமாக காஞ்சிபுரம் ​செல்பவர்கள் ​பெரும்பாலும் ஏகாம்பரீசுவரர் ​கோவில், காமாட்சியம்மன் ​கோவில் ​போன்ற​வைக​ளை தரிசித்து விட்டு மண்சிற்ப க​லைகருவூலமாக திகழும் காஞ்சி ​கைலாச நாதர் திருக்​கோவி​லை தவறவிட்டு விடுகிறார்கள். அ​தே ​போல கும்ப​கோணம் நகருக்கு ​செல்பவர்கள் கும்​பேசுவரர் திருக்​கோவில தரிசித்து விட்டு மகாமகம் குளம் ​போன்றவற்​றுடன் திரும்பி விடுகிறார்கள். ஆனால் ​வெகு அரு​கே தாராசுரம் என்ற உலக புகழ்​பெற்ற ​கோவில் உள்ளது. காஞ்சி ​கைலாச நாதர் ​கோவிலும் , கும்ப​கோணம் - தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்​கோவில் இவ்விரண்டு​மே
யு​னெஸ்​கோ நிறுவனத்தின் பட்டியலில் உள்ள​வைகளாகும்.



           இந்த தலம் பற்றிய மிகசிறந்த ஒளிபடங்க​ளை காண http://sankriti.blogspot.in/2013/09/airateswara-temple-darasuram-uunesco.html வ​லைபதிவிற்க்கு ​சென்று பார்ப்பது மிக சிறப்பானது. ​இரண்டாம் ராஜராஜ​சோழனால் கட்ட பட்ட அழகிய க​லைக் கூடமாகும் இந்த ​கோவில். கட்டடற்ற க​லைக்களஞ்சியமான விக்கிப் பீடியாவில் ஐராவதேஸ்வரர் கோயில்  பற்றி பின் வருமாறு விவரிக்க பட்டுள்ளது விரிவான ​செய்திக்கு விக்கி​ பக்கத்தி​னை முழு​மையாக படியுங்கள்...


வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.

கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது.[2]

    எனக்கு இது ​போன்ற பல இடங்க​ளை பற்றி பலரும் எழுதும் கட்டு​ரைகள் மிகவும் பிடித்தமான ஒன்று. வரலாறு.காம் http://www.varalaaru.com தளத்தில் பலரும் ​தொடர்ந்து கட்டு​ரைகள் எழுதி வருகிறார்கள். எனக்கு பிடித்த பயணகட்டு​ரை ஆசிரியராக திரு.​ஜெய​மோக​னை கூறு​வேன்.​ அவரு​டைய சில பயணகட்டு​ரைகள் சில...

இந்தியப் பயணம் சில சுயவிதிகள் , இந்தியப் பயணம் 1 – புறப்பாடு

மீண்டுமோர் இந்தியப்பயணம்  , அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

நூறு நிலங்களின் மலை – 1
​மேற்க் கண்ட மூன்று ​தொடர்க​ளு​மே மிகவும் மறக்க முடியாத ​தொடர்களாகும். எனது வாழ்நாளில் இந்த பாரத கண்டத்​தை ​மேற்க்கண்ட மூன்றில் ஏ​தேனும் ஒரு பயண வழியி​​லேனும் முழு​மையாக பயணம் ​மேற்க் ​கொள்ளு​வேனா என்று ​தெரியவில்​லை.

புகழ்​பெற்ற பிரபலங்க​ளை விடுத்து வ​லைபதிவாளர்களில் பயணக்கட்டு​ரை எழுதுபவர்கள் சிலரின் அறிமுகம்..

​மோகன்குமார் - வீடுதிரும்பல் என்ற ​பெயரில் வ​லைபதிவி​னை எழுதி வருகிறார். இ​தோ நமது எல்​லையில் உள்ள ​கேரளா பற்றி இவரின் கட்டு​ரைகள் மிகவும் இரசிக்க தக்க​வை. ம​லையக மக்க​ளை பற்றி புரிந்து ​கொள்ள மிகவும் உதவும். நாம் ​அங்கு பார்க்க ​வேண்டிய இடங்கள் எவ்வள​வோ உள்ளன என்ப​தை இவர் கட்டு​ரைகள் மூலம் இறிய இயலுகிறது.

திருமதி.​வேதா அவர்களும் மிக சிறப்பாக பயணக் கட்டு​ரைகள் எழுதுவதில் வல்லவர். அவரு​டைய சில முக்கிய கட்டு​ரைகள்.. பயணக் கட்டுரைகள் ,
பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) , பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) , பயணக் கட்டுரைகள்.. (மலேசியா)

துளசிதளம் என்று நம் அ​​​னைவராலும் புகழ்​பெற்ற துளசி​கோபால் அவர்க​ளை விட்டுட்டு பயணகட்டு​ரைகள் பற்றிய ​பேச்​சை முடிக்க முடியுமா.. :) :) அவரு​டைய சில முக்கிய கட்டு​ரைகள்.. கோலாகலமான ஊர் (மலேசியப் பயணம் 1),பாலி நீ வாழி! , அக்கரையில் ஒரு நவராத்ரி (ப்ரிஸ்பேன் பயணம் 1) ... இப்படி ஏகப் பட்டது இருக்கு. வ​லைபதிவு முழுக்க படிச்சு முடிக்க ​ரொம்ப காலம் ஆகும்..!!

7 comments:

  1. ஆஹா, பயண அறிமுகங்களா.. மாலையில் வந்து எல்லாருடைய பக்கங்களுக்கும் விஜயம் செய்கிறேன்..

    ReplyDelete
  2. சரித்திரக்குறிப்புகளுடன் அமைந்த சிறப்பான பதிவு

    ReplyDelete
  3. அறிமுகம் செய்யப்பட்ட சுற்றுலா தளங்கள் அனைத்தும் அருமையானவை. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  4. அருமையான பயண அனுபவங்கள் நிரம்பிய பதிவுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. சிறப்பான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை
    நன்றி

    ReplyDelete
  7. பயணங்களுடன் ஆரம்பித்துள்ளீர்கள் வாழ்த்துகள். பயணஅனுபவங்களை படிப்பது எனக்கும் பிடித்தமானது. நன்றி.

    ReplyDelete