சீரியஸான கதையெல்லாம் வைச்சு நம்மை குழப்பாமல் எளிமையாக
காதலித்து திருமணம் செய்து கொள்வதான கதை. வெட்டி ஆபிசருங்களா
சுத்திட்டு இருக்கும் நாயகன், பள்ளியிறுதியை கூட தாண்டாத நாயகியை மணம்
செய்யும் எளிய கரு. நாயகனாக வருபவரும், தோழனாக அதாவது சங்கத்தின்
செயலாளராக வருபவரும், நாயகியின் தகப்பனாக வரும் நம்ம குசும்பு சத்யராஜ்
போன்றவர்களின் யதார்த்த நடிப்பு மிக அருமை. அதிக செலவு இல்லாத கதை
நகர்த்தல் மூலமாக தொய்வின்றி செல்லுகிறது கதை. மற்றபடி இந்த படத்தை
பற்றிய விமர்சனத்தை திரை வித்தகர்கள் விரிவாக விமர்சித்து இருப்பார்கள்.
நமக்கு அந்தளவு திரைஞானம் கிடையாது.
ஊர் கூட்டத்தில் ரகளை செய்து ரீட்டாவின் நடனத்திற்க்கு ஒப்புதல்
வாங்குவதும், நிகழ்ச்சி துவக்கத்தில் மைக் பிடித்து அலப்பறை செய்வதும்
இன்றைக்கு ஒரு மாதிரியான விசயமாக இருந்தாலும் அந்த இளமை கால கட்டத்தில்
அதெல்லாம் ஒரு ஜாலி என்றே எடுத்துக்கனும். ஒரு கட்டத்தில் சங்கத்தில்
தகராறு வந்து சங்கமே பிளவுபட்டு போட்டி சங்கம் உருவாகும் காட்சியும் மிக
முக்கியமானது. இந்த சமயத்தில் எங்கள் பயமறியா பாவையர் சங்கத்தின்
உறுப்பினர்களை அறிமுக படுத்தி வைப்பது அவசியம் இல்லேன்னா எங்க சங்கமும் உடைஞ்சிடுமே...
பாலைத் திணை என்ற பெயரில் எழுதி வருபவர் காயத்ரிசித்தார்த். சிறந்த இலக்கிய ஆர்வலரும், கவிதாயினியும் ஆவார். அவருடைய சில முக்கிய பதிவுகள் குறுந்தொகை - அறிமுகம் - 1 , குறுந்தொகை - அறிமுகம் -2 , அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்,ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்இம்சைஅரசி என்று அறியபடுபவரும் அதே பெயரில் வலைபதிவினை எழுதுபவர். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு கலக்குபவர். அவருடைய சில முக்கிய பதிவுகள்.. அத்தை மகனே! அத்தானே!! , எடுத்த சபதம் முடிப்பேன் , கவிதை
G3 என்று அனைவராலும் அன்புடன் அழைக்க படும் காயத்ரி. பிரவாகம் பெயரில் வலைபதிவினை எழுதி வருகிறார். இவருடைய முக்கிய பதிவுகள்கவிதை முயற்சி , பாடல்கள்
MyFriend அவர்கள் எங்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். இவருடைய சொந்த வலைபதிவினை விட முக்கியமாக கூற வேண்டியது தேன்கிண்ணம் வலைபதிவாகும். காலத்தால் அழியா பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கி வருகிறது. என்றும் இதிலிருந்து நமக்கு தேவையான தேனினும் இனிய பாடல்களை பருகி மகிழலாம்.
MyFriend அவர்கள் எங்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். இவருடைய சொந்த வலைபதிவினை விட முக்கியமாக கூற வேண்டியது தேன்கிண்ணம் வலைபதிவாகும். காலத்தால் அழியா பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கி வருகிறது. என்றும் இதிலிருந்து நமக்கு தேவையான தேனினும் இனிய பாடல்களை பருகி மகிழலாம்.
சரி சரி படத்திலே வரும் மற்றொரு காட்சியையும் விளக்கியே தீரனும்.நாயகன்
ஊர் பஞ்சாயத்தில் வந்து அலப்பறை செய்யும் போது சத்யராஜ் சொல்லுவார்
நாங்களும் ஒரு காலத்தில் இப்படி மாப்பிளைகளா ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்
தான் என்று பழையதை பேச்சுவாக்கில் சொல்லுவார். அது போல தான் எங்கள்
பயமறியா பாவையர் சங்கமும் ஒரு காலத்தில் சுறுசுறுப்பா இருந்தது. இப்ப அது
பொலிவிழந்து Old id Gold..!!
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... அறிமுக தளங்களுக்கு சென்று வருகிறேன்...
ReplyDeleteபயமறியா பாவையர் சங்கம், பிரவாகம் - இரு தளங்களும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதனபாலன் சார், உங்களுக்கு தெரியாத தளங்களும் இருக்கிறதா...ஆச்சரியமான விசயம்தான்..
Deleteகலக்கல் துவக்கம்.."பயமறியா பாவையர்கள்" பேரே அசத்தலா இருக்குங்க.. சூப்பர்.. தொடர்ந்து கலக்குங்க..
ReplyDelete
ReplyDeleteஆரம்பமும் அறிமுகங்களும்
இனிதான வாரமாக இவ்வாரம் இருக்கும்
என் கட்டியம் கூறிப்போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
திண்டுக்கல் தனபாலன் , கோவை ஆவி , Ramani S - வரவேற்ற அனைவருக்கும் நன்றிங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் அனுசுயா...புதிய தளங்களை தொடர்கிறேன் ..நன்றி...
ReplyDeleteபயமறியா பாவையர் சங்கமா???
ReplyDeleteபின்னூட்டம் போடவே பயமா இருக்குங்க!
புதுமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஉனகளுக்குப் பாராட்டு.
திருத்தம்: ‘உனகளுக்கு’>’உங்களுக்கு’.
Delete👍👍👍👍 கலக்குங்க.. எங்க இருந்தாலும் நம்ப சங்கத்து மக்க சப்போர்ட் பண்ண வந்துட்டோம்ல
ReplyDeleteபுதுமுகங்களுக்கு வாழ்த்துகள்.புதிய தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள்
தொடர்கிறேன்
-நன்றி-
அன்புடன்-
-ரூபன்-
////
ReplyDeleteஅந்த பொற்காலத்தில் பிறரை கலாய்ப்பதும்,காலைவாரி விடுவதுமாக பட்டாம் பூச்சி பருவமாக வாழ்க்கையே வண்ண மயமாக இருந்தது. அந்த நாள் நியாபகம் இந்த நாளிலும் வந்ததே.. :) :)
/////
சரிங்க பாட்டி.
மீள் பிரவேசம் செய்திருக்கும் சகோதரியாருக்கு வரவேற்புகள்
நிசமாவே பொலிவிழந்து தாங்க இருக்குது. உங்க சங்கம்.
ReplyDeleteஅந்த பிரவாகம் என்ற பதிவுக்கு சென்றால்,
ஜி 3 அப்படின்னு காயத்ரி என்று பெயரா ?
லிட்டில் ஜாய்ஸ் ஆப் லைப் என்ற கவிதை
மிகவும் அழகு.
அதை தமிழாக்கம் செய்வோம் என்று கூட நினைத்தேன்.
டி. எஸ். எலியட்டை நினைவு படுத்தும் நடை.
அது சரி, உங்கள் வலைப் பதிவு எங்கே?
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
http://vanusuya.blogspot.in/
Deleteஅனுசுயா அவர்கள் வழங்கிய - இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஇன்றைய உங்கள் அனைத்து அறிமுகங்களும் அருமை
ReplyDeleteஅனுசூயா அவர்களே!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகிய புதிய அறிமுகங்கள்.
ReplyDeleteஇன்றைய பதிவு இன்னும் காணவில்லையே?
அனுசுயா - தாராசுரம் - http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_2417.html
Deleteசிறப்பான அறிமுகங்கள்... பாராட்டுக்கள்..!
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
Folder icon -ஐ மாற்றுவது எப்படி? (வீடியோ) மற்றும் அருமையான 150 Folder icon -டவுன்லோட் செய்ய.
புதிய அறிமுகங்கள் வாழ்த்துகள்.
ReplyDelete