இலக்கிய உலகில் சமகாலத்தில் மிக
முக்கிய ஆளுமை திரு.ஜெயமோகன். அவருடைய விஷ்ணுபுரம், பின்தொடரும்
நிழலின் குரல் போன்றவைகள் மனதை கவர்ந்தாலும்அறம் சிறுகதை
தொகுப்பே என்றைக்கும் மனதிலும், உணர்விலும் நிறைந்திருப்பவைகள்.
கதைகள் அவருடைய தளத்தில் வெளியாகும் போதே ஆர்வத்துடன் படித்து
முடித்திருந்தாலும்
பின்னர் நடிகர் கமலஹாசன் ஒரு தொலைகாட்சி பேட்டியில் சிலாகித்து
சிபாரிசு செய்த போதுதான் அந்த தொகுப்பின் வீச்சு இன்னமும் நன்றாக
புரிந்தது. அறம் சிறுகதை தொகுப்பை இணையம் வழியே வாங்க https://www.nhm.in/shop/100- 00-0000-230-5.html
பொதுவாக இலக்கியத்தில் அந்த கோணம், இந்த கோணம், பின்நவீனத்துவம்
என்பது போல விளக்குவார்கள். அவ்வாறின்றி நான் நேரிடையாக -தட்டையாக-
மட்டுமே பேசுகிறேன்.
இந்த
கதையில் ஆச்சியாக பட்டவள் செய்யும் காரியமானது இன்று நினைத்து
பார்க்கவே இயலாத ஒன்றாக உள்ளது. தன் வாரிசுகள் எந்த பழிபாவத்திற்க்கும்
ஆளாகாது நல்லவர்களாக வளர வேண்டும் என்பதான தாய்மையின் உணர்ச்சி
வெளிபாடு மிக அருமை. இன்றைக்காக இருந்தால் அது ஆண்களின் வரவு-செலவு
என்று சொல்லி கழண்டு கொண்டு இருப்பார்கள்.
ஆச்சி அப்டியே போட்டது போட்டபடி விரிச்ச தலையும் கலைஞ்ச சேலையுமா நேரா போயி கடைமுன்னாடி நின்னிருக்கா. புலவனோட பணத்த மிச்சம் மீதி இல்லாம இப்பவே குடுக்கணும்னு சொல்லியிருக்கா… நெனைக்கவே சிலுக்குது. எப்டி இருந்திருப்பா. அந்தக்காலத்திலே ஒரு ஆச்சி மதுரய எரிச்சாளே, அவ தானே இவ? எல்லாம் ஒரே வார்ப்பில்ல? செட்டியார் நடுங்கிப்போயி ’இல்லம்மா குடுத்திடறேன்… சத்தியமா நாளைக்குள்ள குடுத்திடறேன்’னிருக்கார். ’இன்னிக்கே குடு, இப்பவே குடு. நீ குடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்’னு சட்டுன்னு நேராபோயி தார் ரோட்டிலே சப்புன்னு உக்காந்திட்டா. நல்ல கறுத்த நெறம். நெறைஞ்ச உருவம்.நாலாளு சைஸ் இருப்பா. முகத்திலே கனமா மஞ்சள். காலணா அகலத்துக்கு எரியறாப்ல குங்குமம். பெருக்கிப்போட்ட தாலி சும்மா வாகைநெத்து குலைகுலையா விளைஞ்சதுமாதிரி கழுத்து நெறைஞ்சு …அம்மன் வந்து முச்சந்தியிலே கோவில்கொண்டது மாதிரில்ல அவ இருந்தா? ஒரு வார்த்தை சொல்லமுடியாது. சங்கைக் கடிச்சு ரத்தம் குடிச்சிருவா…. செட்டி எந்திரிச்சு ஓடினான். பேங்கிலே அவ்ளவு பணம் இல்லை… கைமாத்துக்கு ஓடினான். தெரிஞ்சவங்க காலிலே விழுந்தான். பணம் தெரட்ட சாயங்காலமாச்சு. அதுவரை அப்டியே நடுரோட்டிலே கருங்கல்லால செஞ்ச செலை மாதிரி கண்ணமூடி உக்காந்திட்டிருக்கா. தீ மாதிரி சித்திரமாச வெயில். நல்ல அக்கினி நட்சத்திரம்யா அது… தார் ரோடு அப்டியே உருகி வழியுது. செட்டி டாக்ஸிய புடிச்சுகிட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்தான். நான்தான் பொணமா கெடக்கறேனே. என் பொஞ்சாதி காலிலே பணத்தைக்கொட்டி ‘என் குடும்பத்த அழிச்சிராதேன்னு உன்புருஷன்கிட்ட சொல்லு தாயீ…என் கொலத்துக்கே வெளக்கு இப்ப தெருவிலே உக்காந்திருக்கா… அவன் பணம் முச்சூடும் வட்டியோட இந்தா இருக்கு’ன்னு சொல்லிட்டு அதே காரிலே திரும்பி ஒடினான். நேராபோயி அவ முன்னாடி துண்ட இடுப்பிலே கட்டிகிட்டு ‘என் கொலதெய்வமே, எந்திரி .நான் செய்யவேண்டியத செஞ்சுட்டேன் தாயீ’னு சொல்லி கதறிட்டான். நாலுபேரு சேந்து அவள தூக்கினாங்களாம். சேலைபாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க’
சோற்றுக்கணக்கு [சிறுகதை]
என்
றைக்கும் உணவினை மிச்சம் வைத்து, வீணாக்குபவர்களை காணும்
போதெல்லாம் நினைவில் வரும் கதை. இந்த கதையில் பலருக்கு பல இடங்கள் பல காரணங்களால் பிடிக்க கூடும். ஆனால் எனக்கு பிடித்தது..
போதெல்லாம் நினைவில் வரும் கதை. இந்த கதையில் பலருக்கு பல இடங்கள் பல காரணங்களால் பிடிக்க கூடும். ஆனால் எனக்கு பிடித்தது..
அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.
வணங்கான் [சிறுகதை] -1 , வணங்கான் [சிறுகதை] 2
பொதுவா இந்த கதை பிடித்தமான ஒன்று.
யானைடாக்டர் [சிறுகதை] -1 , யானைடாக்டர் [சிறுகதை] 2 , யானைடாக்டர் [சிறுகதை] 3
ஒவ்
வொரு வரியும் நினைவில் நிற்கும் கதை. யானை டாக்டர் போல இப்படியும்
சிலரேனும் இருப்பதால் தான் காடு, கழனிகள் செழிக்க மழை பெய்கிறதோ
என்று சில சமயம் நினைத்தது உண்டு. இந்த கதை மட்டும் இலவச பிரசுர வெளியீடாக
வந்ததை பெற்று பல நண்பர்களுக்கும் கொடுத்து படிக்க செய்ததுண்டு.
எனக்கு தெரிய ஒரு சிறுகதையானது இப்படி தனியே பொது நலன் கருதி
வெளியானது இந்த கதை தான். அனைத்து வரிகளுமே பிடித்த வரிகளே..
நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க
நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] -2 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 3 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 4
மிகவும் தாழ்த்தபட்ட சமூகத்தலிருந்து முன்னேறி வரும் புதிய தலைமுறை மகனுக்கும், பழயை நினைவுகளில் அல்லலுறும் தாய்மைக்குமான பாசப்
பிணைப்பு போராட்டம். வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.. :( :(
ஓலைச்சிலுவை [சிறுகதை] -1 , ஓலைச்சிலுவை [சிறுகதை] -2 , ஓலைச்சிலுவை [சிறுகதை] 3
இந்த சிறுகதையில் ஒரு வரிகூட தவறவிடக்கூடாதது. அந்தளவு பிடித்தமான கதை.
இலக்கிய புத்தகங்கள் சம்பந்தமான விமர்சனங்கள், அறிமுகம் போன்றவைகளுக்காக படிக்கும் மற்றொரு வலைபதிவு சிலிகான் ஷெல்ஃப் . தனிப்பட்ட முறையில் அவருடைய கருத்துகளை, விமர்சனங்களை அடக்கிய ஒரு வலைபதிவாகும்.
மோகன்தாஸ் அவர்களின் Being Mohandoss . இவருடைய சில சிறுகதைகள்... அக்கா பெண்ணே அழகே!!! ,உள்ளம் உடைக்கும் காதல் 1 ,முதலிரவு
வா.மணிகண்டன் அவர்களின் நிசப்தம் வலைபதிவும் தேடிப் படிக்கும்
வலைபதிவுகளில் ஒன்றேயாகும்.
வலைபதிவுகளில் ஒன்றேயாகும்.
அருமையான வலைத்தளங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான வலைத்தளங்களின் அறிமுகத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
ReplyDeleteசிறப்பான பல வலைதளங்களின் அறிமுகத்துக்கு மிக்க நன்றி
ReplyDeleteஅருமை.. அருமை..
ReplyDeleteதரமான பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteகருத்துச் செறிவுள்ள பதிவு.
சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
இலக்கிய வலைபதிவாளர்களின் தொகுப்பு சிறப்பு! நன்றி!
ReplyDeleteகருத்துச் செறிவுள்ள கதைகளின் தொகுப்பான
ReplyDeleteஇந்தப் பதிவு, மதிப்பு மிக்கது ஆகும்.
சிறப்பான அறிமுகம்!.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDelete