Friday, September 27, 2013

அனு - ஆயக்க​லைகள்

நம் கலாச்சாரத்தில் ஆயக்க​லைகள் அறுபத்து நான்கு என்பார்கள். அதனுள் ​கோலம் ​போடுவது ஒரு க​லையாக வருமா என்று எனக்கு ​தெரியவில்​லை. ஆனால் நண்பர் திரு.உதயன் அவர்களுக்கு இந்த க​லையின் மீது தீராத ஆர்வம்.

உதயம்.இன் என்ற தளத்தின் மூலமாக ​கோலக் கலைகள் பற்றிய தெரியாத விடயங்களை அதற்குண்டான படங்களுடன் விளக்கங்களும் (Image With Description) வரைவது எப்படி என்று அசைப் படங்களும் (Animation) செய்து ஒளிப்படங்களாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள கோலங்கள் அனைத்தும் Engineering Drawing முறைப்படி சரியான அளவில், சரியான வடிவத்தில் வரையப்பட்டு நல்ல தரமான படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.


கலைகளுக்கான படத்தொகுப்பிற்கு (Traditional art image  Gallery) ,கலைகளுக்கான வீடியோத்தொகுப்புகளுக்கு (Arttube) - இங்கு அனிமேசன் சாப்ட்வேர் உதவியிடன் கோலம் எப்படி வரைவது என்று பயிற்ச்சி அளிக்க படுகிறது. மார்கழி மாதத்தில் ந​டை​பெற்ற ​கோலப் ​போட்டியி​னை இந்த சுட்டியில் காணலாம். உதாரணமாக மிக எளிதாக வ​ரையக்கூடிய​தை இங்​கே காணலாம்.
 

நமது க​லைகள் குறித்தான அறிமுகத்தில் மிக முக்கியமா நான் கருதுவது
மாணிக்க மாதுளை முத்துகள் என்ற ​பெயரில் எழுதி வரும் திரு.ஜி.ராகவன் அவர்களின் வ​லைபதிவாகும். அவர் புதிய யுக்தியாக கம்பராமயணத்​தை தனது குரலில் விளக்கம் ​கொடுத்து வ​லை​யேற்றி வருவ​தே தனிசிறப்பாகும்.
சொல்லோவியம் – பாகம் ஒன்று , சொல்லோவியம் – பாகம் இரண்டு இவ்விரண்டு ஒலி​தொகுப்புகளும் மிக சிறப்பான​வைகள்.இங்குள்ள த​லைப்புகளில் சில வில்லொடிந்த போது சீதையின் மனநிலை , கோசல விருந்து - கம்பராமாயணம் .

திரு.சி. ஜெயபாரதன்  அய்யா அவர்களின் நெஞ்சின் அலைகள் வ​லைபதிவில் வானவியல், அணுவியல் சார்ந்த கட்டு​ரைக​ளை படித்து மகிழலாம். அழகு தமிழில் ​தொடர்ந்து அறிவியல் கட்டு​ரைக​ளை இவர் மிக நீண்ட காலமாக எழுதி வருகிறார்.

திரு.என்.ராமதுரை அவர்களின் அறிவியல்புரம் எனும் வ​லைப்பதிவில் எளிய மு​​றையிலான அறிவியல் கட்டு​ரைக​ளை காணலாம். சிறுவர்களுக்கு தமிழில் எளிள கட்டு​ரைகள் படிக்க ஏதுவாக இருக்கும். ​பெரியவர்களுக்கும்
சு​வையான கட்டு​ரைகள் உண்டு.

6 comments:

  1. சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கோலநோட்டு காணோமேனு நினைச்சுட்டு இருந்தேன்..ஒரு தளம் தந்துவிட்டீர்கள்..நன்றி அனுசுயா. மற்றவையும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கின்றன..வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமையான காணொளி ..
    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. அறிமுக வலைத்தளங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  6. கலைத்தளங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete