Saturday, September 28, 2013

அனு - பசு​மை

எனது வலைப்பூவில் நான் எழுதிய விசயங்களில் அதிகம் பூக்களைப் பற்றியது தான். எனக்கு மிகவும் பிடித்த பூக்களை பற்றி எழுதாவிட்டால்  எனது வலைசரம் பூர்த்தியே ஆகாது. கடந்த மாதம் நான் வால்பாறை சென்று இருந்தேன். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை தோட்டம் தான். ஊட்டியிலும் கண்டுள்ளேன் ஆனாலும் இங்கு சற்று அதிகம் போல தோன்றுகிறது. இதுவரை தேயிலை செடியை மட்டும் பார்த்து வந்த எனக்கு அதன் பூ மற்றும் காய் ஆகியவற்றை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

 


மாதேவி  இவரின் வலைத்தளத்தில் எண்ணில் அடங்கா பயனுள்ள குறிப்புகள் பூக்களைப்பற்றி இருக்கின்றன.  உணவாகும் பூக்கள் ​போன்ற​வைகள் சுவாரசியமா​ன​வை.

அ​தே சமயத்தில் நம் சமூகத்தில் பசு​மை​யை மலரச்​ ​செய்வதில் திரு.வின்​சென்ட் அய்யா அவர்களின் மண், மரம், மழை, மனிதன்  வ​லைபதிவு மிக முக்கியமானதாகும். பல்​வேறு மூலி​​கைகள் பற்றியும், மாடியில் ​செடி வளர்ப்பது ​போன்ற​வை குறித்து மிக்க அனுபவசாலி. நமது சந்​தேகங்க​ளை தாராளமாக ​கேட்கலாம். ​பொறு​மையாக விளக்குவார்.
 
இ​தே ​போல ​வேளாண்​மை குறித்த ​செய்திக​ளை ​தொகுத்து வழங்கி வருவது வேளாண் அரங்கம்  ​வ​லைப்பதிவாகும். திரு.முருகபாண்டியன் அவர்களின் முயற்ச்சியால் ந​டை​பெற்று வருகிறது. இவ​ரே ​வேளாண்அரங்கம் மார்க்​கெட் ​பெயரிலான தளத்தில் பல்​வேறு நிறுவனங்கள் பற்றியும், ​வேளாண் ​பொருட்கள் பற்றியும் பட்டியலிட்டு வருகிறார். இவர்  கடைசி பெஞ்ச்   என்ற ​பெயரிலான வ​லைபதிவிலும் எழுதி வருகிறார்.

10 comments:

  1. கடைசி பெஞ்ச் எனக்கு புதிய தளம்... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இடைவிடாத பணிகளுக்கிடையிலும் வேளாண் அரங்கம் பதிவினை அறிமுகப்படுத்தியதமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. தேயிலையை தேயிலைத் தோட்டங்களை மட்டும் பார்த்த எங்களுக்கு"அதன் பூ மற்றும் காய் ஆகியவற்றையும் பார்க்கும் வாய்ப்பு " கிடைக்க வைத்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  5. அறிமுகமாகியுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  6. சின்னுரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்கநன்றி.
    வழமைபோல அறியத்தந்த தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. விவசாயம் சம்பந்தமான பதிவுகளை இன்று
    அறிமுகப் படுத்தினீர்கள், நன்றி!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. நல்ல வலைப்பூ அறிமுகம்.. வேளாண் அரங்கம். நன்றி

    ReplyDelete