Sunday, September 29, 2013

அனுசுயா ஆசிரியர் பொறுப்பை அகலிகனுக்கு தருகிறார்!!!


வணக்கம் வலை நண்பர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த அனுசுயா அவர்கள், தமது வலைச்சர பணியை ஆர்வமுடனும், அசத்தலான தலைப்புகள் மூலம் பதிவர்களை மிக அருமையாக அறிமுகம் செய்தும் நம்மிடமிருந்து மனநிறைவுடன் விடைபெறுகிறார். 
 
அனுசுயா எழுதிய பதிவுகள்:
அனுசுயா - தாராசுரம்,
அனுசுயா - அறம்
அனு - பு​கைப்படக் க​லை
அனு - ஆயக்க​லைகள்
அனு - பசு​மை

இவரது பதிவுகள் சுமார் 70 மறுமொழிகளை பெற்றும், 850 பக்க பார்வைகளும் பெற்றுள்ளது. அனுசுயா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க அகலி(கை)கன் என்ற வலைப்பூவை எழுதிவரும் முரளி கிருஷ்ணன் அவர்களை அழைக்கின்றேன். சென்னை அம்பத்தூரில் டிஜிட்டல் ஸ்டுடியோ வைத்துள்ள இவர் கல்லூரி காலங்களில்(BA) பேச்சுப் போட்டிகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார். கட்டுரை பத்திகள் எழுதுவதை விட, கவிதைகள் எழுதவே இவருக்கு பிடிக்கும் என சொல்கிறார்.

முரளி கிருஷ்ணன் அவர்களை வருக வருக என வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துக்கள் அனுசுயா...
நல்வாழ்த்துக்கள் முரளி கிருஷ்ணன்

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்......

6 comments:

  1. இருவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  2. அனுசூயா அவர்களுக்கு பாராட்டுக்கள்!
    முரளி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
    -கலையன்பன். www.kalaiyanban.blogspot.com

    ReplyDelete
  3. முரளி கிருஷ்ணன் அவர்களை வரவேற்கிறேன்...

    ReplyDelete
  4. வணக்கம்

    முரளிகிருஷ்ணன் அவர்களை வலைச்சரப் பணிக்கு அன்புடன் வரவேற்கிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அனுசூயா அவர்களுக்கும் முரளி கிருஷ்ணன் அவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  6. வாழ்த்துகள். வருக. ஒவ்வொரு பதிவையும் கூகுள் ப்ளஸ் ல் இணைக்க வேண்டுகின்றேன்.

    ReplyDelete