Sunday, September 8, 2013

விமலன் குமாரிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் குமார் தான் ஏற்ற பொறுப்பினை இன்றுடன் முடித்து விட்டு நாளை முதல் பொறுப்பேற்க இருக்கும் நண்பர் விமலனிடன் பொறுப்பினை ஒப்படைக்கிறார்.

குமார் வலைச்சரப் பதிவுகளைப் புது விதமாகக் கொண்டு சென்றிருக்கிறார்.  பதிவுகள் சுய அறிமுகம், குலவைப் பாட்டு, கெட்டவனுக்கு எட்டா, திருவிழாக்கள், ஆசிரியர்கள், பிரபலங்கள், கிராமத்து கவிதை, அறிந்த முகங்கள் என்ற தலைப்புகளில் எழுதி இருக்கிறார்.

ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் பல்வேறு உப தலைப்புகள் - சிறு பகிர்வு, பிரபலம், கதையாசிரியர்கள். கவிஞர்கள், பல்சுவை, சமையல், விவசாயம், மருத்துவம், தொழில் நுட்பம், சினிமா, போன்ற உப தலைப்புகளில் பதிவர்களை அறிமுகம்  செய்திருக்கிறார். 

மேலும் இவரைக் கவர்ந்த கவிதை என்னும் உப தலைப்பில் பதிவர் அல்லாத பழனி இராகுல தாசன் , அரசி, மீரா, கண்ணதாசன், முத்துலிங்கம், ராஜாராம் ஆகிய கவிஞர்கள் எழுதிய கவிதைகளை பகிர்ந்திருக்கிறார்.

அடுத்து வீடியோ என்னும் உப தலைப்பில் தமிழருவி மணியன், நெல்லை கண்ணன், மங்கையர்க் கரசி, விஜய் ட்வியில் சூர்யா நடத்திய போட்டி, வை.கோ போன்ற பல பேச்சாளர்களின் சிறந்த பேச்சுகளின் காணொளிகளை இணைத்திருக்கிறார். 

இறுதியாக குறுங்கவிதை என்னும் உப தலைப்பினில் பதிவிற்கு ஒரு கவிதை எழுதி இருக்கிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                        : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள்         : 067
அறிமுகப் படுத்திய பதிவுகள்            : 138
பெற்ற மறுமொழிகள்                             : 239
வருகை தந்தவர்கள்                               : 1364

இவரது பதிவுகளைப் படிக்கும் போது - இவரின் கடும் உழைப்பு, ஈடுபாடு, தனித்துவம் ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. 

குமார் மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

அருமை நண்பர் குமாரினை பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் பெருமை அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் நண்பர் விமலன். 

விமலனின்  சொந்த ஊர் விருதுநகர் அருகிலுள்ள பெரிய பேராலி கிராமம்.  சமூகம் கற்றுகொடுத்தவற்றிலிருந்தும்,இவர்ன் சார்ந்து நிற்கிற தொழிற்சங்கம் கைபிடித்து அழைத்து சுற்றிக்காட்டியவற்றிலிருந்துமாய் மற்றும் சாமன்யர்களில் வாழ்க்கையிலிருந்துமாய் சிதறிக் கிடப்பவவற்றை எழுத வாய்த்திருக்கிற வரம் பெற்றவனாய் இருக்கிறார். 

நண்பர் விமலனை வலைச்சரக் குழுவின் சார்பாக வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் குமார்

நல்வாழ்த்துகள் விமலன்

நட்புடன் சீனா






18 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. எனது இனிய நண்பர் விமலன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  3. மிக மிக அருமையாக பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி ஆசிரியப் பணியைச் சிறப்பாக முடித்து விடைபெறும் சகோதரர் குமாருக்கும்,
    வரும்வாரம் ஆசிரியப் பணியைத் தொடரவிருக்கும் சகோதரர் விமலுக்கும் என் அன்பு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நான் விமலன் அவர்களின் எழுத்துக்களின் ரசிகன்
    இந்த வாரம் வலச்சர ஆசிரியர் பொறுப்பினை
    அவர் ஏற்பது மகிழ்வளிக்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பொறுப்பாசிரியராக இருந்து திறம்பட பதிவர்களை அறிமுகப்படுத்திய அன்புத்தம்பிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    நாளை முதல் பொறுப்பேற்கும் தோழமை விமலனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.:)

    ReplyDelete
  6. Replies
    1. பெயரைத் தவறாகக் குறிப்பிட்டதால் பின்னூட்டத்தை நானே நீக்கியிருக்கிறேன். சுட்டிக்காட்டிய நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
      திரு விமலன் அவர்களின் வலையில் நிறைய மீன்கள் விண்மீன்களாகச் சிக்க வாழ்த்துகள்.

      Delete
  7. அன்பின் திரு. விமலன் - வருக.. வருக!..

    ReplyDelete
  8. பக்கோடா ருசியை மீண்டும் உங்கள் பதிவிலும் தொடருங்கள் விமலன் அவர்களே !

    ReplyDelete
  9. நா.முத்துநிலவன் MUTHUNILAVAN அவர்களுக்கும், agawanjee KA அவர்களுக்கும்....

    அவர் விமலன் அல்ல... மயிலன் அவர்கள்...

    ReplyDelete
  10. விமலன் அவர்களுக்கு நல்வரவு!

    ReplyDelete
  11. நல்வாழ்த்துகள் குமார்

    நல்வாழ்த்துகள் விமலன்

    ReplyDelete
  12. வணக்கம்
    அன்பின் விமலன் (அண்ணா)வருக.....வருக.. வலைச்சரப் பணிக்கு அன்புடன் வரவேற்கிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. இன்று ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.விமலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    தொடருங்கள் தொடர்கிறோம்...

    ReplyDelete
  14. கடந்த ஒரு வார காலமாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று என்னால் முடிந்த அளவுக்கு பணி ஆற்றியதற்கு உங்கள் அனைவரின் ஊக்கமான பின்னூட்டம்தான் காரணம்...

    என் பின்னே தொடர்ந்து வந்தீர்கள்... அதற்காக தங்கள் அனைவருக்கும் நன்றி...

    நான் என்னைக் கவர்ந்த கவிதைகளாக பதிந்தவை அனைத்துமே எங்கள் சிவகங்கை மண்ணின் பிரபலங்களே... அதில் என்னை மகனே என்றழைக்கும் பா.ராஜாராம் அவர்கள் மட்டுமே பதிவர் மற்றவர்கள் பதிவர்கள் அல்ல...

    நான் பதிந்த குறுங்கவிதைகள் எனது கிறுக்கல்கள் தளத்தில் கிறுக்கியவையில் இருந்து சில...

    வீடியோக்களில் எல்லாம் தமிழ்தான் பிரதானம் கோபிநாத்தின் வீடியோ தவிர... அதுவும் சினிமா சம்பந்தமானது அல்ல.... முன்னேற்றம் குறித்த வீடியோதான்...

    மற்றபடி அறிமுகங்கள் எல்லாம் எல்லாரையும் கண்டிப்பாக கவர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்... தொடர்ந்து அவர்களை வாசியுங்கள்...

    என்னை ஆசிரியனாக ஆக்கிப் பார்த்த சீனா ஐயாவுக்கும் வலைச்சரக் குழுவின் மற்றொரு தூணான நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றிகள்...

    தொடர்ந்து வாருங்கள்... இங்கு பேசிய மனசு எனது தளத்தில் தொடர்ந்து பேசும்...

    நன்றி.

    என்றும் நேசத்துடன்
    சே.குமார்
    மனசு
    http://vayalaan.blogspot.com

    ReplyDelete
  15. விமலன் என்றால் தூயவன்.தூய புதுமலர் தொடுத்து வலைச்சரம் வண்ணவண்ண கதம்பமாக்க வாழ்த்துக்கள்.வரவேற்கிறேன்.

    ReplyDelete
  16. குருவி தலையில் பனங்காயை வைப்பதென்பதே பெரிய விஷயம்.அதுவும் சிட்டுக்குருவி தலையில் பனங்காயா?கொஞ்சம் சிரமம் தருகிற விஷயமா இருக்கிறதுதான்,அதனால் என்ன இப்பொழுது?தோள் கொடுக்க நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்தானே?வலைச்சர ஆசிரியப்பொறுப்பை முடிந்த அளவு செவ்வனே செய்வேன் என நினைக்கிறேன்.வலைச்சர நண்பர்கள் நீங்கள் எல்லோரும் இருக்க எனக்கு பயமேன்/நன்றி வணக்கம்/

    ReplyDelete