Sunday, September 8, 2013

மனசு பேசுகிறது - அறிந்த முகங்கள்

வணக்கம் உறவுகளே...

இன்று வலைச்சரப் பங்களிப்பின் நிறைவு நாள்... ஒரு வாரகாலமாக நல்லதொரு பணி... நிறைய வாசிக்கக் கிடைத்தது. சரி வாங்க இன்றும் சிலரைப் பார்த்துட்டு வருவோம்...

பதிவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகங்களே இவர்கள்... புதியவர்களை அறிமுகம் செய்யாமல் அறிந்தவர்களின் அறிமுகமா என்று நினைக்கலாம்... வரும் புதியவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியவர்களைத்தான் இதுவரை அறிமுகமாகக் கொடுத்தேன்.  இன்றும் சில முக்கியப் பதிவர்கள் உங்களுக்காக...

இவரைப் பற்றி முதல்பதிவிலேயே சொல்ல நினைத்தேன். சரி பின்னால் பார்க்கலாம் என்று விட்டு வைத்தேன். மனிதர் நான் சென்ற எல்லாத்தளங்களிலும் பின்னூட்டத்தில் முதலாவது ஆளாய் சிரிக்கிறார். இவருக்கும் நான்கைந்து புதியவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணில் விளக்கெண்ணைய் ஊற்றி ஆளு வந்திருக்காரான்னு பார்த்து புடிக்க வேண்டியதாப் போச்சு. தொலைக்காட்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி எப்படி சின்னத்திரையினருக்கு DD’ யோ அப்படி பதிவர்களுக்கு இவர்DD’. இந்த முறை ஊருக்குப் போகும்போது இவரைப் பார்க்க நினைத்திருந்தேன் வீட்டுப் பணிகளால் சந்திக்க முடியவில்லை. அடுத்தமுறை சந்திக்க வேண்டும். பிரபலம்... சந்திக்க நேரம் ஒதுக்குவாரா தெரியவில்லை....

யாரென்றுதானே கேட்கிறீர்கள்... வேறுயாருமில்லைங்க தனபாலன் சார்தான்...

எழுத்தாளர் பெயர்
தனபாலன்
வலைப்பூ


அவரின் படைப்புக்கள் சில உங்கள் பார்வைக்கு...

"எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்... விடைபெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்;இடிவோம்...ஓஓஒஓஒ... பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே...கடவுள் தந்த அழகிய வாழ்வு... உலகம் முழுவதும் அவனது வீடு ... கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு...."


அது சரி ஐயா... பயப்படாமல் பேசணுமில்லே, அதே சமயம்தான் படிச்சதையெல்லாம், விழாவிலே வந்தவங்க எல்லாருமே ஏற்றுக் கொள்கிற மாதிரி எடுத்து சொன்னாத்தானே, அவரு நன்றாக் படித்தவர் என்று சொல்ல முடியும்...?


அடுத்து நாம் பார்க்க இருக்கும் பிரபலம் ஈரோட்டில் பாய்ந்த கிராமத்து வேரான சமூக அக்கறை கொண்ட அன்பு அண்ணன் திரு. கதிர் அவர்கள். அருமையான கவிஞர், பொதிகைத் தொலைக்காட்சியின் கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை நிகழ்ச்சியில் தனது கவிதையால் நிகழ்ச்சி நடத்தும் திரு.ரமணன் அவர்களைக் கவர்ந்து தொடர்ந்து சில வாரங்கள் பொதிகையை ஆக்கிரமித்தவர். சிறந்த படைப்பாளி, நீங்களும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களைக் கவரும் இவரது கவிதைகள்....

எழுத்தாளர் பெயர்
ஈரோடு கதிர்
வலைப்பூ

“மல்லிகைப்பந்தல் கடந்த காற்றில்

கசியும் வாசமாய்
கமழ்கிறது கலந்த மூச்சுக்காற்று
அப்போதுதான் ஓய்ந்த மழையில்
வழியும் இலை நுனி நீராய்
அவளிடம் சொட்டுகிறது வெட்கம்...”


“எங்க வீட்டுப் பக்கம்

பிக் சிக்இருக்கு!
எங்க வீட்ல
நாட்டுக்கோழி இருக்கு!
அங்கே மேரிப்ரவுன் கூட
இருக்குதே!
எங்க அப்பத்தா
கல்லக்கா சுட்டுத்தருமே!”



இந்தப் பிரபலம் கோயில்களின் நகரமாம் கும்பகோணத்துக்காரர். வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று சொல்லி எழுத்தை நேசிக்கும் ஒரு அருமையான எழுத்தாளரும் எனது அன்பு அண்ணனுமான திரு. ஆர்.வி.சரவணன் அவர்கள்... இவரது படைப்புக்கள் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை...


எழுத்தாளர் பெயர்
ஆர்.வி.சரவணன்
வலைப்பூ


பதினைந்து வருடங்களாக விட்டு போன நட்பு, ஒரே நாளில் ஒருமாத போன் பில் வரும் அளவுக்கு எகிற வைத்து அத்தனை வருட கதையை ஒரே நாளில் அவர்களை பேச வைத்தது.பின் அவள் இவன் மனைவியிடமும் இவன் அவளது கணவரிடமும் பேசி பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டனர்.”



“இந்த (அவசர கால)  இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு கஷ்டத்தை யேனும் அனுபவிச்சு வலம் வந்திட்டிருக்கோம்.அதையெல்லாம் மறந்துட்டு ஒரு நாள் முழுக்க வேறொரு உலகத்தில் சந்தோசமாய் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அது தாங்க இந்த பதிவர் சந்திப்பு. இதை இப்படியும் சொல்லலாம். பாலைவனத்தில் கடும் வெயிலில் அவதிப்பட நேர்கையில் எங்கேனும் நிழல் தரும் மரம் தென்பட்டால் விரைவாக சென்று நிழலில் இளைபாற தோணுமே. அந்த சூழ்நிலைக்கு ஒப்பானது இது.இவ் வரிகள் வார்த்தை அலங்காரத்திற்காக  சொல்லப்பட்டதல்ல. நான் எப்போதுமே எந்த ஒரு சிறு நிகழ்வானாலும் அதை ஒரு தனி அழகியலுடன் தள்ளி நின்று ரசிப்பதுண்டு. அப்படி ரசித்ததை தான் இப்படி குறிப்பிடுகிறேன்”



அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் பிரபலம் ஒரு பெண் எழுத்தாளர். கோவையிலிருந்து கிளம்பி தில்லி சென்று பதிவுலகில் மையம் கொண்டிருப்பவர். இவரது கணவரும் அருமையான எழுத்தாளர்தான். நிறைய பயணப் பகிர்வுகளை சுவராஸ்யமாகப் பகிர்வதில் அண்ணன் கில்லாடி என்றால் எழுத நினைத்ததை நகைச்சுவை கலந்து எழுதுவதில் அண்ணி கில்லாடி. இவர் செய்யும் புத்தக விமர்சனங்கள் அருமையாக இருக்கும் சென்று பாருங்கள்... எழுத்தால் உங்களைக் கட்டிப் போட்டுவிடுவார்.

எழுத்தாளர் பெயர்
ஆதி வெங்கட்
வலைப்பூ
கோவை2தில்லி


“தோழியிடத்தில் இரவல் வாங்கி (புத்தகங்களைத் தேடி வேட்டை தான்!) சமீபத்தில் நான் வாசித்த இரண்டு புத்தகங்களும் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. நீயா? நானா?” கோபிநாத் அவர்களின் நேர் நேர் தேமாவும், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற புத்தகங்களும் தான் அவை.. இரண்டுமே சுய முன்னேற்ற புத்தகங்கள்
ரங்கனின் தெப்போற்சவம், கொள்ளிடக்கரையில் திருவெள்ளறைப் பெருமாள், உத்தமர் கோவில் பெருமாள், அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் ஆகியோரின் திவ்ய தரிசனம். பங்குனித் திருவிழாவில் கருட வாகனம், கற்பக விருட்சம், பூத்தேர், பங்குனித் தேர், சேர்த்தி சேவை எனரங்கனின் உற்சவங்களுக்கு பஞ்சமா என்ன? வருடம் முழுவதுமே அவனுக்கு விதவிதமான அலங்காரங்களும், ஊர் சுற்றி வருதலும் தானே வேலை….


அடுத்தவரும் ஒரு பிரபல பெண் பதிவர்தான்... பொறுத்தது போதும் பொங்கி எழு சுனாமியாய் எனச் சொல்லும் இவர் மிகச்சிறந்த எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் புத்தகங்களாக உருப்பெற்றுள்ளன. இவரின் கவிதைகள் உயிரோட்டமானவை. எல்லாருக்கும் தெரிந்த பதிவர்தான்... புதியவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பதிவர்...

எழுத்தாளர் பெயர்
கோவை மு.சரளா
வலைப்பூ
பெண் என்னும் புதுமை


“வெயில் சொரியும்
மதிய வேலை
மரங்களின் அச்சுப்பிரதிகளை
ஒட்டி வைத்திருக்கும்
தார்சாலையில்
நடக்கிறேன்
எனக்குள் வழியும்
வியர்வை ஊற்றுகளின்
தொடுகை உணர்ந்து
சிலிர்த்து அசைகிறது
நிழல் இலைகள் ....”



“இழப்பின் துயரம்
தாங்கமுடியாமல்
தரையிறங்க துடிக்கும்
இதயத்தை இன்னும்
வலுவாக தாக்குகிறது
இன்னும் ஒரு இழப்பு”

பிரபலங்களைப் பார்த்தாச்சு இனி சில நட்புக்களுக்காக...

நண்பன் தமிழ்க்காதலனின் சீரிய முயற்சிக்கு காயத்ரி அக்காவும் தங்கை அனிதாவும் துணை நிற்க தமிழ்க்குடில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  நூலகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற குடிலின் முதல் முயற்சியாக சிலம்பூர் கிராமத்தில் குடிலுக்கென அலுவலகமும் பொது நூலகமும் கட்டி முடிக்கப்பட்டு வரும் 9ந்தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கென ஒரு வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகளைப் பகிர்ந்து வருக்கிறார்கள். சென்று பாருங்கள்... அதிலிருந்து சில பகிர்வுக்கான இணைப்புக்கள் இதோ...

“1,159 அங்கத்தினர்களைக் கொண்ட தமிழ்க்குடில் குழுமம் துவங்கிய ஓராண்டில் தமிழ்க்குடில் அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்க்குடில் அறக்கட்டளை 2012 மே மாதம் 21ஆம் திகதி பதிவு(பதிவு எண் 18 IV 12) செய்யப்பட்டு, 2012 ஜுன் 10ஆம் திகதி சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழ்க்குடிலின் முதல் ஆண்டுவிழாவில் புலவர் திரு.புலமைப்பித்தன், ஐயா.சிலம்பொலி செல்லப்பா, கவிஞர். திரு.அறிவுமதி, கவிஞர் திரு.இராஜ.தியாகராஜன், கவிஞர்.திரு.இரவா.கபிலன் அவர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.”



“தமிழ்க்குடில் அறக்கட்டளையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இணைய வசதியுடன் கூடிய பொதுநூலக திறப்புவிழாவின் அழைப்பிதழ் தங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாதம் 09-09-2013 அன்று அரியலூர் மாவட்டம், சிலம்பூரில் நடக்கவிருக்கும் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுநூலகத்திறப்பு விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பம் மற்றும் நட்புடன் வருகை தந்து கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.”


மற்றொரு செய்தி நம்ம DDயும் ரூபனும் இணைந்து தீபாவளி சிறப்புக்கவிதை போட்டி வைத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்புப் பகிர்வை இருவரது தளத்திலும் பகிர்ந்திருக்கிறார்கள்.  அதை அப்படியே கீழே தருகிறேன்...



“தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்வாருங்கள்…  வாருங்கள்

போட்டிக்கான தலைப்பு

1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி

போட்டியின் விமுறைகள் :

1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் பதிவில் 20/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com& amp; dindiguldhanabalan@yahoo.com

ரூபனின் தளத்தில் வாசிக்கச் சில...

உன் மல்லிகைப் பூ வாசனையில்
ஒரு நாளில் மது போதை ஏறியது
காதில் நீ அணியும் ஜீமிக்கிதான்
உன் தலை அசைவுடன்-உன்
சம்மதத்தை காட்டுமடி
சிங்கார சென்னையில் நீ வசிக்கிறாய்
சிங்கார உடையணிந்து
என் சிந்தனைக்கு அழகு காட்டுதடி
சில காலம் பொறுத்திரு



“ஜீவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான் அவன் படிக்கும் பள்ளிக்கூடம் ஒரு கலவன் பள்ளிக்கூடம் அங்கு ஆண்களும் பெண்களும் கல்வி கற்க்கும் பள்ளிக்கூடம் ஜீவன் 10ம் வகுப்பு படிக்கும் போது மிகவும் அழகானவன் நல்ல மா நிறம் கொண்டவன் அவனுடைய பேச்சும் நடையும் பெண்களை மெதுவாக கவரும் அப்படி அழகு படைத்தவன் ஜீவன்...”


இனிச் சில உங்களுக்காக....

கவர்ந்த கவிதை

"தமிழ் முழக்கம்"

"வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள்
ஒன்றாய்ச் சேருங்கள்
கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள்
வெற்றி பூணுங்கள்
தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம்
நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம்
வீரம் காட்டுவோம்"
-கவியோகி சுத்தானந்த பாரதியார்
சிவகங்கை மாவட்டம்


வீடியோ




எனது குறுங்கவிதை


பணத்தால் பூஜை
சிரித்தது விக்கிரகம்...
மனசுக்குள் புழுக்கமாய்
ஏழை பூசாரி...!


சரிங்க...  நான் விடைபெறும் நாள் இன்று.... எல்லாருக்கும் நன்றிங்க.... தொடர்ந்து வாசகனாய் இத்தளத்தில் இருப்பேன்...மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் இன்னும் நிறைவாய் செய்ய முயற்சிப்பேன்.

நன்றி.

மனசு தொடர்ந்து மனசில் பேசும்
-‘பரிவை’ சே.குமார்.

34 comments:

  1. எனது அறிமுகத்திற்கு மிக்க நன்றி... அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. நண்பரே வலைச்சரத்தில் தங்கள் பதிவுகள் அனைத்தும் பாராட்டும்படி இருந்தது நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. வணக்கம
    சே.குமார் (அண்ணா)

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி

    அத்தோடு தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி விளம்பரப் பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக மிக நன்றி தகவல் எல்லோருக்கும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. என்னை அறிமுகபடுதியமைக்கு மிக்க நன்றி குமார் மிக்க மகிழ்ச்சி இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் நீங்கள் எனை அன்பு அண்ணன் என்று குறிப்பிட்டிருப்பது ஒரு சகோதர உணர்வை தருகிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

      Delete
  7. அருமையான பதிவர்களும் அறிமுகங்களும்.. மிகமிகச் சிறப்பு சகோதரரே!

    அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  10. இன்று அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்..

    தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறிமுகத்திற்கு நன்றி.

    நாளை நடக்கவிருக்கும் திறப்புவிழாவிற்கு தோழமைக வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

    தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  11. ennaiyum arimugam seythatharkku mikka nandri. anaivarukkum vaazhthukkal.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  12. பணி பாணி மிகச் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  13. நல்ல வலைத் தளங்கள் அனைத்தையும் சிறப்பாக அறிமுகம் செய்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் பற்றிய அறிமுகம் அருமை. அன்பின் குமார்.. தங்களுடைய கழுத்து வலி குணமாக வேண்டிக் கொள்கின்றோம்!.. வாழ்க.. வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  14. பணியை செவ்வனே செய்து மனநிறைவு
    தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள்.
    மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  15. அழகாய் பல பதிவர்களை அறிமுகம் செய்தீர்கள்.
    எனது இனிய நண்பர் குடந்தை சரவணன் அவர்களையும்
    அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி.

    சிறப்பான பணியை செய்தீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  16. ஒரு வாரம் வலைச் சரத்தில் ஆசிரியராக இருந்து பிரபலங்களையும் அல்லாதவர்களையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.அருமை.பலரைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  17. மிகுந்த நன்றிகள் குமார்!

    ReplyDelete
  18. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. உங்கள் வாரமும் அறிமுகப்படுத்திய விதமும் மிக அசத்தல்.நேரம் கிடைக்கும் பொழுது அனைவர் தளமும் சென்று பார்க்கிறேன்.

    //மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் இன்னும் நிறைவாய் செய்ய முயற்சிப்பேன்.//

    உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தம்பி குமார்.

    ReplyDelete