நேற்றைய என் பதிவினை வாசித்த நண்பர்களுக்கும் வாசித்ததோடு நில்லாமல் என்னை நேசித்து பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
மகிழ்ச்சி என்பது என்ன? நல்ல குடும்பம், நல்ல படிப்பு நல்ல வருமானம் இவை மட்டும்தானா? நல்லா படிச்சு நிறைய சப்பாதித்து கார் வாங்கி, பங்களா வாங்கி அப்புறம்? அப்புறன் என்ன காரையும் பங்களாவையும் மொறச்சி பாத்துகிட்டிருப்போமா? இதுதான் மகிழ்ச்சியா? இல்லை, இது அத்தனையையும் பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் வேண்டும். "மச்சி கார் வாங்கிருக்கிறேன் சொன்னதும் சூப்பர்டா" என கார்வாங்கியதால் நாம் அடைந்த அதே மகிழ்ச்சியை அதே மனநிறைவோடு அனுகும் ஒரு ஆத்மா வேண்டும்.
வாழ்க்கைப்பாதையின் வளைவு நெளிவுகளை கற்று அறிந்து பட்டு தெளிந்து, சின்னச்சின்ன வெற்றிதோல்விகளை எதிர்கொண்டு முன்னேறிச்செல்கையில் அவற்றின் அனுபவங்களை ஆராயவும் அசைபோடவுமாய் உடன் பயனிக்க ஒரு நட்பு அவசியம் தேவை.
சகலதையும் பகிர்ந்துகொள்ளும் நட்பு ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்யும். நண்பன் இல்லாத வாழ்க்கை நரகம். முட்டி மோதி,தட்டுத்தடுமாறி வாழ்க்கை சூராவளியால் திசைகள் தெரியாமல் அலைகழிக்கப்பட்டு சோர்வும் விரக்தியும் வாட்டும் வேளையில் சொந்தங்கள் நம்மை சீண்டித்தான் பார்க்குமே தவிர அரவணைக்காது. ஆனால் வாஞ்சையாய் தோள்மீது கைபோட்டு "விட்ரா பாத்துக்கலாம்" என்ற ஒற்றைச் சொல்லில் நம் அத்தனை துயரங்களையும் நண்பன் துடைத்தெரிவான் . அப்படியான நட்பை பெறுவதுதான் வாழ்வின் உண்ணதமான மகிழ்ச்சி அதுதான் சாதனையும் கூட.

ஆனால் இன்றைய FM ரேடியோ விளம்பரங்களைப்போல் வேகமாய் பயணித்துக்கொண்டிருக்கும் நம் அன்றாட வாழ்க்கை சூழல் நம் நண்பர்களுடன்கூட மனம்விட்டு பேசக்கூடிய வாய்ப்புக்களை பிடுங்கிக்கொண்டிருக்கிறது. எங்கோ எப்போதோ எதிர்படும் எவர் முகமோ நண்பனைப்போல் இருக்க நண்பனுடன் கழிந்த தருணங்களையும் அதன் உன்னதங்களையும் அசைபோட்டவாறே கழிகிறது அன்று முழுவதும்.
தனிமையின் நடத்தல்களில்
எதிர்வருவோர் முகச்சாயல்
உன் நினைவை அதிகரிக்க
உன்னுடன் பேசுவதற்கும்
வெற்றிடத்தில் கிறுக்குவதற்குமாய்
எத்தனையோ விஷயங்கள்.
கேட்ட பாடல்களின்
இசையையும்
பார்த்த படங்களின்
பலவீனங்களையும்
படித்தபுத்தகத்தின் சில
பக்கங்களையும்
சமநிலையில் அசைபோட
உன் துணை வேண்டும்.
அரசியலோ? ஆன்மீகமோ?
எவர் கருத்து கணிப்பினும்
உன் கருத்தே என் ஏற்புடையதாய்.
பள்ளி நாட்களின்
மழைக்காலங்களில்
ஓர் குடையின்கீழ் உனை
பின்தொடர்ந்தது வெறும்
நனையாமைக்காய்மட்டுமல்ல
நட்பிற்காகவும்தான்.
என ஒரு நண்பணின் நினைவாய் நீண்ட ஒரு கவிதையின் சிலவரிகள். சரி நம்ம வேலையைப்பார்ப்போம்.
சென்ற ஆட்சியில் இலவசமாய் TV வழங்கப்பட்டபோது வேண்டாம் என சொல்லாமல் ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி வைத்துக்கொண்டவர்களும் இலவசங்களுக்கு எதிராய் கடுமையான விமர்சனங்களை வைக்க தவறியதில்லை. ஆனால் இந்த ஆட்சியில் 10 ரூபாய்க்கு பாட்டிலில் தண்ணிர் அரசு கொடுக்கும் என அறிவித்தத்தும் இது ஏதோ தேவலோகத்திலிருந்து கோண்டுவரப்பட்ட திட்டம் என்பதுபோல் பெரும்பாலானவர்களும் இத்திட்டத்திற்கு வக்காளத்து வாங்க துவங்கிவிட்டனர்.
20 வருடங்களுக்குமுன் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காலங்களிலும் தெருமுனைகளில் இரும்பு தொட்டி வைத்து நள்ளிரவானாலும் அதை லாரிதண்ணீரை கொண்டு நிரப்பி ஆளுக்கு 3 குடம் 6 குடம் என வினியோகித்த வரலாறு உண்டு. அன்றைய ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களுக்கு மக்களாட்சி தத்துவத்தில் மக்களுக்கு அடிப்படை வசதியான தண்ணீரை விநியோகிக்கவேண்டியது அரசின் கடமை என்ற தார்மீகம் தெரிந்திருந்தது.
இப்போதெல்லாம் காசுக்கு ஓட்டும், காழ்ப்புணர்ச்சி அரசியலும் என பழகிவிட்டதால் தண்ணீர் விநியோகம் தங்கள் கடமை என்பதை அரசும், அது தங்கள் உரிமை எனபதை மக்களும் மறந்துவிட்டனர்.
கடந்த 24 ஆண்டுகளாக என் அன்றாட வாழ்வின் அனைத்து வெற்றி தோல்விகளையும் தன்னுடையதாகவே கருதும் நண்பன் வால்மீகி யைப்போல். என் வலை உலக பயணத்தில் என கிறுக்கல்களுக்கும் அங்கிகாரம் வழங்கி அதை மெருகேற்றவேண்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஒரு நண்பர் திரு ஜோதிஜி தண்ணீர் படும்பாட்டை பற்றிய ஒரு முழுமையான பார்வையை தண்ணீரில் விளையாடிய நாடுடா இது? பதிவில் மிக தெளிவாக முன்வைக்கிறார்.
மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் பற்றிய தொடர் பதிவுகள் பசுமை புரட்சி என்ற பெயரில் நம் விவசாயமுறைகள் காயடிக்கப்பட்ட கதையை விளக்குகிறது.
காடுகள் அழிக்கப்படுவதின் அவலம் என எத்தனை சிக்கலான விஷயங்களையும் சிக்கலில்லாமல் எழுதுவது தண்ணி பட்ட பாடு .

------------------------------------------------------------------------------------------------------------
வெ. இறையன்பு ,1990 களில் இந்தபெயர் தமிழர்களை தலை நிமிரச்செய்தது. இளமையாய் இருந்தார் , அழகாய் இருந்தார் அரசு பணிகளில் உயர் தகுதியாய் கருதும் IAS தேற்சிபெற்றிருந்தார்.எல்லாவற்றிற்க்கும் மேலாய் வெகுஜன பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் தோன்றி IAS படிப்பு பற்றிய நம்பிக்கைவிதைகளை இளைஞர்கள் மத்தியில் விதைத்துக்கொண்டிருந்தார்.
தன் பரபரப்பான பணிச்சுழலுக்கு மத்தியிலும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என தன் இலக்கிய பணியை தொடர்ந்து மேற்கொண்டிருந்தவர். அவர் தளத்தில் கிடைத்த ஒரு முத்து
திட்டம்
இங்கே புல்லுக்குப்
போய்ச் சேர
வேண்டுமென்பதற்காகவே
நெல்லுக்கு
நீர் திறந்துவிடப்படுகிறது.
நலத்திட்டங்கள் என்ற பெயரில் இரைக்கப்படும் மக்களின் வரிப்பணம் உண்மையில் யாருக்கான பைகளை நிரப்ப உதவும் திட்டம் என்பதை உணர்த்துகிறது. இத்தளத்தில் இவரைப்பற்றியும் இவர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் விளக்கங்கள் காணக்கிடைக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சுயநலவாதிகளின் கேவலபட்டுப்போன அரசியல், சினிமா, ஊடகம் என பலவும் அவர்களின் ரசனை, தேவை,எதிர்பார்ப்பு என எதையும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் லாபம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு மக்களுக்கு எதிராய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இவற்றிற்கெல்லாம் மாற்று ஒன்று தேவை என்பதை ஆணி அடித்தாற்போல் சொல்லும் தளம். அதே சமயம் பழக்கப்பட்டுப்போன பாதையிலிருந்து நம் பாதங்களை மாற்று என கோருவதாகவும் எனக்கு தோன்றுகிறது.
இந்த தளத்தில் பாலியல் வன்கொடுமை பற்றி அறிவு ஜீவிகளின் அபத்தத்தை கூறும் ஒரு கட்டுரையின் தலைப்பு அர்த்தமற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் ஓங்கி ஒன்னரைடன் எடையால் அடித்தாற்போல இருந்தது.
மனிதனின் மாறுபட்ட மனநிலைகள் தொடர்பான எத்தனையோ பிரச்சனைகளுக்கு என்னவெல்லாமோ தீர்வுகளை யார்யாரோ சொல்லியதையும், எழுதியதையும் படித்துகேட்டு குழம்பி இருப்போம் ஆனால் அதற்கெல்லாம் முக்கிய காரணம் நமக்குள் இருக்கும் Internal Drive, Ego, Super Ego உங்களுக்குள் இருக்கும் மூவர் மூவரே காரணம் என மிக எளிமையாய் எதார்த்தமாய் விளக்குகிறது.
இத்தளம் மிக சமீபமாகத்தான் தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும் சிறப்பாக உள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....! என தன் தளத்தின் முகப்பிலேயே தெரியபடுத்தும் இவர் வானமே எல்லை என்பதை இல்லை என்கிறாரா அல்லது வானமே இல்லை என்கிறாரா என நம்மை யோசிக்கவைக்கிறார். எது எப்படிய நான் உங்களின் பெரும்பான்மையர்போல் இல்லை என உறுதிபடுத்துகிறார்.
எல்லை பிரச்சனைபற்றி இந்தியாவுக்கு உதவும் பாக்கிஸ்தான் என்ற தலைப்பில் எந்த இந்தியனும் நினைத்துபார்க்க முடியாத கோணத்தில் அல்லது அந்த கோணத்தில் யோசித்தாலும் உடனிருப்பவர்கள் தேசபக்தியை காரணம் காட்டி நம்மை விலக்கி விடக்கூடியதுமான ஒரு கேள்வியை மிக சாதாரணமாக நம்முன் வைக்கிறார்.
" உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள" உதவும் என்று ஆதார் அடையாள அட்டை குறித்து அரசு கூறுவதை சுட்டிக்க்காட்டும் இவர் ஆதார் கணக்கெடுப்பு பதிவில் போலிசு, இராணுவம், துணை இராணுவம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்புப் படை, ஐபி, சிபிஅய் , ரா, பயங்கரவாத தடுப்புப்படை என்று பல்வேறு பிரிவுகளை வைத்துக்கொண்டு உள்நாட்டு பாதுகாப்பை தரமுடியவில்லை என்று அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது இந்திய அரசு தனக்குத்தானே கையாலாகத பட்டத்தை சூட்டிக்கொள்வதாயும் சுயகேலிக்கு உள்ளாக்கிக் கொள்வதாக இருக்கிறது.! என பதிவு செய்கிறார்.
ஊடகத்துறையில் இருப்பதாலோ எனவோ எந்த நிகழ்வையும் அரசியல் பின்புலத்தோடே பதிவு செய்கிறார்.
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
‘கண்ணாடியில் நகரும் வெயில்’,‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்புகும் சொந்தக்காரர். தொடக்கத்தில் கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர் பின் கட்டுரைகள் பக்கம் கவனம் செலுத்தி அதில் தனி பாணியையும் கடைபிடிக்கிறார்.
அரசியல் பேசுவதானாலும் அறிவியல் பேசுவதானாலும் எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படியான வார்த்தைகள் கொண்டு விளக்கிவிடுவது சிறப்பு.
IT துறை என்பதால் வேலை நிமித்தம் ஐதராபாத்தில் அலைந்துகொண்டிருந்தவர் தற்போது பெங்களூருவை நிசப்தமாய் அளந்துகொண்டிருக்கிறார்.
இரு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... ஒவ்வொரு தளத்தின் விரிவான பதிவின் விளக்கம் அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கு புதியனவாய் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் மெனக்கெட்டேன் மகிழ்ச்சி. எந்த இரண்டு புதியவை என தெரியபடுத்தினால் மிக்க மகிழ்ச்சி.
Deletehttp://generationneeds.blogspot.in/
Deleteand https://docs.google.com...
நன்றி...
ஆக்கபூர்வமான பகிர்வுகளை அறிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி.
Deleteஉழைப்பிற்கு வாழ்த்துகள்
ReplyDeleteஎல்லாம் உங்க ஆலோசனைதான்.
Deleteநல்லதொரு விஷயங்களை உள்ளடக்கிய பதிவுகளை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!.. அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteநன்றி சார்.
Deleteபுதிதாய் பல பயனுள்ள தளங்களை
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமை - மிக்க நன்று
அகலிகன்!
நன்றி கலையன்பன்.
Deleteநட்பு குறித்த கவிதை அருமை...அறிமுகங்கள் புதுமை...வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி.
Deleteஜோதிஜி ,பதிவு அறிந்தது மற்றவை சில புதியவை, அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி.
Deleteதண்ணீர் அரசியல். தண்ணீரில் அரசாங்கம்.ஆதர அட்டை ஐம்பது லக்ஷம் போலிகளை கண்டுபிடித்ததாம். அப்படியானால் ரேசன் கார்டு,தேர்தல் அடையாள அட்டை எல்லாம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவையா?ஆதாரமற்றவையா?ஆதர அட்டை அவசியமா. இத்தனை எண்ணங்கள் .ஏற்பட தொகுத்தமைக்கு நன்றிகள்.
ReplyDelete