அனைவருக்கும் வணக்கம்,
நேற்றும் என் அறிமுகங்களை அறிந்துகொண்டு என் முயற்சிக்கு வாழ்த்தியவர்களுக்கும் இன்றும் தொடரப்போகிறவர்களுகும் நன்றிகள்.
புள்ளிகளை கோடுகள் கொண்டு இணைப்பது எப்படி கோலம் என்றாகிறதோ, ஒரு குறிப்பிட்ட மனநிலையை வார்த்தைகள் கொண்டு வடிவமைப்பதுதான் கவிதை. ஒரு குறிப்பிட்ட மன உணர்வால் உந்தப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர் அந்த மனநிலையை கவிதையாய் வடித்து மகிழ்கிறார். வார்த்தைகளை கோர்க்கதெரியாதவர்கள் வாசித்து மகிழ்கிறார்கள். இதைத்தவிர எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் பெரிய வித்தியசம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.
நம்மில் பலபேரு காலைல எழுந்திரிச்சி, வேலைக்குபோயி, சம்பாரிச்சி, புள்ளகுட்டிகல படிக்கவெச்சி செ.... என்ன வாழ்க்கைனு சலிச்சுகறவங்கதான். மதியான நேரம் ஆபிஸ் சன்னல் வழியா தெரியும் மரக்கிளையில் கொஞ்சிக்கிட்டிருக்கும் பறவைகளை பார்த்து, செ... நாமகூட ஒரு பறவையா பொறந்திருக்கலாமோன்னு கனவு கானத்தொடங்கிடுவோம். அதுக்குள்ள ஒரு போன் காலோ, மேனேஜரின் கூப்பாடோ நம்மை எதார்த்தத்துக்குள்ள இழுத்துபோட்டு நாலு சாத்து சாத்திடும்.
படம் : அடியேன் அகலிகன் தான்.
கூடு சேர பறவையும்
வீடு சேர நானும்
பயணிக்கிறோம்
எதிர் எதிர் திசையில்.
இறகு வலித்தால்
இளைப்பாறும் பறவை
கிளைகளில்,
காபி குடித்து
களைப்பாறுகிறேன் நான்
கடைகளில்.
விரும்பிய திசைநோக்கி மட்டுமே
பயணிக்கும் அவை,
விருப்பமில்லா திசைநோக்கியே
விரட்டப்படுகிறேன் நான்.
இன்றைக்கு மட்டுமான
இரைதேடி உலவுகின்றன அவை
சுதந்திரமாய்,
நாளைக்குமான பயத்தோடே
அலைந்துகொண்டிருக்கிறேன் நான்
அடிமையாய்.
இந்த சம்பவம்வேன்னா ஆளுக்கு ஆள் மாறுபடலாம் ஆனா இந்த மனநிலை எல்லாருக்கும் பெருந்தும். அப்படியான ஒரு மனநிலையில் எழுதப்பட்டதுதான் இந்த கவிதை. இதை உணர்பவர்கள் அத்தனைபேரும் இந்த கவிதைக்கு சொந்தக்காரர்களே.
இனி நம்ப வேலையைப்பார்ப்போம்
வலைப்பதிவில் வாசிக்கத்துவங்கியவர்களுக்கு கவனிக்கமுடிந்திருக்குமா இல்லையா எனபது தெரியவில்லை. துவக்கத்திலிருந்தே வாசிப்பு பழக்கம் இருப்பவர்கள் வலைப்பூவிலும் கூட அறியப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்கத்தவருவதில்லை. காரணம் அவர்களின் எழுத்து ஒரே நேர்கொட்டில் பயனிக்கும் என்பதுமட்டுமல்லாமல் அவர்களின் எழுத்துநடை நம் மனங்களை ஊடுறுவும். அதனால்தான் புத்தக வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் இதை உணர்வார்கள் என்கிறேன்.
மின்னற்பொழுதே தூரம் அபிலாஷ் சந்தர் காலச்சுவடு, உயிமை என சில பத்திரிக்கைகளில் எழுதக்கூடியவர்.
அவர் தன் பதிவுகளுக்காய் தேர்தெடுக்கும் களங்கள் சராசரியானதாய் இருப்பதில்லை, அதே நேரம் அவர் சொல்ல வரும் விஷயங்களும் சராசரி நபர்கள் சிந்திக்கக்கூடியதல்ல?
என் விடலைப்பருவத்தில் ஜூனியர் விகடனில் வெளிவந்த காதல் படிகட்டுக்கள் தொடரில் காதல் பற்றி கவிஞர் அறுவுமதி அவர்களின் விவரணையில்தான் நான் அறிவுமதி என்னும் கவிஞனை முதல்முதலாய் தெரிந்துகொண்டேன் கவிஞர் அறிவுமதியின் கவிதைகள் எனக்கு என்றுமே மிகவும் பிடித்தமானவை. பலவருடங்களுக்கு பின் அவரை தொடர்ந்து சில நாட்கள் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. அந்த சந்தர்ப்பங்களில் அவரின் உரையாடல்களும், செயல்களும் நான் வியக்கும் அறிவுமதிக்கானதாய் இருக்கவில்லை. அது ஒரு சராசரி மனிதரின் அத்தனை குணங்களையும் கொண்டிருந்தது. இது அன்று என்னை பெரிய பாதிப்பிற்குள்ளாக்கியது. அதற்கான காரணமாய் அவரும் ஒரு சராசரி மனிதர்தானே, அவரின் அன்றைய சூழலுக்கு அவர் அவ்விதம் நடந்துகொள்கிறார் என பல விஷயங்களை எனக்குள் நானாகவே ஜோடித்துக்கொண்டாலும் ஜீரணிக்கமுடியவில்லை.
சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த ஷிப் ஆஃப் தீசியஸ் படத்தின் இயக்குனர்
ஆனந் காந்தியுடன் உரையாடிய தன் அனுபவத்தை கலைஞன் பாமரனாக தோன்றும் வேளை பதிவில் நான் கவிஞர் அறிவுமதியிடம் கொண்டகுழப்பத்தினை பற்றியும் கலைஞனின் பலமே அந்த பாமரத்தனமும்தான் என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார்.
நேற்று ஆனந்த காந்தியுடன் கூகிள் ஹாங்கவுட்டில் அரட்டையில் கலந்து கொண்டேன். துடிப்பாக பேசும் இளைஞர். விமர்சனபூர்வமான கேள்விகளை எதிர்கொள்கையில் பதற்றமாகிறார். தீஷியஸின் கப்பல் படத்தில் உள்ள தெளிவு, ஆழம், அமைதி எல்லாம் பார்க்கிற போது அதன் இயக்குநரிடம் நேரில் உள்ள முதிர்ச்சியின்மை வியப்பளிக்கிறது. பொதுவாக கலைஞர்களை நேரில் சந்திக்கையில் நாம் எல்லோருக்கும் தோன்றுகிற குழப்பம் தான் இது.
“தீஷியஸின் கப்பல்” படம் பற்றி அபிலாஷின் விமர்சனம் “தீஷியஸின் கப்பல்”: கலகக்காரர் கோக் குடிக்கலாமா?
எழுத்தாளர்கள் பற்றியும் விமர்சகர்கள் பற்றியும் வாசகர்கள் பற்றியும் கூறும்
சார் என் கதை புடிச்சிருக்கா? http://thiruttusavi.blogspot.in/2013/08/blog-post_721.html பதிவில்
விமர்சகன் ஒரு தத்துவஞானி போல. அது ஒரு தனி துறை. தத்துவஞானிகள் வாழ்க்கை பற்றி கடுமையாக விவாதித்தபடி இருப்பார்கள். ஆனால் மக்கள் அதற்கு சம்மந்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆக இங்கே யார் வாழ்வது தான் வாழ்க்கை? தத்துவஞானியுடையதா அல்லது மக்களுடையதா? யாரும் தத்துவம் படித்து அதன்படி வாழ்வதில்லை.
என பலவற்றை பட்டவர்த்தனமாக முன்வைக்கிறார்.
வேக்காட்டை பதம் பார்க்கவேண்டுமானால் ஒரு சோறு போதும் பசி ஆறவேண்டுமானால் அள்ளிபோட்டு சாப்பிடத்தான் வேண்டும்.சாப்பிட்டு பாருங்கள் இவரின் பதிவுகள் வாசிக்கும் பசியைத்தூண்டும்.
========================================================================
எழுத்தாளர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு போட்டி இருப்பதுண்டு அது யார் எழுதுவது இலக்கியம் என்பதாகும். அது அப்படியே வாசகனையும் பாதித்து ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பி படிக்ககூடிய எழுத்தாளரின் படைப்புக்கள் மட்டுமே சிறந்தது என வாதிப்பார்கள். அல்லது தன் மனநிலைக்கு ஏற்றவாரு எழுத்தப்படுபவைகள் மட்டுமே இலக்கியம் என்பார்கள்.
இன்று தீவிர எழுத்தாளர்கள் என அறியப்படுபவர்கள் தங்களூக்குள்ளான குடுமிப்பிடி தகராறுகளாலேயே பெரிதும் அறியப்படுகிறார்கள். இதையும் கடந்து நல்ல இலக்கிய ஆளுமைகளை வாசிக்க விரும்புபவர்கள் உயிர்மை, காலச்சுவடு என சிற்றிதழ்கள் பக்கம் ஒதுங்குகின்றனர். அத்தகைய தீவிர வாசிப்பு வேட்கை கொண்டவர்கள் தவறாமல் செல்லவேண்டிய தளம் அழியாச்சுடர்கள் இத்தளத்தைப் பற்றி நான் சொல்வதைவிட
இன்றைய இலக்கிய உலகில் மட்டுமல்லாமல், மளையாளத்தைபோல் தமிழில் கதாசிரியர்களை மதிப்பதில்லை என்ற நீண்டநாள் ஆதங்கத்தை போக்கும் விதமாய் மணிரத்தன், பாலா போன்ற திரைத்துறை ஆளுமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெகுஜனங்களாலும் அறியப்பட்டிருக்கும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்ன சொல்றாங்கன்னு படிங்க.
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்.
- ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
எஸ் ராமகிருஷ்ணன்.
இந்த தளத்தில். இலக்கியத்தில் தமிழ் ஆளூமைகள் மட்டுமல்லாமல் உலக ஆளுமைகளையும் அறிந்துகொள்ளலாம்.
========================================================================
வரலாறுகள் மிக மிக முக்கியம். நம் தந்தைக்கு முந்தய தலைமுறைக்கும் முந்தய தலைமுறை பற்றிய தகவல்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே. அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள நம் பாட்டி தாத்தாக்களைவிட்டால் வேறு நாதியில்லை நமக்கு. அவர்களின் வாய்வழி தகவல்களையும் அறியமுடியாதபடிக்கு பெரியவர்கள் பேசத்தொடங்கினாலே "ஆரம்பிச்சுச்சுப்பா" பெரிசு என கிண்டலடித்துவிட்டு நகர்ந்துவிடுபவர்கள்தான் அதிகம்.
ஆனால் ஒரு சமூகத்தின் வரலாறு அந்த அந்த காலகட்டத்தின் எழுத்தாளர்களாலும், அரசின் வரலாற்று துறையாலும் பதியப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அக்பரை பற்றியும், ராஜராஜனைப்பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது என்றால் அது நம் பாக்கியம்.
ஆனால் பெரும்பாலும் நாமக்கு அறியக்கிடைக்கும் வரலாறுகள் அந்த அந்த தேசத்தின் அரசியல் ஆதயங்களுக்கான சாதக பாததங்களை மனதில்கொண்டு கூட்டியோ குறைத்தோ காட்டப்படும் வரலாறுகள்தான். பா.ஜா.கா ஆட்சியில் சவர்காரை விடுதலை போராட்ட வீரர் என நிறுவமுயற்சித்ததும் அதற்கு எழுந்த பலதரப்பட்ட விமர்சனங்களுமே அதற்கு உதாரணம்.
ஒரு தேசத்தில் நிகழும் சம்பவங்கள் நம் காதுகளை எட்டும்போது அது பல தளங்களில் வடிகட்டப்பட்டே நம்மை வந்தடைகிறது ஆனால் அதன் முழுமையான பின்னனியை அறிந்துகொள்ளும்போதுதான் நம் பார்வை மாறுபடுகிறது. அந்தவகையில் உலக மற்றும் உள்ளூர் நிகழ்வுகலாய் நாம் அறிந்தவைகளுக்கு பின்னால் உள்ள உண்மைகளை அறிய விரும்புபவர்கள் கட்டாயம் செல்லவேண்டியய தளம் கலையகம்.
கீழே சில தலைப்புக்களை தருகிறேன் அவையே விளக்கிவிடும் இத்தளத்தின் கூர்மையை.
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா! எனும் கட்டுரை 21 பாகங்களாய் கொடுத்திருக்கிறார் வாசித்துப்பாருங்கள் நம் பல நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படும்.
========================================================================
"தம்பிக்கு எந்த ஊரு" ரஜினி நடிச்ச படம். ஒரு சீன்ல அவர் தங்கி இருக்கும் ரூம்ல பாம்பு வந்துடும் பயத்துல பாம்புன்னு சொல்லறத்துக்கே அவர் தவிச்சுபோயிடுவார். ஒரு சீரியசான காட்சியைகூட சாதாரணமா நடிச்சிடமுடியும் ஆனா இந்த மாதிரி காட்சிகள் அதிகம் பெண்டு வாங்கிடும். ஆனா அந்த காட்சிக்கு மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பாங்க.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படதுல கதானாயகனுக்கு வந்திருக்கிற வியாதிபத்தி ரொம்ப சீரியசா சொல்லிகிட்டேவருவாரு ஒரு நண்பர் அதை கேட்டுகிட்டே வந்த இன்னொரு நண்பர் ஒரு கட்டத்துல பக்கத்துல போற சம்பந்தமே இல்லாத ஒருதர்கிட்ட பாஸ் டாய்லெட்டுக்கு எப்படி போகனும்னு கேட்பாரு அந்த சீன்ல தியேட்டரே அதிரிச்சு. அப்படித்தான் இந்த பக்கி - லீக்ஸ் பேரக்கேட்டாலே வலை உலகமே சும்ம்ம்மாமா அதிருமில்ல.
எதுக்கு சொல்றேன்னா சீரியஸ் சினிமாவைப்பத்தி பேசறவங்களுக்கு சாம் ஆண்டெர்சனை தெரியாமல் இருக்க முடியாது. ஆஸ்கார் வாங்கிவிடவேண்டும் என்ற கமலின் கனவுக்கு பலத்த போட்டியாளர்தான் இந்த சாம் ஆண்டர்சன். அவரையும் அவர் படத்தின் யாருக்கு யாரோ புகழையும் இந்த சாம் மார்த்தாண்டன் வாயால் புகழக்கேட்பது பாக்கியம்.
தீயா வேலை செய்யனும் குமாரு விமர்சனம்
எச்சரிக்கை : அல்சர் உள்ளவர்கள் சிரித்து சிரித்து மேலும் வயிற்றை புண்ணாக்கிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சரி மிச்சத்தை நாளைக்கு பார்க்கலாம்.
அனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
உங்களின் படம் மிகவும் அருமை... பாராட்டுக்கள்...
Deleteநீங்கள் பறவையானால்...? : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html
நன்றி. நீங்கள் பறவையானால் நல்ல கான்செப்ட்.
Delete//விரும்பிய திசை நோக்கி மட்டுமே
ReplyDeleteபயணிக்கும் அவை
விருப்பம் இல்லா திசை நோக்கியே
விரட்டப்படுகிறேன் நான்//
மனித வாழ்வின் அவலத்தைப் படம் பிடிக்கும் அற்புத வரிகள்!
அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
நான் என்பது நாம் அல்லவா? நன்றி
Deletekalayagam is very different blog
ReplyDeleteஉண்மைதான்.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete***இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. ****
ReplyDelete* இந்தாளு என்ன பண்ணுறாரு?? எஸ் வி ராஜதொரைக்கு அயல்நாட்டு பணம் வருது மண்ணாங்கட்டினு ஆதாரமில்லாத பொய்க் குற்றச்சாட்டுகளுடன் இவர் ஒளறுவது எந்த வகையைசாரும்?
* சமீபத்தில் ஈரோட்டில் நான் பேசும்போது, இவர் பேச்சை சகிக்கம் முடியாமல் "மக்கள் எழுந்துபோயிட்டாங்க"னு இணையத்தில் வந்து ஒப்பாரி வேற??
* எவன் வீட்டிலேயோ திமுக காரனிடம் இவர் போட்ட "அகந்தை சண்டையை" இணையத்தில் எழுதுவதெல்லாம் இலக்கிய சேவையா என்ன?
இதுதான் இந்தாளோட இலக்கிய சேவைகள். இவரு ஏன் ஊருப்பயளுகளுக்கு அறிவுரை வழங்கிக்கிட்டு???
இணையத்தில் இதுபோல் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை பலமேல் வைப்பது. இவரோட ஜால்ராப் பசங்க அதுக்கு சிங்கி தட்டுறது.
இணையத்தில் இதுபோல் ஒப்பாரி வைப்பதில் இவர் பங்கும் அதிகம்னு எல்லாருக்கும் தெரியும்.
நீங்க ஏன் அதை கவனிப்பதில்லை???? இவரு பெரிய எழுத்தாளர், மேதை என்பதாலா, அகலிகன்???
ஒரு விஷயம் கவனிச்சீங்களா இணையத்தில் வெட்டி அரட்டைகள்தான் அதிகம் என்பதை அவர்வாயாலேயே ஒப்புக்கொள்கிறார். அதில் அவரும் சேர்த்திதான். அடுத்து அழியாசுடர் பற்றிய அறிமுகத்திற்குத்தான் அவர் அந்த விளக்கம் கொடுத்து அழியாச்சுடர் அத்தகையது அல்ல அது சிறந்த படைப்புகளை மறுபிரசுரம் செய்கிறது என்றிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரின் படிப்பு ஒன்றே ஒன்றுதான் அழியாச்சுடரில் வந்திருக்கிறது. உண்மையில் அது ஒரு நல்ல படைப்புத்தான். அவரின் வெட்டி உளரல்களை எவருமே கண்டுகொள்ளாதபோது ஏன் இத்தனை வேகம். நமக்கு படிப்பதற்கும் பகிர்வதற்கும் அதைவிட நல்ல விஷயங்கள் இருக்கத்தானே செய்கின்றன. நாம் அவற்றை தொடரலாமே. உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteவிரிவான விளக்கங்களுடன் தளங்கள் அறிமுகம். நன்றி சார்!
ReplyDeleteநன்றி.
Deleteநல்ல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!.. நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteநன்றிகள்.
Deleteஉங்களின் திறமை முழுமையாக வெளிப்படுத்த காரணமாக இருந்த திரு சீனா தானா அவர்களுக்கு என் நன்றி. இரண்டு நாளையும் சேர்த்து வைத்து படித்து விட்டு என் கூகுள் ப்ளஸ் சேர்த்து வைத்துள்ளேன்.
ReplyDeleteஉண்மைதான். திரு சீனா ஐயாவிற்கு நன்றிகள்.
Delete