காலை வணக்கம்.
பகல் - இரவு, நல்லது - கெட்டது, சாமி - பூதம், மகிழ்ச்சி - சோகம், இன்பம் - துன்பம் இப்படி உலகில் எல்லாமே எதிர் எதிர் தன்மையோடுதான் இயங்கிவருகின்றன. இந்த எதிர் எதிர் தன்மைதான் உலகை இயக்கவும் செய்கிறது. நம் வாழ்க்கையும் தினமும் எதிர் எதிர் துருவங்களுக்கிடையிதான் அல்லாடிக்கொண்டிருக்கிறது.
கணவன் - மனைவி, பக்கத்துவீட்டுக்காறர் - எதிர்வீட்டுக்காறர், மேனேஜர் - பியூன் என நமக்கு உடன்பாடு இருக்கோ இல்லையோ இவர்களுடன்தான் நாம் தினமும் பயணிக்கவேண்டி இருக்கிறது. இதில் சிறு பிணக்ககோ மனக்கசப்போ ஏற்பட்டாலும் நம் பயணம் சிறக்காது.
உனக்கும் எனக்குமான
ஓடுதளம்
ஒன்றுதான் என்றானபின்
உரசல்களை
தவிர்த்துக்கொண்டாலென்ன?
கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
நம் பயணத்தின் சறுகல்கள்
களைந்துகொண்டிருக்கின்றன
ஓடுதளத்தின்மீதான
நம்பிக்கைகளை.
கைகோர்த்து செல்லவேண்டிய
பயணத்தில் - நாம்
கைகலத்துக்கொண்டிருப்பதால்
கலங்கிக்கிடக்கிறது
வாழ்க்கை நிரோடை.
========================================================================
அரசியல் பற்றியும், சமூகம் பற்றியும் பல கேள்விகள் நமக்குள் எழும் அவற்றையெல்லாம் நமக்கு தெரிந்தவரிடம் விவாதித்திருக்கிறோம் ஆனால் நாம் விவாதிக்கும் நபரும் நம்மைப்போலவே ஒரு சாமானியர் எனபதால் அந்த விவாதம் ஒரு கட்டத்திற்குமேல் நம்மிடம் மேலதிக விவரங்கள் இல்லாததால் அத்துடன் நின்றுவிடுகிறது. நாமும் அடுத்தவேலையை பார்க்க போய்விடுகிறோம்.
ஆனால் பத்திரிக்கைத்துறை வல்லுனர்கள் அத்தனை விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருப்பவர்கள். அவர்களின் விவாதமே நமக்கு பல விஷயங்களை தெளிவிக்கும். எந்த சம்பவத்திலும், எவரின் அறிக்கைகளிலும் அவற்றிற்குபின்னால் இருக்ககூடிய அரசியல் தலையீட்டை, சமூகத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைக்கும் விவாதங்கள் ஒவ்வொரு சாமானியனுக்கும் அவசியமானது.சமூக அக்கறையுள்ள பத்திரிக்கையாளர்களாலேயே மக்கள் நலன் கொஞ்சமேனும் பாதுக்காக்கப்படுகிறது என்றால் மிகையில்லை.
அந்தவகையில தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் அசாக் - தகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம் அவர்கள் தன் வேலைப்பளுவையும் தாண்டி தொடர்ந்து வலைத்தளத்திலும் இயங்கிக்கொண்டுவருகிறார் எனபது பாராட்டக்கூடியது.
நாம் கைதட்டி ஆரவாரிக்கும் சினிமாவின் அபத்தங்கள் சமூகத்தில் எத்தகைய மனப்போக்கை எற்படுத்துகிறது என்பதை பற்றி
தட்டிக்கேட்கும் உணர்வை என்கவுன்டர் செய்யும் சினிமாக்கள்
தலைப்பில் நையப்புடைத்திருக்கிறார்.
தட்டிக்கேட்கும் உணர்வை என்கவுன்டர் செய்யும் சினிமாக்கள்
தலைப்பில் நையப்புடைத்திருக்கிறார்.
========================================================================
கடவுளுக்கு அடுத்தபடியாக கடவுளாக மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள்தான். காரணம் உயிர்மேல் நமக்கு இருக்கும் பயம் அல்லது ஆசை.
கடவுள்களை கிண்டலடித்தால் வீட்டிற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பும்.
வெளியே கேட்கவே தேவையில்லை ஆட்டோவில் ஆள்வரக்கூடும். ஆனால் கடவுளுக்கு அடுத்ததான மருத்துவர்களை கிண்டலடிக்க தயங்குவதில்லை நாம். அதன் வெளிப்பாடுதான் மருத்துவர்கள்பற்றிய நகைச்சுவைகள்.
அறிவியலும் மருத்துவமும் அதன் உச்சம் தொட்டுவிட்ட இந்த நூற்றாண்டில் காலரா, அம்மை போன்ற நோய்கள் இல்லாமலே போய்விட்டன. பெரும்பாலும் நோயினால் இறப்பு எனபதன் சதவிகிதம் மிகமிக குறைந்துவிட்டது.அதனால் மனிதனின் ஆயுள்காலம் கூடி இருக்கிறது. ஆனால் இன்றும் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டல் மருத்துவரை பார்க்க போவதற்குமுன் திருப்பதிக்கு மொட்டை போடுவதாய் சம்பந்தப்பட்டவருக்கே தெரிவிக்காமல் வேண்டிக்கொள்வதுதான் வாடிக்கை. நாம் கடவுளை முழுதாய் நம்பும் ஆத்திகரும் இல்லை, மருத்துவரைமட்டுமே நம்பும் நாத்திகரும் இல்லை என்பதுதான் வேடிக்கை.
நபர் 1 : அந்த டாக்கடர் உன் பிரண்ட் தானே பின்ன எதுக்கு பீஸ்கொடுத்தே?
நபர் 2 : அவரும் பிழக்கவேண்டும் இல்லையா?
நபர் 1 : சரி அவர் கொடுத்த மருந்தை எதுக்கு தூக்கிபோட்டுட்ட?
நபர் 2 ; நான் பிழக்கவேண்டாமா?
மருத்துவர்கள் என்றால் இண்டலக்சுவல் பேச்சும் தோற்றமும் கொண்டிருப்பவர் என்று ஒரு பிம்பத்தை நாம் கற்பிதுகொண்டிருக்கிறோம் ஆனால் இங்கே ஒரு மருத்துவர் Dr. அல்கேட்ஸின் டைரி குறிப்புக்கள் (கொலைகள்)அவற்றை எல்லாம் நகைச்சுவையால் அடித்து துவைத்து எடுக்கிறார்.
மருத்துவர்களாலும் மருத்துவமனைகளாலும் ஏமாந்த, ஏமாற்றப்பட்ட கதைகள் பல கேட்டிருக்கிறோம். ஏன் ரமணா படத்தின் மாபெரும் வெற்றிக்கு அந்த மருத்துவமனை காட்சியும்கூட ஒரு முக்கிய காரணம்தான். ஆனால் நோயாளியால் நர்ஸ்கள் உட்பட ஒரு மருத்துவமனையே ஏமாந்த கதைதான் இந்த மத்வைதம், அத்வைதம், ப்ரபஞ்சம் .., டிங்காலோ டிக்கா, போட்டுத்தாக்கு மக்கா...
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும். இந்த டாக்டர் நோயாளிகளை குணமாக்குறாரோ இல்லையோ குட்டிமா. அங்கிளுக்கு நீ வாங்கின ப்ரைஸ் எல்லாம் காட்டு பதிவில் நம் வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறார். வடிவேலு சிரிப்பு போலீஸ், இவர் சிரி(ற)ப்பு டாக்டர்தான்.
========================================================================
========================================================================
புத்தகத்துக்குள் மயிலிறகை மறைத்துவைத்து அது குட்டிபோட்டதா இல்லையா என தினமும் ஒருமுறையாவது எடுத்து பார்ப்பதுதான் குழந்தைகளின் உலகம். இறகு குட்டிபோடுமா? போடாதா? என்ற சந்தேகம்தான் அவர்களுக்கு எழுமே தவிர இறகு எப்படி குட்டிபோடும் என்ற கேள்வி ஒருநாளும் எழாது.. அது அவர்களின் உலகம் அங்கே எதும் நடக்கும். பல அதீதங்கள் நிகழக்கூடிய சாத்தியங்கள் நிறைந்ததுதான் அந்த உலகம்.
என் பால்யத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு எறும்பை ஈருகுச்சியில் ஏற்றிவிட்டு அது இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அலைவதை அதன் அவஸ்த்தை புரியாமல் ரசித்திருக்கிறேன். சர்க்கஸில் கம்பிமேல் நடக்கும் மனிதனுடன் அந்த எறும்பை ஒப்பிட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதனால்தான் இன்று இரு பெண்குழந்தைகளின் கற்பனா உலகமும் எனக்கு பரிச்சயமானதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதகவும் இருக்கிறது.
படம் : அடியேன் அகலிகன் தான்
பெரியவளோடு ஒருநாள் பயணிக்கையில் சாலையோரம் பிளாஸ்டிக் பையுடன் விளையாடிக்கொண்டிருந்த நாய்குட்டி ஒன்றை காட்டி "அப்பா அந்த நாய்குட்டி பாருப்பா சாய் மாதிரியே இருக்கு" என தன் தங்கையோடு ஒப்பிட்டவிதமும், கற்பனையும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவள் அப்படி சொன்னபிறகுதான் எனக்கும் அந்த நாய்குட்டியின் சேட்டைகள் என் இரண்டாம் மகளைதான் நினைவுபடுத்தியது. அதன் பின் எந்த குட்டி ஜீவன்களை பார்த்தாலும் என் இரு குட்டிஸ்களோடும் பொருத்திப்பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இதை படிக்கும்போது என்ன கிறுக்குத்தமா இருக்குன்னு தோன்றும்.
திரு இரா. செல்வராசு அவர்களின் விரிவெளித் தடங்கள் தன் மகள்களின் புத்தக வாசிப்பு ஆர்வத்திற்கும் அவர்களோடு தன்னையும் அவர்களின் உலகத்திற்கு தகவமைத்துக்கொள்ளவும் தன் மகள்களின் விருப்பத்திற்குறிய புத்தகங்களை தானும் வாசிப்பதாய் வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றவும் செய்கிறார். இத்தகைய் பிரத்தனத்திற்கு அவர் தனக்குள் கூறிகொள்ளும் சமாதானமாய்
அனிடோரி-கிளாட்ரா வில் கிறுக்குத்தனம் நமக்கொன்றும் புதிதல்லவே. ஆனால், இக்கிறுக்குத்தனங்களின் பின்னே ஒரு காரணம் இருப்பதாகவே நினைத்துக் கொள்ள எனக்கு ஆசை. கடந்தேகும் ஆண்டுகளின் பின்னணியில் இவை அவர்களுடனான ஒரு தொடர்புப் பாலத்தை உறுதிப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியாகவும் அமையும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் தேக்கி வைத்துக் கொண்டு பின்னொரு நாள் அசைபோட நிறைத்துக் கொள்ளும் நினைவுத் துண்டுகள் இவை.
அமெரிக்காவில் வேதிப் பொறியியல் துறையில் பணியாற்றினாலும் தமிழ் ஆர்வம் கொண்டவர் என்பது இவரின் பதிவுகளில் தெரிந்துகொள்ளமுடிகிறது. தன் பதிவுகளில் தன் மகள்களுக்கும் பங்களிக்க தவருவதில்லை.
========================================================================
========================================================================
இன்றைய துரித உணவு கலாச்சாரத்தில் சீர்கெட்டுகிடக்கும் நம் உணவு பழக்கத்தால் உடலும் பல புதுப்புது நோய்களை சந்திக்கிறது. அதை சரிபடுத்த நாம் நாடும் உடனடி தீர்வு ஆங்கில மருத்துவம். அதிவேகமான வாழ்க்கை முறையில் உடல் நலமும் உடனடியாக கிடைக்கவேண்டும் என நினைகிறோம். ஆனால் சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தேகிடையாது என்றும் அப்படி மருந்து இருப்பதாய் கூறுவதும்கூட தவறு என இந்திய மருத்துவசட்டம் கூறுவதாக தகவல் அளிக்கிறது மரபு வழி மருத்துவம்
பாரம்பரிய உணவு.
பாரம்பரிய உணவு.
"உணவே மருந்து, மருந்தே உணவு" நம்மில் பலரும் கேட்டிருக்கக்கூடியத்துதான் என்றாலும் அதை நடைமுறையில் கடைபிடிக்க மிகுந்த பிரத்தனம் தேவைப்படுகிறது.
இன்றைய மருத்துவம் ரசாயணத்தை அடிப்படையாககொண்டது. அதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அது வியாபாரிகளின் லாபநோக்கில் வழிநடத்தப்படுவதால் அதில் நேர்மையை காணமுடிவதில்லை. இந்நிலையில் நம் முன்னோர்களின் மரபுவழி மருத்துவத்தில் நம்பிக்கை கொள்வதில் தவறில்லை.
தண்ணீர் வைத்தியம் என்ற லேபிளிங்கீழ் கி.வரதராஜன் அவர்களின் மழைநீர் சேமிப்பு பற்றிய பதிவும்
இயற்கை தன்னை சரிசெய்துகொள்ள உதவுக பதிவில்
இந்த இணைப்பையும் தந்திருக்கிறார்கள். வெட்டி வேருக்கு பல மருத்துவ குணங்கள் உண்டுதான் என்றாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனாலும் படிக்க படிக்க மனம் தண்ணீர் பற்றிய எல்லா பிரச்சனைகளும் இன்றே தீர்ந்துவிட்டதைப்போல் மன நிறைவை அளித்தது.
========================================================================
========================================================================
முழுதாக எதுவும் படிக்க முடியவில்லை... (இயற்கை தன்னை சரிசெய்துகொள்ள உதவுக பதிவில்) Preview பார்த்து பிறகு Publish செய்தால் நல்லது...
ReplyDeleteகவனிக்கவும்...
முழுதாய் எனபதே அந்த ஒரு பக்கம்தான். அது தெளிவாக தெரிந்ததே.
Deleteஇருதளங்கள் "போங்கு தளங்கள்..." தவறாக நினைக்க வேண்டாம்...
ReplyDeleteபுரிந்து கொள்ள உங்களுக்கு நேரம் ஆகலாம்... நன்றிகள்...
'போங்கு தளங்கள்' போங்கு என் அறிமுகத்திலா? அல்லது தளாத்திலா?
Deleteஎன்னுடைய ப்ளாக்கை பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி சார்
ReplyDeleteஉங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியதற்காகவே என் பாராட்டுக்கள். பொதுவாய் டாக்டர்களிடம் எளிதில் அன்னியோன்னியப்பட்டுவிடமுடியாது காரணம் அவர்களின் கல்வி அவர்களை நம்மிடமிருந்து விலக்கிவிடுகிறது. பாவம் அதை கடைபிடிக்க அவர்களும் அதிகம் மெனக்கெடவேண்டி இருக்கிறது.
Deleteநல்ல தகவல்களுடன் அறிமுகங்கள்!.. வாழ்த்துக்கள்!..
ReplyDeleteதொடர்ந்து வாழ்த்துவதற்கும், வாசித்துவருவதற்கும் நன்றிகள் சார்.
Deleteரொம்ப ஆச்சரியப்படுத்துட்டீங்க. குறிப்பாக தீக்கதிர் ஆசிரியருக்கு தளம் ஒன்று இருக்க வேண்டுமே? என்று தேடிக் கொண்டு இருந்தேன். இதில் உள்ள அத்தனை தளங்களும் நூற்றுக்கு நூறு. எடுத்த புகைப்படத்திற்கு 200 மதிப்பெண்கள்.
ReplyDeleteஅப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு. சந்தோஷமாவும் இருக்கு.
Deleteதளங்கள் அறிமுகத்திக்கு வாழ்த்துக்கள்:
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
Deleteமருத்துவம், இயற்கை வளம், அரசியல் சமூக ஆய்வுரைகள் என
ReplyDeleteபல தகவல் தளங்களைத் தந்து பயன்பெற வைத்தீர்கள்.