அதனால சசி புதுசு புதுசா சிந்திச்சி அதாவது கல்யாண மேடையை அலங்காரம் செய்வாங்களே ! அது மாதிரி முன்னாடி அலங்காரம் பாட்டு கச்சேரி பட்டிமன்றம் இது போல எல்லாம் எழுதிட்டு அதன் பிறகு அறிமுகப்பதிவர்களை சொல்ல வேண்டும் என நினைத்து இரவு முழுக்க யோசித்து யோசித்து கண் வீங்கியதே மிச்சம். அதனால் இந்த பதிவில் எந்த அலங்காரமும் செய்யாம அப்படியே புத்தம் புது காலைல புத்தும் புது பதிவர்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன். படிக்க வருவதற்கு யாரும் மறுக்காம மறக்காம வருவிங்களாம். வரும் போது கையோட சுற்றமும் நட்பும் சூழ வருகை தர அழைப்பது உங்கள் ச...சி.
நீ கனி
நான் கிளி
வேறென்ன வேண்டும் இனி.. இப்படி யாரை இவர் வர்'ணக்கிறார் தெரியுமா ?
இதோட விடாம அவளே என் அமுதும் தேனும் அவளே என் உயிர் என்று சொல்லியபடி. அவளை அறிமுகம் செய்ய பொண்டு பொடுசு வாண்டுகளையெல்லாம் அழைச்சிட்டு போகிறார். வாங்க நாமும் போவோம்.
எதையோ எதையோ எழுதனும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன். இப்படி நான் சொல்லவில்லை. இப்ப நாம பார்க்க போகும் நண்பர் சொல்கிறார். இவர் இப்படி மாறிவிட்டதால் இவரோட தளத்தின் தலைப்பை நமக்கு பாடம் சொல்லும் விதமாக வைத்துவிட்டார் போலும். அப்படி என்ன தலைப்பு ?
நாம டிவி பார்த்துட்டு இருக்கும் போது அதில் புகை பிடிப்பது மாதிரி அல்லது மது அருந்துவது மாதிரி நிகழ்வுகள் வந்தா கீழே சிறய எழுத்தில் புகை பிடிப்பது உடல் நலததிற்கு கேடு..இப்படி வருமில்லையா அது போல இன்னும் கொஞ்ச நாள் போனா நாம சாப்பிடும் உணவுப்பண்டங்கள் படத்தின் கீழும் வரும் என்று சொல்றாங்க. இவங்க பதிவு எழுதிட்டு இருக்கும் போதே பேனாவில் மை காலி போல அதான் இவங்க என்னை மை தா ...மை..தான்னு கேட்கிறாங்க. போய் கொடுத்து விட்டு வருகிறேன். என்ன நின்னுட்டிங்க. அதான் முன்னமே சொல்லிட்டேனே. எங்க போனாலும் சுற்றமும் நட்பும் சூழ போகனும்... ரெடி போலாமா ?
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த அரசாங்கம் விவசாயிகளின் துன்பத்தையும் தள்ளுபடி செய்துவிட்டதாகவே எண்ணி பேருவகை கொள்கிறது ! அத்தோடு விவசாயிகளை மறந்தும் போகிறது ! உண்மையில் விவசாயத்தின் விவசாயிகளின் நிலைதான் என்ன ? உழுதவன் கணக்க பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது !
இப்படி ஆதங்கப்படுவதும் நானில்லங்கோ...அதனால வாங்க இவர் யார் என்ன பெயர் என்ன சொல்கிறார் கேட்போம்.
பள்ளிக்கூடம் போய் படிக்கிற காலத்தில் வரலாறு வகுப்பு வந்தாலே கை கட்டி வாய் பொத்தி எப்ப தான் வகுப்பு முடியும் என்று காத்திருந்தவங்களா நீங்க... அப்ப வாங்க இப்பவாவது வரலாறுன்னா என்னனு தெரிந்துகொள்வோம். வரலாறுன்னா அறிவியல் தான அப்படியெல்லாம் கேட்கப்படாது... பள்ளிக்கூடம் போற மாணவரா வரனும் சரியா ?
மீண்டும் நாளை சந்திப்போம்.
தேடி தேடிக் கண்டுபிடித்து தீயா தான் வேலை செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள்... அனைத்தும் தளங்களும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவணக்கம் அய்யா, தங்களது வாழ்த்துக்கு நன்றி. அதும் உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.
Deleteஎன் பிளாக்கை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅபயாஅருணா அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். நன்றி.
Deleteஅறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎந்த அலங்காரமும் செய்யாம எழுதினாலும் நல்லாவே இருக்குங்க உங்க அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கு நன்றீங்க அய்யா. தொடர்ந்து நல்லதையே எழுதுவோம்.
Deleteஅருமையான பதிவர்களை
ReplyDeleteஅருமையாக அறிமுகம் செய்து
அசத்திவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteஅருமையான வாழ்த்துக்கு அழகான நன்றீங்க அய்யா.
Deleteதீயா வேலை செய்தது பூவா தெரியுதே..அருமையான அறிமுகங்கள்! அனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் சசி!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteகிரேஸ் அவர்களின் வாழ்த்துக்கும் எனது தளத்தைப் பின்தொடர்ந்தமைக்கும் நன்றீங்க அய்யா.
Deleteஅளவான அறிமுகங்கள் படிக்க சுலபமாக இருக்கிறது, சசி! எல்லோரையும் படித்து பாராட்டிவிட்டு வந்தாயிற்று.
ReplyDeleteஎல்லோருமே புதுமுகங்கள் எனக்கு. இனி எல்லோரையும் தொடர்ந்து படிக்கிறேன்.
பாராட்டுக்கள் தீயாக வேலை செய்வதற்கு!
இங்கு வந்ததோட மட்டுமின்றி அறிமுகப்பதிவர்களையும் சென்று வாழ்த்தி வந்த தங்களுக்கு எனது மனமா◌ார்ந்த நன்றிங்க.
Deleteவணக்கம் அம்மா, தங்களிடமிருந்து வாழ்த்து பெற்றதை நான் பெருமையாக கருதுகிறேன். வாழ்த்துக்கும் தளத்தைப் பின்தொடர்ந்தமைக்கும் நன்றீங்க அம்மா.
Deleteஇன்றும் உங்கள் திறமையோடு நல்ல அறிமுகங்கள் தோழி! அருமை!
ReplyDeleteஉங்களுக்கும் அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்துக்கள்!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.
Deleteசகோதரிக்கு வணக்கம், வாழ்த்துக்கு நன்றீங்க. எனது தளம் தங்களுக்கு முன்பே அறிமுகம் ஆதலால் வாங்க தொடர்ந்தே பயணிப்போம்.
Delete//இரவு முழுக்க யோசித்து யோசித்து கண் வீங்கியதே மிச்சம். அதனால் இந்த பதிவில் எந்த அலங்காரமும் செய்யாம அப்படியே புத்தம் புது காலைல புத்தம் புது பதிவர்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன்.//
ReplyDeleteஅலங்காரம் ஏதும் இல்லாமலேயே இயற்கையிலேயே அழகோ அழகாக உள்ளது தங்களின் ஆக்கம். பாராட்டுக்கள்.
கண்ணான கண்ணல்லவோ ! அவற்றை ஒருபோதும் வீங்க விடாதீங்கோ.
தினமும் இதமாக மிதமாக வீசிடும் தென்றலுக்கு என் நல்வாழ்த்துகள்.
தங்கள் வருகையும் கண்ணை பாதுகாக்க சொல்லிய அறிவுரையும் கண்டு மிகவும் மகிழந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteவாங்கய்யா! உங்கள் நகைச்சுவையோடு கூடிய கருத்தூட்டம் மகிழ்வளிக்கிறது.
Deleteபுதிய பதிவர்களை அறிமுகம் செய்வதில்தான் ஒரு தனி இன்பம் இருக்கிறது. அதை முழுவதுமாக நீங்கள் அனுபவிக்கிறீர்கள். மற்றவர்களுக்கும் அளிக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமாங்க நமக்கு தெரிந்தவர்களையே அறிமுகப்படுத்தினால் அது சுவார்யஸ்யமாக இருக்காது தானே.. நன்றிங்க.
Deleteஇங்கு கருத்தும் தெரிவித்தும் எனது தளத்தையும் பின் தொடர்ந்த தங்களுக்கு நன்றி அய்யா
Deleteஅருமையான அறிமுகங்கள். அனவருக்கும் பாராட்டுகள். தீயா தான் வேலை செய்து சிறப்பித்துள்ளீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றீங்க அய்யா
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அறிமுகத்தளங்கள் அனைத்தும் அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றீங்க நண்பரே.
Deleteஅருமையான அறிமுகங்கள்! அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றீங்க சகோதரி.
Deleteசிறப்பான அறிமுகங்கள்! வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றீங்க சகோதரே.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றீங்க சகோதரே.
Deleteசசிகலா அம்மா.. நல்ல அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஒண்ணு ஒண்ணா படிச்சிட்டிருக்கேன் ..!!
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்
www.99likes.blogspot.com
வாழ்த்துக்கு நன்றீங்க சகோதரே.
Deleteவணக்கம்
ReplyDeleteஒரு புதிய பதிவு என்வலைப்பக்கம்
தொலைவில் இருந்து ஒரு குரல்............கவிதை
http://2008rupan.wordpress.com/2013/10/11/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரே, அறிமுகம் கண்டு தளத்திற்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றீங்க சகோதரே. தங்களைப் பற்றி DD அய்யா நிரம்ப கூறியுள்ளார். நன்றீங்க.
Deleteகனிவான அறிமுகங்கள் பாராட்டுக்கள்>.1
ReplyDeleteபாராட்டுக்கு நன்றீங்க அம்மா. தொடர்ந்து இணைந்திருப்போம்.
Deleteஇதுவே ஒரு அலங்காரமாகத் தான் இருக்கின்றது!.. அருமையாக இருக்கின்றது!..
ReplyDeleteதங்கள் கருத்தையே வாழ்த்தாக எடுத்துக் கொள்கிறேன். நன்றீங்க அய்யா.
Deleteவணக்கம் சகோதரி, என் தளத்தை அறிமுகம் செய்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அறிமுகம் செய்த தளங்கள் அனைத்தும் அருமை. வலைச்சரம் அறிமுகத்திற்கு பின் அமோக வரவேற்பு கிடைத்ததாகவே உணர்கிறேன். நன்றீங்க சகோதரி.
ReplyDeleteசசிகலா சகோதரி அவர்கள் என்னை 2 விடயங்களுக்கு மன்னிக்க வேண்டும் 1.வேலைப்பளு காரணமாக தாமதமாக வருகை தந்து நன்றி கூறியமைக்கு 2. தங்கள் அனுமதியில்லாமல் அனைவருக்கும் நன்றி கூறியமைக்கு. மன்னீப்பீர்கள் என்ற நம்பிக்கையில் . அ.பாண்டியன்.
Deleteஅடியேனையும் சக பதிவராக நினைத்து வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ . இதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் . உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் .
ReplyDeleteமணிமாறன் அவர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்
Deleteமற்ற அறிமுகங்கள் அனைத்தும் அருமை .
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteதீயா வேலை செய்யும் உங்களுக்கு ஒரு பூங்கொத்து.
ReplyDeleteமிக்க நன்றிங்க. எங்கே பூங்கொத்தை காணவில்லை .(சும்மாங்க)
Deleteஇனிய, எளிய அறிமுகங்கள்...
ReplyDeleteதங்களுக்கு வாழ்த்துக்கள்...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅ. பாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து நண்பர்களுக்கு நன்றி சொல்வேன். நேற்று அப்படி வர இயலாமல் செய்து விட்டது எங்கள் பகுதியில் மின்சாரம்.. இப்போதே இங்கு வந்து பார்க்கிறேன் தங்கள் நன்றியுரையை மிகவும் மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான தேர்வுகளுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள் சசிகலா...அறிமுகங்களைப் படிக்க இப்போது நேரமில்லை... கண்டிப்பாக பார்ப்பேன்.
ReplyDeleteநன்றிங்க தோழி.
Deleteபுதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபலரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
அன்பின் சசிகலா! எனது வலைப்பூவை அறிமுகபடுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றி! நான் கவிதைகள் எழுதியே சில ஆண்டுகள் ஆகி விட்டன. எனது வலைப்பூவை கிட்டத்தட்ட நானே மறந்துவிட்ட இத்தருணத்தில் தங்களின் அறிமுகம் மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கின்றது. தங்களின் சேவை தொடர்க. நான் மீண்டும் கவிதைகள் எழுத முற்படுவேன். வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
ReplyDeletehttp://mugilankavithaigal.blogspot.in/