"இருக்கும் வரை தெரியாது பெற்றவரின் அருமை பெருமை " ! என்று பழமொழி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எங்க அப்பா மரணத்தருவாயில். அது தான் அவரின் இறுதிப் பேச்சு என அறியாத பேதையாக நான் இருந்து விட்டேன். அப்போது அவர் "ஏம்மா ! வந்த உடன் இப்படி போறேன். போறேன்னு சொல்லிட்டு போய் விடுகிறாய். கொஞ்சம் நேரம் இருந்துட்டு போம்மா என்று அழைக்க" போப்பா நான் நாளை வருகிறேன் என்று வந்துவிட்டேன். இன்று தினம் தினம் நான் என் அப்பாவுடன் பேசினாலும் மறு வார்ததை பேச மறுக்கிறார். புகைப்படமாக இருந்து கொண்டு . என்னைப்போல மற்றொரு தோழியும் இந்த பழமொழியை அனுபவப்பூர்வமா அனுபவிக்கிறாங்க போல..
நான் இல்லம் சேரும் வரை
வாசற் படியில் படுத்துக்கிடக்கும்
உன் விழிகள் இல்லா வெறுமை
சுடுகிறது இடி மின்னல்களின்
மொழிதல் வழி !
வாசற் படியில் படுத்துக்கிடக்கும்
உன் விழிகள் இல்லா வெறுமை
சுடுகிறது இடி மின்னல்களின்
மொழிதல் வழி !
இவ்விதம் வரிகளால் தம் நினைவுகளை நம்முடன் பகிரும் தோழி.
நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே சொந்தமானவைகளில் இதுவும் என்று இதற்கு காசு பணம் தேவையில்லை. எந்த கட்டாயமும் இல்லை. யாருக்கும் பயப்படவும் தேவையில்லை. அப்படி என்னவாக இருக்கும் ஆமாங்க அது கனவு தான். ஆனால் அதற்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உறக்கம் வரவேண்டுமே ? இப்படியாக நடுத்தர வர்க்கத்தின் நிலையை இம்மியும் பிசகாமல் கவிதையாக சொல்றாங்க . வாங்க கேட்போம்.
தோழமை எந்த வயதினருக்கும் சொந்தமானது தவழும் பிள்ளைகள் கூட அக்கம் பக்கத்து குழந்தைகளை சிநேகம் கொண்டு விடும் எளிதில் அந்த தோழமை வளர்ந்து பெரிதாகி பள்ளி நாட்களை வரை இனிதாக தொடரும். அத்தோடே சில பிரிந்து விடும். சில நட்புகள் மனதில் மட்டுமே வாழும். சில எங்கு இருந்தாலும் அவ்வப்போது தொடர்பில் இருக்கும். இப்படியான ஒரு தோழமையின் உணர்வுகளை இங்கே காண்போம் வாருங்கள்.
அகர முதல கற்க ஆர்வமுடன் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் .இன்று ஆங்கில மோகத்தில் "மம்மி டாடி "என்று தன் பிள்ளை அழைக்க நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் . அவர்கள் கனவு எவ்விதம் பலிக்கிறது வாருங்கள் பார்ப்போம்.
இன்று பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை அவரே தனக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லங்க. என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டால் உடனே நம்ம ஆளுங்க அப்ப ஏதோ பழக்கம்இருக்கும் போல எப்படி கண்டு பிடிப்பது என்று சிஐடி வேலை பார்க்க ஆரம்பிப்பாங்க. அது தான் இந்த காலம் இப்படி தான் அனுபவித்த ஒரு நிகழ்வை சொல்றாங்க அப்படி என்ன தான் சொல்றாங்க ?
வாங்க.
அறிமுகம் செய்த விதம் அருமை... கலவையான அனைத்தும் நல்ல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஎன் வலைதளத்தை அறிமுகம் செய்தமைக்கு மனம் குளிர்ந்த நன்றிகள் அண்ணா
Deleteநல்ல பதிவு!
ReplyDeleteத. ம.1
மிக்க நன்றிங்க.
Deleteஉங்கள் முன்னுரையும் முதல் கவிதையும் கண்ணீர் வரவழைத்துவிட்டன.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
மிகக்கொடிய அனுபவங்கள் அவை வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே தான் இருக்கும்..
Deleteஇன்னும் எத்தனை பேர லிஸ்ட்ல வச்சிருக்கீங்க? இவங்களையெல்லாம் பொறுமையா தேடிப்பிடிச்சி அறிமுகப்படுத்துவதற்கே உங்களை பாராட்ட வேண்டும்.
ReplyDeleteதேடலுக்கு முடிவு இருக்கோ ? இன்னமும் இருக்காங்க... பாராட்டுதலுக்கு நன்றிங்க.
Deleteசுவாரஸ்யமான அருமையான அறிமுகம்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteஎனது பதிவு டைம் பாஸ் சில் வெளிவந்தது ஒரு சந்தோஷம் என்றால் வலைச்சரத்தில் அறிமுகமாவது மேலும் சந்தோஷம். என் பதிவை அறிமுகபடுத்திய தோழிக்கு என் நன்றி மற்றும் வாழ்த்துக்களும். மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க. டைம் பாஸ்க்கு வாழ்த்துக்கள்.
Deleteநல்ல அறிமுகங்கள். இன்றைக்கு எல்லோருமே தெரிந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி!
ReplyDeleteவாழ்த்துகள் சசி!
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅனுபவத்துடன் அறிமுகம் செய்த விதம் நன்று. பாராட்டுகள்.
ReplyDeleteதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteமுன்பு, அப்பா எது பேசினாலும் எதிர் வார்த்தை பேசாத மகனாக - நான்!..
ReplyDeleteஇன்று நான் எப்படிப் பேசினாலும் மறு வார்த்தை பேசாதவராக - அப்பா!.. புகைப்படமாக!..
தங்களின் முன்னுரையில் இடம் பெற்ற கவிதை என்னைக் கலங்க வைத்து விட்டது. அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை...
தங்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டேனா ? மன்னிக்கவும்.
Deleteமனங் கனக்க வைத்த ஆரம்ப வரிகள் இன்று...
ReplyDeleteஅறிமுகங்கள் அத்தனையும் சிறப்பு!
உங்களுக்கும் அறிமுகப் பதிவர்கள்
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி தோழி.
Deleteஆரம்ப வரிகளில் கலங்கித் தான் போனேன். நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றீங்க சகோதரி. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteஇன்று அனைவரையும் கலங்க வைத்து விட்டேன். அனைவரும் மன்னியுங்கள்.
Deleteசிறப்பான அறிமுகங்கள்..!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Delete//"இருக்கும் வரை தெரியாது பெற்றவரின் அருமை பெருமை " ! என்று பழமொழி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். //
ReplyDeleteபெற்றவர் மட்டும் அல்ல, ஆத்மார்த்தமான அன்புடன் பிரியத்துடன் வாத்ஸல்யத்துடன் பழகிடும் நலம் விரும்பிகள் அனைவருக்குமே இது பொருந்தும். ஒவ்வொருவரும் இதை உணர்ந்து நடந்துகொண்டால் நல்லது.
அனைவருக்கும் இந்த பழமொழி பொருந்தும் என்பதை அருமையாக சொன்னீர்கள். நன்றிங்க. ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteமுதல் பத்தியே மனதை கனமாக்கி விட்டது சகோ.... அறிமுகங்கள் புதுமை..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteநன்றி சசிகலா...அறிமுகத்தில் வித்தியாசமான அணுகுமுறை வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்றைய பதிவில்
ReplyDeleteவிண்முகில்,
இமயத்தலைவன்,
முகிலின் பக்கங்கள்,
கவரிமானின் கற்பனை காவியம்
ஆகிய பதிய தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கும்
எனது நண்பர் குடந்தையூர் சரவணன் அவர்களை
அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றிகள்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவணக்கம் திருமதி சசிகலா ஆசிரியர் பணிக்கான சிறப்பான தொகுப்புகள் பண்பாட்டை நோக்கிய பகிர்வுகள் அறிமுகங்கள் அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteசசிகலா அம்மா.. நல்ல அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்
www.99likes.blogspot.com
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழந்தேன். நன்றிங்க.
Deleteஅறிமுகங்கள் அனைவைருக்கும் இனிய வாழ்த்துகள். எனது தளத்தினையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல தோழி.
ReplyDelete